பள்ளிகள் திறப்பு தற்போது இல்லை - ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படாது - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு மற்றும் 12-ம் வகுப்பு உள்ளீட்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க திட்டம்...
CBSE 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு மற்றும் 12-ம் வகுப்பு உள்ளீட்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க திட்டம்...
3 மதிப்பெண்களையும் சேர்த்து வெயிட்டேஜ் முறை அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை.
EMIS – ல் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் – CEO, DEO, BEO, HM உள்ளிட்டோர்க்கு அறிவுரைகள் – பள்ளிக் கல்வி ஆணையர் கடிதம்...
பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதத்தில் எந்த ஒரு நிலையிலும் தனிப்பட்ட முறையில் துறை சார்ந்த விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வாயிலாகவோ அல்லது மாவட்டக் கல்வி அலுவலகங்கள் வாயிலாகவோ பெற்று தொகுக்கும் பணியினை ( data collection consolidation ) மேற்கொள்ளக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மாநில அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான விவரங்களைக் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை ( EMIS ) வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப அனைத்து நிலையிலும் ( பள்ளிகள் , வட்டாரக் கல்வி அலுவலகங்கள் , மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் வருவாய் மாவட்டக் கல்வி அலுவலங்கள் ) அவ்வப்போது ஏற்படும் விவரங்களை உடனுக்குடன் நிகழ்நிலையில் ( current updation ) வைத்திடும் பொருட்டு EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 16.02.2021 அன்று கல்வி மேலாண்மைத் தகவல் முறைமையில் அனைத்து வகைப் பள்ளிகள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் சார்ந்த களஅளவில் உள்ள நேரிடைத் தகவல்கள் அனைத்தும் கிடைக்கப் பெறும் இயங்கு தளமாக உள்ளது.
* இவ்விணையதளத்தில் பள்ளிகளுடைய விவரங்கள் , மாணவர்களின் தகவல்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள் என மூன்று முக்கிய பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தானியங்கி முறையில் எளிமையாக அறிக்கைகள் தயாரித்து வழங்க முடிவதுடன் , பள்ளி அளவில் பயன்பாட்டில் உள்ள 30 – க்கும் மேற்பட்ட பதிவேடுகள் எண் மயமாக்கப்பட்டு உள்ளன.
* ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் பணி நிர்ணயம் , பணி மாறுதல் , பதவி உயர்வு மற்றும் கலந்தாய்வு போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
* 10 , 11 மற்றும் 12 – ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் பொதுத் தேர்விற்கான மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் பணியும் இதில் அடங்கும்.
* இவ்வாறான இணையதளத்தில் பள்ளிகள் , வட்டார அலுவலகங்கள் , கல்வி மாவட்டங்கள் மற்றும் வருவாய் மாவட்டங்கள் அளவிலான விவரங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு இணையதளத்தினை நிகழ்நிலையில் ( current updation ) வைக்கப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
* எனவே , இனி வருங்காலங்களில் பள்ளிகள், ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்பான அனைத்துப் புள்ளி விவரங்களையும் EMIS மூலம் பெற்று உரிய நடடிவக்கை எடுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. எக்காரணம் கொண்டும் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் மேற்படி விவரங்களை நேரடியாகப் பெறுவதைத் தவிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
>>> பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதம் ந.க.எண்: 028302/ எப்2 / 2021, நாள்: 10-06-2021...
RMSA இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு (G.O.No.277, Date:30.10.2012) தொடர் நீட்டிப்பு வழங்கிடும் பொருட்டு கூடுதல் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு...
RMSA இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு (G.O.No.277, Date:30.10.2012) தொடர் நீட்டிப்பு வழங்கிடும் பொருட்டு கூடுதல் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 14813/ அ4/ இ1/ 2021, நாள்: 06-05-2021...
>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 14813/ அ4/ இ1/ 2021, நாள்: 06-05-2021...
கொரோனா 3வது அலை - மருத்துவக் கல்வி இயக்குனர் புதிய உத்தரவு...
கொரோனா 3வது அலை - மருத்துவக் கல்வி இயக்குனர் புதிய உத்தரவு...
ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயாராக இருக்க வேண்டும்.
கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
குழந்தைகள் மருத்துவர், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
குழந்தைகள் பிரிவில் 4ல் 1பகுதி செவிலியர்களை அவசர கால பணிக்காக தயார் படுத்திடவேண்டும்- தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர்.
கொரோனா 3-வது அலையில் 18 வயதுக்குட்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருணை அடிப்படையில் பணி நியமனம் - குறித்த தகவல்கள் (Appointment on Compassionate Basis - Information)...
கருணை அடிப்படையில் பணி நியமனம் - குறித்த தகவல்கள்...
1. கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?
இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள். விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
2 கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?
ஆம், அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
3 கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?
தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் – 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
4 இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார், அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா?
உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது, இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.
5 இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா?
இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.
6 கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?
இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
7 கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?
கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.
கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம்.
இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.
இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.
இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.
நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.
கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம்.
வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.
இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.
8 கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு?
காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.
9 கருணை அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது?
காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது.
10 காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்?
காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும், ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.
11 என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3, என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார், நான் இந்த வருடம் 10ஆம் – வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன், என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா?
அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும், எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறும வயது 18 ஆகும்.
12 என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன், 5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை, எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன், நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா?
தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.
13 கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா? உரிமையுடன் கோரலாமா?
கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று – ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03.08.1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும், மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.
14 கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது, ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள், என்ன செய்வது?
தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.
15 திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா?
திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.
16 மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?
கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).
அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.
மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...