கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு வேலைவாய்ப்பில், தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு(Reservation) வழங்க ஏதுவாக விவரம் கோரியது TNPSC...



 அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக டி.என்.பி.எஸ்.சி. விவரம் கோரியுள்ளது. குரூப் – 1 முதல்நிலை தேர்வு எழுதியவர்கள் 1 – 10ம் வகுப்பு தமிழ் வழிக் கல்விக்கான சான்றை பதிவேற்ற வேண்டும். 11, 12 அல்லது பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்ததற்கான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.






தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள்(Syllabus) குறைக்க ஆலோசனை : அமைச்சர் அன்பில் மகேஷ்...

 


தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள்(Syllabus) குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். எவ்வளவு சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும் என்பது அதுபற்றிய ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். நடப்பு கல்வியாண்டிலும் நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத சூழல் நிலவி வருகிறது. 


எழுதுக இயக்கம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எழுதிய 100புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சிசென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகங்களை வெளியிட்டார். இதில் பிரம்மோஸ் விண்வௌி மைய நிறுவனர் ஏ.சிவதாணு பிள்ளை, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேரன் ஷேக் தாவூத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:


தமிழகத்தில் பள்ளிகள் திறப்புகுறித்து துறைரீதியான ஆலோசனை நடந்து வருகிறது. இதில் மருத்துவ வல்லுநர்களின் கருத்துகளையும் அறிய வேண்டியது அவசியம். தற்போது 3 மாநிலங்களில் பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல, தமிழகத்திலும் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.


பள்ளிகள் திறப்பு தாமதம் ஆவதால், பாடத் திட்டத்தை குறைப்பதுகுறித்தும் ஆலோசித்து வருகிறோம். இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்.


பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத 23 மாணவர்கள் மட்டும் துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதுதவிர, தனித் தேர்வர்கள் 39,579 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பாதுகாப்பான முறையில் துணைத் தேர்வுகள் நடத்தப்படும். இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளை நோக்கி வந்துள்ள மாணவர்களை தக்கவைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.


தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் வசூலிப்பது தொடர்பாகஉயர் நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை முறையாக பின்பற்றி செயல்படுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக் கட்டண விவகாரத்தில், தனியார் பள்ளிகளை தண்டிப்பதைவிட அறிவுறுத் தவே விரும்புகிறோம்.


இவ்வாறு அவர் கூறினார்.



பள்ளிகள் திறப்பு மற்றும் 12-ம் வகுப்பு விருப்பத் தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு...



 பள்ளிகள் திறப்பு குறித்து துறை ரீதியாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.  அடுத்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து, பின் பெற்றோர்களின் கருத்து கேட்கப்படும்.  அதன் பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படும்.


23 மாணவர்களே மட்டுமே தங்களுக்கான மதிப்பெண்ணில் திருப்தி இல்லை என்று 12ஆம் வகுப்பு விருப்பத் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர் என அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.




ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரிய(TRB) தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை இணைய வழியில் (Online) நடைபெறும் என அறிவிப்பு...



 ஒத்திவைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆன்லைனில் நடைபெறுகிறது. End to End encrypted என்ற முறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்த உள்ளது. அரசு, அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள கணினி ஆய்வகங்களில் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.



புதிய கொரோனா குரல் (குறள்)...

 புதிய கொரோனா குரல் (குறள்)...























கொரோனா விழிப்புணர்வு வாரம் - பள்ளிக் குழந்தைகளுக்கு இணைய வழிப் போட்டிகள் - கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கடிதம் ந.க.எண்: ட்டி1/11992/2021, நாள்: 31-07-2021...

 


கொரோனா விழிப்புணர்வு வாரம் - பள்ளிக் குழந்தைகளுக்கு இணைய வழிப் போட்டிகள்...


>>> கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கடிதம் ந.க.எண்: ட்டி1/11992/2021, நாள்: 31-07-2021...


>>> கொரோனா விழிப்புணர்வு வாரம் - நிகழ்வுகள்...


>>> COVID-19 Awareness Campaign - Details of Functions...


>>> கொரோனா தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி...


>>> COVID 19 - சுவரொட்டிகள் (Posters) மற்றும் விளக்கக் குறிப்புகள் (Pamphlets)...





இன்றைய (01-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 01, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதிற்கு புதிய நம்பிக்கை மேம்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். வாழ்க்கைத்துணைவரின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



அஸ்வினி : நம்பிக்கை மேம்படும்.


பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


கிருத்திகை : லாபம் மேம்படும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 01, 2021



உத்தியோகத்தில் உடனிருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். வாகனம் தொடர்பான பயணங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.


ரோகிணி : சுறுசுறுப்பான நாள்.


மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 01, 2021



புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டுத் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : வெற்றி கிடைக்கும்.


திருவாதிரை : போட்டிகள் குறையும்.


புனர்பூசம் : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 01, 2021



உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் உள்ள நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். வாக்குவன்மையின் மூலம் காரியசித்தி உண்டாகும். கல்வி தொடர்பான ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



புனர்பூசம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


பூசம் : புரிதல் மேம்படும்.


ஆயில்யம் : காரியசித்தி உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 01, 2021



பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மகம் : பொறுப்புகள் கிடைக்கும்.


பூரம் : மகிழ்ச்சியான நாள்.


உத்திரம் : ஈடுபாடு உண்டாகும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 01, 2021



தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேம்படும். இயந்திரம் தொடர்பான பணியில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



உத்திரம் : நெருக்கடியான நாள்.


அஸ்தம் : பொறுமை வேண்டும்.


சித்திரை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 01, 2021



எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது தொடர்பான ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



சித்திரை : சாதகமான நாள்.


சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும்.


விசாகம் : தனவரவுகள் கிடைக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 01, 2021



வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். எண்ணிய காரியங்களை செய்து முடிப்பதில் சிறிது காலதாமதம் உண்டாகும். ஆடம்பர பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் புதிய முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



விசாகம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


அனுஷம் : ஈர்ப்பு அதிகரிக்கும்.


கேட்டை : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 01, 2021



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர்விற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மூலம் : மகிழ்ச்சியான நாள்.


பூராடம் : எண்ணங்கள் மேம்படும்.


உத்திராடம் : உயர்வு உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 01, 2021



வியாபாரம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தேக்க நிலைகள் குறையும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.


திருவோணம் : திறமைகள் வெளிப்படும்.


அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 01, 2021



செய்கின்ற முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான தருணங்கள் உண்டாகும். குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



அவிட்டம் : முன்னேற்றமான நாள்.


சதயம் : பிரச்சனைகள் குறையும்.


பூரட்டாதி : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 01, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகளை வெளிப்படுத்தும் பொழுது பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாலின மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



பூரட்டாதி : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.


உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.


ரேவதி : சாதகமான நாள்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள்  - தமிழ்...