கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் தயார் செய்து மாணவரின் விபரங்களை Common Pool பகுதிக்கு அனுப்பப்பட்ட பிறகு மாணவரது பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தந்தை/ தாய் பெயர், பாலினம் போன்ற விவரங்களில் திருத்தம் செய்வது எவ்வாறு? EMIS _ FAQ...


 EMIS _ FAQ 


1. மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் தயார் செய்து மாணவரின் விபரங்களை Common Pool பகுதிக்கு அனுப்பப்பட்ட பிறகு மாணவரது பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தந்தை/ தாய் பெயர், பாலினம் போன்ற விவரங்களில் திருத்தம் செய்வது எவ்வாறு?


👉🏻Students → students admission வாயிலாக சார்ந்த மாணவரை மீண்டும் பள்ளியில் admit செய்திட வேண்டும். அவ்வாறு செய்தபின் students → students TC details வாயிலாக அனைத்து விபரங்களையும் சரிபார்த்து திருத்தங்களை  செய்து கொள்ளலாம்.


----------------------------------------

2. மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் தயாரிக்கும்போது மாணவரின் புகைப்படத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய தேவை இருந்தால் எவ்வாறு மேற்கொள்வது?


👉🏻மாணவர்களின் புகைப்படத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள students → students listல் சார்ந்த மாணவரது profileல் ஏற்கனவே உள்ள புகைப்படத்திற்கு பதிலாக தற்போது சரியான புகைப்படத்தை பதிவேற்றம் செய்து update செய்திட வேண்டும். (Students TC details module வாயிலாகவே மாணவரின் புகைப்படங்களை திருத்தம் செய்ய முயற்சிக்க வேண்டாம்)


----------------------------------------


3. மாணவனின் மாற்றுச் சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க காரணம் என்பதில் திருத்தம் மேற்கொள்வது எவ்வாறு?


👉🏻 ஒரு மாணவனின் மாற்றுச்சான்றிதழ் தயார் செய்தபின் மாணவனை common pool பகுதிக்கு அனுப்பும்போது, எந்த காரணத்தை தேர்வு செய்கிறீர்களோ அதுவே மாணவனின் மாற்றுச் சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க காரணமாக பதிவு செய்யப்படும். அவ்வாறு தாங்கள் தேர்வு செய்த காரணம் தவறுதலாக தேர்வு செய்யப்பட்டு இருப்பின், திருத்தம் செய்ய past students listல் பெயருக்கு எதிரே உள்ள "->" என்பதை கிளிக்  செய்து மீண்டும் சரியான காரணத்தை தேர்வு செய்வதன் மூலம் மாற்றம் செய்துகொள்ளலாம்.


RTE ACT 2009 - மாணவர்களை TC உட்பட எந்த ஆவணமும் இல்லாமல் நேரடி சேர்க்கை மூலம் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கான அரசாணை...



 கல்வி உரிமைச் சட்டம் 2009 - 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்களின் வயதிற்கேற்ப குறிப்பிட்ட வகுப்பில் சேர்த்தல் மற்றும் பிற பள்ளி மாணவர்களை மாற்று சான்றிதழ் உட்பட எந்த ஆவணமும் இல்லாமல் நேரடி சேர்க்கை மூலம் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கான அரசாணை G.O.Ms.No.:189, Dated: 12-07-2010...


மாணவர் சேர்க்கை தளர்வாணை - அரசாணை எண்: 189, பள்ளிக் கல்வித் துறை -நாள் 12-07-2010 ன்படி முதல் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க 6 மாதம் தளர்வாணை வழங்கப்பட்டுள்ளது...



>>> Click here to Download G.O.Ms.No.:189, Dated: 12-07-2010...


தேசிய நல்லாசிரியர் விருது 2021 - விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிப்பு...

 



National Award to Teachers 2021 - Last date of Self Nomination revised to 30.6.2021...








அனைத்து நிலை மாணவர்களும் திருப்தியடையும் வகையில் பிளஸ் 2 மதிப்பெண்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி...

 


அனைத்து நிலை மாணவர்களும் திருப்தியடையும் வகையில் பிளஸ் 2 மதிப்பெண்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி...


நன்றாகப் படிப்பவர்கள் உட்பட அனைத்து நிலை மாணவர்களும் திருப்தி அடையும் வகையில் பிளஸ் 2  தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு கிவ்2ஏசியா தொண்டு நிறுவனம் மற்றும் கிராமாலயா ஆகியன சார்பில் ரூ.73 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இன்று வழங்கப்பட்டன. பொருட்களைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  வழங்கினார்.



அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:


''பிளஸ் 2 தனித் தேர்வர்கள் நட்டாற்றில் விடப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். தனித் தேர்வர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படுமா, இல்லையா என்பது தொடர்பாக ஜூன் 19-ம் தேதி தமிழக முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.


10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள், கருத்துகள் வரப் பெறுகின்றன. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும் அடிப்படையில், மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு நன்றாகப் படிப்பவர்கள் உட்பட அனைத்து நிலை மாணவர்களும் திருப்தி அடையும் வகையில் மதிப்பெண் வழங்கப்படும்.



கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை


பள்ளிகள் கல்விக் கட்டணமாக 75 சதவீதத் தொகையை 2 தவணைகளாக வசூலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு அதிகமாகக் கட்டணம் வசூலிப்பதாக இ-மெயில், தொலைபேசி மூலம் நிறைய புகார்கள் வருகின்றன. புகார் கூறப்படும் பள்ளிகள் மீது அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்று ஆன்லைன் வகுப்புகளில் இருந்து மாணவர்களை வெளியேற்றும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


ஊரடங்கு தொடர்பாக ஜூன் 21-ம் தேதிக்குப் பிறகு தமிழக முதல்வர் எடுக்கும் நடவடிக்கையையொட்டி, பள்ளிகள் திறப்பு குறித்து யோசிக்கப்படும்.''


இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு), பி.அப்துல் சமது (மணப்பாறை), சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ராம் கணேஷ், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் எஸ்.லட்சுமி, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் கே.வனிதா, நகர் நல அலுவலர் (பொறுப்பு) சொ.அமுதா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

JEE மற்றும் NEET தேர்வுகள் நடத்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் - மத்திய அரசு...

 


ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நடத்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதுகுறித்து பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர், ஜேஇஇ மெயின் தேர்வு மற்றும் நீட் தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.



இதற்காக நிலைமையை பகுப்பாய்வு செய்து வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக ஜேஇஇ தேர்வுகள் நடப்பாண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முதற்கட்டமாகவும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 2ம் கட்டவும் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.


நீட் தேர்வுகள் குறித்து முடிவெடுக்காத நிலையில் கடந்த மே மாதம் 1ம் தேதி நடந்த தேர்வுக்கான பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் மீளாய்வுக் கூட்டத்தில்- ஆணையர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள்...



தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் மீளாய்வுக் கூட்டத்தில்-  ஆணையர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள் - CEO- proceedings



தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள்:


 1 , 10 ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு பட்டியல் ( NR ) சரிபார்க்கப்பட வேண்டும் , 


2. தொலைக்காட்சி வழியாக நடைபெறும் பாடங்களின் ஒளிபரப்பு கால அட்டவணை அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைய வேண்டும் .


3. 2021-22ம் கல்வியாண்டிற்குரிய தேவைப்பட்டியலின்படி புத்தகங்களை பெற்று பள்ளியில் தயாராக வைத்திருக்க வேண்டும் . உரிய ஆணை வந்தபின்பு மாணவர்களுக்கு புத்தகங்களை மட்டும் வழங்க வேண்டும்.


4. புத்தகம் பெறப்படாத / தேவைப்படும் பள்ளித் தலைமையாசிரியர்கள் உடன் முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.


5. புத்தகங்கள் கூடுதலாக தேவைப்படின் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் தேவைப்பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.


6. 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு முடிய அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டு உரிய பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு இதன் முழு விவரத்தை உடன் EMIS- ல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


7. பள்ளிக்குத் தேவைப்படும் சுற்றுச்சுவர்களின் அளவை மீட்டர் அளவிலும் ஏற்கனவே உள்ளவற்றின் அளவையும் உடன் EMIS- ல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


8. கூடுதலாக தேவைப்படும் வகுப்பறைகள் , மின்வசதிகள் , பழுது விவரங்கள் , இடிக்கப்பட வேண்டிய கட்டிட விவரங்கள் , தேவைப்படும் கழிப்பிட விவரங்கள் அனைத்தையும் உடன் EMIS- ல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


9. கொரோனாவினால் இறந்த பெற்றோர்களின் குழந்தைகளின் முழு விவரத்தினை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் உடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


10. 2013-14 முதல் சேர்க்கப்பட்ட RTE மாணவர்கள் விவரத்தினை EMIS- ல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


11 , 1 முதல் 12 ம் வகுப்பு வரை சேர்க்கை விவரத்தினை Google sheet- ல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


12.1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் விபரம் பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் தகவல் பலகை வைக்க வேண்டும்.


13. ஆங்கில வழி உள்ள பள்ளிகள் அதன் விபரத்தினை அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் தெரியப்படுத்த வேண்டும்.


14. மேல்நிலை வகுப்புகளில் புதிய பாடப்பிரிவு மற்றும் ஆங்கில வழி துவங்க விரும்பும் பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக அனுமதிகோரும் கருத்துருவை சமர்ப்பிக்க வேண்டும்.


15. 5 , 8 , 10 ஆகிய வகுப்புகள் முடித்த அனைத்து மாணவர்களையும் அருகாமையிலுள்ள அரசுப் பள்ளிகளில் ஒருவரும் விடுபடாமல் சேர்க்கை செய்வதற்குரிய நடவடிக்கைகள் தலைமையாசிரியரால் எடுக்கப்பட வேண்டும் .


16. அங்கீகாரம் புதுப்பிக்காத உதவிபெறும் பள்ளிகள் உடனடியாக அங்கீகாரம் புதுப்பிக்க உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும் . தவறும்பட்சத்தில் துறைசார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.




 மாவட்டக் கல்வி அலுவலர்கள் / வட்டாரக் கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு .... 


1. முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் உங்கள் தொகுதியில் முதல்வர் மனுக்களுக்கான பதிவேட்டை பராமரிக்கப்பட்டும் உடனுக்குடன் அவற்றுக்கான பதில்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


2. தகவல் அறியும் சட்ட மனுக்களை பதிவேடுகளில் பதிவு செய்தும் உரிய பதிலை உடனுக்குடன் அனுப்பி வைக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


3. அங்கீகாரமில்லாத பள்ளிகளின் விவரங்களை உடன் முதன்மைக் கல்வி அலுவலரின் கவனத்திற்கு எழுத்து மூலம் கொண்டுவர வேண்டும்.


4. கொரோனாவில் இறந்த பெற்றோர்களை சார்ந்த குழந்தைகளின் விவரங்களை பள்ளிகளிலிருந்து பெற்று தொகுத்து முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


5. மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப புத்தகங்கள் பெறப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து சான்றளிக்க வேண்டும்.


6. பள்ளிகளில் EMIS பதிவேற்றம் முழுமையாக நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும்.


7. பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமையாசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.


8. மேல்நிலைப் பள்ளிகளில் அரசாணை 18 ன்படி , புதிதாக வழங்கப்பட்டுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பணியிட விவரங்களை அளவைப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரத்தினை பார்வையிட்டு உறுதிசெய்யப்பட வேண்டும்.


>>> திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...


அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது - பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...



அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் கடந்த 14-ம் தேதி தொடங்கப்பட்டன. பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர்.


இதனால் நடப்பு ஆண்டில் 3 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் சில அரசுப் பள்ளிகளில் சேர்க்கையின்போது கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி,


அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விண்ணப்பம் உட்பட எதற்கும் கட்டணம் வசூல் செய்யக் கூடாது.


இதுதவிர எந்த நிபந்தனை அடிப்படையிலும் மாணவர் சேர்க்கையை நிறுத்தக் கூடாது. மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போது எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் செயல்பட வேண்டும். அதேபோல்,


புதிய மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளியில் இருந்து விலகி மாற்றுச் சான்றிதழ் பெறும் மாணவர்களின் விவரங்களை பள்ளிக்கல்வியின் EMIS தளத்தில் தினமும் முறையாக பதிவேற்ற வேண்டும். இதில் ஏதேனும் தவறுகள் நடைபெற்றால் அதுசார்ந்த தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க நேரிடும் என்பதால் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.


இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 Kalai Thiruvizha Banner

 கலைத் திருவிழா 2024-2025 Kalai Thiruvizha Banner HD >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...