கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (15-09-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

செப்டம்பர் 15, 2021



குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்த தன்மைகள் படிப்படியாக குறையும். நண்பர்களின் ஒத்துழைப்புகளால் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆபரண பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : ஆதரவுகள் கிடைக்கும்.


கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------


ரிஷபம்

செப்டம்பர் 15, 2021



 மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களின் போது தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 



கிருத்திகை : சிந்தனைகள் ஏற்படும்.


ரோகிணி : கவனத்துடன் செயல்படவும்.


மிருகசீரிஷம் : வாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------


மிதுனம்

செப்டம்பர் 15, 2021



 கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் லாபகரமான சூழ்நிலையை ஏற்படுத்தும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 



மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.


திருவாதிரை : மாற்றமான நாள்.


புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


கடகம்

செப்டம்பர் 15, 2021



 மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். விவசாயம் தொடர்பான கடன் உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.


பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


ஆயில்யம் : தீர்வுகள் ஏற்படும்.

---------------------------------------



சிம்மம்

செப்டம்பர் 15, 2021



 எந்த ஒரு செயலையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் சுபச்செய்திகளும், அலைச்சல்களும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



மகம் : தன்னம்பிக்கை மேம்படும்.


பூரம் : உயர்வான நாள்.


உத்திரம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

---------------------------------------


கன்னி

செப்டம்பர் 15, 2021



 உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வியாபாரம் தொடர்பான பணிகளில் கூட்டாளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



உத்திரம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


அஸ்தம் : பாராட்டுகள் கிடைக்கும்.


சித்திரை : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------



துலாம்

செப்டம்பர் 15, 2021



 உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் அமையும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்  



சித்திரை : புரிதல்கள் மேம்படும்.


சுவாதி : முன்னேற்றம் உண்டாகும்.


விசாகம் : ஆர்வம் பிறக்கும்.

---------------------------------------



விருச்சிகம்

செப்டம்பர் 15, 2021



 எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள். நண்பர்களின் உதவியினால் வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த பணிகள் மற்றும் தனம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : தனவரவுகள் கிடைக்கும்.


அனுஷம் : அனுகூலமான நாள்.


கேட்டை : காரியசித்தி உண்டாகும்.

---------------------------------------


தனுசு

செப்டம்பர் 15, 2021



 விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். உடல் அளவில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வர்த்தக பணிகளில் நிதானத்துடன் முடிவெடுக்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



மூலம் : ஆதரவுகள் கிடைக்கும்.


பூராடம் : நிதானம் வேண்டும்.


உத்திராடம் : சுபமான நாள்.

---------------------------------------


மகரம்

செப்டம்பர் 15, 2021



குடும்ப பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


திருவோணம் : பொறுப்புகள் குறையும்.


அவிட்டம் : அனுபவம் மேம்படும்.

---------------------------------------


கும்பம்

செப்டம்பர் 15, 2021



 உறவினர்களின் வழியில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் ஏற்படும். வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான நன்மதிப்புகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


சதயம் : மேன்மையான நாள்.


பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------


மீனம்

செப்டம்பர் 15, 2021



 எண்ணிய காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபார பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதில் மாற்றமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில இடமாற்றங்களால் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு



பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.


உத்திரட்டாதி : தன்னம்பிக்கை ஏற்படும்.


ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------


1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் விளக்கம்...



 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி பள்ளிகள் திறப்பது பற்றிய ஆலோசனை அறிக்கையை நாளை முதலமைச்சரிடம் சமர்பிப்பு - சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற ஆலோசனை - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...


6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி பள்ளிகள் திறப்பது பற்றிய ஆலோசனை அறிக்கையை நாளை முதலமைச்சரிடம் சமர்பிக்க உள்ளோம்.




1- 8 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்தோம்.


எல்லையோர மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் குறித்து ஆலோசித்தோம்.



கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.


மாணவர்களின் நலன் முக்கியம் என்பதையும் கருத்தில் கொண்டுள்ளோம்.


பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை குறித்தும் ஆலோசித்தோம்.


பள்ளிகள் தோறும் மருத்துவ குழு சென்று மாணவர்கள் உடல்நிலை குறித்து சோதனை செய்ய ஏற்பாடு.


மாணவர்கள் வர விருப்பமில்லை என்றால் வீட்டிலேயே இருக்கலாம்.


1-8 வரை வகுப்புகள் திறக்கப்பட்டால், சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும்.


மாணவர்கள், பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு.


- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள்...



>>> 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் விளக்கம் (காணொளி)...


பள்ளி மேலாண்மைக் குழு - கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான நிரப்பப்பட்ட மாதிரிப் படிவம்(School Management Committee (SMC) - Filled Sample Form for Opening a Savings Bank Account at Canara Bank)...

 


>>> பள்ளி மேலாண்மைக் குழு - கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான நிரப்பப்பட்ட மாதிரிப் படிவம் - 1 (School Management Committee (SMC) - Filled Sample Form for Opening a Savings Bank Account at Canara Bank)...


>>> பள்ளி மேலாண்மைக் குழு - கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான நிரப்பப்பட்ட மாதிரிப் படிவம் - 2...



>>> கனரா வங்கியில் புதிய SMC சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான மாதிரிப் படிவம் (Canara Bank Savings Bank Account Opening Model Format)...


ரூ.35 லட்சம் பேரம் - தேர்வறையில் இருந்து Whatsapp மூலம் லீக்கான நீட் வினாத்தாள்(NEET Question Paper) - ஜெய்பூரில் நடந்தது என்ன?

 


ரூ.35 லட்சம் பேரம் - தேர்வறையில் இருந்து Whatsapp மூலம் லீக்கான நீட் வினாத்தாள் - ஜெய்பூரில் நடந்தது என்ன?


இந்தியாவில் கடந்த 12ஆம் தேதி மாநிலம் முழுவதும் மருத்துவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள் ரூ.35 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு மாநிலங்களிலும் குரல் எழுந்து வருகிறது. மேலும் இந்த தேர்வு ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கிறது என கல்வியாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள்.


மேலும் நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகிறது என்றும் அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறனர். ஆனால் ஒன்றிய அரசு தொடர்ந்து நீட் தேர்வை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஞாயிறன்று நடைபெற்ற நீட் தேர்வின் போது ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


ஜெய்பூரில் ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஒரு நீட் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தேர்வு தொடங்கியதும் தேர்வறை கண்காணிப்பாளரான ராம் சிங் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர், வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து சித்ரகூட் பகுதியில் தங்கியிருந்த இரண்டு பேருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளனர்.


அந்த நபர்கள் சிகார் பகுதியில் வேறு சிலருக்கு வினாத்தாளை அனுப்பி, அவர்கள் மூலம் சரியான விடைகளைப் பெற்றுள்ளனர். அங்கிருந்து முகேஷுக்கு விடைகள் கிடைக்க, அதனை வாட்ஸ்-அப் மூலம் பெற்ற ராம் சிங் தினேஷ்வரி குமாரி என்ற மாணவிக்கு விடைகளைத் தெரிவித்துள்ளார். இதற்காக ரூ. 35 லட்சம் பேரம் பேசப்பட்டு, தேர்வுமைய வளாகத்திலேயே 10 லட்ச ரூபாய் கைமாறியுள்ளது.


இதையடுத்து தேர்வு மைய அதிகாரி, மாணவி உட்பட 8 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: கலைஞர் செய்திகள்

நீட் உயிர் பலிக்கு முற்றுப்புள்ளி வேண்டும்; கைகளைப் பற்றிக் கொண்டு கேட்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்...



 சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கூழையூரைச் சேர்ந்த தனுஷ் (19) என்ற மாணவர், ஏற்கெனவே 2019-ல் நீட் தேர்வை எழுதினார். இதில், பல் மருத்துவத்துக்கு இடம் கிடைத்தபோதும் எம்பிபிஎஸ்தான் படிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்துள்ளார். இதனால் மீண்டும் தேர்வை எழுத முடிவெடுத்துப் படித்து வந்துள்ளார்.


2 முறை நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காத நிலையில், இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தனுஷ் இருந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 12) நீட் தேர்வு நடைபெற்ற அன்று, தனுஷ், தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.


அதேபோல், அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி (17), பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவி. இவர், நீட் தேர்வைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 12) எழுதியுள்ளார். எனினும், தேர்வு சரியாக எழுதவில்லை எனக் கூறிவந்த கனிமொழி, மருத்துவக் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நேற்று இரவு (செப். 13) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.


இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (செப். 14) வெளியிட்ட அறிக்கை:


"நீட் எனும் உயிர்க் கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிர் பலிக்கு இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று மாணவச் சமுதாயத்தையும் அவர்களின் பெற்றோரையும் தமிழகத்தின் முதல்வராக மட்டுமின்றி, ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டுக்கொள்கிறேன்.


தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வினைத் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறோம். அதற்கான சட்டப் போராட்டத்தையும் முழுவீச்சில் தொடங்கியிருக்கிறோம். பாஜக தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, நீட் தேர்வை முழுமையாக நீக்கும் வரை இந்தச் சட்டப் போராட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்ற உறுதியினை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்குகிறேன்.


நீட் தேர்வு என்பது தகுதியை எடை போடும் தேர்வல்ல என்பதை, ஆள்மாறாட்டம் - வினாத்தாள் விற்பனை - பயிற்சி நிறுவன தில்லுமுல்லுகள் உள்ளிட்ட பல மோசடிகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. கல்வியில் சமத்துவத்தைச் சீர்குலைக்கும் நீட் தேர்வு நீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நமது அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.


மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிகாகப் பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோர், தங்கள் வீட்டு மாணவச் செல்வங்கள் மனந்தளராதிருக்கும் பயிற்சியைத் தாங்களே அளித்து, அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்திடக் கோருகிறேன். உயிர் காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தைத் தடுத்திடுவோம். சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டை விரட்டுவோம்.


மாணவி கனிமொழியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இதுபோன்ற இன்னொரு இரங்கல் செய்திக்கு இடம்தராத சூழலை உருவாக்கிடுவோம்".


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை 2021க்கான தரவரிசை பட்டியல் வெளியீடு(Tamilnadu Engineering Admissions TNEA 2021 - Rank List has been Published)...

 


பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை 2021க்கான தரவரிசை பட்டியல் வெளியீடு(Tamilnadu Engineering Admissions TNEA 2021 - Rank List has been Published)...


பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த 1.40 லட்சம் மாணவர்கள் இணையதளம் வழியாக மதிப்பெண்களை அறியலாம்


https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Tamil Nadu Engineering Admissions 2021 (TNEA 2021) is a complete online process includes Registration, Payments, Choice Filling, Allotment and Confirmation. Candidates are requested to read the instructions given here completely for the successful completion of their Counseling and Admissions.


Rank list has been published , you can check your rank by login into system.


Special Reservation Counselling to be conducted between 15-09-2021 and 24-09-2021, details will follow.


This year 440 colleges are included in counselling and total available seats are 151870, further details will follow.

செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை சமூக நீதிக்கான நாளாக கொண்டாட தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண்:777, நாள்: 13.09.2021 வெளியீடு(Tamilnadu Government Ordered to Celebrate Thanthai Periyar Birthday on September 17 as "Social Justice Day". G.O.(Ms).No:777, Dated: 13-09-2021)...

 


அரசாணை (நிலை) எண்:777, நாள்: 13.09.2021 - தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர்-17 ஆம் நாளை ஆண்டுதோறும் 'சமூகநீதி நாள்' ஆக அனுசரிப்பது - உறுதிமொழி மேற்கொள்வது - ஆணை வெளியிடப்படுகிறது(Tamilnadu Government Ordered to Celebrate Thanthai Periyar Birthday on September 17 as "Social Justice Day". G.O.(Ms).No:777, Dated: 13-09-2021)...


>>> அரசாணை (நிலை) எண்:777, நாள்: 13.09.2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings

  2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ...