கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (09-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 09, 2021



நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் தனித்திறமைகளை புரிந்து கொள்வீர்கள். ஆடம்பரப் பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். நுணுக்கங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி : புரிதல் உண்டாகும்.


பரணி : ஈர்ப்பு அதிகரிக்கும்.


கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 09, 2021



உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். திறமைக்கேற்ப பாராட்டுகளும், உதவிகளும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : அறிமுகம் உண்டாகும்.


மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 09, 2021



சொத்து பிரச்சனைகள் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதில் நேர்மறை சிந்தனைகள் மேம்படும். தாய்வழி உறவினர்களால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறைவதற்கான உதவிகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



மிருகசீரிஷம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.


திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்


புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 09, 2021



உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடனிருப்பவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் தீர்வு காண்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பூசம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


ஆயில்யம் : தீர்வு காண்பீர்கள்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 09, 2021



உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கால்நடைகளின் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மகம் : அனுசரித்து செல்லவும்.


பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


உத்திரம் : புரிதல் மேம்படும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 09, 2021



மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வாகனம் தொடர்பான பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். புதுவிதமான அறச்செயல்களின் மூலம் அனுபவமும், புரிதலும் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.


அஸ்தம் : முன்னேற்றமான நாள்.


சித்திரை : அனுபவம் மேம்படும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 09, 2021



வியாபாரத்தில் நயமாகப் பேசி பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தன, தான்ய விருத்திக்கான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


சுவாதி : அறிமுகம் உண்டாகும்.


விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 09, 2021



வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத்துணையுடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


அனுஷம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


கேட்டை : இன்னல்கள் குறையும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 09, 2021



தொழில் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். குடும்பத்தாருடன் சிறு தூரப் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மூலம் : தனவரவுகள் கிடைக்கும்.


பூராடம் : நம்பிக்கை உண்டாகும்.


உத்திராடம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 09, 2021



எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். பழைய கடன்கள் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.


திருவோணம் : சிந்தனைகள் மேம்படும்.


அவிட்டம் : சேமிப்புகள் குறையும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 09, 2021



குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்களின் மூலம் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப பாராட்டுகளும், ஒத்துழைப்பும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 



அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.


சதயம் : லாபம் மேம்படும்.


பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 09, 2021



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோகத்தில் மரியாதைகள் அதிகரிக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் 



பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


உத்திரட்டாதி : மரியாதைகள் அதிகரிக்கும்.


ரேவதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------


23 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம்(District Revenue Officers Transfer) - அரசாணை(G.O.) (வாலாயம்) எண்: 3176, நாள்: 07-08-2021 வெளியீடு...



 23 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம் - அரசாணை (வாலாயம்) எண்: 3176, நாள்: 07-08-2021 வெளியீடு...


>>> அரசாணை (வாலாயம்) எண்: 3176, நாள்: 07-08-2021...


NLC - இந்தியா நிறுவனத்தில் ITI படிப்புடன் Apprentice பயிற்சி - மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் - Last Date to Apply: 23.08.2021

 NLC - இந்தியா நிறுவனத்தில் ITI படிப்புடன் Apprentice பயிற்சி -

மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் - Last Date to Apply: 23.08.2021




தமிழ்நாட்டிலுள்ள 58,000 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நவீன மயமாக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி...



 தமிழ்நாட்டிலுள்ள 58,000 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நவீன மயமாக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி...


வரும் பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கும் படி நிதி அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட சான்றிதழை இனி வாட்ஸ் அப்பில்(Corona Vaccination Certificate in Whatsapp) பெறும் வசதி அறிமுகம்...



 Covid19 Vaccination Certificate Download செய்திட எளிய வழிமுறை...


Whatsapp இன் மூலம் நீங்கள் Covid -19 தடுப்பூசி செலுத்தியதிற்கான சான்றிதழை  PDF வடிவில் பெற்றுக்கொள்ளலாம்..


1. முதலில்  "9013151515" என்ற எண்ணை  உங்கள் மொபைலில் Save செய்துகொள்ளுங்கள்.


2. அந்த எண்ணை Whatsapp இல்  Open செய்து " Download Certificate" என்று Type செய்து  அனுப்புங்கள்.


3. உடனே உங்கள் மொபைலில் Message Inbox இல் 6 இலக்க OTP வரும்... உங்கள் கைபேசிக்கு வரும் OTP எண்ணை ( 30 வினாடிகளுக்குள்)  Whatsapp இல்  Type செய்து அனுப்புங்கள்.



4. இந்த அலைபேசி எண்ணை கொடுத்து தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் பட்டியல் காட்டப்படும். உதாரணமாக நான்கு பேர் இந்த குறிப்பிட்ட அலைபேசி எண்ணைக் கொடுத்து தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தால் Type  1-4. To select a member for Downloading Cowin Vaccination Certificate என்று Message  வரும்...



5.  அந்த நபரின் எண்ணை உதாரணமாக 1 என்ற எண்ணை Type செய்து அனுப்பவும்..


உடனே  PDF வடிவில்  COVID Vaccination  Certificate   பெற்றுக்கொள்ளலாம்...


மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை...

 மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை...




அரசுப் பள்ளிகளில் அலகுத் தேர்வு(Unit Tests) நடத்துவதில் சிக்கல்...



 அரசுப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்களுக்கு மொபைல்போன் வசதியில்லாததால் அலகுத் தேர்வில் பங்கேற்பதில் சிக்கல் நிலவுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு கல்வித் தொலைக் காட்சி, இணைய வழியில் பாடங்கள் நடத்தப்படுகிறது. 


வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் செயலிகள் வழியாக பாடங்கள் குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் விளக்கமளிக்கின்றனர்.கொரோனா ஊடரங்கு கட்டுப்பாடுகளால் வீட்டிலிருந்து மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இச்சூழலில் மாணவர்கள் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். நேரடி கற்பித்தல் முறை தடைபடுவதால் புதிய வழி முறைகளைப் பின்பற்றி ஆசிரியர்கள் இணைய வழியில் பாடங்களை நடத்த வேண்டும். 


இதேப் போன்று பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கூடுதல் பயிற்சியளிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதந்தோறும் அலகுத் தேர்வுகளை இணையவழியில் நடத்த வேண்டும். தேர்வுக்கான வினாத்தாள்களை மாவட்ட அல்லது வட்டார அளவில் ஆசிரியர்கள் மூலம் தயாரித்துக் கொள்ள வேண்டும். தேர்வு நாளில் மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப் வழியாக மட்டும் வினாத் தாள்கள் அனுப்ப வேண்டும் என சி.இ.ஓ.,க்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும், மெட்ரிக் பள்ளிகளில் வரும் 9ம் தேதி முதல், 14ம் தேதி வரை 6 முதல் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலமாக அலகுத் தேர்வு நடத்த வேண்டும் என சி.இ.ஓ., அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


கடலுார் மாவட்டத்தில் உள்ள 246 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கிராமப்புற மாணவர்களே அதிகம் படிக்கின்றனர். இதில், பல மாணவர்களுக்கு 'ஸ்மார்ட்' போன் வசதியின்றி அலகுத் தேர்வில் பங்கேற்பதில் சிக்கல் நிலவுகிறது. இது குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் கூறுகையில், 'பல மாணவர்களுக்கு மொபைல்போன் இல்லாததால் அலகுத் தேர்வு என்பது பெயரளவில் மட்டுமே நடக்கும். 


மொபைல் போன் இல்லாத மாணவர்கள் தேர்வில் பங்கேற்க முடியாத நிலையில் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்படும் அச்சம் உள்ளது. பள்ளிகள் திறந்து நேரடி முறையில் தேர்வு நடத்துவதே சாத்தியமானதாகும்' என்றார்.சி.இ.ஓ., அலுவலக அதிகாரி கூறுகையில்,' மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பல மாணவர்களுக்கு மொபைல்போன் வசதியில்லை. எனினும் அவர்களும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers suffer as online training links are not available - Daily News

 இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காதால் ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி  Teachers suffer as online training links are not available - Dail...