கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நகர்புற உள்ளாட்சி தேர்தல் (Urban Local Body Election) நடைபெறும் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் TN EMIS School Attendance Appல் இன்று பதிவு செய்யும் முறை...



தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

EMIS ATTENDANCE APP ல்

பள்ளி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளதால் விடுமுறை விடப்படும் பள்ளிகளுக்கு

Today status 

Fully not working என்று தேர்வு செய்து

Reason: Election

என பதிவிடவும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் (Urban Local Body Election 2022)- வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான வழிகாட்டுதல் தகவல்...

 


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வழிகாட்டுதல் தகவல் 


  நடைபெறவுள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சி மற்றும் மாநகராட்சி  தேர்தலில் தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர் பெருமக்கள் தங்கள் பணியினை செம்மையுற செய்வதற்கும் மிக எளிமையான முறையில் இந்த தேர்தல் பணியினை அணுகுவதற்கும் ஒரு வழிகாட்டுதல் நிகழ்வு 


 தேவைப்படும் ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். 


🏵️ *PART -I* 🏵️


 *தேர்தலுக்கு முதல் நாள்


❇️ காலை 10 மணிக்குள் நீங்கள் பயிற்சி பெற்ற மையத்திற்கு சென்று விடுங்கள்.


❎ உங்கள் ஆணையினை பெற்றுக் கொண்டவுடன் உடன் பணிபுரிபவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள்.


✳️பின்னர் மதியம் 12 மணிக்குள் உங்கள் வாக்குச் சாவடியை அடைந்து விடுங்கள்.


❇️ வாக்குச் சாவடியை அடைந்தவுடன் உங்கள் வாக்குச்சாவடி எண் மற்றும் வாக்குச்சாவடி  பெயர் முதலியவை உங்களுக்கு உரியதுதானா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.


✅ தேவையான தளவாட வசதி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். போதுமான டேபிள் மேசை பணியாளர்களுக்கான நாற்காலிகள் ஏஜெண்டுகள் அமர்வதற்கான நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்தும் போதுமான அளவில் உள்ளனவா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.


இல்லாவிடில் அங்கு உள்ள பணியாளரிடம் சொல்லி  தேவையானவற்றை பெற்றுக் கொள்ளுங்கள்.


🛑 குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா?


🛑 கழிப்பறை வசதி சரியாக உள்ளதா?


🛑 மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானோர் வந்து செல்ல சாய்வு நடைபாதை (Ramp) வசதி உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.



⚛️ பின்னர் வாக்குச் சாவடியை சுற்றிலும் 200 மீட்டர் கோடு வரையப்பட்டுள்ளதா? 100 மீட்டர் கோடு வரைய பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.


 ⭕மேலும் வாக்குச் சாவடிக்குள் எந்தவிதமான தலைவர் படங்களோ மற்றும் பிற படங்களோ (குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் என்பதால் பந்து போன்ற சின்னங்கள் தரப்பட்டிருக்கலாம். எனவே எந்த விதமான படங்களும் இல்லாதவாறு மறைக்கப்பட்டுள்ளதா? என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். இல்லாவிடில் வெள்ளைத்தாள் மூலம் செல்லோடேப் மூலம் அவற்றை மறைத்து விடுங்கள்.


( தயவுசெய்து பசை எதுவும் பூசி அங்கு வரையப்பட்ட படங்களை நீங்கள் சேதப்படுத்தி விட வேண்டாம்) அவற்றை மறைக்கும் விதத்தில் செல்லோடேப் ஒட்டிக் கொள்ளுங்கள்.


🛑 அதேபோல் மின்விளக்கு வசதி உள்ளதா? என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.


🛑 மைதானத்தில் நிழலுக்கு சாமியானா பந்தல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.


🛑 அதேபோல் வாக்குச்சாவடியில் பணிபுரியக்கூடிய பணியாளர் எவரேனும் வரவில்லை எனில் உடனடியாக உங்கள் Zonal அலுவலருக்கு தகவல் தெரிவித்து அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் செய்து கொள்ளுங்கள்.


*தேர்தல் பொருள்களை பெறுதல்


🛑 உங்கள் வாக்குச்சாவடிக்கு Zonal ஆபீசடமிருந்து பொருட்கள் வந்தடையும். அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொண்ட பொருள்களை உங்களுக்கு தரப்பட்டிருக்கும் செக்லிஸ்ட் வைத்து அவற்றை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.


ஏதேனும் பொருட்கள் விடுபட்டிருந்தால் அல்லது படிவங்கள் விடுபட்டு இருந்தால் அவற்றை குறித்து வைத்துக் கொண்டு அடுத்த முறை மீண்டும் Zonal ஆபீசர்ஸ் வரும்போது அவர்களிடம் மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.


🛑 முக்கியமாக *மெட்டல் சீல்* Distinguish சீல் ஆகியவற்றை தனியே எடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.


*தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் செய்தல்*


உங்களுக்கு தரப்பட்ட படிவம்,

உறைகள் ஆகியவற்றில் வாக்குச்சாவடி எண் வாக்குச்சாவடி பெயர், தேர்தல் நாள் முதலான பொது விவரங்களை முன்கூட்டியே எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.


அதேபோல் நீலநிற பேப்பர் சீலில் இருக்கக்கூடிய எண்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.



Special Tag ல் தரப்பட்டுள்ள எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.


மேலும் காலையில் Mock poll நடத்துவதற்கு தேவையான மெழுகுவர்த்தி, அரக்கு, நூல், தீப்பெட்டி, பிளேடு, Special Tag, Address Tag முதலானவற்றை தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.



இவை அனைத்தையும் முதல் நாள் மாலைக்குள் நீங்கள் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.



🛑அடுத்தபடியாக படிவங்கள் மற்றும் உறைகள் மற்றும் பெரிய உறைகள் என தரப்பட்டிருக்கும்.


அவற்றை அந்தந்த படிவங்கள் வாரியாக அந்த சின்ன உறைகளில் போட்டு அவற்றை பெரிய உறைகளுக்குள் வைத்து விடுங்கள்.


இவ்வாறு வைக்கப்பட்ட அனைத்து படிவங்கள் மற்றும் உறைகளையும்  ஒவ்வொன்றாக எடுத்து அவற்றின் உறையின் மேல் பகுதியில் தேர்தல் நாள்  வாக்குச்சாவடி எண், வாக்குச்சாவடி பெயர் முதலான பொதுவான அனைத்து விவரத்தையும் நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.

 


 *பரிசோதித்தல்*


உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள Control unit , Ballot Unit ஆகியவற்றை இணைத்து அவை நல்ல நிலையில் உள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.


அவற்றில் ஏதேனும் பழுது இருப்பின் உடனடியாக உங்களுடைய Zonal அலுவலரிடம் தகவல் சொல்லி அதனை சரி செய்யவோ அல்லது வேறு கருவியை மாற்றித்தரும் படி  அவர்களிடம் கோரி மாலைக்குள்ளாகவே செய்து கொள்வது காலைநேர நம்முடைய பதட்டத்தினை குறைக்கும்.



இவற்றை செய்து முடித்த பிறகு *வாக்காளர்களுக்கான தகவல் போஸ்டர்கள் ஒட்டுதல், வாக்குச்சாவடி குறித்த அறிவிப்பு போஸ்டர் ஒட்டுதல், வேட்பாளர் பட்டியல், உள்ளே வெளியே* முதலான அறிவிப்புகளை ஒட்டுதல் முதலான அனைத்தையும் ஒட்டி வைத்துக்கொள்ளலாம்.



முடிந்தவரை பள்ளிகளில் அழகழகாக வண்ணங்கள் மற்றும் சித்திரங்கள் வரையப்பட்டிருப்பின் தயவு செய்து அவற்றின் மீது பசையை போட்டு ஒட்டாமல் செல்லோ டேப் மூலம் மிக எளிமையாக உறித்து எடுக்கக்கூடிய வகையில் தயவு செய்து ஒட்டவும்.


🛑 அதேபோல் படிவங்கள் மற்றும் உறைகளில் பொதுவான விவரங்களை எழுதி நீங்கள் நிரப்பி வைத்துக் கொள்ளலாம்.


கவர்கள், படிவங்கள் ஆகியவற்றில் உள்ள தகவல்களையும் மறக்காமல் நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.


அதேபோல் வாக்காளர்களுக்கு தரக்கூடிய சிலிப்களை அவற்றின் வரிசை எண் முதலானவை எழுதி 50 - 50 ஆக ரப்பர் பேண்ட் போட்டு கட்டி வைத்துக் கொள்ளலாம்.


🛑இந்த அனைத்து முன்னேற்பாடுகளையும் நீங்கள் செய்துவிட்டு இரவு 10 மணிக்குள் உறங்கச் செல்லலாம்.



🛑மேலும் முதல் நாள் இரவே ஏஜெண்டுகளின் போன் நம்பரை தவறாமல் பெற்றுக் கொள்ளுங்கள்.


அல்லது ஏஜெண்டுகள் வாக்குச்சாவடிக்கு முதல் நாள் வருவார்களேயானால்  என்னென்ன பொருட்களை கொண்டுவர வேண்டும்.

அவர்கள் கொண்டு வரவேண்டிய படிவம் முதலானவற்றை தெரிவித்து விடுங்கள்.


🛑அதேபோல் அந்த வாக்குச்சாவடிக்கு உரிய வாக்காளர் பட்டியல் பெயர் உள்ளவர் மட்டும்தான் அந்த வாக்குச் சாவடிக்குள் ஏஜென்டாக இருக்கமுடியும் என்ற தகவல் தெரிவித்து விடுங்கள்.


🛑காலை  5:30 லிருந்து 6 மணிக்குள் கட்டாயம் வந்து விட அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குங்கள்.


🛑அதேபோல் முடிந்த வரை இரவு நேரத்திலேயே வாக்குச்சாவடி அமைப்பை அதாவது மாதிரி வாக்கு பதிவுக்கான அந்த அறையை நீங்கள் அமைத்து வைத்துக் கொள்வது நல்லது.


நன்றி

இன்று (18.2.2022) மதியம் 12.30மணிக்கு TNPSC CCSE -II (GROUP II & II A) தேர்வு அறிவிப்பு வெளியாகிறது...

 இன்று (18.2.2022) மதியம் 12.30மணிக்கு CCSE-II (GROUP II & II A) தேர்வு அறிவிப்பு வெளியாகிறது...




ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 2022-22ஆம் ஆண்டில் 6-18வயதுடைய பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் (மாற்றுத் திறன் மற்றும் இடம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கணக்கெடுப்பு - கண்டறியப்பட்ட குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம், நாள்: 17-02-2022 (Samagra Shiksha - Survey of Out-of-School / Dropout Children (Including Differently Abled and Children of Migrant Workers) aged 6-18 in the year 2022-22 - Re-enrollment of identified children - Letter from the State Project Director, Date: 17-02-2022)...



>>> ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 2022-22ஆம் ஆண்டில் 6-18வயதுடைய பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் (மாற்றுத் திறன் மற்றும் இடம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கணக்கெடுப்பு - கண்டறியப்பட்ட குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம், நாள்: 17-02-2022 (Samagra Shiksha - Survey of Out-of-School / Dropout Children (Including Differently Abled and Children of Migrant Workers) aged 6-18 in the year 2022-22 - Re-enrollment of identified children - Letter from the State Project Director, Date: 17-02-2022)...

நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 - தேவையான படிவங்கள் (மாதிரி) - (Urban Local Body Elections 2022 - Required Forms)...



>>> நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 - தேவையான படிவங்கள் (மாதிரி) - (Urban Local Body Elections 2022 - Required Forms)...


நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 - நடைமுறைகள் - வினா விடை வடிவில் (Urban Local Body Elections 2022 - Procedures - Questions & Answers)...



>>> நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 - நடைமுறைகள் - வினா விடை வடிவில் (Urban Local Body Elections 2022 - Procedures - Questions & Answers)...


இன்றைய (18-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

பிப்ரவரி 18, 2022



வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். கற்பனைத்திறனும், ரசனைகளும் வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். சமயோசிதமான செயல்பாடுகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். தோற்றப்பொலிவில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் தெளிவும், புலமையும் வெளிப்படும். கீர்த்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




அஸ்வினி : செல்வாக்கு அதிகரிக்கும்.


பரணி : பாராட்டுகள் கிடைக்கும்.


கிருத்திகை : தெளிவு பிறக்கும்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 18, 2022



நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழ்நிலைகள் அமையும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான சோர்வு உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். உற்சாகமான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.


ரோகிணி : சாதகமான நாள்.


மிருகசீரிஷம் : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 18, 2022



வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இசை சார்ந்த துறைகளில் புதிய நுணுக்கங்களை அறிவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


திருவாதிரை : மாற்றமான நாள்.


புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 18, 2022



தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். அடிப்படை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். எதிர்பார்த்த சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். இன்பமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்




புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.


பூசம் : நம்பிக்கை மேம்படும்.


ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 18, 2022



வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். சமூகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மகம் : முயற்சிகள் கைகூடும்.


பூரம் : ஆர்வம் அதிகரிக்கும்.


உத்திரம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 18, 2022



உறவினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். மனதளவில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




உத்திரம் : புரிதல் ஏற்படும்.


அஸ்தம் : தன்னம்பிக்கையான நாள்.


சித்திரை : நெருக்கடிகள் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 18, 2022



மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு பிறக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபார பணிகளில் தனவரவு மேம்படும். சமூகம் தொடர்பான பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப மேன்மை உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




சித்திரை : தெளிவு பிறக்கும்.


சுவாதி : வரவு மேம்படும்.


விசாகம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 18, 2022



இளைய உடன்பிறப்புகளின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். அரசு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்ப சுற்றுலா தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




விசாகம் : அனுசரித்து செல்லவும்.


அனுஷம் : எண்ணங்கள் மேம்படும்.


கேட்டை : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 18, 2022



ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூர பயணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதளவில் அதிகரிக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மூலம் : முயற்சிகள் கைகூடும்.


பூராடம் : குழப்பங்கள் குறையும்.


உத்திராடம் :  கவனம் வேண்டும்.

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 18, 2022



உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வும், காலதாமதமும் உண்டாகும். சிந்தனைகளின் போக்கில் குழப்பம் ஏற்படும். செய்கின்ற முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்




உத்திராடம் : சோர்வான நாள்.


திருவோணம் : குழப்பம் ஏற்படும்.


அவிட்டம் : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------





கும்பம்

பிப்ரவரி 18, 2022



சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவினரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் லாபம் மேம்படும். திருப்திகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




அவிட்டம் : நெருக்கம் அதிகரிக்கும்.


சதயம் : மகிழ்ச்சியான நாள்.


பூரட்டாதி : லாபம் மேம்படும்.

---------------------------------------





மீனம்

பிப்ரவரி 18, 2022



வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். குறுந்தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


ரேவதி : முயற்சிகள் அதிகரிக்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEE Proceedings to select and send 40 teachers from each block who have made the best contribution to the learning progress of the students through TNSED Manarkeni App

  ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் சிறந்த 40 ஆசிரியர்கள் தேர்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... மணற்கேணி செயலி மூலம் மாணவர்களின் ...