கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மே 10ஆம் தேதி முதல் கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்...

 💥ரூ.4 ஆயிரம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது


💥சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் -உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு...




பால் விற்பனை விலை ரூ.3 குறைத்து அரசாணை வெளியீடு...

 


பால்வளத்துறை - பால் விற்பனை விலை ரூ.3 குறைத்து அரசாணை (நிலை) எண்: 60, நாள்: 07-05-2021 வெளியீடு...


>>> அரசாணை (நிலை) எண்: 60, நாள்: 07-05-2021...


மாற்றுத்திறனாளிகள்/ கர்ப்பிணிகள் அலுவலகங்களுக்கு வருவதில் இருந்து மே 31 வரை விலக்கு அளித்து மத்திய பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அறிவிப்பு...

 


கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்த கூடாது - பொறியியல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு...




 கொரோனா இயல்பு நிலை திரும்பும் வரை கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது.



இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப குழுவான ஏ.ஐ.சி.டி.இ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும், பேராசிரியர்களுக்கான ஊதியத்தை மாதந்தோறும் உரிய நேரத்தில் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.



இதேபோல் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முதற்கட்ட கலந்தாய்வையும், செப்டம்பர் 9 ஆம் தேதிக்குள் இரண்டாம் கட்ட கலந்தாய்வையும் நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது.

COVID - 19 , TREATMENT FLOW CHART...

 


RTPCR பரிசோதனை யாருக்கு தேவையில்லை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் புதிய வழிகாட்டுதல்கள்...




 கொரோனா பரிசோதனை மையங்கள் மீதான அழுதத்தை குறைக்கும் வகையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை குறைப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 

இதன்படி


1. ஏற்கனவே ரேபிட் ஆட்டிஜென் சோதனை மூலம் கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானால் அவர்கள் மீண்டும் ஆர்டிபிசிஆர் சோதனை செய்ய தேவை இல்லை. 


2. ஆர்டிபிசிஆர் சோதனை மூலம் கொரோனா உறுதியானால் அவர்கள் மீண்டும் சோதனை செய்ய வேண்டியது கிடையாது.


3. வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் கடைசி 3 நாட்களில் காய்ச்சல் இல்லையென்றால் சோதனை செய்ய வேண்டாம். 


4. கொரோனா சிகிச்சை முடிந்து மருத்துவமனைகளில் இருந்து திரும்புபவர்கள் மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


5. ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் மாநிலங்களுக்கு இடையில் பயணிப்பதற்காக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்கிறார்கள். இது  முழுவதுமாக நீக்கப்படலாம்.


நாட்டில் தற்போது மொத்தம் 2506 பரிசோதனை மையங்கள் மட்டுமே இருக்கின்றன. கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் பரிசோதனை கூடங்களுக்கு நிறைய பரிசோதனைகள் வருவதால் உடனடியாக சோதனை முடிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுகின்றது. 




இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளதாவது:  தற்போது கொரோனா நோய் தொற்று அதிகரித்துள்ளதன் காரணமாக, கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் மிகுந்த சவாலை எதிர்கொண்டுள்ளன. அசாதாரண பரிசோதனை எண்ணிக்கை காரணமாக ஆய்வகங்கள் மிகுந்த அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன. மேலும் ஆய்வகத்தில் பணிபுரியும் நபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் ஆர்டிபிசிஆர் சோதனையை மேம்படுத்துவதும் ஒரே நேரத்தில் நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் பரிசோதனை கிடைப்பதை அதிகரிப்பதும் கட்டாயமாகும்.  அளவுக்கதிகமான பரிசோதனை எண்ணிக்கைகளால் சிக்கி தவிக்கும் ஆய்வகங்களுக்கு உதவும் வகையில், ரேபிட் ஆன்டிஜென் சோதனையை அதிகரிக்க வேண்டும். நாடு முழுவதும் இருக்கும் நகரங்கள், நகர்கள், பள்ளிகள், கல்லூரிகள் , அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆன்டிஜென் சோதனையை அனுமதிக்க வேண்டும்.




தனிநபர் ஒருவர் ஆன்டிஜென்ட் சோதனையில் தொற்று இல்லை என அடையாளம் காணப்பட்ட பின்னரும் தொடர்ந்து கொரோனா அறிகுறிகளால் கண்டறியப்பட்டால் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும் பரிசோதனை செய்யப்படுவோரின் படிவத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது தொடர்பான விவரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது.  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே 10 முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு...

 


தமிழகத்தில் மே 10 முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு. தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 08, நாள்: 08-05-2021...


*காய்கறி,பால்,மருந்து, இறைச்சிக்கடைகள் பகல் 12 மணி வரை திறந்து வைக்க அனுமதி


*மற்ற எந்த கடைகளுக்கும் அனுமதி இல்லை


*இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 9 மணி வரை இயங்கும்- தமிழக அரசு


*2 வாரங்கள் டாஸ்மாக் கடைகள் முழுமையாக அடைக்கப்படும்- தமிழக அரசு


*அரசு மற்றும் தனியார் போக்குவரத்துக்கு  தடை. பேருந்துகள் இயங்காது.


மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை.


வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவை இயங்கவும் தடை


அத்தியாவசியப் பணிக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி.


*அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள்,தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது


*முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது - தமிழக அரசு


*மே 10- 24 வரை முழு ஊரடங்கு அமலாக இருப்பதால் இன்றும் (08-05-2021) நாளையும் (09-05-2021) அனைத்து கடைகள், நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை இயங்கலாம்


*முழு ஊரடங்கு அமலாகும் மே 10-24 வரை அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் - தமிழக அரசு


*மே 10-24 வரை மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்கள் இடையே அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்டவற்றுக்கு தடை


*நியாயவிலைக்கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்


*மே 10-24 வரை முழு ஊரடங்கு காலத்தில் உணவகங்களில் பார்சல் வழங்கலாம்; டோர் டெலிவரிக்கும் அனுமதி


>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 08, நாள்: 08-05-2021...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...