கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளும் சுழற்சி முறை இன்றி வாரத்தில் 6 நாட்களும் செயல்பட தமிழ்நாடு அரசு உத்தரவு (Higher Education (A2) Department Principal Secretary Letter No. 14595/A2/2021-1. dated: 22.11.2021 - All Higher Educational Institutions under the aegis of Higher Education Department -Functioning in offline mode on all six days a week — Instructions — Issued - Regarding)...

 


உயர் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளும் சுழற்சி முறை இன்றி வாரத்தில் 6 நாட்களும் செயல்பட தமிழ்நாடு அரசு உத்தரவு (Higher Education (A2) Department Principal Secretary Letter No. 14595/A2/2021-1. dated: 22.11.2021 - All Higher Educational Institutions under the aegis of Higher Education Department -Functioning in offline mode on all six days a week — Instructions — Issued - Regarding)...


Ref: 
1. G.O.(Ms) No.164, Higher Education(A2) Department . dated:27.08.2021. 
2. G.O.(Ms) No.234, Higher Education(A2) Department . dated: 22.11.2021. 



தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு - 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக 'பயிற்று மொழி' சேர்ப்பு...



நடப்பு கல்வி ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக 'பயிற்று மொழி' சேர்க்கப்படுகிறது. 


1 முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றனர் என்ற விவரம் வகுப்பு வாரியாக சேர்க்கப்பட உள்ளது. 


மாணவர்களின் பயிற்று மொழி விவரங்களை தனித்தனியே இணையத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு. 


தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய ஏற்பாடு.

ஆசிரியர்களின் போராட்ட காலம் பணிவரன்முறைப்படுத்தி திருத்திய ஆணை - எம்.எல்.ஏ. வழங்கினார்...

 ஆசிரியர்களின் போராட்ட காலம் பணிவரன்முறைப்படுத்தி திருத்திய ஆணை - எம்.எல்.ஏ. வழங்கினார்...



ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் - செலுத்திக்கொள்ள விரும்பாத ஆசிரியர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்...

கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசியை தமிழக அரசு கட்டாயப் படுத்தக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்


ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல விரும்பினால், மாணவர்களின் நலன் கருதி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் - நீதிமன்றம்





ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளராகப் பதவி உயர்வு (Promotion to Lab Assistant as Junior Assistant) வழங்கக் கோரியது சார்ந்து விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயலமுறைகள் (DSE JD Proceedings) ந.க.எண்: 48685/அ4/இ1/2021, நாள்: 20-11-2021...



>>> ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளராகப் பதவி உயர்வு (Promotion to Lab Assistant as Junior Assistant) வழங்கக் கோரியது சார்ந்து விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயலமுறைகள் (DSE JD Proceedings) ந.க.எண்: 48685/அ4/இ1/2021, நாள்: 20-11-2021...

இன்றைய (22-11-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 22, 2021




பிள்ளைகளின் வழியில் சுபவிரயங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதற்கான சூழல் அமையும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.  வெற்றிகரமான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.


பரணி : மகிழ்ச்சி உண்டாகும்.


கிருத்திகை : போட்டிகள் குறையும்.

---------------------------------------





ரிஷபம்

நவம்பர் 22, 2021




வேலை சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். குடும்பத்தில் தேவையில்லாத சிறு சிறு பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. சாந்தம் வேண்டிய நாள்.



அதிஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



கிருத்திகை : வாய்ப்புகள் ஏற்படும்.


ரோகிணி : சிந்தனைகள் அதிகரிக்கும். 


மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------





மிதுனம்

நவம்பர் 22, 2021




குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மகிழ்ச்சியான நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.


திருவாதிரை : எதிர்ப்புகள் நீங்கும். 


புனர்பூசம் : தடுமாற்றமான நாள்.

---------------------------------------





கடகம்

நவம்பர் 22, 2021




நினைத்த காரியங்கள் இனிதே நடைபெறும். உடன்பிறந்தவர்களால் நன்மை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முன்கோபத்தை குறைத்து கொண்டு செயல்படுவது நல்லது. சமூகத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். அனுகூலமான நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : நன்மையான நாள்.


பூசம் : முயற்சிகள் சாதகமாகும்.


ஆயில்யம் : மதிப்பு உயரும். 

---------------------------------------





சிம்மம்

நவம்பர் 22, 2021




வியாபர பணிகளில் புதிய முதலீடு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.  ஆர்வம் அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மகம் : கவலைகள் நீங்கும்.


பூரம் : மகிழ்ச்சியான நாள்.


உத்திரம் :  மாற்றங்கள் உண்டாகும்.  

---------------------------------------





கன்னி

நவம்பர் 22, 2021




நண்பர்களின் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். வியாபார பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்திருந்த சில உதவிகளின் மூலம் மேன்மை ஏற்படும். கீர்த்திகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : செல்வாக்கு மேம்படும்.


அஸ்தம் : அறிமுகம் கிடைக்கும்.


சித்திரை : மேன்மை உண்டாகும்.

---------------------------------------





துலாம்

நவம்பர் 22, 2021




ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். பங்காளிகள் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.முயற்சிகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



சித்திரை : முன்னேற்றமான நாள். 


சுவாதி : அறிமுகம் கிடைக்கும்.


விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 

---------------------------------------





விருச்சிகம்

நவம்பர் 22, 2021




வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பார்த்த சில பணிகள் திருப்திகரமாக இருந்தாலும் சில அலைச்சல்களும் உண்டாகும். மனதில் தோன்றும் சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்படும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அமைதி வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



விசாகம் : சிந்தித்து செயல்படவும்.


அனுஷம் : குழப்பமான நாள். 


கேட்டை : பொறுமை வேண்டும்.

---------------------------------------





தனுசு

நவம்பர் 22, 2021




உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் நீங்கும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உதவிகள் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : அனுகூலமான நாள். 


பூராடம் : மாற்றங்கள் ஏற்படும். 


உத்திராடம் : தாமதங்கள் குறையும். 

---------------------------------------





மகரம்

நவம்பர் 22, 2021




சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவேறும். புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் அலைச்சலும், அதற்குண்டான ஆதரவான வாய்ப்புகளும் ஏற்படும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திராடம் : ஆர்வம் உண்டாகும். 


திருவோணம் : வாய்ப்புகள் ஏற்படும்.


அவிட்டம் : ஆதரவு கிடைக்கும். 

---------------------------------------





கும்பம்

நவம்பர் 22, 2021




மனதில் நினைத்த காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.  பெருமை ஏற்படும் நாள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : காரியசித்தி உண்டாகும்.


சதயம் : சாதகமான நாள்.


பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------





மீனம்

நவம்பர் 22, 2021




புதிய தொழில் நுட்ப கருவிகள் வாங்கும் முயற்சிகள் ஈடேறும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும். உயர்வான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



பூரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.


உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


ரேவதி : தெளிவு ஏற்படும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-11-2021 - திங்கள் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.11.21

திருக்குறள் :


நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய விடல். 


பொருள் 


நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்


பழமொழி :

A drowning man will catch at a straw



நீரில் மூழ்குபவனுக்கு துரும்பும் தெப்பமாகும்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. சினம் எப்படி பட்ட உறவுகளையும் அழித்து விடும். 


2. ஆனால் பொறுமை பாறை போன்ற மனதை கூட இளக செய்து விடும். எனவே பொறுமை நம் வாழ்வில் முன்னேற மிகவும் அவசியம்


பொன்மொழி :


ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல. உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே.

அப்துல்கலாம்


பொது அறிவு :


1. சூரிய மண்டலத்தின் மிக அடர்ந்த கோள் எது? 


பூமி 


2. பூமி தன் அச்சில் முழுமையாக சுற்ற எடுக்கும் நேரம் எவ்வளவு? 


23 மணி நேரம் 56 நிமிடங்கள் 4 வினாடிகள்


English words & meanings :


Fill me in - give me more details, இன்னும் அதிக விவரம் தேவை, 


I am all ears - listening to you, நீ சொல்வதை கவனித்து கேட்கிறேன்


ஆரோக்ய வாழ்வு :

விட்டமின் K. இது காயங்கள் ஆற்றி இரத்தம் உறைய வைக்கும். இது கீரை, காலி பிளவர், காரட், தக்காளி, பச்சை தேயிலையில் இருந்து நமக்கு கிடைக்கும்.


கணினி யுகம் :


Windows Logo+R (Open the Run dialog box)


Windows Logo+U (Open Utility Manager)



குறள் :

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 

நன்மை கடலின் பெரிது. 


விளக்கம் :

என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது. 


நீதிக்கதை


உதவியின் சிறப்பு

கதை :

ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது. 


அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது. 


சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். 


ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது. 


அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது. 


முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான். 


இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர். 


சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான். 


இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான். 


நீதி :

ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.


இன்றைய செய்திகள்


22.11.21


◆தமிழக அரசுடன் இணைந்து இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ)நடத்தும், தகவல் தொடர்புத் துறை குறித்த ‘கனெக்ட் 2021’ சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியை வரும் நவம்பர் 26-ம் தேதி தொடங்க உள்ளது.


◆தேசிய அளவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் இந்த ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு 43-வது இடம் கிடைத்துள்ளது. 


◆தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் மீண்டும் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


◆கரோனா அறிகுறி உள்ளவர்களை குணப்படுத்த உதவும் ஆயுஷ்-64 மாத்திரை தயாரிப்புக்கான தொழில்நுட்பத்தை 46 நிறுவனங்களுக்கு அளிக்க மத்திய ஆயுஷ்அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.


◆உலகின் முதல் மின்சார தானியங்கி கார்கோ கப்பல்: நார்வேயின் யாரா இன்டர்நேஷனல் அறிமுகம்.


◆உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு ரஷியாவின் டேனில் மெட்விடேவ் தகுதி பெற்றுள்ளார்.


◆ப்ரீமியர் லீக் கால்பந்து: லிவர்பூல் அணி வெற்றி.



Today's Headlines


 * Co joined with Tamil Nadu the Confederation of Indian Industry (CII) conduct an international conference.

 "Connect 2021" in regards to the communication Department on November 26.


* On National Level Clean City Forum Chennai listed 43.


* On the coming days there is a chance of more rains says Chennai Metrological Department.


* To cure the Corona symptom patients Central Ayush Ministry approved to give the technology of Ayush 64 medicines to 46 organizations.


* First electric autonomous cargo ship launched in Norway by Yara International Company


* For the World Championship in Tennis Finals Danil Medvedev of Russia is qualified.


* In Football Premier League Liverpool team won the game

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attention Sabarimala Devotees - Devasam Board Notice

  சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...