கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

3 மாவட்டங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரிகள்(New Agricultural Colleges will be opened in 3 Districts) : அரசு அறிவிப்பு...



 3 மாவட்டங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 


தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக.28) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.


இதில் வேளாண் துறை சார்பில் வெளியான அறிவிப்பு:


''வேளாண்‌ கல்வியின்‌ முக்கியத்துவம்‌ கருதி, கரூர்‌ மாவட்டம்‌, நாகப்பட்டினம்‌ (கீழ்வேளூர்), சிவகங்கை (செட்டிநாடு) ஆகிய மூன்று மாவட்டங்களில்‌ ரூ.30 கோடி மதிப்பில்‌ அரசு வேளாண்மைக்‌ கல்லூரிகள்‌ தொடங்கப்படும்‌.


தற்போது, வேளாண்‌ கல்வி மற்றும்‌ வேளாண்‌ ஆராய்ச்சியின்‌ தேவை அதிகரித்துள்ளது. இதனைக்‌ கருத்தில்‌ கொண்டு, வேளாண்‌ நிதிநிலை அறிக்கையில்‌ கிருஷ்ணகிரியில்‌ புதியதாக அரசுத்‌ தோட்டக்கலைக்‌ கல்லூரி தொடங்க அறிவிக்கப்பட்டது.


வேளாண்‌ கல்வியின்‌ முக்கியத்துவம்‌ கருதி, 2021-2022ஆம்‌ ஆண்டில், கரூர் மாவட்டம்‌, நாகப்பட்டினம்‌ மாவட்டத்தில்‌ கீழ்வேளூா்‌, சிவகங்கை மாவட்டத்தில்‌ செட்டிநாடு ஆகிய இடங்களில்‌ மூன்று புதிய அரசு வேளாண்மைக்‌ கல்லூரிகள்‌ தொடங்குவதற்கு மாநில அரசு தலா ரூ.10 கோடி வீதம்‌ மொத்தம்‌ ரூ.30 கோடி நிதியை ஒதுக்கும்''‌.


இவ்வாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.


>>> வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை எண்: 5, அறிவிப்புகள்: 2021-2022...


01.09.2021 முதல் அனைத்து வகை பள்ளிகளும் திறக்க இருப்பதால் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான சுற்றறிக்கை - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு...

 01.09.2021 முதல் அனைத்து வகை பள்ளிகளும் திறக்க இருப்பதால் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான சுற்றறிக்கை - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு...




பள்ளிகள் திறப்பு - தலைமையாசிரியர்களுக்கான சுற்றறிக்கை - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

 


பள்ளிக் கல்வித் துறை பள்ளிக் கல்விமுதன்மைக் செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டம் : 


01.09.2021 முதல் அனைத்துவகைப் பள்ளியைதிறப்பது தொடர்பாக அனைத்துவகைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு சுற்றறிக்கை


 * வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வேலைநாட்கள் 


* 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தினமும் வகுப்புகள் நடைபெறும்.


* ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணாக்கர்கள் மட்டுமேசமூக இடைவெளி பின்பற்றி அமரவைக்க வேண்டும்.


* போதிய இடவசதிஇல்லை எனில் , 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப் பெறவேண்டும்.


* உயர்நிலைப்பள்ளிகளில் 9 - ம் வகுப்பு மற்றும் 10 - ம் வகுப்பு தினமும் செயல்படவேண்டும் , போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் மட்டும் 9 - ம் வகுப்பு சுழட்சி முறையில் செயல்படவேண்டும் 


* தனியார் பள்ளிகளில் மட்டும் , பள்ளிக்கு வருகை புரிய இயலாத மாணவர்களுக்கு தொடர்ந்து இணையவழி ( Online Class ) வகுப்புகள் நடத்தப்படவேண்டும்.


* மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் ( Mask ) அணியவேண்டும்.


* மாணவர்கள் வகுப்பறைக்கு செல்லும் முன் கட்டாயமாக கிருமிநாசினி ( Sanitizer ) சோப்புகளைக் கொண்டு கைகளை சுத்தம் செய்யவேண்டும்.


* பள்ளிவளாகத்தில் அனைவரும் SOP தவறாது பின்பற்ற வேண்டும்.


* அனைத்து ஆசிரியரல்லாத பணியாளர்கள் கட்டாயமாக கோவிட் -19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.


* பள்ளிக்கு வருகை புரிவதிலிருந்து விலக்கு பெற்ற ஆசிரியர்கள் 01.09.2021 முதல் பள்ளிக்கு தவறாது வருகைபுரிய வேண்டும்.


* கோவிட் -19 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயமாக சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.


* கோவிட் -19 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவர்கள் 90 நாட்கள் கழித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.


* கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் , அதற்கான விலக்குகோரும் சான்றினை மாவட்டசுகாதாரத் துறை இணை இயக்குநரிடம் பெற்றுசமர்ப்பிக்க வேண்டும்.


 * 100 நாள்வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்களைக் கொண்டு பள்ளிவளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தப்படுத்த வேண்டும்.


* EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் வருகைப் பதிவு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.


* மருத்துவ உதவிமைய எண் மற்றும் அருகிலுள்ள ஆரம்பசுகாதார நிலைய அலைபேசி எண் ( Help Line ) உள்ளிட்டவிவரங்கள் தகவல்பலகையில் மாணவர்கள் / ஆசிரியர்கள் / அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் தெளிவாக பார்வையிடும் வகையில் இருத்தல் வேண்டும் . 


* EMIS விவரங்களை நாள்தோறும் உடனுக்குடன் புதுப்பித்தல் வேண்டும்.


* மாணவர்களுக்கு நாள்தோறும் உடல் வெப்பநிலை கண்காணித்து உரிய பதிவேட்டில் பராமரித்தல் வேண்டும்.


* EMIS இணையதளத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்கள் தவறாது பதிவேற்றம் செய்திருத்தல் வேண்டும்.


* சமூக இடைவெளியை தவறாது கடைபிக்க வேண்டும்.


* P.E.T. , N.S.S. , N.C.C. , தொடர்பான செயல்பாடுகள் பள்ளிவளாகத்தில் செயல்படுதல் கூடாது.


* மாணவர்களுக்கான சமூக இடைவெளியினை கடைபிடித்து வகுப்பறையில் அமரவைக்க வேண்டும். 


* தேவைப்படின் RBSK தொடர்புகொண்டு சிறப்பு முகாம் நடத்தி மாணவர்களின் உடல்நிலை | ஆரோக்கியத்தை பரிசோதிக்க வேண்டும்.


* மாணவர்களுக்கு தொற்று ஏற்படாதவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 


* மாணவர்கள் தங்கும் விடுதிகளில் சமூக இடைவெளி , SOP நடைமுறைகளை பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.


* மாணவர்களுக்கான இலவச பேருந்துபயண அட்டை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.


* சத்துமாத்திரைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் . 


* 45 நாட்களுக்கு மாணவர்களுக்கான Bridge Course கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


* கொரோனாபாதிப்புஏற்பட்டநாளிலிருந்து 90 நாட்களுக்குப் பிறகேதடுப்பூசிசெலுத்துவதை உறுதிசெய்யவேண்டும்.


* அவ்வபோது பள்ளிகளை ஆய்வு செய்ய உயர் அலுவலர்கள்வருகைதரஉள்ளதால் , மேற்காணும் அனைத்துதொடர்நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிதியுதவி பெறும் பள்ளி - பட்டதாரி ஆசிரியர் பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.09.2021...



 நிதியுதவி பெறும் பள்ளி - பட்டதாரி ஆசிரியர் பணியிடம் - விண்ணப்பிக்க  கடைசி நாள்: 10.09.2021...


விவேகானந்த மேல்நிலைப்பள்ளி, திருவேடகம் மேற்கு,

 அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தை நேர்முகத்தேர்வு மூலம் நிரப்புவதற்கு தகுதிவாய்ந்த பணி நாடு நர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



விண்ணப்பதாரர் தமது முழு விபரங்களுடன் பள்ளி செயலாளர் அவர்களுக்கு 10.09.21ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்



முகவரி -

விவேகானந்த மேல்நிலைப்பள்ளி,  திருவேடகம், மதுரை மாவட்டம் -625234





தொடக்கக்கல்வி - அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள்(Aided School) - 2021-2022ஆம் கல்வியாண்டுக்கான பணியாளர் நிர்ணயம்(Staff Fixation) - 25.09.2021க்குள் பணி நிரவல் பணியை முடிக்க தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்(DEE Proceedings) ந.க.எண்:002108/எச்/எப்/ஜி/2021, நாள்:27-08-2021...

 


 தொடக்கக்கல்வி - அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் - 2021-2022ஆம் கல்வியாண்டுக்கான பணியாளர் நிர்ணயம் - 25.09.2021க்குள் பணி நிரவல் பணியை முடிக்க தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்:002108/எச்/எப்/ஜி/2021, நாள்:27-08-2021...


>>> தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்:002108/எச்/எப்/ஜி/2021, நாள்:27-08-2021...



தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாத ஆசிரியர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்...

 மதுரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

 

வரும் 1-ம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது. மதுரையில் இதுவரை 14 ஆயிரத்து 896 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், மேலும் 2 ஆயிரத்து 33 ஆசிரியர்கள் தாமதமின்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

உடல் நல சூழலால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாத ஆசிரியர்கள், அதற்குரிய மருத்துவ சான்றிதழுடன் பள்ளிக்கு செல்ல வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.





மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்வு...

 மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்வு...

மத்திய அரசு பணியாளர்களுக்கு மேலும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. 

ஏற்கெனவே 28 சதவீதம் அகவிலைப்படி (டிஏ) அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது மேலும் கூடுதலாக 3 சதவீதம் அதாவது 31 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்படும் என தெரிகிறது.



01.09.2021 முதல் 31.10.2021 வரையிலான நாட்களில் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி (Refresher Course) அளிக்க தயார் செய்ய வேண்டிய திட்டம் (Day wise Plan)...



>>> 01.09.2021 முதல் 31.10.2021 வரையிலான நாட்களில் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி (Refresher Course) அளிக்க தயார் செய்ய வேண்டிய திட்டம் (Day wise Plan)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attention Sabarimala Devotees - Devasam Board Notice

  சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...