கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடனை திருப்பி செலுத்தாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு...

 கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று,செலுத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.



இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:



அரசுப் பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடனை சரிவர திரும்பச் செலுத்தவில்லை என தெரியவருகிறது.



பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒப்புதல்படியே பிற பணியாளர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ஆனால், கடன் தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்ய தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆசிரியர்கள் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் பெரும் நிதி இழப்புஏற்படும் சூழல் உள்ளது என்றுபல்வேறு கூட்டுறவு சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன.



ஆசிரியர்கள் கடன்பெற்ற விவரங்களை ஊதியச் சான்றிதழில் மறைத்து, இதர வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்குவதற்கு தலைமை ஆசிரியர்கள் உதவி செய்வதாகத் தெரிய வருகிறது. இது தவறானது. அரசுப் பணியாளர் நடத்தை விதிகளுக்கு எதிரானதாகும்.



எனவே, அவ்வாறு தவறு செய்தவர்கள் மீது ஒழுங்கு விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அவர்கள் பெற்ற கடன் தொகையை உரிய முறையில் திரும்பச் செலுத்தவும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.



அதேபோல, ஆசிரியர்கள் கடன் பெற்ற விவரத்தை மறைத்து, முழு ஊதியம் பெற வழிசெய்த தலைமை ஆசிரியர்கள் மீதும்ஒழுங்கு விதிகளின்கீழ் நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரங்களை அனுப்ப வேண்டும்.


இனிவரும் காலங்களில் கடன்பெற்ற ஆசிரியர்களின் ஊதியத்தில் உரிய தொகையைப் பிடித்தம்செய்து அதை வங்கிக் கணக்கில் செலுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




உத்தரவை அமல்படுத்தாவிட்டால், பள்ளிக்கல்வி அதிகாரிகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் - உயர் நீதிமன்றம்...

 உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், பள்ளிக்கல்வி அதிகாரிகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.


 

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 2008-ம் ஆண்டு உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர் புனிதவதி. இவரை பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவி இறக்கம் செய்து, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டார்.


 

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் புனிதவதி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புனிதவதியின் இடமாற்றத்துக்கு தடை விதித்தது. இந்நிலையில், 2008 செப்டம்பர் முதல் 2010 அக்டோபர் வரை கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட புனிதவதி, பிறகு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.



இதை எதிர்த்து புனிதவதி மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பரிசீலிக்குமாறு உத்தரவிட்டது.


 

இந்நிலையில், புனிதவதி 2014 மே 31-ம் தேதி ஓய்வு பெற்றதால், தனது பணியை 2008 முதல் 2020 வரை பணிவரன்முறை செய்யக்கோரி தொடக்கக் கல்வி ஆணையரிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.


 

இந்த வழக்கு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “மனுதாரர் 2020-ம் ஆண்டு கொடுத்த மனுவைப் பரிசீலித்து, 90 நாட்களில் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” என தொடக்கக் கல்வி ஆணையருக்கு உத்தரவிட்டார்.


 

மேலும், “மனுதாரர் தனது மனு, மொபைல் எண், இ-மெயில் முகவரி போன்றவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் உடனடியாக வழங்க வேண்டும். அவரது மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அந்த அதிகாரி மனுதாரருக்கு குறுஞ்செய்தி, இ-மெயில் அல்லது பதிவு தபால் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.



ஒருவேளை இந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறை தண்டனை அனுபவிக்கவும் நேரிடும்” எனவும் எச்சரித்தார்.



1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தமிழ் வாசித்தல் பயிற்சி பதிவேடு 39 பக்கங்களில்...



>>> 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தமிழ் வாசித்தல் பயிற்சி பதிவேடு 39 பக்கங்களில்...


கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை 400 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக குறைத்துள்ளது சீரம் இன்ஸ்டிடியூப் ஆப் இந்தியா....



 இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் என இரண்டு தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. கோவிஷீல்டு மருந்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய தொகுப்பிற்கு 50 சதவீதம் போக மீதமுள்ள 50 சதவீத மருந்துகளை மாநில அரசுகள் மற்றும் வெளிச்சந்தையில் (தனியார்) விற்பனை செய்ய 


மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதற்கான விலையை அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.



அதன்படி மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் 400 ரூபாய் எனவும், தனியாருக்கு ஒரு டோஸ் 600 ரூபாய் எனவும் நிர்ணயித்தது. ஏற்கனவே பொருளாதாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு மேலும் நிதிச்சுமையை உயர்த்தும் என 


மாநில அரசுகள் தங்களது அதிருப்திகளை தெரிவித்தன. மேலும், மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.



 18 வயது நிரம்பியவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் தேவைப்படும். இந்த நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, மாநில அரசுகளுக்கு வழங்கும் விலையை ரூ.400-ல் இருந்து 300 ரூபாயாக குறைத்துள்ளது.

அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை உயர்த்தியது ஏன்? விளக்கம் வேண்டும் - தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு...



 அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு


பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழக அரசு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து 


செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும் திருச்சி, துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.


அந்த மனுவில், 'ஓய்வு வயதை அதிகரித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், அதற்கான காரணம் எதையும் குறிப்பிடவில்லை. அதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் குறித்தும் எதுவும் விளக்கவில்லை. கொரோனா காரணமாக   


  அரசுப் பணிகளுக்கான தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு வயது உச்சவரம்பை தளர்த்தாமல், அரசு ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் மட்டும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.


அதாவது தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பில்லாமல் உள்ள நிலையில் 2020-21-ம் ஆண்டுகளில் ஓய்வுபெற இருந்த 45 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு தேவையில்லாமல் ஓய்வு வயது அதிகரிக்கப்பட்டுள்ளது' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


 இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் எழுப்பிய கேள்விகளுக்கு  நீதிமன்றத்தில் உரிய பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.

2021-22ம் ஆண்டிற்கான அமைச்சுப் பணியாளர்கள் காலிப்பணியிட மதிப்பீடு விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு...



 2021-22ம் ஆண்டிற்கான அமைச்சுப் பணியாளர்கள் காலிப்பணியிட மதிப்பீடு விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 18727/ அ4 / இ4/ 2021, நாள்: 15-04-2021...

>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 18727/ அ4 / இ4/ 2021, நாள்: 15-04-2021...




01.04.2021 முதல் 30.06.2021 வரையிலான மூன்று மாதங்களுக்கு GPF மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு...

 


01.04.2021 முதல் 30.06.2021 வரையிலான மூன்று மாதங்களுக்கு GPF மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை G.O.Ms.No.125, Dated: 28-04-2021 வெளியீடு...


>>> Click here to Download G.O.Ms.No.125, Dated: 28-04-2021...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Thamizh Pudhalvan Scheme - 38 Districts - Total No. Data for Verification - Action Taken - Verification Pending - School Data Updation Pending Report

  தமிழ்ப் புதல்வன் திட்டம் - 38 மாவட்டங்களில் விண்ணப்பித்தோர்,  சரிபார்க்கப்பட்ட & நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் எண்ணிக்கை அறிக்கை Tamil...