கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1முதல் 5ஆம் வகுப்பு - முதல் பருவம் - பாடத்திட்டம் - தமிழ் வழி ( I - V Standard - Term 1 - Syllabus - Tamil Medium)...



>>> 1முதல் 5ஆம் வகுப்பு - முதல் பருவம் - பாடத்திட்டம் - தமிழ் வழி ( I - V Standard - Term 1 - Syllabus - Tamil Medium)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இன்றைய (08-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

  



மேஷம்

ஜூன் 08, 2022



வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் மாற்றம் உண்டாகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். குழந்தைகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




அஸ்வினி : மாற்றமான நாள்.


பரணி : திறமைகள் வெளிப்படும்.


கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 08, 2022



உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். நண்பர்களின் ஆலோசனைகளின் மூலம் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




கிருத்திகை : கவனம் வேண்டும்.


ரோகிணி : நுணுக்கங்களை அறிவீர்கள்.


மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------





மிதுனம்

ஜூன் 08, 2022



ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் மந்தத்தன்மையால் காலதாமதம் உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மிருகசீரிஷம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.


திருவாதிரை : தெளிவு கிடைக்கும்.


புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------





கடகம்

ஜூன் 08, 2022



தொழிலில் புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். கீர்த்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.


பூசம் : பிரச்சனைகள் குறையும்.


ஆயில்யம் : வரவு மேம்படும்.

---------------------------------------






சிம்மம்

ஜூன் 08, 2022



தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து வியாபாரத்தின் போக்கினை மாற்றி அமைப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மகம் : சேமிப்பு அதிகரிக்கும்.


பூரம் : ஆதரவான நாள்.


உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------





கன்னி

ஜூன் 08, 2022



உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். அலைச்சல்களால் சோர்வு அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். மனதில் ஆடம்பர எண்ணங்கள் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.


அஸ்தம் : இழுபறிகள் குறையும்.


சித்திரை : எண்ணங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------





துலாம்

ஜூன் 08, 2022



உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். விலகி சென்றவர்களை பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்தத்தன்மையை ஏற்படுத்தும். புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புகழ் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.


சுவாதி : மந்தமான நாள்.


விசாகம் : விருப்பம் நிறைவேறும்.

---------------------------------------






விருச்சிகம்

ஜூன் 08, 2022



மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




விசாகம் : புத்துணர்ச்சியான நாள்.


அனுஷம் : இன்னல்கள் குறையும்.


கேட்டை : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





தனுசு

ஜூன் 08, 2022



தந்தைவழி சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




மூலம் : ஆதாயம் உண்டாகும்.


பூராடம் : வாய்ப்புகள் அமையும்.


உத்திராடம் : புதுமையான நாள்.

---------------------------------------





மகரம்

ஜூன் 08, 2022



தொழிற்கல்வி சார்ந்த பணிகளில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்களும், அதற்குண்டான உதவிகளும் கிடைக்கும். காப்பீடு தொடர்பான தனவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வெளிவட்டாரங்களில் உங்கள் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பரிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திராடம் : உதவி கிடைக்கும்.


திருவோணம் : வாய்ப்புகள் அமையும்.


அவிட்டம் : மதிப்பு அதிகரிக்கும்.

---------------------------------------





கும்பம்

ஜூன் 08, 2022



உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதிலிருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். விவேகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும்.


சதயம் : ஆலோசனைகள் வேண்டும்.


பூரட்டாதி : கவனத்துடன் செயல்படவும்.

---------------------------------------





மீனம்

ஜூன் 08, 2022



எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைந்து புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். வாழ்க்கை துணைவரின் உறவினர்களின் மூலம் நன்மை உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




பூரட்டாதி : வரவு கிடைக்கும்.


உத்திரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.


ரேவதி : நன்மை உண்டாகும்.

---------------------------------------


பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்களுக்கு நல்லொழுக்க வகுப்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் (For the first 5 days after the opening of schools, Moral Instruction Classes will be taught - Minister of School Education)...

 பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்களுக்கு நல்லொழுக்க வகுப்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் (For the first 5 days after the opening of schools, Moral Instruction Classes will be taught - Minister of School Education)...




EMISல் TC Generate செய்யும்பொழுது கவனிக்கவேண்டியவை - எழும் ஐயங்களும் அவற்றிற்கான தீர்வுகளும் (Things to look out for when generating TC in EMIS - Doubts that arise and solutions to them)...



>>> EMISல் TC Generate செய்யும்பொழுது கவனிக்கவேண்டியவை - எழும் ஐயங்களும் அவற்றிற்கான தீர்வுகளும் (Things to look out for when generating TC in EMIS - Doubts that arise and solutions to them)...



EMIS TC FAQs:


1.பள்ளியின் உயர் வகுப்பு ( Terminal class ) க்கு மட்டுமே முதலில்  TC தயார் செய்ய வேண்டுமா? 


ஆம்,  அதன் பிறகே கீழ் வகுப்புகளுக்கு கேட்பவர்களுக்கு TC வழங்கலாம்.


2. Promotion செய்யும் பணியும் தற்போது உண்டா  ? 


இல்லை, தகவல் பின்னர் தெரிவிக்கப்படும்.


3. மேல்நிலை பள்ளிகளில் 10 & 12 இரண்டு வகுப்பு  மாணவர்களையும் இறுதி வகுப்பாக கருதி Common Pool அனுப்பி TC generate செய்ய வேண்டுமா? 


ஆம். கட்டாயம் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு TC GENERATE செய்ய வேண்டும்.





2013ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர் தேர்வு வாரியம் & வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப் பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க முடிவு என தகவல் (Decision to exempt Teachers from writing the TET Exam recruited by the Teacher Recruitment Board & Employment Office before 2013)...

 2013ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர் தேர்வு வாரியம் & வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப் பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க முடிவு  என தகவல் (Decision to exempt Teachers from writing the TET Exam recruited by the Teacher Recruitment Board & Employment Office before 2013)...



பள்ளிகளில் பணி நியமனம் பெறும் ஆசிரியர்கள் கட்டாயம் TET தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற நிபந்தனை கடந்த 23/8/2010 முதல் அமலாக்கம் செய்யப்பட்டது.


ஆனால் தமிழகத்தில் இது சற்றே தாமதமாக அரசாணை எண் 181 மூலம் நடைமுறைப் படுத்தப்பட்டது. 


இந்த சட்ட நடைமுறையில் ஆசிரியர்கள் பணி நிரப்புதல் தொடர்பாகவும், நிரந்தர பணியிடங்களில் பணி நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் என்ற பள்ளிக்கல்வி இயக்கக செயல்முறைகள் 16/11/2012 அன்று தான் வெளிவந்தது என்பதாலும், இந்த தேதிக்கு முந்தைய காலகட்டத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, பல்வேறு வழிகளில் தமிழக அரசிடமிருந்து TET லிருந்து விலக்கு வேண்டி கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில், விலக்கு தருவதில் பல்வேறு குழப்பங்களும் இருந்து வந்தன. அதை தீர்க்கும் விதமாகவும், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களைப் பாதுகாக்கும் விதமாகவும், பத்தாண்டுகளுக்கு மேல் கல்வி கற்றல் கற்பித்தலில் உள்ளதையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைவில் அரசாணை வெளியிடும் எனவும் பள்ளிக்கல்வி துறை ஆணையகம் வழியாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 


நிரந்தரமாக பணியிடத்தில் பணி நியமனம் பெற்று இன்று வரை TET லிருந்து விலக்கு தொடர்பான தெளிவான அரசாணை இல்லாமல் தமிழக அரசிடமிருந்து ஒரு நல்ல விடியல் வரும் என காத்துக் கொண்டு இருப்பவர்கள்: 



1) 23/8/2010 க்கு பிறகு (TRB / வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில்) நிரந்தர பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்




2) 23/8/2010 க்கு பிறகு அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறுபான்மை / சிறுபான்மையற்ற பள்ளிகளில் நிரந்தர பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள். 




3) ஆசிரியர் அல்லாத அரசு பணியிடங்களில் பணி நியமனம் பெற்று, 23/08/2010 க்குப் பிறகு பதவி உயர்வு மூலமாக இடைநிலை (TET PAPER 1) / பட்டதாரி (TET PAPER 2) ஆசிரியர்களாக பணியில் தொடருபவர்கள். 




4) சத்துணவுத் துறையில் அரசு பணியிடங்களில் பணி நியமனம் பெற்று, 23/08/2010 க்குப் பிறகு பதவி உயர்வு மூலமாக இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் தொடருபவர்கள். 



5) 23/8/2010 க்கு பிறகு அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறுபான்மை / சிறுபான்மையற்ற பள்ளிகளில் நிரந்தர பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் ஒரு சிலர் தற்போது நீதிமன்ற வழிகாட்டல் அடிப்படையில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக / தலைமை ஆசிரியர்களாக பணி புரிந்து வருபவர்கள். 



தற்போதைக்கு TET விலக்கு தொடர்பான பெரும்பாலான வழக்குகள் நிறைவுற்று இருப்பதால், பெரும்பாலான ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கு மேல் பணி புரிந்த அனுபவசாலிகள் என்பதாலும், 50 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என்பதாலும், ஏற்கனவே ஊதியம் பெற்று வருவதால் அரசிற்கு புதிய செலவினங்கள் ஏதுமில்லை என்பதாலும், TET க்கு நிகரான புத்தாக்கப் பயிற்சி ஒன்றைத் தந்து விரைவில் TET பாதிப்பிலிருந்து விடுபட வழிவகை செய்யப்படும் எனவும் கல்வித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல் - அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு (LKG and UKG classes Closed in Government Schools - School Education Department Announcement that the kindergarten classes conducted in the Anganwadis will be regularized and improved)...

 அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல் - பள்ளிக்கல்வித்துறை...


அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என அறிவிப்பு.





நடப்பாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


மீண்டும் சமூக நலத்துறை வசம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



கடந்த 2018ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள 2381 அரசு பள்ளிகளில் எல்கேஜி , யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்ட எல்கேஜி , யூகேஜி வகுப்புகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் மூடப்பட்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுகிறது. எல்கேஜி யுகேஜி வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் மூடுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.


இதற்கு மாற்றாக மீண்டும் சமூக நலத்துறை வசம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


1 முதல் 5 வகுப்பு வரை போதிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 4500 பேர் காலிப்பணியிடம் உள்ளது என்றும், 


தொடக்க கல்வி துறையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில் ஆசிரியர்களை ஒன்றாம் வகுப்பு முதல் பாடம் கற்பிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அங்கன்வாடிகளில் குழந்தைகள் வழக்கம் போல் சென்று படிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினத்தந்தி




எண்ணும் எழுத்தும் - ஆசிரியர் கையேடு - கணக்கு - முதல் பருவம் (Ennum Ezhuthum - Teacher's Handbook - Mathematics - Term 1)...



>>> எண்ணும் எழுத்தும் -  ஆசிரியர் கையேடு - கணக்கு - முதல் பருவம் (Ennum Ezhuthum - Teacher's Handbook - Mathematics - Term 1)...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.

புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30)  வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த  ...