கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்குப்பதிவு முடிந்ததும் கண்டுகொள்ளப்படாத பெண் அலுவலர்கள்: இந்தத் தேர்தலிலாவது மாறுமா?



 வாக்குப்பதிவுக்காக தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு நான்குகட்டப் பயிற்சிகள் வழங்கப்படும். இறுதிகட்டப் பயிற்சியின் போதுதான் எந்த வாக்குச்சாவடி ஒதுக்கப்படுகிறது என்ற விபரம் தெரிவிக்கப்படும்.


பயிற்சிவகுப்பில் இருந்தபடியே இவர்கள் சம்பந்தப்பட்ட பூத்திற்கு செல்ல வேண்டும். இரவில் அங்கேயே தங்கி மறுநாள் நடைபெறும் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.


வாக்குப்பதிவு முடிந்ததும் ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்திலே வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கப்படும். இந்த வாகனத்தில் இயந்திரங்களை ஒப்படைக்க பெரும்பாலும் 11 மணிக்கு மேல் ஆகிவிடும்.அதற்குப்பிறகு தேர்தல் அலுவலர்கள் திரும்பி வருவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்வதில்லை.


இதனால் மலை மற்றும் உட்கடை கிராமத்தில் பணிபுரிபவர்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் இரவுகளில் பரிதவிக்கும் நிலை உள்ளது. இந்த முறை வாக்குப்பதிவு நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனவே நள்ளிரவாகி விடும். அதன்பின் வீடு திரும்புவது எப்படி என்ற பரிதவிப்பில் பெண்ஊழியர்கள் உள்ளனர்.


இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் மு.முருகேசன் கூறுகையில், இம்முறை தேர்தல் பணி முடியவே நள்ளிரவு ஆகிவிடும். அலுவலர்கள் வாக்குச்சாவடியில் இருந்து ஊர் திரும்புவதற்கான ஏற்பாடுகளை இதுவரை தேர்தல் ஆணையம் செய்ததில்லை.


இதனால் உட்கடை மற்றும் மலைப்பகுதியில் பணிபுரியும் பெண்ஊழியர்கள் வீடு திரும்ப மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இம்முறையாவது அவர்களுக்கு உரிய போக்குவரத்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

அரசின் உத்தரவை மீறி 9,10,11 வகுப்புகள் இயங்குகிறதா என கண்காணிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு...



>>> அரசின் உத்தரவை மீறி 9,10,11 வகுப்புகள் இயங்குகிறதா என கண்காணிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு...


அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் - வருடாந்திர ஊதிய உயர்வு பெற தேவையான கருத்துருக்கள் மற்றும் படிவங்கள்-2021...



 >>> அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் - வருடாந்திர ஊதிய உயர்வு பெற தேவையான கருத்துருக்கள் மற்றும் படிவங்கள்-2021...

இன்றைய (27-03-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மார்ச் 27, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத இடமாற்றமும், பாராட்டுகளும் கிடைக்கும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்பத்தில் பழைய நிகழ்வுகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அஸ்வினி : பாராட்டுகள் கிடைக்கும்.


பரணி : கவனம் தேவை.


கிருத்திகை : ஆலோசனைகள் வேண்டும்.

---------------------------------------




ரிஷபம்

மார்ச் 27, 2021



உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் நேரிடும். மனதில் பலதரப்பட்ட எண்ணங்களுக்கு தீர்வு கிடைக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். மனை தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.


ரோகிணி : தீர்வு கிடைக்கும்.


மிருகசீரிஷம் : மேன்மையான நாள்.

---------------------------------------




மிதுனம்

மார்ச் 27, 2021



புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



மிருகசீரிஷம் : வெற்றி கிடைக்கும்.


திருவாதிரை : காலதாமதங்கள் அகலும்.


புனர்பூசம் : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------




கடகம்

மார்ச் 27, 2021



குடும்பத்தில் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளால் நன்மைகள் நடைபெறும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். வாசனை திரவியம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.


பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.


ஆயில்யம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------




சிம்மம்

மார்ச் 27, 2021



வியாபாரம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : முயற்சிகள் அதிகரிக்கும்.


பூரம் : ஆர்வம் ஏற்படும்.


உத்திரம் : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------




கன்னி

மார்ச் 27, 2021



எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் நன்மை ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடர்பான முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் கைகூடும். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



உத்திரம் : தனவரவுகள் கிடைக்கும்.


அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.


சித்திரை : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------




துலாம்

மார்ச் 27, 2021



உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். வெளியூரிலிருந்து புதிய வேலைகள் தொடர்பான செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார ரீதியான தொடர்புகளின் மூலம் லாபமும், அனுபவமும் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : இன்னல்கள் குறையும்.


சுவாதி : ஆதரவு கிடைக்கும்.


விசாகம் : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------




விருச்சகம்

மார்ச் 27, 2021



வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோக உயர்விற்கான சூழ்நிலைகள் அமையும். வியாபார வளர்ச்சிக்கான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.


அனுஷம் : உயர்வான நாள்.


கேட்டை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

மார்ச் 27, 2021



மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் மனக்கசப்புகளை தவிர்க்க இயலும். வேலையில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வெளியூர் பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் லாபம் மேம்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆலயம் தொடர்பான பணிகள் மற்றும் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மூலம்:  கவனம் வேண்டும்.


பூராடம் : லாபம் மேம்படும்.


உத்திராடம் : சாதகமான நாள்.

---------------------------------------




மகரம்

மார்ச் 27, 2021



செய்யும் காரியங்களில் சற்று கவனத்துடன் செயல்படவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செல்வது நல்லது. வாரிசுகளிடம் கோபத்தை காட்டாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அரசு தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : விழிப்புணர்வு தேவை.


திருவோணம் : நிதானம் வேண்டும்.


அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

மார்ச் 27, 2021



விவசாயம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை அளிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அவிட்டம் : விருப்பங்கள் நிறைவேறும்.


சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

மார்ச் 27, 2021



வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகளின் தன்மைகளை அறிந்து வித்தியாசமான செயல்முறைகளை கையாளுவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.


உத்திரட்டாதி : வெற்றிகரமான நாள்.


ரேவதி : அங்கீகாரம் கிடைக்கும்.

---------------------------------------


தடுப்பூசிகளால் கொரோனா ஏற்படுமா...? விளக்கம்...

 காலத்தின் அவசியம் கருதி  அத்தியாவசிய விளக்கம் 

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 

26.3.2021



கோவிட் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்களுக்கும் சில நாட்களில் கோவிட் தொற்று ஏற்படுவதாக செய்திகள் வருகின்றனவே? 


இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது 

தடுப்பூசிகள் வேலை செய்வதில்லை என்றா?

தடுப்பூசிகளால் இந்த தொற்று ஏற்பட்டதா? 


இது குறித்து எனது  அறிவியல் பூர்வமான விளக்கம் 


பொறுமையாக படிக்கவும் 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு சில நாட்களில் காய்ச்சல் ஏற்பட்டு அதற்குரிய பரிசோதனை செய்தால் கோவிட் பாசிடிவ் என்று சிலருக்கு ஏற்படுகின்றது . 


 இது குறித்த அறிவியல் பூர்வ விளக்கங்களை அளித்தால் பலரும் புரிந்து கொள்ளக்கூடும் 


பொதுமக்களுக்கும் தெளிவாக பல விசயங்கள் சென்று சேரக்கூடும்.


எனது விளக்கத்தை ஆரம்பம் செய்கிறேன் 


கோவிட் நோய்க்கு எதிராக தடுப்பூசி பெற்றுக் கொள்பவர்களுக்கு தடுப்பூசியின் எதிர்பார்க்கப்படும் சாதாரண பக்க  விளைவுகளான 


காய்ச்சல் 

உடல் வலி 

தலைவலி போன்ற பக்க விளைவுகள் முதல் 24 மணிநேரங்களுக்குள் தோன்றி அதிகபட்சம் 72 மணிநேரங்களுக்கும் சரியாகி விடும். 


எனவே தடுப்பூசி பெற்றவர்கமிக இருப்பினும் தடுப்பூசி பெற்ற பின் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் உடனே உஷாராகி RTPCR பரிசோதனை எடுக்க வேண்டும். 


காய்ச்சலுடன் இருமல் சேர்ந்தால் இருமடங்கு உஷாராகி மருத்துவர் பரிந்துரையில் சி.டி ஸ்கேன் எடுக்கலாம். 


தடுப்பூசியால்  ஏற்படும் சாதாரண பக்கவிளைவுகள் அனைத்தும் பெரும்பாலும் 72 மணிநேரங்களுக்குள் ஆரம்பித்து 72 மணிநேரங்களுக்குள் சரியாகிவிடும்.


கோவிட் நோயை தடுக்கத்தானே தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன? பிறகு எப்படி தடுப்பூசி பெற்றவர்களுக்கும் கோவிட் வருகிறது? 


இதற்கு மூன்று அறிவியல் விளக்கங்கள் உள்ளன 


1️⃣முதல் விளக்கம் 

INCUBATION PERIOD குறித்தது 


அதாவது ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதில் இருந்து/ உடலுக்குள் வந்ததில் இருந்து  அந்த நோய்க்கான அறிகுறிகள் உடலில் தென்படும் வருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் தான் 


"Incubation period" எனப்படும். 


கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்குபேசன் பீரியட் சராசரி 5 முதல் 6 நாட்கள் அதிகபட்சம் 14 நாட்கள். 


இதன் காரணமாகத் தான் தொற்று கண்ட நபர் இருக்கும் வீடுகளை 14 நாட்கள் தனிமைப்படுத்துகிறோம்.  (QUARANTINE) 


இந்த இன்குபேசன் பீரியடில் இருப்பதை நோய் அறிகுறி தோன்றும் வரை அந்த நபரே அறிய இயலாது. 


ஒருவர் தடுப்பூசியை வெள்ளிக்கிழமை  பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம் 


அவர் அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை 

நண்பர்களுடன் ஒரு கெட் டுகெதர் கலந்து கொண்டு அங்கு கொரோனா தொற்றை பெற்று விட்டால் 


அப்போதிருந்து இன்குபேசன் பீரியட் ஆரம்பமாகும். 


அவருக்கு ஆறாவது நாள் கொரோனா தொற்றின் அறிகுறிகள் தோன்ற காத்திருக்கின்றன என்றால் சனிக்கிழமை காய்ச்சல் அடிக்கும். 


ஆனால் அவர் வெள்ளிக்கிழமை தடுப்பூசி பெற்றிருக்கிறார். 


அடுத்த நாளான சனிக்கிழமை தோன்றும் காய்ச்சல் 

தடுப்பூசியின் சாதாரண பக்கவிளைவால் தோன்றியதா? அல்லது கொரோனாவால் தோன்றியதா? என்பதை எப்படி அறிவது?


தடுப்பூசியின் பக்கவிளைவால் தோன்றியதாக இருந்தால் தடுப்பூசி பெற்ற மூன்று நாட்களுக்குள் சரியாகிவிடும் 


கொரோனா தொற்றினால் ஏற்பட்ட அறிகுறியாக இருந்தால் காய்ச்சல் மூன்று நாட்கள் கடந்தும் தொடரும் கூடவே இருமல் தோன்றும். உடனே சுதாரிக்க வேண்டும். 


இது தடுப்பூசியால் ஏற்பட்டதன்று.  மாறாக நாம் ஏற்கனவே பெற்ற தொற்றின் அறிகுறி என்று உணர வேண்டும். உடனே பரிசோதனை செய்து சிகிச்சை எடுக்க வேண்டும். 


2️⃣இரண்டாவது விளக்கம் 


 TIME PERIOD TO REACH MAXIMUM EFFICACY 


கோவிட் நோய்க்கு தடுப்பூசி எடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று ஏற்படுகின்றதென்றால் தடுப்பூசிகள் ஏன் நோயைத் தடுக்கவில்லை???


இந்தியாவில் தற்போது வழங்கப்படும் இரண்டு தடுப்பூசிகளான 


கோவேக்சின் 

கோவிஷீல்டு ஆகிய இரண்டில் 


கோவேக்சின் தடுப்பூசி முதல் டோஸ் பெற்று அதற்குப்பிறகு 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது டோஸ் பெற்று அதன் பிறகு 14 நாட்கள் கழித்தே முழு எதிர்ப்பு சக்தியை தரும் நிலையை அடைகின்றது 


கோவிஷீல்டு தடுப்பூசியைப் பொறுத்தவரை 

முதல் டோஸ் பெற்ற 22 நாட்களுக்குப்பிறகு தான் முழு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகின்றது.  இன்னும் இரண்டாவது டோஸ் போடப்பட்டு 14 நாட்கள் கழித்தே ஆய்வுகளில் சிறந்த எதிர்ப்பு சக்தி கிடைப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.


எனவே தடுப்பூசி போட்ட அடுத்த நாளில் இருந்து எதிர்ப்பு சக்தி கிடைத்து விட்டது என்று நம்பி மாஸ்க் இல்லாமல் கூட்டங்களில் கலந்து கொண்டால் தொற்றைப்பெறும் வாய்ப்பு அதிகம். 


3️⃣மூன்றாவது விளக்கம் 


INTRINSIC EFFICACY VARIABILITY 


இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்று இரண்டு வாரங்கள் - கழித்தும் கூட சில மருத்துவர்களுக்கு அறிகுறிகளுடைய கொரோனா தொற்று வந்துள்ளதே ? அதைப்பற்றி தங்களின் கருத்து 


இதற்கு என்னுடைய விளக்கம் 


கோவிஷீல்டு தடுப்பூசியின் அறிகுறிகளுடைய நோய் தடுக்கும் திறன் 70% 

கோவேக்சின் தடுப்பூசியின் அறிகுறிகளுடைய  நோய் தடுக்கும் திறன் 

 80% 


அதாவது கோவிஷீல்டு போடப்பட்ட நபருக்கு 70% தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைக்கப்படுகின்றது 


கோவேக்சின் போடப்பட்ட நபருக்கு 80% தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைக்கப்படுகின்றது


ஆயினும் எந்த தடுப்பூசியும் 100% நோய் தடுக்கும் திறனுடன் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 


கோவிஷீல்டு போடப்பட்டவருக்கும் கூட அறிகுறிகளுடன் தொற்று ஏற்பட 30% வாய்ப்புண்டு 


கோவேக்சின் போடப்பட்டவருக்கும் கூட அறிகுறிகளுடன் தொற்று ஏற்பட 20% வாய்ப்புண்டு 


ஆனால் இதுவரை நடந்த ஆய்வு முடிவில் 

 கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு தீவிர கொரோனா ஏற்படவில்லை என்பது ஆறுதலான செய்தி. 


எனவே தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களுக்கு  அறிகுறிகளற்ற  கொரோனா ஏற்படலாம். 


போட்டுக்கொண்ட சிலருக்கு அறிகுறிகளுடைய கொரோனாவும் ஏற்படலாம். 

இருப்பினும் பெரும்பான்மை சமூகத்தை அதிலும் VULNERABLE மக்கள் தொகையை தீவிர கொரோனா நோயில் இருந்தும் மரணங்களில் இருந்தும் காக்கும் தன்மை தற்போதைய தடுப்பூசிகளுக்கு உண்டு என்பது தற்போது வரை கிடைத்துள்ள ஆய்வு முடிவுகளின் மூலம் கிடைக்கும் உண்மை. 


ஆகவே மேற்கண்ட காரணங்களால் தான் தடுப்பூசி பெற்ற மக்களிடையேவும் சாதாரண கோவிட் நோய் ஏற்படுகின்றது. 


4️⃣நான்காவது விளக்கம்


கோவிட் தடுப்பூசிகளால் தொற்று ஏற்படுத்த இயலாது ? ஏன்? 


கோவிஷீல்டு என்பது சிம்பன்சி இனத்தில் ( மனிதக்குரங்கு) சாதாரண சளி இருமலை உருவாக்கும்  அடினோ வைரஸை வாகனமாக உபயோகித்து அதில் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரத மரபணுக்களை உட்புகுத்தி உருவாக்கப்பட்டது. 


இத்தகைய டெக்னாலஜியை ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி மற்றும் ஆஸ்ட்ரா செனிகா இரண்டும் மெர்ஸ் கோவி 2012இல் வளைகுடா நாடுகளில் (middle east respiratory syndrome  - MERS COv)  காலத்திலேயே ஆய்வு செய்து வைத்தது. 


அதன் பயனை தற்போதைய கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தடுப்பூசியாக அறுவடை செய்ய முடிகின்றது. 


அந்த டெக்னாலஜியின் முக்கிய அம்சமே சிம்பன்சி அடினோ வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் பல்கிப்பெருக இயலாது என்பது தான். எனவே கோவிஷீல்டு தடுப்பூசி மூலம் கோவிட் நோய் உருவாக இயலாது. 


கோவேக்சின் தடுப்பூசியைப் பொறுத்தவரை அதன் டெக்னாலஜி- கொரோனா வைரஸ்களை வளர்த்தெடுத்து அவற்றை அதன் அங்கங்கள் சிதையாதவாறு கொன்று

(Inactivating ) அந்த வைரஸ்களின் பிரேதங்களைத் தான் வேக்சினாக செலுத்துகிறோம்.  எனவே கோவேக்சினாலும் கோவிட் நோயை உருவாக்க இயலாது.


TAKE HOME MESSAGES 


💉கோவிஷீல்டு / கோவேக்சின் தடுப்பூசிகளால்  கோவிட் நோயை உருவாக்க இயலாது 


💉 தடுப்பூசி பெற்ற 24 மணிநேரங்கள் முதல் 72 மணிநேரங்களுக்குள் ஏற்படும் காய்ச்சல் தலைவலி போன்றவற்றை தடுப்பூசிகளின் சாதாரண பக்கவிளைவுகள் என்று கொள்ளலாம் 


💉 தடுப்பூசி பெற்று 72 மணிநேரங்களுக்குப் பிறகும் காய்ச்சல் தொடர்ந்தாலோ இருமல் நீடித்தாலோ உடனே RTPCR பரிசோதனை செய்ய வேண்டும். 


💉 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடையேவும் அறிகுறிகளற்ற / அறிகுறிகளுடைய கொரோனா ஏற்படும் வாய்ப்பு உண்டு. 


💉 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தீவிர கொரோனா ஏற்படும் வாய்ப்பு குறைவு ஆயினும் தொற்றுப்பரவலை தடுக்க தடுப்பூசி பெற்றவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 


💉 45+ வயதுக்கு மேல் உள்ள அனைவரும் அச்சமின்றி தடுப்பூசி பெற்றுக்கொண்டு தீவிர கொரோனாவை தடுத்துக்கொள்ள வேண்டும். 


💉 கொரோனா தடுப்பூசி குறித்த இந்த விளக்கம் உங்களுக்கு பயனுள்ளதாய் இருப்பதாகக் கருதினால் அதை இன்னும் பலருக்கு அனுப்பி அவர்களும் தடுப்பூசிகள் குறித்து தெரிந்து கொள்ள உதவுங்கள் 


நன்றி 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 

26.3.2021

தமிழகத்தில் மினி ஊரடங்கு அமல்படுத்த முடிவு...

 தமிழகம் முழுவதும் ஊரடங்கு இல்லை என்று சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். பாதித்த பகுதிகளில் மட்டும் மினி ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவெடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு கொரோனா தொற்று குறைந்துகொண்டே வந்ததால் ஊரடங்கில் படிப்படியாக  தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத்  திரும்பியுள்ளனர்.



இந்த நிலையில் மார்ச் தொடக்கத்தில் இருந்து மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் தொற்று  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமலாகுமோ என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, குறிப்பிட்ட தெரு, வீடு, பகுதிகளில் மட்டும் ஊரடங்கை செயல்படுத்த அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


முழு ஊரடங்கு என்று யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம்  எனக் கேட்டுக்கொண்ட அவர், முகக்கவசம் அணியாமல், அலட்சியமாக இருப்பதால் தான் கொரோனா பரவுவதாகவும், முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியைக் கடைபிடிப்பதோடு, தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதிகரித்து வரும் கொரோனாவை எதிர்கொள்ள கூடுதல் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன எனவும் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் & அறிவுரைகள் வலியுறுத்துதல் தொடர்பாக தலைமைச் செயலாளர் உத்தரவு...

 


அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் & அறிவுரைகள் வலியுறுத்துதல் தொடர்பாக தலைமைச் செயலாளர் உத்தரவு...

>>> தலைமைச் செயலாளர் கடித எண்: 2342/ ஏ2/ 2021-1, நாள்: 03-02-2021...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 Kalai Thiruvizha Banner

 கலைத் திருவிழா 2024-2025 Kalai Thiruvizha Banner HD >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...