கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Tamilnadu Unaided Private Schools - Collection of Fees for the Academic Year 2021 - 22 - Madras High Court Order - Revised Circular - Proceedings of the Commissioner of School Education Rc.No.32673/G2/2021, Dated: 09-08-2021...



 தமிழ்நாடு தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 2021 - 22ஆம் கல்வியாண்டுக்கான கட்டணம் வசூல் - சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு - திருத்தப்பட்ட சுற்றறிக்கை - பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்...


>>> Click here to Download Proceedings of the Commissioner of School Education  Rc.No.32673/G2/2021, Dated: 09-08-2021...



School Education - Commemorating the 75th Anniversary of Independence Day - A series of events under Azadi ka Amrit Mahotsav (AKAM) Upcoming event is singing "Rashtragaan" Regarding - School Education Department Deputy Secretary Letter No.14604/GL1(2)/2021-1, Dated:04-08-2021...

 


பள்ளிக் கல்வி - சுதந்திர தினத்தின் 75 -வது ஆண்டு கொண்டாட்டம் - ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ் (AKAM) -இன் கீழ் வரும் தொடர் நிகழ்வுகள் "ராஷ்டிரகன்" - பள்ளி கல்வி துறை துணை செயலாளர் கடிதம்...


>>> Click here to Download School Education Department Deputy Secretary Letter No.14604/GL1(2)/2021-1, Dated:04-08-2021...


நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள் மற்றும் வீரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த முதலமைச்சர் ஆணை - செய்தி வெளியீடு(Press Release) எண்: 608, நாள்: 13-08-2021...

 செய்தி வெளியீடு எண்: 608, நாள்: 13-08-2021...

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஏப்ரல் முதல் வழங்கப்படும்...

 






அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை 2022 மார்ச் வரை நிறுத்தி வைத்துள்ளது தமிழ்நாடு அரசு.


இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2021 அறிவிப்பில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய 11 சதவீத அகவிலைப்படி உயர்வானது வரும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி அதிகரித்து வரும் வேளையில் தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பானது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைப்பு (Reduced Syllabus 2021-22) அரசாணை (G.O.Ms.No.126 , Dated:13-08-2021) வெளியீடு...



 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைப்பு (Reduced Syllabus 2021-22) அரசாணை (G.O.Ms.No.126, Dated:13-08-2021) வெளியீடு...


>>> Click here to Download G.O.Ms.No.126, Dated:13-08-2021...


அரசாணை எண் 126, பள்ளிக் கல்வித் துறை நாள்: 13.08.2021ன் படி 2020-21ஆம் கல்வியாண்டிற்கான முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டமானது 2021-22ஆம் கல்வியாண்டிற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 வகுப்புகளுக்கான முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டம்...


>>> 6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (Reduced Syllabus) விவரம்...



>>> ஒன்பதாம் வகுப்பிற்கான, அனைத்து பாடங்களின் குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரம்...



>>> பத்தாம் வகுப்பிற்கான, குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரம்...



>>> 11ஆம் வகுப்பிற்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம்...



>>> பன்னிரண்டாம் வகுப்பிற்கான, அனைத்து பாடங்களின் குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரம்...



தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மாநில பாட திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.


தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளதால் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 50 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டு தாகவும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான பாடங்கள் குறைக்கப்படுவதாகவும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் 40% குறைக்கப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.





இன்றைய (13-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 13, 2021




குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் சூழ்நிலைகளை கையாளுவது நல்லது. உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதில் அதிகரிக்கும். அலைச்சல்களின் மூலம் உடல் சோர்வு அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அஸ்வினி : அறிமுகம் கிடைக்கும்.


பரணி : புதுவிதமான நாள்.


கிருத்திகை : உடல் சோர்வு நீங்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 13, 2021



உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்ல வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவரிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.


ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 13, 2021



மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் திருப்திகரமாக நடைபெறுவதால் லாபம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. மனதில் இறை நம்பிக்கை உண்டாகும். நுட்பமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


திருவாதிரை : திருப்திகரமான நாள்.


புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 13, 2021



பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பிள்ளைகளால் நன்மைகள் நடைபெறும். தொழிலில் கூட்டாளிகளுக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். வாக்குவன்மையால் லாபகரமான சூழல் உண்டாகும். வாகனப் பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



புனர்பூசம் : காரியங்கள் நிறைவேறும்.


பூசம் : பிரச்சனைகள் நீங்கும்.


ஆயில்யம் : ஆதாயம் ஏற்படும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 13, 2021



வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் அமையும். கல்வியில் இருந்துவந்த தடைகள் குறையும். பெண்களுக்கு பொருட்சேர்க்கை உண்டாகும். பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். உறவினர்கள் ஓரளவிற்கு உதவியாக இருப்பார்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



மகம் : வெற்றி கிடைக்கும். 


பூரம் : தடைகள் குறையும். 


உத்திரம் : மாற்றமான நாள். 

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 13, 2021



எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். சகோதரிகளுடன் சிறு மனவருத்தங்கள் தோன்றும். தொழிலில் கூட்டாளிகளுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் 



உத்திரம் : தன்னம்பிக்கை உண்டாகும்.


அஸ்தம் : பொறாமைகள் குறையும்.


சித்திரை : ஒற்றுமை மேம்படும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 13, 2021



குடும்பத்தில் உறவினர்களின் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் ஆதாயமான வாய்ப்புகள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



சித்திரை : வீண் செலவுகள் ஏற்படும். 


சுவாதி : வாய்ப்புகள் உண்டாகும்.


விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 13, 2021



செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



விசாகம் : முன்னேற்றமான நாள். 


அனுஷம் : சுபச்செலவுகள் உண்டாகும். 


கேட்டை : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 13, 2021



வாக்குவன்மையால் லாபம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து நன்மதிப்பைகளை பெறுவீர்கள். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மூலம் : லாபம் உண்டாகும்.


பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


உத்திராடம் : நன்மதிப்புகள் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 13, 2021



தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.


திருவோணம் : ஈடுபாடு அதிகரிக்கும்.


அவிட்டம் : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 13, 2021



குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். செயல்பாடுகளில் துரிதல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் திறமைக்கேற்ப உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகளால் ஆதாயம் மேம்படும். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.


சதயம் : பாராட்டுகள் கிடைக்கும்.


பூரட்டாதி : ஆதாயம் மேம்படும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 13, 2021



உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் கோபமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நடைபெறும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை



பூரட்டாதி : இடமாற்றம் உண்டாகும்.


உத்திரட்டாதி : காலதாமதம் ஏற்படும்.


ரேவதி : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------


கல்வித் துறையைப் புரட்டிப்போட்ட சீனாவின் முடிவு...

 சீனாவின் கல்வித் துறையில் புரட்சிகரமான மாற்றம் ஒன்றை அந்நாட்டு அரசு சமீபத்தில் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் கல்வி தொடர்பான பாடத்திட்டங்களைக் கற்பிக்கும் எந்த நிறுவனமும் லாப நோக்குடன் செயல்படக் கூடாது என்பதே அந்த அறிவிப்பு. பள்ளிக் கல்விப் பாடத்திட்டங்களுக்குப் பயிற்சி தரும் எந்த நிறுவனமும் வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளைப் பெறக் கூடாது என்றும், பங்குச் சந்தை போன்றவற்றின் மூலம் நிதி திரட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


அதேபோன்று 6 வயதுக்குக் குறைந்த மாணவர்களுக்கு இணையத்தின் மூலம் கற்பிக்கும் முறைக்கும் முழுமையாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பாடத்திட்டங்களை சீனாவுக்குள் கற்பிக்கக் கூடாது என்றும், வெளிநாடுகளிலிருந்து ஆசிரியர்களைப் பணியில் அமர்த்திப் பயிற்சி தரக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சீன அரசின் இந்தப் புதிய அறிவிப்பு, உலகம் முழுவதும் உள்ள கல்வியாளர்கள் மத்தியில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. சீனாவில் பள்ளிக் கல்விக்கான பயிற்சி வர்த்தகம் இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சம் கோடி அளவுக்கு லாபகரமான தொழிலாக நடந்துவரும் நிலையில், இந்தப் புதிய அறிவிப்பு சீனக் கல்வித் துறையின் நடைமுறையைப் புரட்டிப் போட்டுள்ளது. 


இதுவரை லாப நோக்குடன் செயல்பட்டுவந்த பயிற்சி மையங்கள், உடனடியாகத் தங்களை சேவை அமைப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து கல்வித் துறையில் குவியும் நிதியைக் கட்டுப்படுத்துவது இந்தப் புதிய உத்தரவின் நோக்கங்களில் ஒன்றாகும். இதுபோன்று பள்ளிக் கல்விக்கு வெளியில் உள்ள மையங்கள் மூலம் பயிற்சி தருவதால், இளம் மாணவர்கள் பள்ளிக் கல்வி, வெளியில் தரப்படும் பயிற்சி என இரண்டு விதமான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். 


பெற்றோர்களும் இருபுறமும் பணம் கட்டி அதிக நிதிச் சுமைக்கு ஆளாகிறார்கள் என்பதால், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. வசதி மிக்கவர்கள் வெளியில் பயிற்சி எடுத்துக்கொள்வதால், ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, வசதி குறைந்த மாணவர்களைப் பாதிக்கிறது. மாணவர்கள் மத்தியில் சமச்சீரற்ற நிலை ஏற்பட்டு, இது சமூகப் பிரச்சினையாக மாறுகிறது. பள்ளிக் கல்வி சேவையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை சித்தாந்தத்தைத் தனியார் பயிற்சி மையங்கள் சிதைப்பதால் அதைத் தடுக்கப் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன என்று சீன அரசு அறிவித்துள்ளது. 


 சீன அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள இந்தியக் கல்வியாளர்கள் பலர் அதேபோன்ற ஒரு உத்தரவை இந்தியாவிலும் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் கல்வித் துறை சேவை நோக்கத்திலிருந்து லாப நோக்கத்துக்கு மாறி நீண்ட காலமாகிவிட்டது. அரசுப் பள்ளிகள் மட்டுமே லாப நோக்கமின்றிச் செயல்பட்டுவருகின்றன. ஆனால், பள்ளிக் கல்வியைப் பொறுத்தமட்டில், அரசுப் பள்ளிகளின் பங்கு நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. 1978-ல் 74.1% மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயின்றனர். இன்றைக்கு 52.2% மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். 


லாப நோக்குடன் இயங்கும் தனியார் பள்ளிகள் இந்தக் காலகட்டத்தில் 10 மடங்கு வளர்ந்துள்ளன. 2018-ல் சென்னை உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. ‘தனியார் பள்ளிகள் லாப நோக்கத்துடன் இயங்கும் பயிற்சி நிறுவனங்களுடன் சேர்ந்து, போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி பெறும்படி மாணவர்களையும் பெற்றோரையும் கட்டாயப்படுத்தக் கூடாது’ என்பதே அந்த உத்தரவு. ஆனால், நடைமுறையில் பல தனியார் பள்ளிகள் ‘நீட்’ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி வழங்கும் நிறுவனங்களைப் பள்ளிகளுக்கே வரவழைத்து லாப நோக்கத்துடன் இயங்குகின்றன. இந்தியாவில் உள்ள 15 லட்சம் பள்ளிகளில் 25 கோடி மாணவர்கள் படிப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 30% மாணவர்கள் தங்கள் பாடங்களைக் கற்க வெளியில் பயிற்சி பெறுகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. 


இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் பள்ளிப் பாடங்களுக்குப் பயிற்சி அளிக்கும் மையங்களின் ஆண்டு வர்த்தகம் ரூ.10 லட்சம் கோடி என்றும், இது இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ரூ. 37 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. சேவையாக இருக்க வேண்டிய கல்வி, லாபத்தின் உச்சத்தைத் தொடும் நிலைக்குப் போய்க்கொண்டிருக்கும் நிலையில், சீன அரசின் உத்தரவு இந்தியாவிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

தனியார் பள்ளிகளில் படித்தால் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஆங்கில அறிவு கிடைக்கும் என்றும், பொறுப்புணர்வுடன் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கற்பிப்பார்கள் என்றும் இந்தியாவில் உள்ள பெற்றோர் நினைக்கின்றனர். 


இந்த மனநிலைதான் தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களை இழுக்கிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பார்கள் என்ற எண்ணமும் மக்களிடம் உள்ளது. ஆனால், உண்மை நிலவரம் வேறுவிதமாக உள்ளது. வடமாநிலங்களில் உள்ள பெரும்பான்மையான தனியார் பள்ளிகள், குறைந்த வருவாய்ப் பிரிவினரின் பிள்ளைகளுக்கே கல்வி கற்பிக்கின்றன. அங்குள்ள தனியார் பள்ளிகளில் 70% பள்ளிகள் மாதம் ரூ.1,000-க்கும் குறைவாகக் கட்டணம் பெறும் பள்ளிகளாக உள்ளன.

அதேசமயம், போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள், திறமையான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வழியாகப் பயிற்சி அளிப்பதன் மூலமாகவும், மாணவர்களைக் கசக்கிப் பிழிவதன் மூலமாகவும் அதிக தேர்ச்சி விகிதங்களைக் காட்டுகின்றன. 


அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களில் 95% பேர் தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்களாகவே இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது மாணவர்களைத் தனியார் பயிற்சிக்குச் செல்ல நிர்ப்பந்திக்கிறது. இந்தப் போட்டி, லாப நோக்கத்தின் உச்சிக்கே தனியார் பயிற்சி மையங்களை இட்டுச்செல்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களும் பயிற்சி மையங்களில் முதலீடு செய்யத் தொடங்கிவிட்ட நிலையில், கல்வியைச் சேவையாகத் தக்கவைத்துக்கொள்ள இந்தியாவிலும் சீனாவைப் போன்று அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. - 


எம்.சண்முகம், தொடர்புக்கு: shanmugam.m@hindutamil.co.in




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teacher stabbed to death in government school near Thanjavur - what is the reason..?

தஞ்சாவூர் : அரசுப் பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை - காரணம் என்ன..? மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவர் கத்தியால் குத்திக்...