கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Eye Screening பதிவிடுவதற்கான TNEMIS Appன் முந்தைய Version 0.0.50 Download Link...



Eye Screening பதிவிடுவதற்கான TNEMIS Appன் முந்தைய Version 0.0.50 Download Link...


https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschools


Google Play Storeல் உள்ள மேற்கண்ட Link TNEMIS App ன் Version 0.0.52 ஆகும். இதில் "Eye Screening" Option நீக்கப்பட்டுள்ளது. 


TNEMIS Appன் முந்தைய Version 0.0.50ல் "Eye Screening" Option உள்ளது.


அதனை Download செய்வதற்கான Link:

>>> Click Here...


இந்த இணைப்பை தொட்டவுடன் அதனை Install செய்வதற்கு Install from unknown source என Permission கேட்கும். அதற்கு அனுமதி கொடுத்து Install செய்து கொள்ளலாம்.


இதில் ஆசிரியர்கள் தங்கள் தனிப்பட்ட User Name, Password கொடுத்து உள்ளே சென்றால் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கான கண் பார்வை குறித்த வினாக்களுக்குரிய விடைகளை பதிவு செய்து Save கொடுக்கலாம்.



👁️ தங்கள் வகுப்பு மாணவர்களின் eye screening விவரங்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்


1.ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு வருகை பதிவு செய்த old tn emis mobile app-யில் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுடைய user id & password பயன்படுத்தி login செய்யவும்.


2.login செய்தபின் eye screening என்ற option-ஐ click செய்யவும்.


3.நீங்கள் ஏற்கனவே உங்கள் பள்ளியின் emis portal-லில் எந்த வகுப்பிற்கு class teacher என assign செய்துள்ளீர்களோ அந்த வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் open ஆகும்.


4.ஒவ்வொரு மாணவனையும் click செய்து கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு ஆம்/இல்லை என பதிவு செய்து save செய்யவும்.


5. ஒருமுறை save செய்தபின் பிறகு திருத்தம் செய்ய இயலாது.


6.மேலும் முக்கிய குறிப்பு  old tn emis mobile app update செய்யாமல் இருந்தால் மட்டுமே இந்த eye screening option enable-ஆக இருக்கும்.


நீங்கள் old tn emis mobile app-ஐ தற்போது update செய்திருந்தால் அந்த option disable -ஆகி இருக்கும்.


7.உங்களது ஆசிரிய நண்பர்கள் யாராவது  update செய்யாமல் இருந்தால் அதில் உங்களது id -யை பயன்படுத்தி மாணவர்களின் கண் பரிசோதனை விவரங்களை பதிவு செய்துகொள்ளவும்.


அல்லது 


TNEMIS Appன் முந்தைய Version 0.0.50ல் "Eye Screening" Option உள்ளது.


அதனை Download செய்வதற்கான Link:

>>> Click Here...


இந்த இணைப்பை தொட்டவுடன் அதனை Install செய்வதற்கு Install from unknown source என Permission கேட்கும். அதற்கு அனுமதி கொடுத்து Install செய்து கொள்ளலாம்.


இதில் ஆசிரியர்கள் தங்கள் தனிப்பட்ட User Name, Password கொடுத்து உள்ளே சென்றால் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கான கண் பார்வை குறித்த வினாக்களுக்குரிய விடைகளை பதிவு செய்து Save கொடுக்கலாம்.


இன்றைய (04-03-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மார்ச் 04, 2022




கூட்டு வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்க இயலும். எதிர்பார்த்திருந்த சில உதவி கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



அஸ்வினி : நிதானம் வேண்டும்.


பரணி : தாமதமான நாள்.


கிருத்திகை : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------





ரிஷபம்

மார்ச் 04, 2022




குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகனப் பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும். கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும். 


ரோகிணி : புத்துணர்ச்சியான நாள். 


மிருகசீரிஷம் : மந்தத்தன்மை குறையும்.

---------------------------------------





மிதுனம்

மார்ச் 04, 2022




எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் செய்யும் சிறு சிறு மாற்றங்களின் மூலம் லாபம் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு மாற்றமான தீர்வு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


திருவாதிரை : லாபம் மேம்படும்.


புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





கடகம்

மார்ச் 04, 2022




செயல்பாடுகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். தனவரவை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். சோர்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



புனர்பூசம் : சிக்கல்கள் குறையும்.


பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


ஆயில்யம் : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------





சிம்மம்

மார்ச் 04, 2022




உத்தியோக பணிகளில் சூழ்நிலையை அறிந்து செயல்பட வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாழ்க்கை துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் மேம்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். கனிவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மகம் : சிந்தித்து செயல்படவும்.


பூரம் :  கவனம் வேண்டும்.


உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------





கன்னி

மார்ச் 04, 2022




உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தவறிய சில பொருட்களை பற்றிய தகவல் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டித்தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திரம் : புரிதல் மேம்படும்.


அஸ்தம் : விருப்பம் நிறைவேறும்.


சித்திரை : சாதகமான நாள்.

---------------------------------------





துலாம்

மார்ச் 04, 2022




எண்ணங்களில் தெளிவு பிறக்கும். உறவினர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : நம்பிக்கை பிறக்கும். 


சுவாதி : ஆதரவு  கிடைக்கும்.


விசாகம் : அனுபவம் மேம்படும்.

---------------------------------------





விருச்சிகம்

மார்ச் 04, 2022




புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். விவசாய பணிகளில் நுட்பமான ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் புதுவிதமான திட்டங்கள் அதிகரிக்கும். திருப்திகரமான நாள்.


  

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம்



விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும். 


அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும். 


கேட்டை : மாற்றம் உண்டாகும். 

---------------------------------------





தனுசு

மார்ச் 04, 2022




வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். தனவரவில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய தொழில் நுட்ப கருவிகளின் மீதான ஆர்வம் மேம்படும். வரவு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மூலம் : சிந்தித்து செயல்படவும்.


பூராடம் : பொறுப்புகள் மேம்படும்.


உத்திராடம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------





மகரம்

மார்ச் 04, 2022




அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.  வியாபார பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும்.  குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். லாபகரமான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



உத்திராடம் : ஆதரவு கிடைக்கும். 


திருவோணம் : புத்துணர்ச்சி பிறக்கும்.


அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

மார்ச் 04, 2022




மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதியவர்களின் அறிமுகத்தின் மூலம் சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  தெளிவு பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : மாற்றம் உண்டாகும். 


சதயம் : முடிவு கிடைக்கும்.


பூரட்டாதி : முதலீடுகள் மேம்படும்.

---------------------------------------





மீனம்

மார்ச் 04, 2022




மனதில் இனம் புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் மற்றவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்களின் குறைகளை மாறுபட்ட முறையில் சுட்டிக் காட்டுவது நல்லது. உத்தியோக பணிகளில் சில விவாதங்களின் மூலம் மனவருத்தங்கள் நேரிடலாம். எதிர்பாராத தனவரவு காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள். விழிப்புணர்வு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



பூரட்டாதி : குழப்பங்கள் நீங்கும்.


உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.


ரேவதி : தாமதம் உண்டாகும்.

---------------------------------------


மாறுதல் மற்றும் பதவி உயர்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களை அட்டவணையின்படி பணிவிடுவிப்பு செய்ய தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு (Dharmapuri Chief Educational Officer orders Relieving of teachers attending transfers and promotions as per schedule)...



>>> மாறுதல் மற்றும் பதவி உயர்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களை அட்டவணையின்படி பணிவிடுவிப்பு செய்ய தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு (Dharmapuri Chief Educational Officer orders Relieving of teachers attending transfers and promotions as per schedule)...

புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு அரசுக்கு வைகோ அவர்கள் வேண்டுகோள் (Vaiko appeals to the Government of Tamil Nadu to cancel the new pension scheme and re-implement the old pension scheme)...



>>> புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துக! தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்! 


தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் சீருடைப் பணியாளர்கள் முதலான அரசு பணியாளர்களுக்கு 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, இத்திட்டத்தில் சுமார் ஆறு இலட்சம் அரசு ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.



புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியம், பணிக்கொடை, மருத்துவக் காப்பீடு முதலான எந்தவிதப் பலன்களும் இல்லாததால், இதனை இரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நிறைவேற்ற வேண்டுமென 19 ஆண்டுகளாக, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகிறார்கள்.



இதனை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிற அரசு ஊழியர்கள், 25.03.2022 அன்று தமிழ்நாடு முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து, கையெழுத்துப் படிவங்களை வழங்கி, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கோரிக்கை வைக்க உள்ளார்கள்.


மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. கேரளா, ஆந்திரா, டில்லி ஆகிய அரசுகள் இது குறித்து வல்லுநர் குழுவின் பரிந்துரைகளைப் பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.



2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களின்போதும், 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் தி.மு.கழகம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளிலும் இந்த கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.



எனவே புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றாக இரத்து செய்துவிட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்குமாறு மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’

சென்னை - 8

03.03.2022

நகர்புற உள்ளாட்சி தேர்தல் - திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மேயர் - துணைமேயர், நகராட்சி & பேரூராட்சி தலைவர் & துணைத்தலைவர் பதவிகளுக்குப் போட்டியிடும் இடங்கள் (Urban Local Body Election - DMK Alliance Parties Candidates Contesting for the posts of Mayor - Deputy Mayor, Municipal & Town Panchayat President & Vice President)...



>>> நகர்புற உள்ளாட்சி தேர்தல் - திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மேயர் - துணைமேயர், நகராட்சி & பேரூராட்சி தலைவர் & துணைத்தலைவர் பதவிகளுக்குப்  போட்டியிடும் இடங்கள் (Urban Local Body Election - DMK Alliance Parties Candidates Contesting for the posts of Mayor - Deputy Mayor, Municipal & Town Panchayat President & Vice President)...

பள்ளிக்கல்வித்துறை - ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மீண்டும் நடைபெறுதல் - திருத்திய கால அட்டவணை - ஆணையரின் செயல்முறைகள் (School Education - Postponed Teacher Transfer Counselling - Revised Schedule - Commissioner's Proceedings) ந.க.எண்: 25154/ அ1/ இ2/ 2021, நாள்: 03-03-2022...



>>> பள்ளிக்கல்வித்துறை - ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மீண்டும் நடைபெறுதல் - திருத்திய கால அட்டவணை - ஆணையரின் செயல்முறைகள் (School Education - Postponed Teacher Transfer Counselling - Revised Schedule - Commissioner's Proceedings) ந.க.எண்: 25154/ அ1/ இ2/ 2021, நாள்: 03-03-2022...

நகர்புற உள்ளாட்சி தேர்தல் - தி.மு.க. சார்பில் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுவோர் - மாவட்ட வாரியான பட்டியல் (Urban Local Body Election - Town Panchayat Chairman Candidates on behalf of DMK)...

 


>>> நகர்புற உள்ளாட்சி தேர்தல் - தி.மு.க. சார்பில் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுவோர் - மாவட்ட வாரியான பட்டியல் (Urban Local Body Election - Town Panchayat Chairman Candidates on behalf of DMK)...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...