கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ஆலோசனை...



 கொரோனா தொற்றால் நடப்பு கல்வியாண்டில்  பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆசிரியர்கள் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதா உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்.



அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும் - அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை...

 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ . பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை - 12-08-2021 


அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் , அரசின் நலத் திட்ட உதவிகளை மக்களிடம் எடுத்துச் செல்வதிலும் , அரசின் வளர்ச்சி நோக்கங்களை எய்துவதில் இன்றியமையாப் பங்கினை வகிக்கும் பொதுச் சேவையினை நடைமுறைப்படுத்துவதிலும் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள் , இதேபோன்று , இளம் தலைமுறையினரை பண்பாளர்களாகவும் , சிந்தனையாளர்களாகவும் , செயல் வீரர்களாகவும் ஆக்கும் சக்தி வாய்ந்த கல்வியை கற்றுத் தரும் தன்னலமற்ற பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள்.


இப்படிப்பட்ட உன்னதமான பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கியப் பங்கினை மாண்புமிகு அம்மா அவர்களின் வழிகாட்டுதலோடு நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு உணர்ந்த காரணத்தினால் , ஓராண்டுக்கு இருமுறை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு , மத்திய அரசு வாழியர்களுக்கு இணையான ஊதியம் , வீட்டுக் கடன் வசதி என அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.


  இந்தச் சூழ்நிலையில் , கொரோனா பெருந்தொற்று நோயின் தாக்கம் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டதையடுத்து , 1-1-2020 , 1-7-2020 , 1-1-2021 ஆகிய நாட்களிலிருந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மூன்று அகவிலைப்படியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததோடு , இது 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அறிவித்தது. இதனைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் அகவிலைப்படியை நிறுத்தி வைத்தது.


தற்போது , மத்திய நிதி அமைச்சகத்தின் 20-7-2021 நாளிட்ட ஆணையின் வாயிலாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்த்தி அதனை 1-7-20211 முதல் ரொக்கமாக வழங்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இதனைப் பின்பற்றி உத்தரபிரதேசம் , ஜம்மு காஷ்மீர் , ராஜஸ்தான் , அரியானா , ஜார்கண்ட் , கர்நாடகா , புதுச்சேரி அரசுகளும் தங்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்தச் சூழ்நிலையில் , நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ள சூழ்நிலையில் , நிதிப் பற்றாக்குறை , வருவாய்ப் பற்றாக்குறை , கடன் பட்டியலிட்டு மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் வெள்ளை அறிக்கையினை வெளியிட்டு இருப்பதைப் பார்க்கும் போது , தங்களுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி வழங்கப்படாதோ என்ற அச்சத்தில் , அரசு ஊழியர்களும் , ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.


பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு அதிகமாகவும் , டீசல் விலை 95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்ற சூழ்நிலையில் , காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து செல்கின்ற சூழ்நிலையில் , மத்திய அரசு தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அறிவித்து 20 நாட்கள் கடந்த நிலையில் , தங்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உடனடியாக அதன் அறிவிக்கவேண்டும் என்பதே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி , மத்திய அரசின் அறிவிப்பிற்கிணங்க , தமிழ்நாடு அரசு தாழியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்த்தி அதனை 1-07-2021 முதல் ரொக்கமாக வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 ஓ . பன்னீர்செல்வம் 

கழக ஒருங்கிணைப்பாளர் 

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்





முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிகள் ஆய்வின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை - பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 22825/இ/இ1/2021, நாள்:07-08-2021...



 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிகள் ஆய்வின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை - பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 22825/இ/இ1/2021, நாள்:07-08-2021...


2021-2022 ஆம் நிதியாண்டுக்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு அரசால் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே , கீழ்குறிப்பிட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிகள் ஆய்வின் போது கவனத்தில் கொண்டு சத்துணவு வழங்குதல் தடையின்றி வழங்கப்படுதலை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 50 இலட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். தற்போது , கோவிட் -19 காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்களின் மதிய உணவை பெற்று கொள்ள முடியாத நிலை உள்ளது. மேற்கண்ட காரணமாக சில பின்தங்கிய மாணவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்திட குழந்தை தொழிலாளர்களாக மாறும் சாத்தியங்கள் உள்ளன. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையால் பள்ளிகளில் இடைநிற்றலை கனிசமாக அதிகரிப்பதுடன் அவர்களின் எதிர்காலமும் வெகுவாக பாதிக்கிறது.


 அரசாங்கம் இதை தவிர்த்திடும் வகையில் மதிய உணவு திட்டத்தில் ரொட்டி மற்றும் முட்டையும் சேர்த்து பள்ளிக் குழந்தைகளுக்கு தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கிட அரசின் பரிசீலனையில் உள்ளது.


 மேலும் , பள்ளிக் குழந்தைகள் யாரேனும் உடல் உழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனாரா என்பதை ஆய்வு அலுவலர்கள் மேற்பார்வை செய்து குறைகள் இருப்பின் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் மூலம் அவற்றை நிவர்த்தி செய்து பள்ளி மாணவர்கள் பயன்பெற தக்க வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


>>> பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 22825/இ/இ1/2021, நாள்:07-08-2021...


முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - பொதுமக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கோவிட் 19 சிகிச்சை - கட்டணம் மாற்றியமைத்து அரசாணை(நிலை) எண்: 347, நாள்: 09-08-2021 வெளியீடு(Chief Minister's Comprehensive Health Insurance Scheme - COVID 19 treatment to Public in Private Hospitals - G.O. (Ms) No: 347, Dated: 09-08-2021 Released ...)...



 முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - பொதுமக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கோவிட் 19 சிகிச்சை - கட்டணம் மாற்றியமைத்து அரசாணை(நிலை) எண்: 347, நாள்: 09-08-2021 வெளியீடு...


>>> அரசாணை(நிலை) எண்: 347, நாள்: 09-08-2021....



இன்றைய (12-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 12, 2021



வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வழக்கு சார்ந்த விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.


பரணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


கிருத்திகை : கவனம் வேண்டும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 12, 2021



விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். மாணவர்களுக்கு தேர்வுகளின் மீது இருந்த கவலைகள் குறையும். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு மறைமுகமாக கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.


ரோகிணி : கவலைகள் குறையும்.


மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 12, 2021



தனவரவுகள் சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மனை தொடர்பான விஷயங்களில் லாபம் மேம்படும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை அறிந்து கொள்வீர்கள். சொத்துக்கள் தொடர்பான வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : புதுவிதமான நாள்.


திருவாதிரை : மேன்மை உண்டாகும்.


புனர்பூசம் : சாதகமான நாள்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 12, 2021



உடன்பிறந்தவர்களிடம் பேசும் பொழுது நிதானம் வேண்டும். புதிய செயல்களை மேற்கொள்ளும் பொழுது சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். மறைமுகமான முயற்சிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மக்கள் தொடர்புத்துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



புனர்பூசம் : நிதானம் வேண்டும்.


பூசம் : உதவிகள் கிடைக்கும்.


ஆயில்யம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 12, 2021



காலம் தவறி உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு இழுபறியாக இருந்துவந்த காரியங்கள் சாதகமாக முடிவடையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் அனுபவம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : பிரச்சனைகள் நீங்கும்.


பூரம் : ஆர்வம் அதிகரிக்கும்.


உத்திரம் : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 12, 2021



உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் தொடர்பான வேலை விஷயங்களில் புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் நீங்கி வருமானம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



உத்திரம் : சுபிட்சம் உண்டாகும்.


அஸ்தம் : ஆதரவு கிடைக்கும்.


சித்திரை : வருமானம் அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 12, 2021



வியாபார இடத்தை மாற்றுவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தேவையில்லாத சிந்தனைகள் மற்றும் கனவுகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். அரசு மூலமாக நடைபெற வேண்டிய காரியங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் அனுபவம் உண்டாகும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.


சுவாதி : சாதகமான நாள்.


விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 12, 2021



புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை மேம்படும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். உறவினர்கள், உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். கௌரவப் பொறுப்புகளின் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



விசாகம் : ஒற்றுமை மேம்படும்.


அனுஷம் : முயற்சிகள் சாதகமாகும்.


கேட்டை : மதிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 12, 2021



குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல பலன்களை அளிக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். எதிர்பாராத திடீர் உதவிகள் சிலருக்கு கிடைக்கும். நினைத்த காரியங்களில் சோர்வுடன் செயல்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மூலம் : மகிழ்ச்சியான நாள்.


பூராடம் : பிரச்சனைகள் குறையும்.


உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 12, 2021



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பெண்கள் தங்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படுவீர்கள். புதுவிதமான ஆசைகள் மனதில் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுக்களில் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.


அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 12, 2021



மனதில் புதிய சிந்தனைகளின் மூலம் கவலைகள் ஏற்படும். வாகனப் பயணங்களின்போது நிதானத்துடன் செயல்படவும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோக பணிகளில் மற்றவர்களை நம்பி இருக்காமல் பணிகளை செய்து முடிப்பது முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



அவிட்டம் : கவலைகள் ஏற்படும்.


சதயம் : விவாதங்களை தவிர்க்கவும்.


பூரட்டாதி : கோபத்தை குறைக்கவும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 12, 2021



நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குடும்ப பெரியோர்களிடம் உங்களின் மீதான நன்மதிப்புகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் கொடுக்கல், வாங்கல் லாபகரமாக அமையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்



பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : லாபம் ஏற்படும்.


ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------


NSP (National Scholarship Portal) எனப்படும் தேசிய உதவித்தொகை இணையதளத்தில் புதிதாக பள்ளியை பதிவு செய்யும் வழிமுறை & முன்பே பதிவு செய்திருப்போர் தற்போது (2021-22 கல்வியாண்டு) செய்ய வேண்டியவை[New School Registration Procedure on NSP (National Scholarship Portal) & Pre-Registered Schools to Do Now (2021-22 Academic Year)]...



 NSP (National Scholarship Portal) எனப்படும் தேசிய உதவித்தொகை இணையதளத்தில் புதிதாக பள்ளியை பதிவு செய்யும் வழிமுறை & முன்பே பதிவு செய்திருப்போர் தற்போது (2021-22 கல்வியாண்டு) செய்ய வேண்டியவை...


New School Registration Procedure on NSP (National Scholarship Portal) & Pre-Registered Schools to Do Now (2021-22 Academic Year)...



தங்கள் பள்ளிகள் கட்டாயம் NSP (National Scholarship Portal) எனப்படும் தேசிய உதவித்தொகை இணைய முகப்பில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்..


இது தகுதியுடைய சிறுபான்மை மாணவ - மாணவிகளுக்கு படிப்புதவித் தொகையை நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கிற்கே அனுப்பி அவர்களின் கல்வி தொடர ஊக்குவிக்கும்  அரசின் உன்னதமான திட்டமாகும்.. 


இதில் Pre-metric and Post-metric என தொடக்கக்கல்வி முதல் ஆராய்ச்சிபடிப்பு வரை இதன் உதவிக்கரம் நீளுகிறது...


Online மூலமே அனைத்து செயல்பாடுகளும் நடைபெறுகிறது.. ஆகவே மிகுந்த கவனமுடன் இதனை கையாள வேண்டும்..


புதிதாக நம் பள்ளியை பதிவு செய்யும் வழிமுறை:


 நம் பள்ளியின் பெயரை NSP portal லில் புதிதாக பதிவு செய்வோர்  தலைமையாசிரியரை Head of the institution ஆகவும்; மூத்த உதவியாசிரியர் அல்லது விருப்பப்படும் உதவி ஆசிரியரை Nodal officer ஆகவும் அதற்குரிய முறையான படிவத்தில் நேரடியாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர்  நல அலுவலகத்திற்கு சென்று அவர்கள் கூறும் வழிமுறைகள்படி NSP Portal லில் நமது பள்ளியை பதிவு செய்ய வேண்டும்.. பதிவு செய்த பிறகு நம் பள்ளிக்குரிய Password Nodal officer அலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்..


அதன்பிறகு Nodal officer தான் அப்பள்ளியின் Institute verifier Officer  ஆவார்.. இது சார்ந்த அனைத்து செயல்பாட்டிற்கும் HM + Nodal officer தான் முழுப்பொறுப்பு..


 ஒருமுறை இத்தளத்தில் நம் பள்ளியை பதிவு செய்துவிட்டால் போதுமானது.


 அதன்பிறகு, ஆண்டுதோறும் school profile லில் மட்டும் Update செய்தலே போதுமானது..


NSPல் முன்பே பதிவு செய்திருப்போர் தற்போது (2021-22 கல்வியாண்டு) செய்ய வேண்டியது:


முன்பே பதிவு செய்திருப்போர் NSP Portal லில் உள்நுழைந்து 2021-22 ஆண்டை தேர்வுசெய்து, Username என்ற இடத்தில் நமக்கு வழங்கப்பட்ட Institute Log in ID (Dise number) மற்றும் Password பயன்படுத்தி நம் பள்ளிக்குரிய Profile லில் கீழ்கண்டவற்றை பதிவு செய்து  Update செய்ய வேண்டும்.


1. Head of institution details update

2. Nodal officer Aadhar card details updated

    Aadhar number

    Name 

    DOB as per Aadhar card


3. Update, If needed..


Finally, Submit the profile form...


Then u got, *successfully updated your profile*


Thank you..




>>> இத்தகவலை PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்....





EMIS Website - ஆசிரியர்கள் உள்நுழைவில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய அம்சங்கள்(Teachers login new Features)...



EMIS Website - ஆசிரியர்கள்  உள்நுழைவில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய அம்சங்கள் : 


1. ஆசிரியர்கள் தங்கள் மொபைல் எண் /மெயில் ஐடியை தங்கள் தனிப்பட்ட உள்நுழைவு மூலம் திருத்தலாம் /மாற்றலாம்

 2. இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை / முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது / இரண்டு டோஸ் தடுப்பூசி விவரங்களும் ஆசிரியர்கள் உள்நுழைவில் EMIS போர்ட்டலில் உள்ளிடலாம்

 - TNEMIS



Teachers login new features :          


 1. Teachers  can edit/change their mobile numer /mail id through their individual login


2. Not yet vaccinated / first dose vaccinated / both dose vaccinated details can enter in teachers login in emis portal


- TNEMIS




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Don't trust DEEP FAKE videos circulating like RBI Governor speaking in support of some investment schemes - RBI appeals to public

 ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் முதலீட்டு திட்டங்கள் குறித்து அறிவுரைகள் வழங்குவது போல பரவும் DEEP FAKE வீடியோக்களை நம்பிவிட வேண்டாம்...