கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருவாய் ஈட்டும் பெற்றோர் விபத்தில் இறந்தாலோ (அ) நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவ, மாணவியருக்கு தலா ரூ.50,000/- அல்லது ரூ.75,000/- கல்வி உதவித் தொகை வழங்க கோரும் விண்ணப்பங்களில் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...

 


வருவாய் ஈட்டும் பெற்றோர் விபத்தில் இறந்தாலோ (அ) நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவ, மாணவியருக்கு தலா ரூ.50,000/- அல்லது ரூ.75,000/- கல்வி உதவித் தொகை வழங்க கோரும் விண்ணப்பங்களில் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் சான்றுகள் (Documents and Certificates) குறித்த பாலக்கோடு மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 653/ அ5/ 2020, நாள்: 16-07-2020...

>>> பாலக்கோடு மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 653/ அ5/ 2020, நாள்: 16-07-2020...


+2 பொதுத்தேர்வு - மே 2021 - அக மதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்தல் - கால அட்டவணை மற்றும் அறிவுரைகள் வெளியீடு...


 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு - மே 2021 - அக மதிப்பீட்டு மதிப்பெண்களை (Internal Marks) 15.04.2021 முதல் 22.04.2021 வரை இணையதளத்தில்  பதிவேற்றம் செய்தல் - கால அட்டவணை மற்றும் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள்  இயக்குநர் உத்தரவு...

>>> அரசுத் தேர்வுகள்  இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்:006086/ எச்1/2021, நாள்  : 23.03.2021...





கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாவது டோஷ் செலுத்துவதற்கான கால இடைவெளியை 6 வாரம் முதல் 8 வாரங்களுக்கு நீட்டிக்குமாறு மத்திய அரசு கடிதம்...

 கோவிஷீல்ட் (Covishield) தடுப்பூசி இரண்டாவது டோஷ் செலுத்துவதற்கான கால இடைவெளி 4 வாரமாக இருந்த நிலையில் அதனை 6 வாரம் முதல் 8 வாரங்களுக்கு நீட்டிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம்...



கால இடைவெளியை அதிகரிப்பதால் இன்னும் அதிக பலன் கிடைப்பதாக குறிப்பிட்டுள்ளது...


>>> மத்திய அரசின் கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்? இறந்து போன ஆசிரியைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்- ஆசிரியர்கள் அதிர்ச்சி...

 


தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு 30 % ஊதிய உயர்வு & ஓய்வு வயது 61 ஆக உயர்வு...

 தெலுங்கானாவில், அரசு ஊழியர்களின் சம்பளத்தை, 30 சதவீதம் உயர்த்தி, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. 


இம்மாநிலத்தின், 11வது ஊதிய கமிஷன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சி.ஆர்.பிஸ்வால் தலைமையில், 2018ல் உருவாக்கப்பட்டது. கமிஷனின் பரிந்துரையின்படி, மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தை, 30 சதவீதம் உயர்த்தி, முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று உத்தரவிட்டார். மேலும், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது, 58ல் இருந்து, 61 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.



பிளஸ் 2 வில் 'ஆல் பாஸ்?' கல்வி அதிகாரிகள் விளக்கம்...

 தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆண்டு முழுதும் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும், ஜன., முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.



இந்நிலையில், பிளஸ் 2 தவிர, மற்ற அனைத்து வகுப்புகளுக்கும், ஆல் பாஸ் வழங்குவதாக, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. முழு ஆண்டு தேர்வு, பொது தேர்வு உட்பட எந்த தேர்வும் நடத்தப்படாது என, அறிவிக்கப்பட்டது.


பிளஸ் 2க்கு மட்டும் மே, 3 முதல் பொது தேர்வு துவங்க உள்ளது. 


இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்., 'பிளஸ் 2க்கும் ஆல் பாஸ் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்' என, அறிவித்தார். இதனால், பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆல் பாஸ் கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 


இது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறியதாவது:


மாணவர்கள் பள்ளிக் கல்வியில் இருந்து, உயர்கல்விக்கு செல்ல, பிளஸ் 2 பொது தேர்வு மிக முக்கியம். அந்த தேர்வில் ஆல் பாஸ் வழங்குவது சாத்தியமில்லை. பிளஸ் 2வில் பொது தேர்வு நடத்தாவிட்டால், உயர்கல்வி நிறுவனங்கள், தமிழக மாணவர்களை, இன்ஜினியரிங், மருத்துவம், கட்டடவியல், சட்டம் என, எந்த படிப்பிலும் சேர்த்து கொள்ளாது. எனவே, பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்விக்கான, எதிர்கால தேவை அடிப்படையில், அவர்களுக்கு பொது தேர்வு நடத்தி, மதிப்பெண் வழங்குவது கட்டாயம். 


பிளஸ் 1 வரை மாணவர்கள், 'ஆல் பாஸ்' செய்யப்பட்டது போல, பிளஸ் 2க்கு ஆல் பாஸ் சாத்தியமில்லை' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

11-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு தனித்தேர்வு நடத்தலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு...


தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய மறுத்த சென்னை ஐகோர்ட்டு, 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பள்ளிகள் தனித்தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது. 

 



அனைவரும் தேர்ச்சி 


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை கடந்த பிப்ரவரி 25-ந் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தனியார் பள்ளி  சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


 

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. 


 

‘பொதுத்தேர்வு நடத்தவில்லை என்றாலும், பள்ளி அளவில் தேர்வு நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் 11-ம் வகுப்பில் சேரும்போது மாணவர்களுக்கு விரும்பும் பாடத்திட்டத்தில் சேர்க்கை வழங்க முடியும். தேர்வுகளை ரத்து செய்வதற்கு முன்பு எந்த ஒரு ஆலோசனையையும் அரசு மேற்கொள்ளவில்லை. தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது’ என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 


தனித்தேர்வு 


அந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், ‘பொதுநலன் சார்ந்த விஷயங்களில் அதிகாரிகள் உரிய ஆலோசனைகளுக்கு பிறகே முடிவுகள் எடுப்பார்கள். எனவே, எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற மனுதாரர் வாதத்தை ஏற்க முடியாது. மாணவர்கள் தேர்ச்சி தொடர்பான அரசாணையையும் ரத்து செய்ய முடியாது. 



 அதேசமயம், 10-ம் வகுப்பில் இருந்து 11-ம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள், விருப்பப் பாடத்தை தேர்வுசெய்யும் வகையில், அவர்களின் தகுதியைக் கண்டறிய பள்ளிகள் தனித்தேர்வு நடத்திக்கொள்ளலாம். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை உரிய வழிகாட்டி விதிகளை உருவாக்கி அறிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்துவைத்தனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...