கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதுநிலை ஆசிரியர் பட்டியலை மாற்றி வெளியிட வலியுறுத்தல்...

 முதுநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை, முழுமையாக மாற்றி வெளியிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 



அவரது அறிக்கை: தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, போட்டி தேர்வுகள், 2019 செப்டம்பரில் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு துவக்கத்தில், முடிவுகள் வெளியிடப்பட்டன. 



மேல் முறையீடு

வேதியியல் ஆசிரியர்கள் நியமனத்தில், அதிக மதிப்பெண் பெற்று, பொதுப்பிரிவில் நியமிக்கப்பட வேண்டிய, மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பின்னடைவு பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். அதனால், பின்னடைவு பணியிடங்களுக்கு தேர்வாக வேண்டிய, மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு, அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. 



இந்த அநீதியை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்றம், பின்னடைவு பணியிடங்களுக்கு தேர்வான, எம்.பி.சி., மாணவர்களை, பொதுப்பிரிவுக்கு மாற்றிவிட்டு, பின்னடைவு பணியிடங்களில், தரவரிசையில் அடுத்த நிலையில் உள்ள, எம்.பி.சி., மாணவர்களை நியமிக்க ஆணையிட்டது. அதை ஏற்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரியம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த, சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிலைப்பாட்டை, கடுமையாக விமர்சித்து நிராகரித்துள்ளது.இதற்கு காரணமான, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, வேதியியல் பாட முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியல் திருத்தி வெளியிடப்பட வேண்டும்.


நடவடிக்கை

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட, எம்.பி.சி., மாணவர்கள், 34 பேருக்கு, முதுநிலை ஆசிரியர் பணி வழங்க வேண்டும். அதேபோல, தமிழ், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல் பாடங்களுக்கான தேர்வு பட்டியலையும் திருத்தி அமைத்து, பாதிக்கப்பட்ட மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலின மாணவர்களுக்கு, முதுநிலை ஆசிரியர் பணி வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மறு உத்தரவு வரும் வரை வீட்டிலிருந்தே வேலை செய்ய மத்திய அரசு உத்தரவு...

 


மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மறு உத்தரவு வரும் வரை வீட்டிலிருந்தே வேலை செய்ய மத்திய அரசு உத்தரவு...

>>> Click here to Download the Office Memorandum of the Additional Secretary to Government of India...



ஆந்திர மாநிலத்தில் இன்று முதல் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை...

 


இன்றைய (20-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

ஏப்ரல் 20, 2021



அலைச்சல்கள் தொடர்பான பணிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பெரியவர்களிடத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



அஸ்வினி : அனுபவம் கிடைக்கும்.


பரணி : மகிழ்ச்சியான நாள்.


கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 20, 2021



சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : நிதானம் வேண்டும்.


ரோகிணி : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.


மிருகசீரிஷம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 20, 2021



எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். தர்ம காரியங்கள் தொடர்பான சிந்தனைகளும், செயல்பாடுகளும் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் மேம்படும். வாக்குவன்மையால் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


திருவாதிரை : புரிதல் உண்டாகும்.


புனர்பூசம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 20, 2021



நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். சக ஊழியர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



புனர்பூசம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.


பூசம் : காலதாமதங்கள் அகலும்.


ஆயில்யம் : அனுகூலமான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 20, 2021



நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி மகிழ்வீர்கள். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்கான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செலவிடுவது நன்மையளிக்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


பூரம் : முயற்சிகள் மேம்படும்.


உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

ஏப்ரல் 20, 2021



உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்பட வேண்டும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை குறைத்துக்கொள்ளவும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



உத்திரம் : விவேகம் வேண்டும்.


அஸ்தம் : மேன்மை உண்டாகும்.


சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 20, 2021



கலை நுட்பமான செயல்பாடுகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆடை, ஆபரணங்களை வாங்குவதற்கான சூழல் உண்டாகும். இலக்கியம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.


சுவாதி : இழுபறிகள் அகலும்.


விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




விருச்சகம்

ஏப்ரல் 20, 2021



சங்கீத பயிற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். இணையதள பணியில் நல்ல லாபத்தை தரும். செய்யும் செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். முக்கிய முடிவுகளை பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து எடுக்கவும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். நிறுவனங்களில் தலைமை பொறுப்பிற்கான முயற்சிகள் ஈடேறும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



விசாகம் : லாபம் மேம்படும்.


அனுஷம் : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.


கேட்டை : முயற்சிகள் ஈடேறும்.

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 20, 2021



மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் உண்டாகும். எண்ணிய செயல்கள் ஈடேறுவதில் மந்தத்தன்மை ஏற்படும். புதிய நபர்களின் வருகையால் சுபவிரயம் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் செயல்பாடுகளை குறை சொல்வதை தவிர்க்கவும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மூலம் : பதற்றமான நாள்.


பூராடம் : மந்தத்தன்மை உண்டாகும்.


உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 20, 2021



கலைப்பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். கல்வி தொடர்பான செயல்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : தெளிவு பிறக்கும்.


திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.


அவிட்டம் : ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 20, 2021



ஆவணங்களை கையாளும்போது நிதானம் வேண்டும். தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். பொதுக்கூட்ட பேச்சுக்களால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளை நிதானத்துடன் கையாண்டு செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



அவிட்டம் : நிதானம் வேண்டும்.


சதயம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


பூரட்டாதி : ஆதரவான நாள்.

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 20, 2021



மகான்களின் தரிசனம் கிடைக்கும். வாரிசுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். தற்பெருமை சார்ந்த செயல்களை குறைத்துக்கொள்வது நன்மையளிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். இணைய வர்த்தகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.


ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------


50 சதவீத மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி...

 


>>> Click here to Download the Office Memorandum of the Under Secretary to the Government of India, Dated: 13-04-2021...


பொறியியல் அரியர் தேர்வு எழுத மாணவர்களுக்கு சலுகை...

இன்ஜினியரிங் மாணவர்களில் 'அரியர்' உள்ளவர்கள் இன்னும் மூன்று செமஸ்டர் தேர்வுகளை கூடுதலாக எழுதி கொள்ளலாம் என அண்ணா பல்கலை அனுமதி அளித்துள்ளது.




அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு பதிவாளர் கருணாமூர்த்தி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படித்த மாணவர்களில் குறித்த காலத்தில் அரியர் தேர்வுகளை முடிக்காதவர்கள் தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.




இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் 2020 ஜூலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் '1990 முதல் படிப்பில் சேர்ந்தவர்களுக்கு இன்னும் மூன்று முறை அரியர் தேர்வை எழுத அவகாசம் வழங்கலாம்' என முடிவானது. இதையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட அண்ணா பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில் அவகாசம் முடிந்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஆக. - செப். தேர்வு அடுத்த ஆண்டு பிப். - ஆக. தேர்வு ஆகியவற்றில் பங்கேற்க சிறப்பு அனுமதி தர முடிவானது.




அதன்படி அண்ணா பல்கலையின் சென்னை வளாகத்தில் 1990 முதல் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் சேர்ந்தவர்களும்; அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில் 2001ம் ஆண்டின் மூன்றாவது செமஸ்டர் மற்றும் 2002 முதல் செமஸ்டர் முதலும் சேர்ந்த மாணவர்கள் கூடுதல் அவகாச சலுகையை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்...



பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 025650 / எச்1 /2020, நாள்: 19.04.2021...

>>> அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 025650 / எச்1 /2020, நாள்: 19.04.2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...