30 ஆண்டுகள் ஒரே நிலையில் பணிபுரிந்தமைக்கு போனஸ் ஊதிய உயர்வு - பள்ளித் தலைமையாசிரியரே பெற்று வழங்கலாம் - கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...
>>> கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...
30 ஆண்டுகள் ஒரே நிலையில் பணிபுரிந்தமைக்கு போனஸ் ஊதிய உயர்வு - பள்ளித் தலைமையாசிரியரே பெற்று வழங்கலாம் - கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...
>>> கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...
மதிப்பெண் சான்றிதழ், மாணவர் சேர்க்கை, பள்ளி கட்டமைப்பு உள்ளிட்ட பல விவகாரங்கள் பற்றி இன்று (16-06-2021) மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் காணொளி வாயிலாக ஆலோசனை...
பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் நிர்ணயம் தொடர்பாக, மூன்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அறிக்கை தயாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பிரச்னையால், பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை நிர்ணயிக்க, கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. கருத்துருக்கள் சமர்ப்பிப்புபள்ளி கல்வித் துறை முதன்மை செயலர் உஷா, சென்னை பல்கலை துணைவேந்தர் கவுரி மற்றும் கல்வியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த கமிட்டியில், மூன்று பள்ளிகளின்தலைமை ஆசிரியர்களுக்கு, இடம் அளிக்கப்பட்டு, அவர்களின் கருத்துருக்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு மேல்நிலைப் பள்ளி பிரதிநிதியாக, திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோர்பவ மேரி, அரசு உதவி பெறும் பள்ளி பிரதிநிதியாக, திருநெல்வேலி சங்கர் நகர், சங்கர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன்; மெட்ரிக் பள்ளி தரப்பில், சென்னை ஆழ்வார் திருநகரி செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜேம்ஸ் சத்தியராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், 10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண், பிளஸ் 1 தேர்வு மதிப்பெண், பிளஸ் 2 செய்முறைத் தேர்வு மதிப்பெண் ஆகியவை அடிப்படையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைகளை தயாரித்து வழங்க, ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
கல்வித் துறை முடிவு
மூவரும் தங்களின் அனுபவம் மற்றும் கல்வி அடிப்படையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைகளை, பல்வேறு வகைகளில் தயாரித்துள்ளனர்.
அதேபோல, சென்னை பல்கலை துணைவேந்தர் கவுரி உத்தரவின்படி, தேர்வுத் துறை அதிகாரிகள் உதவியுடன், மதிப்பெண் வழங்கும் முறை தயாரிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவற்றில் சிறந்த முறையை பயன்படுத்தி, மாணவர்களின் உயர் கல்வி பாதிக்காத வகையில், மதிப்பெண் பட்டியல் வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, முதல்வரின் ஒப்புதல் பெற்றதும் வெளியாகும் என, பள்ளிக் கல்வி தரப்பில் கூறப்படுகிறது.
தமிழகத்தில் மூன்றாவது அலையை எதிர்கொள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், குழந்தைகள் வார்டு துவங்கப்பட்டு உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 1.30 கோடி ரூபாய் செலவில், ஒரு நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை எம்.எல்.ஏ., உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.
70 ஆயிரம் படுக்கைகள்
நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், எம்.பி., தயாநிதி, மருத்துவமனை இயக்குனர் மணி, மருத்துவ நிலைய அலுவலர் ஆனந்த் பிரதாப் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என, கூறப்படுகிறது. ஆனால், அது உறுதிப்படுத்தப்படாத தகவல் என, மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழகம் முழுதும் 70 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்கப் பட்டுள்ளன.மூன்றாவது அலை வந்தாலும், அதை சமாளிக்க போதிய கட்டமைப்புகள் அரசிடம்
உள்ளன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் திறந்து வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 1,737 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
4,000 குப்பிகள் கையிருப்பு
அனைத்து மருத்துவமனைகளிலும், கறுப்பு பூஞ்சைக்கான சிறப்பு சிகிச்சை வார்டு திறக்கப்பட்டுள்ளது. எனவே, அறிகுறி தெரிந்தவுடன், மருத்துவமனைக்கு வர வேண்டும். இதற்கான மருத்துவ சிகிச்சையை பொறுத்தவரை, மூன்று வகையான மருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மத்திய அரசிடம்
'ஆம்போடெரிசின் -- பி' மருந்தில் 45 ஆயிரம் குப்பிகள் கேட்டிருந்தோம்; மத்திய அரசு, 11 ஆயிரத்து 796 குப்பிகளை அனுப்பியது. தற்போது 4,000 குப்பிகள் கையிருப்பில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
'கொரோனா தொற்று முடிவுக்கு வரும்'
''தமிழகத்தில் கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும்,'' என, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்திய அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தள்ளது. ஒரே நாளில் 25 ஆயிரத்து 550 பேர் நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். புதிதாக தொற்றால் பாதிக்கப்படுவோரை காட்டிலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 56 ஆயிரத்து 550 படுக்கைகள் காலியாக உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும், தினமும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1,000 ஆக இருந்தது. தற்போது 100 ஆக குறைந்துள்ளது. விரைவில், கொரோனா நோய் தொற்று முடிவுக்கு வரும்.
தமிழகத்தில் இதுவரை 1 கோடியே ஐந்து லட்சத்து 97 ஆயிரத்து 418 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஐதராபாத், புனேவில் இருந்து 6 லட்சத்து 16 ஆயிரத்து 660 தடுப்பூசிகள் வர உள்ளன. அவை வந்தவுடன், ஐந்து மணி நேரத்தில் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் மாற்றுப் பணியில் இருந்த ஆசிரியர்கள், அவரவர் பள்ளிகளுக்கு அதிரடியாக இடம் மாற்றப்பட்டு உள்ளனர்.
ஆசிரியர்கள் அலுவலக பணி பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறுகின்றன. பள்ளி கல்வி அமைச்சரான மகேஷ், துறையின் பொறுப்பை கவனித்தாலும், முதல்வர் ஸ்டாலினின் நேரடி பார்வையில் நிர்வாகம் நடக்கிறது.
பள்ளி கல்வி செயலர் உஷா, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.அந்த வகையில், பள்ளி கல்வி இயக்குனரகத்தில் பல ஆண்டுகளாக அலுவலக பணிகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் அதிரடியாக இடம் மாற்றப் பட்டு உள்ளனர். கற்பித்தல் பணிக்கு வந்த ஆசிரியர்கள், அலுவலக பணிகளை பார்க்கக் கூடாது என உத்தர விடப்பட்டுள்ளது.
மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து, பள்ளி கல்வி இயக்குனரகத்தில் அலுவலர்களாக பணி யாற்றியவர்கள், அவரவர் நியமிக்கப்பட்ட இடங்களுக்கே மாற்றப்பட்டு உள்ளனர். சென்னையில் துவங்கியுள்ள இந்த மாற்றம் படிப்படியாக, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பணிகளை, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் தீவிரப்படுத்தி உள்ளார்.
இந்த மாற்றத்தால், பள்ளிகளில் காலியாக இருந்த இடங்களுக்கு ஆசிரியர்கள் கிடைத்து உள்ளதாக மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தி வெளியீடு எண்:277, நாள்: 15.06.2021
செய்தி வெளியீடு
தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவினை ஆய்ந்து, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், சட்டம், கால்நடை உள்ளிட்ட படிப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. த.முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்திட மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணை...
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...