கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் 14-06-2021 வரை மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் குறித்த முழு விவரம் (தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்:229, நாள்: 05-06-2021)...










 கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில்


* மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி.


• தனியாக செயல்படுகின்ற மளிகை , பலசரக்குகள் , காய்கறிகள் . இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 


* காய்கறி , பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . . மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் . மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு , ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிருவாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும் .  இறைச்சிக் கூடங்கள் ( Slaughter House's  ) மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும் . அனைத்து அரசு அலுவலகங்களும் , 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் . 


• சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு , பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் .


 * தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.


 மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு , ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன்


கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும் . . தனியாக செயல்படுகின்ற மளிகை , பலசரக்குகள் , காய்கறிகள் , இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 


* காய்கறி , பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 






* மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் . மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு , ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிருவாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும் . - இறைச்சிக் கூடங்கள் ( Slaughter houses ) ) மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும் . 


* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் . 


* அனைத்து அரசு அலுவலகங்களும் , 30 சதவிகிதம் • அனைத்து அரசு அலுவலகங்களும் , 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் , 


* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு , பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் . 


• தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் , வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் ( Housekeeping ) இ - பதிவுடன் அனுமதிக்கப்படும் . . மின் பணியாளர் ( Electricians ) பிளம்பர்கள் ( Plumbers ) ( கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் ( Motor Technicians ) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ - பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர் . 


* மின் பொருட்கள் ( electrical goods ) , பல்புகள் , கேபிள்கள் , ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் - 7/10 கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 


* மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் ( விற்பனை நிலையங்கள் அல்ல ) காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 


* ஹார்டுவேர் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . . வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்டும் .


. கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் 


வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் ( விற்பனை நிலையங்கள் அல்ல ) காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 


வாடகை வாகனங்கள் , டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ - பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும் . மேலும் , வாடகை டேக்ஸிகளில் , ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும் , ஆட்டோக்களில் , ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும் . பொது . நீலகிரி மாவட்டம் , கொடக்கானல் , ஏற்காடு . ஏலகிரி , குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ - பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும் .


• கோயம்புத்தூர் . திருப்பூர் , சேலம் , கரூர் , ஈரோடு , நாமக்கல் , திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் , ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் , ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின் , ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும் , மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும் , 10 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் . 


* தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு காய்கறி , பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம் , பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் , இது தொடர்ந்து செயல்படுத்தப்படும் . 


• பொது மக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குமாறும் . இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் . கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த , பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் , பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் . 


 மேலும் , கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி , பொது இடங்களில் முகக் கவசம் அணிவது , சமூக இடைவெளியினை கடைபிடிப்பது , கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும் , நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் , பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.


என முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்...


>>> தமிழ்நாட்டில் 14-06-2021 வரை மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் குறித்த முழு விவரம் (தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்:229, நாள்: 05-06-2021)...


காடுகளில் விலங்குகள் வாழ்ந்தால் நாட்டில் மனிதர்கள் வாழலாம் : இன்று (ஜூன் 5) சுற்றுச்சூழல் தினம்...

 


உலகில் உயிர்வாழும் சிறு பூச்சியில் இருந்து யானைகள் வரை அனைத்து உயிரினத்திற்கும் இந்த பிரபஞ்சத்தில் பெரும்பங்கு உண்டு. ஆறு அறிவுடன் இயற்கையை வெல்ல நினைக்கும் மனிதர்களாகிய நம்மால் இந்த பங்கினை பெரும்பாலான சமயங்களில் தெரிந்து கொள்ள முடியாததால்தான் இயற்கை பேரழிவு நிகழ்கிறது.இதற்கான உதாரணம்தான் அமெரிக்காவில் 8991 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளயெல்லோ ஸ்டோன் தேசிய பூங்கா. அங்கு எரிமலைகள், சுடுநீர் ஊற்றுகள், அடர்ந்த காடுகள், ஏரிகள், வற்றா ஆறுகள், சாம்பல் நிற ஓநாய்கள், கருப்புக் கரடிகள், கிரிஸ்லி கரடிகள், நாய் இனத்தை சேர்ந்த கயோட்டிகள், காட்டு எருதுகள், 'எல்க்' மற்றும் 'மூஸ்' இன மான்கள், ஏராளமான பறவையினங்கள், ஊர்வனங்கள் இருந்தன.


ஆறுகள் வறண்டன


சாம்பல் நிற ஓநாய்கள் அங்குள்ள மான்களையும், வனத்திற்கு அருகாமையில் இருந்த கால்நடைகளையும் அச்சுறுத்தவும், வேட்டையாடவும் தொடங்கின. இதனால் ஓநாய்களை முழுமையாக சுட்டுக்கொல்ல 1914ல் வன அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி 1926ல் கடைசி ஓநாயும் சுட்டுக் கொல்லப்பட்டது.ஓநாய்கள் அழிக்கப்பட்ட சில ஆண்டுகளில் 'யெல்லோ ஸ்டோன்' பகுதியில் உள்ள ஆறுகள் வறண்டன. காரணத்தை அறிய விஞ்ஞானிகள் முயற்சித்தபோது ஓநாய்கள் இல்லாததால் 'எல்க்' மான்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியது தெரிந்தது. அவை பயமின்றி ஒரே இடத்தில் மேயத் தொடங்கின. இதனால் அவ்வனப்பகுதியின் பள்ளத்தாக்குகளில் பிரதானமான ஆஸ்பென், வில்லோ, கார்டன் உட் போன்ற மரங்கள் அழியத் தொடங்கின.


இதனால் நிலச்சரிவு, சூழல் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. இம்மரக்கன்றுகளை கொண்டு ''பீவர்'' என்னும் எலியினத்தை சேர்ந்த உயிரினம் அணைக்கட்டி உயிர்வாழ்ந்த சூழ்நிலையும் முடிவுக்கு வந்தது. இக்காரணங்களால் யெல்லோ ஸ்டோன் வனப்பகுதியில் ஓடிய ஆறுகள் வறண்டன. இவ்வாறு இயற்கை சூழலியலில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு உயிரினத்தை இழக்கும்போது ஏற்படக்கூடிய பேரழிவு 'டிராபிக் கேஸ்கேட்' எனப்படுகிறது.1996ல் பிற வனப்பகுதிகளில் இருந்து சாம்பல் நிற ஓநாய்கள் இங்கு மறு அறிமுகம் செய்யப்பட்டன. ஓநாய்கள் மீண்டும் வந்த 6 ஆண்டுகளில் 'எல்க்' மான்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வந்தது.



 

மரங்களின் வளர்ச்சி அதிகரித்தது, நிலச்சரிவுகள் குறைந்தது.' பீவர்கள்' எண்ணிக்கை பெருகியது மட்டுமின்றி அவைகளால் ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளால் நிலத்தடி நீரும் ஆறுகளும் உயிர் பெற்றன. கரடிகள், கயோட்டிகள், நரிகள், பறவைகள் பெருகி பல்லுயிர் பெருக்கமே அரங்கேறியது. ஆகவே ஓநாய்கள் இக்காடுகளுக்கும் அவற்றில் உருவாகும் நதிகளுக்கும் இன்றியமையாதவைகளாய் இருக்கிறது.


உணவுச்சங்கிலி


இதுபோன்று நம் இந்திய வனப்பகுதிகளில் உணவுச் சங்கிலி தலையாய நிலையில் உள்ளதற்கு முக்கிய காரணமாக அமைந்த விலங்கு புலி. புலிகள் ஒரு காட்டின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. புலிகள் தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைப்பதால் காட்டின் பல்லுயிர் பெருக்கத்தை சமநிலைப்படுத்துவது மட்டுமின்றி காடுகளில் உற்பத்தியாகும் நதிகளையும் காப்பாற்றுகிறது.நுாறு ஆண்டுகளுக்கு முன் ஒரு லட்சமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2010ல் வெறும் 1706 ஆக குறைந்தது. புலிகளால் தான் காடுகள் வளம் பெற முடியும். காடுகள் வளம் பெற்றால்தான் நதிகள் வற்றாத ஜீவநதிகளாகும். நீர் இருந்தால் தான் மனிதன் உயிர் வாழ முடியும் என்பதை உணர்ந்த இந்திய அரசு 1973ல் 'ப்ராஜக்ட் டைகர்' என்னும் அமைப்பின் மூலமாக முதலில் 9 புலிகள் சரணாலயத்தை உருவாக்கியது. தற்பொழுது தேசிய புலிகள் பாதுகாப்பு வாரியத்தின் கீழ் இந்தியாவில் 51 புலிகள் சரணாலயங்கள் பராமரிக்கப்படுகின்றன. 2018 ல் இந்தியாவில் நடத்தப்பட்ட 'கேமரா டிராப்'கள் மூலம் புலிகள் கணக்கெடுப்பு கின்னஸ் புகழ்பெற்றது. இதில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை சரிவில் இருந்து மீண்டும் 2967 ஆக உயர்ந்தது.


21.34 சதவீதம் காடுகள்


இன்று உலகில் 21.34 சதவீதம் காடுகளாக இருப்பினும், இவற்றில் 4.93 சதவீதம் மட்டுமே வன உயிரினங்கள் வாழக்கூடிய பாதுகாக்கப்பட்ட காடுகளாக திகழ்கிறது. உலக மக்கள் தொகையில் 16.7 சதவீதத்தினர் இந்தியாவில் இருப்பினும், 51 புலிகள் சரணாலயங்களில் பரப்பளவு 2.2 சதவீதம் மட்டுமே. மனிதகுலம் நோயற்று என்றும் ஆரோக்கியமாக வாழ காடுகள் முக்கியம் என்பதால் ஒவ்வொரு நாளும் இக்காடுகளின் மேலான மனித தாக்கம் அதிகரித்துள்ளது. 2018ல் தேசிய புலிகள் பாதுகாப்பு வாரியத்துடன் இணைந்து இந்திய காடுகள் மேலாண்மை நிறுவனம் காடுகளும் பொருளாதாரமும் என்ற ஒரு ஆய்வு கட்டுரை வெளியிட்டது. அந்த ஆய்வில் இந்தியாவில் 10 புலிகள் சரணாலயத்தின் பொருளாதாரத்தை மதிப்பீடு செய்தனர்.


சராசரியாக புலிகள் சரணாலய மேலாண்மைக்கு ஒரு ரூபாய் செலவு செய்வது 2500 ரூபாயிற்கான பலன்களை தருகிறது என்பது வியப்பு. இந்த ஆய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 புலிகள் சரணாலயத்தின் மூலம் விலை மதிப்பீடு செய்யக்கூடிய, விலை மதிப்பீடு செய்ய முடியாத பலன்களாக ஒரு ஆண்டிற்கு ரூ.5.96 லட்சம் கோடி மதிப்புள்ள பலன்கள் பெறுவது கண்டறியப்பட்டுள்ளது. இது இந்திய அரசின் 2019 -- 20 பட்ஜெட்டில் பொது நிறுவனங்களின் செலவில் 17.94 சதவீதமாகும்.புலிகள் சரணாலயங்கள் வாயிலாக பெறக்கூடிய விலை மதிப்பீடு செய்யக்கூடிய பலன்கள், வேலை வாய்ப்பு, சுற்றுலா வருமானம், கால்நடைத் தீவனம், காடு சார்ந்த பொருட்களின் விற்பனை, மீன் பிடிப்பு போன்றவையாகும். விலை மதிப்பீடு செய்ய முடியாத பலன்கள் புவி வெப்பமயமாதல் தடுப்பு, நதிகள் நீர் நிலைகள் பாதுகாப்பு, மண் வள பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்படுதல், மரபணுக்கள் பராமரிப்பு, மாசு கட்டுப்பாடு போன்றவை. உதாரணத்திற்கு இந்த 10 புலிகள் சரணாலயங்களின் மூலமாக பாதுகாக்கப்படும் நீர் மற்றும் நீர் நிலைகளில் பொருளாதார ஒப்பீடு ரூ.33,000 கோடியாகும். இது நீர்நிலை மேலாண்மைக்காக இந்திய அரசு புதிதாக தோற்றுவித்துள்ள 'ஜல்சக்தி' அமைச்சகத்தின் ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டை காட்டிலும் ரூ.4000 கோடி அதிகம்.


இன்றியமையாதது


பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ரோடுகள், ரயில் பாதைகள், கனிமச் சுரங்கங்கள், தடுப்பணைகள் பணிமேற்கொள்வது காடுகளில் வற்றாத பொருளாதாரத்தை வற்ற செய்யக்கூடிய செயல்களாகும். புலிகள் வாழும் காட்டின் முக்கியத்துவத்தை அரசு ஆய்வு செய்து உறுதிப்படுத்தி உள்ளது. இன்று இந்தியாவில் உள்ள 2967 புலிகளில் 35 சதவீதம் சரணாலயத்திற்கு வெளியே உள்ள காடுகளில் வாழ்கின்றன. இந்த காடுகளுக்கும் புலிகள் சரணாலயத்திற்கு இணையான பாதுகாப்பு அளிப்பது இன்றியமையாது. 

-டாக்டர் சி.ப.ராஜ்குமார், உறுப்பினர், தமிழ்நாடு அரசு வன உயிரின வாரியம் drcpraj@nalamhospital.in


ஜூன் 24ல் B.Ed., செமஸ்டர் தேர்வு...

 


ஜூன் 24ல் பி.எட்., செமஸ்டர் தேர்வு...


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பொறுப்பு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தன், கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


உயர்கல்வி துறை செயலகத்தில், பல்கலைகளின் துணைவேந்தர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், கடந்த வாரம் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், ஆன்லைன் வழி செமஸ்டர் தேர்வு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.


எனவே, 2021 ஜூனில் நடக்கும் செமஸ்டர் தேர்வுகள், வரும், 24ம் தேதி ஆன்லைன் வழியில் நடக்கும். இதில் பங்கேற்க உள்ள நடப்பு கல்வி ஆண்டு மாணவர்கள் மற்றும் அரியர் மாணவர்கள், கல்லுாரிகளில் வழிமுறைகளை தெரிவித்து, தேர்வு கட்டணம் செலுத்தவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பொறியியல் செமஸ்டர் தேர்வுகள்: அண்ணா பல்கலைக்கழகம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

 


அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் குறித்து முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.



பொறியியல் படிப்புகளுக்கான நவம்பர் / டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள், பிப்ரவரி / மார்ச் / ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு, ஏப்ரலில் தேர்வு முடிவுகள் வெளியாகின. ஆனால் அதில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததால், மறுத்தேர்வு நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.




இந்நிலையில் மறுத்தேர்வு மற்றும் ஏப்ரல் / மே மாத செமஸ்டர் தேர்வு (முதுகலை 2வது செமஸ்டர் தவிர்த்து) எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.




* தேர்வுகள் பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பு நடைபெற்றதை போல 3 மணி நேரம் ஆஃப்லைன் முறையில், பேனா மற்றும் காகித முறையில் நடைபெறும்.




* வீட்டிலிருந்தே தேர்வு எழுத மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்.




* முன்னதாக மாணவர்கள் தேர்வுத் தாளைப் பதிவிறக்கம் செய்ய, கணினி / மடிக்கணினி / மொபைல்போன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணைய வசதியுடன் வைத்திருக்க வேண்டும்.




* மாணவர்கள் தேர்வு எழுதத் தேவையான பேனா, பென்சில், அழிப்பான், ஏ4 தாள்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து உபகரணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.




* ஹால் டிக்கெட்டை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். மேலும் அந்தந்த தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.




* தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாகக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக மின்னஞ்சல் / கூகுள் கிளாஸ்ரூம்ஸ் / மைக்ரோசாப்ட் டீம்ஸ் மூலம் வினாத்தாள் அனுப்பப்படும்.




* தேர்வு காலை, பிற்பகல் என 2 பிரிவுகளாக 3 மணி நேரம் நடத்தப்படும். காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்வுகள் இருக்கும்.




* வினாத்தாளைப் பெறுவதற்கு 9 முதல் 9.30 வரையிலும், தேர்வுகளை எழுத 9.30 முதல் 12.30 வரையிலும் விடைத்தாளை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய 12.30 முதல் 1.30 வரையிலும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல பிற்பகல் வேளையில் 2 முதல் 2.30 வரை வினாத்தாளைப் பெறவும் 2.30 முதல் 5 மணி வரை தேர்வு எழுதவும் 5.30 முதல் 6 மணி வரை விடைத்தாள்களை ஸ்கேன் செய்து அனுப்பவும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




* வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்து, தனி வெள்ளைத் தாளில் நீலம் மற்றும் கருப்பு நிற மையால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். விடைத்தாளில் காலிப்பக்கம் விடக்கூடாது. ஒருவேளை பக்கம் எழுதப்படாமல் இருந்தால் பேனாவால் கோடிட்டு அடிக்க வேண்டும்.




* ஏ4 தாளில் 30 பக்கங்களுக்கு மிகாமல் மாணவர்கள் தேர்வெழுத வேண்டும்.




* தேர்வு எழுதி முடித்தவுடன் விடைத்தாளை ஸ்கேன் செய்து பிடிஎஃப் வெர்ஷனாக அனுப்பி வைக்க வேண்டும்.




* தேர்வு முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் விடைத்தாளை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். காலதாமதமாக அனுப்பினால் விடைத்தாள் நிராகரிக்கப்படும்.




* விடைத்தாளை எடுத்து நூலில் கட்டி, விரைவுத் தபால், பதிவுத் தபால் அல்லது கொரியர் மூலம் அந்தந்தக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் பெயரில் அன்றைய தினமே அனுப்ப வேண்டும்.




* நேரடியாகக் கல்வி நிறுவனத்திற்குச் சென்று விடைத்தாளைத் தரக்கூடாது.




* ஒவ்வொரு தாளின் மேல்புறத்திலும் மாணவரின் பெயர், பாடக் குறியீட்டு எண், தேர்வின் பெயர், பதிவு எண் ஆகியவற்றை கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும்.




* ஒவ்வொரு தாளின் கீழ்ப்புறத்திலும் தேர்வு தேதி, பக்கம் எண், மாணவர்களின் கையொப்பம் ஆகியவை இருக்க வேண்டும். கூடுதல் தகவல் தேவைப்பட்டால் அந்தந்தக் கல்லூரி நிர்வாகத்தை மாணவர்கள் அணுகலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஆசிரியர் தேர்வு வாரியத்தை அரசு தேர்வு பணியாளர் ஆணையத்துடன் இணைக்கும் திட்டம் ஏதும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம்...

 ஆசிரியர் தேர்வு வாரியத்தை அரசு தேர்வு பணியாளர் ஆணையத்துடன் இணைக்கும் திட்டம் ஏதும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம்...



G.O.86 - அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு, 10 முட்டைகளை வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு...

 G.O.86 - அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு, 10 முட்டைகளை வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு...


 சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு, உலர் உணவு தானியங்கள் மற்றும் முட்டை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.


கொரோனா நோய் பரவல் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள், சத்துணவு மையங்கள் செயல்படவில்லை.சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் குழந்தை களின் உடல் நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு உலர் உணவு தானியங்கள், அரசு சார்பில் வழங்கப்படுகின்றன.


அந்த வகையில், மே மாதம் சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு உலர் உணவு தானியங்கள், முட்டை வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துஉள்ளது.


அதன்படி ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 3,100 கிராம் அரிசி, 1,200 கிராம் பருப்பு; ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 4,650 கிராம் அரிசி, 1,250 கிராம் பருப்பு மற்றும் தலா 10 முட்டைகள் வழங்கப்பட உள்ளது.சமூக நலத்துறை கமிஷனர், உலர் தானியங்களை கொள்முதல் செய்து வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


Social Welfare and Nutritious Meal Programme Department National Programme of Mid Day Meal in Schools (NP-MDMS) – Provision of dry ration to the Primary and Upper Primary beneficiaries under Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme during the month of May 2021 Orders – Issued..


Social Welfare and Nutritious Meal Programme (SW 4-1) Department


G.O(D).No.86, Dated: 03.06.2021...


ORDER

As per the guidelines of Government of India in the letter first read above, in the G.O. second read above orders have been issued to provide rice and dhal as dry ration to the beneficiaries studying from first standard to eighth standard under Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme in all days of vacation period of May 2020 due to closure of schools in view of Covid-19 as detailed below:






>>> Click here to Download G.O.(D)No.86, dated 03-06-2021(Dry Ration).pdf


அனைத்து ஆசிரியர்களும் ஜூன் 20- க்குள் கொரானா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் - CEO Proceedings...

 அனைத்து ஆசிரியர்களும் வரும் ஜூன் 20- க்குள் கொரானா வைரஸ் தடுப்புக்கான தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும் - CEO Proceedings...


THIRUVALLUR CEO PROCEEDINGS 


திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் ஆளுகைக்குட்பட்ட அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் , அலுவலர்கள் / அலுவலக பணியாளர்கள் அனைவரும் வரும் 20.06.2021 க்குள் கொரானா வைரஸ் தடுப்புக்காள தடுப்பூசி ( Vaccine ) கண்டிப்பாக போடப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறு தடுப்பூசி ( Vaccine ) போடப்பட்டவர்களுக்கு அரசு அளிக்கும் சான்றிதழ் நகலை உரியவரிடமிருந்து பெற்று அந்தந்த ஒன்றியத்திற்குரிய அலுவலர்கள் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் , போடாதவர்களுக்குரிய காரணத்தை ஆதாரத்துடன் பெற்று வைத்திருக்குமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்தகவல் குறித்து மெத்தனம் காட்டாமல் நடவடிக்கை மேற்கொண்டு இணைப்பிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 19.06.2021 க்குள் இவ்வலுவலக மின்ளஞ்சலுக்கு அனுப்புமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் - கடலூர் செம்மங்குப்பம் பகுதியி...