கொரோனாவால் இறந்த அரசு ஊழியருக்கு ரூ.25 லட்சம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இணைக்க வேண்டியவை குறித்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் கடிதம்...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
அரசு ஊழியர் ஓய்வு வயது குறைக்கப்படுமா? - கோரிக்கை மனு...
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை பழையபடி மாற்ற வேண்டும்' என, தமிழ்நாடு வேலையில்லா பட்டதாரிகள் நலச்சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் தலைவர் சோமசுந்தரம், செயலர் முகேஷ் ஆகியோர், தலைமை செயலர் இறையன்புக்கு அனுப்பியுள்ள மனு: வேலைவாய்ப்பற்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படாமல், அ.தி.மு.க., ஆட்சியில், கடைசி நேரத்தில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58ல் இருந்து 59; பின் 60 என உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. இதனால், அரசு வேலையை எதிர்பார்த்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு தகர்ந்துள்ளது.
ஏற்கனவே, பதவி உயர்வு தேக்க நிலையில் இருந்த அரசு ஊழியர்களின் பதவி உயர்வு பறிபோனதால், அவர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இந்தியாவில் ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்கள் அனைத்திலும், ஓய்வு வயது 58 ஆகவே உள்ளது. தற்போது, 60 வயதில் ஓய்வு என்ற உத்தரவால் 2020, 2021ல் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய, ஆயிரக்கணக்கான ஊழியர்கள், அடுத்த ஆண்டு ஒட்டு மொத்தமாக ஓய்வு பெறுவர். அப்போது, அரசுக்கு கடும் நிதிச்சுமை ஏற்படும். ஓய்வு வயது நீட்டிக்கப்பட்டதால் இரண்டு ஆண்டுகளில் அவர்கள் பெறும் மாத சம்பளத்தை கணக்கு போட்டு பார்த்தால், அவர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதிய பலன்களை விட அதிகமாகவே இருக்கும். எனவே, தாங்கள் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, பழையபடி 58 ஆக குறைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
துறை தேர்வுக்கான முடிவுகள் தேதி மற்றும் விண்ணப்பிக்கும் தேதி மற்றும் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது...
2021 - ஜூன் மாதம் நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் 08.06.2021 முதல் 11.06.2021 வரை நடைபெறவிருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை- II , தமிழ்நாடு போக்குவரத்து சார் நிலைப் பணிகள் 2013-2018 , பணிக்கான நேர்முகத் தேர்வு , தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது . மேற்படி பதவிக்கான நேர்முகத் தேர்வின் மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் .
> அறிவிக்கை எண் 18/2019 , நாள் 29.05.2019 - இல் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் , 2008-2019 , 1. உதவி மின் ஆய்வாளர் 2. உதவி பொறியாளர் ( மின்சாரம் ) ( பொதுப் பணித் துறை ) மற்றும் 3. தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவிகளுக்கான கலந்தாய்வு ( Counselling ) தேதியும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் . 22.06.2021 முதல் 30.06.2021 வரை நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் , மே -2021 தள்ளி வைக்கப்படுகிறது , மேலும் முடிவுகள் வெளியிடப்படாத 14 துறைத் தேர்வுகளின் முடிவுகள் 20.07.2021 அன்று வெளியிடப்படும்.
விண்ணப்பதாரர்களின் நலன் கருதி , துறைத் தேர்வுகள் , மே - 2021 - க்கு விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 31.07.2021 என மாற்றம் செய்யப்படுகிறது , இத்தேர்வானது ஆகஸ்டு 2021 ல் நடத்தப்படும். மேற்படி தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
>>> தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செய்தி வெளியீடு எண்: 20/ 2021, நாள்: 29-05-2021...
பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் எத்தனை பேர்? ஜூன் 30க்குள் கணக்கெடுக்க திட்டம்...
பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் எத்தனை பேர்? ஜூன் 30க்குள் கணக்கெடுக்க கிராம அளவில் குழு அமைக்க திட்டம்...
வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் 28.05.2021 முதல் 27.08.2021 வரை புதுப்பிக்கும் முறை - அரசின் செய்தி வெளியீடு...
வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் 28.05.2021 முதல் 27.08.2021 வரை புதுப்பிக்கும் முறை - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்: 181, நாள்: 30-05-2021...
>>> தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்: 181, நாள்: 30-05-2021...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
23-12-2024 - School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...