கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கொரோனா விதிமுறைகளை மீறும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு...

 கொரோனா விதிமுறைகளை மீறும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு...



அரசுப்பள்ளிகள் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதி...



 தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை அடுத்த கள்ளபெரம்பூர் செங்கழுநீர் ஏரியை  நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: 

9வது முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு செய்வார். 

பள்ளிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட பின்னர் தான் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும். 

அரசுப்பள்ளிகள் இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும். அரசு பள்ளிகளில் சேர சிபாரிசு வரும் நிலையும் ஏற்படும். 

அரசு பள்ளிகளில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை கற்றுத்தர முயற்சிக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.


புதிய கல்வி கொள்கையால் நாட்டின் தலைவிதி மாறும்: பிரதமர் மோடி நம்பிக்கை...

 


நமது நாட்டின் தலைவிதியை புதிய கல்விக் கொள்கை மாற்றி அமைக்கும்,’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு கடந்தாண்டு கொண்டு வந்தது. இதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி மூலமாக கலந்துரையாடினார். 


பின்னர், உயர் கல்வியை சர்வதேச மயமாக்குவதற்கான, ‘கல்வி கடன் வங்கி’யை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: 

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு ஏராளமானோர்  கடுமையாக பணியாற்றி உள்ளனர். மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றப்படிதான், புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது. இது மிகப்பெரிய தொலைநோக்கு திட்டம் மட்டுமின்றி, நாட்டையும் அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும்.


நமது இளைஞர்கள் மாற்றத்திற்காக முழு அளவில் தயாராக உள்ளனர். கல்வியை பொறுத்தே நமது எதிர்காலம் அமையும். நமது நாட்டின் தலைவிதியை மாற்றும் கொள்கையாக இது அமையும். நமது நாட்டின் விடுதலைக்கு முன்பாக,  சிறந்த கல்வியை பெறுவதற்காக வெளிநாடுகள்  சென்றோம். தற்போது, வெளிநாட்டினர் நமது நாட்டிற்கு வந்து படிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இந்தாண்டு முதல் மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் EWS (OC) 10% இடஒதுக்கீடு...

 


சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நடப்பு ஆண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பு பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கான முக்கிய முடிவை எடுத்துள்ளது.


இதுதொடர்பாக கடந்த 26ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த பிரச்சினைக்கு ஒரு பயனுள்ள தீர்வை அளிக்க சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, இந்த முடிவு அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, எம்.பி.பி.எஸ், எம்.டி, எம்.எஸ், டிப்ளமோ, பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புகளில் நடப்பு கல்வியாண்டு முதல் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த முடிவால் ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை மருத்துவப் படிப்பில் கிட்டத்தட்ட 1,500 இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், முதுகலை பட்டப்படிப்பில் 2,500 இதரபிற்படுத்தப்பட்ட மாணவர்களும், இளங்கலை மருத்துவப் படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 550 முன்னேறிய வகுப்பு மாணவர்களும், முதுகலைப் பட்டப்படிப்பில் சுமார் 1,000 பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பு மாணவர்களும் பலன் பெற உள்ளனர்.


இதனால், மொத்தமாக கிட்டதட்ட 5,550 மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் பின்தங்கிய பிரிவினருக்கும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய, முன்னேறிய வகுப்பு பிரிவினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



இன்றைய (30-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 30, 2021




மனதில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் மூலம் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத தேவையற்ற செலவுகள் ஏற்படும். தாயின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பணியாட்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி : குழப்பங்கள் நீங்கும்.


பரணி : செலவுகள் ஏற்படும்.


கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 30, 2021



சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சில அனுபவங்களின் மூலம் புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : தனவரவுகள் கிடைக்கும்.


ரோகிணி : இன்னல்கள் குறையும்.


மிருகசீரிஷம் : புதுவிதமான நாள்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 30, 2021



உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் வழியில் ஆதரவான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்கள் நீங்கி தெளிவுடனும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும்.


புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------




கடகம்

ஜூலை 30, 2021



உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும்.  தம்பதிகளுக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சில சலுகைகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



புனர்பூசம் : எண்ணங்களை அறிவீர்கள்.


பூசம் : உதவிகள் கிடைக்கும்.


ஆயில்யம் : ஆதரவான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 30, 2021



உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


பூரம் : விழிப்புணர்வு வேண்டும்.


உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




கன்னி

ஜூலை 30, 2021



மனதில் இனம்புரியாத குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காலதாமதமாக கிடைக்கும். புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தகவல் தொடர்புத்துறைகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



உத்திரம் : நெருக்கடியான நாள்.


அஸ்தம் : காலதாமதம் உண்டாகும்.


சித்திரை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




துலாம்

ஜூலை 30, 2021



குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். எதிர்பாராத செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



சித்திரை : திருப்தியான நாள்.


சுவாதி : நெருக்கம் அதிகரிக்கும்.


விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 30, 2021



தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் சிலருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



விசாகம் : ஆதாயம் உண்டாகும்.


அனுஷம் : நிதானம் வேண்டும்.


கேட்டை : அனுகூலமான நாள். 

---------------------------------------




தனுசு

ஜூலை 30, 2021



தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். மாணவர்கள் பாடங்களை கவனத்துடன் படிக்கவும். கொடுக்கல், வாங்கலில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். பிள்ளைகளால் அலைச்சல்களும், சிறு சிறு விரயங்களும் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மூலம் : தனவரவுகள் கிடைக்கும்.


பூராடம் : முதலீடுகள் மேம்படும்.


உத்திராடம் : விரயங்கள் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 30, 2021



தந்தையின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



உத்திராடம் : ஆதாயமான நாள்.


திருவோணம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.


அவிட்டம் : ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 30, 2021



மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இழுபறியான பிரச்சனைகளுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதரர்களின் வகையில் அனுசரித்து செல்வதன் மூலம் மேன்மை உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அவிட்டம் : தன்னம்பிக்கையான நாள்.


சதயம் : மேன்மை உண்டாகும்.


பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

ஜூலை 30, 2021



உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும்.

வாழ்க்கைத்துணையின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



பூரட்டாதி : அனுகூலமான நாள்.


உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.


ரேவதி : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------


கல்வித் தொலைக்காட்சியில் (Kalvi TV) 29-07-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு (VIII Standard) காணொளிகள்...

 


கல்வித் தொலைக்காட்சியில்  29-07-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்:


💥  தமிழ் - இயல்1 - பகுதி 1- விரிவானம் - சொற்பூங்கா அறிமுகம் - https://youtu.be/ulhlR4xhOoE



 💥 ஆங்கிலம் - UNIT 1 - GRAMMAR 

Types of nouns, pronouns verbs - 

https://youtu.be/93RwgqwjZmg



 💥 கணக்கு - அலகு 1- பகுதி 1- எண்கள் - விகிதமுறு எண்களை அறிதல் - எண் கோட்டில் குறித்தல் - தசம எண்ணாக எழுதுதல் - https://youtu.be/Ayc-J2KHPPk



💥 அறிவியல் - அலகு 1- நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் - https://youtu.be/2rSx94jRsjI



💥 சமூக அறிவியல் - அலகு 1- புவியியல் - பாறை மற்றும் மண் - https://youtu.be/KqUvgBsGzg8


கல்வித் தொலைக்காட்சியில் (Kalvi TV) 29-07-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடக் காணொளிகள் (Science Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 29-07-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடக் காணொளிகள்...



1st Standard - அலகு 1 – உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் - https://youtu.be/yBcy1o_kaIQ



2nd Standard - அலகு 1 – நமது சுற்றுச்சூழல் -  https://youtu.be/BfDT7xOwfk0



3rd Standard - அலகு 3 – விசை - பாகம் 2 - https://youtu.be/jxapbBsO-V4?t=2929



4th Standard - அலகு 3 – பருப்பொருள் மற்றும் பொருள்கள் - ஒளி கசியும், ஒளி புகும், ஒளி புகாப் பொருள்கள் - ஒளி எதிரொளிப்பு - பகுதி 3 - https://youtu.be/jxapbBsO-V4?t=4732



5th Standard - அலகு 4 – அன்றாட வாழ்வில் அறிவியல் - https://youtu.be/MS1lGii02m4



6th Standard - அலகு 2 – விசையும் இயக்கமும் - https://youtu.be/V-6OBmRJZjU



7th Standard -  அலகு 2 – விசையும் இயக்கமும் - வரைபடங்களில் குறித்தல் மற்றும் விளக்குதல் - பகுதி 2 - https://youtu.be/hl3AUTG__rk?t=31



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

World Carrom Championship: Tamil Nadu's Kasima wins gold

  உலக கேரம் போட்டி: தமிழ்நாடு வீராங்கனை காசிமா தங்கம் வென்று சாதனை World Carrom Championship - Tamil Nadu's Kasima wins gold உலக கேரம் ச...