சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை 2021-22 NSP (National Scholarship Portal) - இல் பதிவு செய்ய வேண்டிய Institute Nodal Officer- ஆதார் எண்ணுடன் Mobile Number ஐ இணைக்கும் வழிமுறை...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 சதவீதம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி(Higher education department allows admission of 25 percent more students in Government Arts and Science Colleges)...
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 சதவீதம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி(Higher education department allows admission of 25 percent more students in Government Arts and Science Colleges)...
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 சதவீதம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகங்களிடம் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளுக்கு JACTTO GEO வரவேற்பு...
முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளுக்கு ஜாக்டோ ஜியோ வரவேற்பு...
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த 20.08.2021 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை மரியாதை நிமித்ததமாகச் சந்தித்தனர். இச்சந்திப்பின்போது தமிழக முதலமைச்சராகப் பதவி பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் , மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது , முடக்கப்பட்டுள்ள அகவிலைப்படியினை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான ஜாக்டோ ஜியோவின் சார்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இன்றைய தினம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் தொடர்பாக 13 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளுக்கு ஜாக்டோ ஜியோ நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றைக்குமே அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையேயான நல்லுறவினைப் பேணிப் பாதுகாக்கும் என்பதனை நிரூபிக்கும் விதமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் அமைந்துள்ளது. மேலும் , ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுப்பதற்காக 2017 ல் தொடங்கப்பட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பிற்கு , தொடங்கிய நாள் முதலே தனது ஆதரவினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது நல்கி வந்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் , ஜாக்டோ ஜிபோ போராட்டக் களத்திற்கே வந்து , கழக ஆட்சி அமைந்தவுடன் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியினையும் அளித்து வந்துள்ளார் . 2017 முதல் 2019 வரையிலான போராட்டக் காலம் அனைத்தும் பணிக்காலமாக வரன்முறைப்படுத்தப்படும் , ஒழுங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பதவி உயர்வு மீண்டும் வழங்கப்படும் , பழிவாங்கலால் செய்யப்பட்ட பணிமாறுதல் இரத்து செய்யப்படும் போன்ற அறிவிப்புகள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் போராட்ட காலத்தில் அளித்த வாக்குறுதிகளை எள்ளவும் மாற்றாமல் நிறைவேற்றி உள்ளார் என்பதனை நன்றிப் பெருக்கோடு ஜாக்டோ ஜியோ வரவேற்கிறது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தனது 110 உரையினை பின்வரும் வரிகளோடு முத்தாய்ப்பாக நிறைவு செய்துள்ளர் . " மக்களாட்சித் தத்துவத்தின் நான்கு தூண்களின் ஒன்றான நிருவாகத்தின் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அவர்களது நலனில் எப்போதுமே அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக , நிச்சயமாக , உறுதியாக நிறைவேற்றும் ” மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் முத்தாய்ப்பான நிறைவுரை என்பது , ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் பிரதான கோரிக்கையான மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
ஜாக்டோ ஜியோ
அரசு பள்ளிகளில் செப்டம்பர் 30 வரை மாணவர் சேர்க்கை – கல்வித்துறை அனுமதி...
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேருவதன் காரணமாக இந்த மாதம் இறுதி வரை சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்வுகள் நடத்தப்பட்டது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், ஜூன் முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 9ம் வகுப்பு வரையிலானோருக்கு, மாற்று சான்றிதழ் இல்லாவிட்டாலும், ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை தளத்தின் சிறப்பு எண் இருந்தால் போதும். அந்த எண்ணில் உள்ள விவரங்கள் அடிப்படையில், மாணவர்களை சேர்க்கலாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
6,7,8ஆம் வகுப்புகள் - அறிவியல்(Science) - ஒப்படைப்பு(Assignment) 2க்கான விடைக்குறிப்புகள்(Answers)...
6,7,8ஆம் வகுப்புகள் - அறிவியல்(Science) - ஒப்படைப்பு(Assignment) 2க்கான விடைக்குறிப்புகள்(Answers)...
இன்றைய (08-09-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
செப்டம்பர் 08, 2021
மனதில் நினைத்த எண்ணங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
ரிஷபம்
செப்டம்பர் 08, 2021
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : சிறப்பான நாள்.
ரோகிணி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
---------------------------------------
மிதுனம்
செப்டம்பர் 08, 2021
எண்ணிய பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளின் மூலம் வியாபாரத்தில் மாற்றங்கள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : புதுமையான நாள்.
---------------------------------------
கடகம்
செப்டம்பர் 08, 2021
நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மனதில் இருந்துவந்த தடைகள் நீங்கி புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள். சிறிய தூர பயணங்களின் மூலம் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
புனர்பூசம் : ஆர்வம் உண்டாகும்.
பூசம் : தடைகள் நீங்கும்.
ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
சிம்மம்
செப்டம்பர் 08, 2021
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடன்பிறந்தவர்கள் உதவியாக செயல்படுவார்கள். தனவரவுகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
மகம் : இன்னல்கள் நீங்கும்.
பூரம் : எண்ணங்கள் மேம்படும்.
உத்திரம் : விருப்பங்கள் நிறைவேறும்.
---------------------------------------
கன்னி
செப்டம்பர் 08, 2021
மனதில் வித்தியாசமான சிந்தனைகள் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். உங்களை பற்றிய பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவிகளை செய்யும்போது சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : சோர்வு உண்டாகும்.
அஸ்தம் : மாற்றங்கள் ஏற்படும்.
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
துலாம்
செப்டம்பர் 08, 2021
குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
சித்திரை : ஆர்வம் ஏற்படும்.
சுவாதி : அனுபவம் உண்டாகும்.
விசாகம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
விருச்சிகம்
செப்டம்பர் 08, 2021
வியாபார பணிகளில் லாபம் மேம்படும். பிள்ளைகளுக்கு சுபகாரியங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்புகளை அதிகப்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். தனவரவுகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கேட்டை : சிந்தனைகள் உண்டாகும்.
---------------------------------------
தனுசு
செப்டம்பர் 08, 2021
பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் ஏற்படும். வியாபார பணிகளில் கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்விகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். ஆன்மிக சிந்தனைகள் மற்றும் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
மூலம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
பூராடம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
மகரம்
செப்டம்பர் 08, 2021
எந்தவொரு செயலையும் தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது. சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
உத்திராடம் : தன்னம்பிக்கையான நாள்.
திருவோணம் : அறிமுகம் உண்டாகும்.
அவிட்டம் : அலைச்சல்கள் மேம்படும்.
---------------------------------------
கும்பம்
செப்டம்பர் 08, 2021
புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவரிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். பெரிய அளவிலான கொடுக்கல்-வாங்கல் தொடர்பான விஷயங்களில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவுகளை எடுக்கவும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளுடனான சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும்.
சதயம் : ஆலோசனைகள் வேண்டும்.
பூரட்டாதி : மாற்றமான நாள்.
---------------------------------------
மீனம்
செப்டம்பர் 08, 2021
சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில பிரச்சனைகளுக்கு புரிதல் ஏற்படும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : புரிதல் ஏற்படும்.
ரேவதி : இழுபறிகள் மறையும்.
---------------------------------------
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Magizh Mutram - House System Handbook Manual - Tamil Nadu Government School Education Department Released
மகிழ் முற்றம் - கையேடு - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை வெளியீடு - தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மகிழ் முற்றம் சார்ந்து அமைக்கப்பட...