கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (21-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 21, 2021



நினைத்த காரியங்களில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத பயணங்களின் மூலம் உடல் சோர்வு உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : காலதாமதம் உண்டாகும்.


பரணி : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 21, 2021



நெருக்கமானவர்களிடம் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். நினைத்த காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : சுபச்செய்திகள் கிடைக்கும்.


ரோகிணி : ஆசைகள் உண்டாகும்.


மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 21, 2021



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9 


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.


திருவாதிரை : அனுகூலமான நாள்.


புனர்பூசம் : பொறுப்புகள் குறையும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 21, 2021



விடாப்பிடியாக இருந்து நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாரிசுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சி தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன்களை அளிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் புதிய தொடர்புகளும், அறிமுகங்களும் ஏற்படும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



புனர்பூசம் : காரியசித்தி உண்டாகும்.


பூசம் : அறிமுகம் ஏற்படும்.


ஆயில்யம் : தன்னம்பிக்கையான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 21, 2021



உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



மகம் : இன்னல்கள் குறையும்.


பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.


உத்திரம் : லாபம் மேம்படும்.

---------------------------------------




கன்னி

ஜூலை 21, 2021



சகோதரர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் வழியில் அனுகூலம் உண்டாகும். மனை விருத்திக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மறைமுகமாக இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திரம் : அனுகூலமான நாள்.


அஸ்தம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


சித்திரை : போட்டிகள் குறையும்.

---------------------------------------




துலாம்

ஜூலை 21, 2021



குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மாற்றங்கள் ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதத்திற்கு பின்பு நிறைவேறும். தொழில் தொடர்பான பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



சித்திரை : மகிழ்ச்சியான நாள்.


சுவாதி : நெருக்கடிகள் குறையும்.


விசாகம் : தேவைகள் பூர்த்தியாகும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூலை 21, 2021



எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



விசாகம் : சேமிப்புகள் குறையும்.


அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.


கேட்டை : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------




தனுசு

ஜூலை 21, 2021



எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். புதுவிதமான பயணங்களின் மூலம் மாற்றங்களும், அனுபவங்களும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


பூராடம் : நன்மை உண்டாகும்.


உத்திராடம் : அனுபவம் மேம்படும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 21, 2021



புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். புதுவிதமான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் நீங்கி மேன்மை ஏற்படும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.


திருவோணம் : அபிவிருத்தியான நாள்.


அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 21, 2021



வியாபாரம் தொடர்பான பணிகளில் நுணுக்கங்களை அறிவீர்கள். பிள்ளைகளுடன் வெளியூர் பயணங்களை மேற்கொண்டு மனம் மகிழ்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மை ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கான தருணங்கள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



அவிட்டம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


சதயம் : மேன்மை ஏற்படும்.


பூரட்டாதி : சாதகமான நாள்.

---------------------------------------




மீனம்

ஜூலை 21, 2021



மனதை உறுத்திக் கொண்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பெற்றோர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். தொழிலில் இருந்துவந்த மந்தநிலை படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் 



பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.


உத்திரட்டாதி : மந்தநிலை அகலும்.


ரேவதி : முன்னேற்றமான நாள்.

---------------------------------------


அதிக பெண் ஆசிரியர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு 2-ஆம் இடம்: UDISE+ ஆய்வறிக்கை பகுதி-1...

 அதிக பெண் ஆசிரியர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு 2-ஆம் இடம்: UDISE+ ஆய்வறிக்கை பகுதி-1...









கூடுதல் கல்விக் கட்டணம்: முதன்மைக்கல்வி அலுவலர் எச்சரிக்கை...



 கூடுதல் கல்விக்கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை முதன்மைக்கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், “மதுரை வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தனியார் மெட்ரிகுலேசன் / நர்சரி & பிரைமரி / பிறவாரிய (CBSE / ICSE / IGCSE) பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் ஆகஸ்ட் 31 2021 முடிய 40% கல்விக் கட்டணமும், மீதம் 35% கட்டணத்தை மேற்படி கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட இரண்டு மாத காலங்களில் வசூல் செய்ய வேண்டும்.”


“2021–2022ஆம் கல்வியாண்டுக்கு மொத்தம் 75% கல்விக்கட்டணம் மட்டுமே வசூல் செய்யவேண்டும். கூடுதல் கல்விக்கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கூடுதல் கல்விக்கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது தகுந்த ஆதாரத்துடன் மாணவர்களின் பெற்றோர்கள் மின்னஞ்சல் (feesgrievancecellmdu@gmail.com) வழியாக புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றுக்கு பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக் விரைவில் திறக்கப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: நியூஸ்7


கற்போம் எழுதுவோம் இயக்கம் (PLA) - கற்றல் அடைவுகளில் கற்போருக்கான மதிப்பீட்டு முகாம் நடத்துதல் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து கூட்டம் 22-07-2021 அன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெறுதல் சார்ந்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 743/ஆ3/2020, நாள்: 20-07-2021...

 


கற்போம் எழுதுவோம் இயக்கம் (PLA) - கற்றல் அடைவுகளில் கற்போருக்கான மதிப்பீட்டு முகாம் நடத்துதல் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து கூட்டம் 22-07-2021 அன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெறுதல் சார்ந்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் உத்தரவு...

◆கற்போம் எழுதுவோம் இயக்கம் (PLA) - கற்றல் அடைவுகளில் கற்போருக்கான மதிப்பீட்டு முகாம் 29-07-2021 முதல் 31-07-2021வரை நடைபெறவுள்ளது 

◆அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து கூட்டம் 22-07-2021 அன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.


>>> பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 743/ஆ3/2020, நாள்: 20-07-2021...


தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த TNPSCக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

முதலாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த TNPSCக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆங்கில வழியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்யலாமா என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், முதலாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த TNPSCக்கு  உத்தரவிட்டுள்ளது...






நியாய விலைக்கடைகளில் பணியாளர்களை தவிர்த்து வெளியாட்கள் இருந்தால் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் - அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவு ந.க.எண்: 16307/2021/பொவிதிமு1(1), நாள்: 19-07-2021...

 நியாய விலைக்கடைகளில் பணியாளர்களை தவிர்த்து வெளியாட்கள் இருந்தால் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் - அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவு...

கூட்டுறவு சங்க பதிவாளர் கடிதம் ந.க.எண்: 16307/2021/பொவிதிமு1(1), நாள்: 19-07-2021...



குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகம் இருப்பதால் ஆரம்பப் பள்ளிகளை முதலில் திறக்க பரிசீலிக்கலாம் - ICMR...

 குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகம் இருப்பதால் ஆரம்பப் பள்ளிகளை முதலில் திறக்க பரிசீலிக்கலாம் - ICMR...


கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
இந்நிலையில்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா கூறியதாவது, இந்திய குழந்தைகள் கொரோனாவுக்கு எதிராக நல்ல எதிர்ப்பாற்றலை பெற்றுள்ளன. கொரோனா பாதிப்பு விகிதம் 5% குறைவாக உள்ள மாவட்டங்களில் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிடலாம் என தெரிவித்துள்ளார்.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...