கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மறைந்த செய்தியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை பெறுவதற்கான விண்ணப்பம்...
>>> விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மறைந்த செய்தியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை பெறுவதற்கான விண்ணப்பம்...
>>> விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தேசிய அளவிலான முக்கிய உதவி எண்களை தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும் என மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
பொதுவாக நாம் வங்கிகளில் தொடங்கிய சேமிப்பு கணக்கில், கணக்கு தொடங்கிய கிளையில் பணம் எடுத்தும் கொள்ளும் வசதி உண்டு. வாடிக்கையாளர் அதே வங்கியின் வேறு கிளைகளில் பணம் எடுத்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். அதோடு பணமும் குறைவாகத் தான் எடுக்க முடியும்.
உச்ச வரம்பு அதிகரிப்பு
ஆனால் கொரோனா காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது.
கணக்கு தொடங்கிய கிளை தவிர மற்ற கிளைகளிலும் பணம் எடுக்கும் உச்ச வரம்பினை அதிகரித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, Self Cheque மூலம் எடுக்கும் தொகை வரம்பினை, ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
Withdrawal Form மூலம் எவ்வளவு?
மற்றொரு ஆப்சனான வித்ட்ராவல் பார்ம் மூலமாக ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரையில் எடுத்துக் கொள்ளலாம்.
மூன்றாம் தரப்பு நபர் செக் மூலமாக பணம் எடுக்கும் வரம்ப்பானது 50,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல பார்ம் மூலமாக மூன்றாம் தரப்பினர் பணம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதற்காக மூன்றாம் தரப்பினரின் கே ஒய் சி விவரங்கள் தரப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது வரையில் அமல்
எஸ்பிஐயின் இந்த மாற்றங்கள் செம்டம்பர் 30, 2021 வரையில் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள்...
#COVID19 சிகிச்சைப் பணிகளுக்காக #Donate2TNCMPRF நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி!
நன்கொடை- செலவினங்கள் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன. இச்செயல் தொடரும்!
விரைவில் தமிழகம் மீளும்!
இணையசேவை-கடன் அட்டை மூலம் வழங்க:
https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html
UPI- VPA ID: tncmprf@iob
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பெறப்பட்ட நன்கொடை குறித்த செய்தி வெளியீடு...
இன்று வரை #Donate2TNCMPRF-க்கு ரூ 186.15 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டிருக்கிறது.
மருந்துகள் வாங்குவதற்கும், ஆக்சிஜன் தேவைகளுக்காகவும் ஏற்கனவே ரூ.100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் ஆக்சிஜன் உருளைகள்- செறிவூட்டிகள், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்காக ரூ 41.40 கோடி ஒதுக்கப்படுகிறது.
கொரோனா வார்டுக்குள் சிகிச்சை பெறுவோரை PPE Kit அணிந்து சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர்...
இது குறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ட்விட்டர் பதிவு:
Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்!
இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்...
Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.
மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும்.
தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!
நிவாரண நிதி வழங்கிடும் குழந்தைளுக்கு திருக்குறள் நூல் அனுப்பி வைக்கப்படும் - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்...
இது குறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ட்விட்டர் பதிவு:
தங்களின் சின்னஞ்சிறு கனவுகளுக்காக சிறுகச் சேமித்ததையும் #Donate2TNCMPRF-க்கு வழங்கிடும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது!
தமிழ் மண்ணில் அறம் தழைக்கட்டும்!
பிள்ளைச்செல்வங்களுக்கு திருக்குறள் நூலொன்று அன்புடன் அனுப்பி வைக்கப்படும்!
ஈதல் இசைபட வாழ்தல்...
Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்... *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...