கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.06.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.06.2022 - School Morning Prayer Activities...

 திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:நட்பியல்


அதிகாரம்: மருந்து


குறள் : 946


இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய்.


பொருள்:

அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை


பழமொழி :

Make no fire, raise no smoke.

நெருப்பின்றி புகையாது


இரண்டொழுக்க பண்புகள் :


1. புதிய வருடத்தில் நான் கற்றுக் கொள்ள அநேக காரியங்கள் உண்டு. என் முழு கவனமும் அவற்றை கற்றுக் கொள்வதில் மட்டுமே வைத்து கொள்வேன்.


2. தேவையில்லாமல் பள்ளிக்கு விடுப்பு எடுக்க மாட்டேன்.


பொன்மொழி :


வெற்றிக்கு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது! நாம்தான் நடந்து நடந்து பாதை போடவேண்டும் - டிஸ்ரேலி


பொது அறிவு :


1. கண் விழித்தே தூங்கும் உயிரினம் எது?


 டால்பின். 


2. தலையை வெட்டினாலும் 9 நாட்கள் உயிர் வாழும் உயிர் எது? 


கரப்பான் பூச்சி.


English words & meanings :


Canoe -a light, narrow boat. Noun. ஓடம், மிதவை, சிறிய படகு. பெயர் சொல்



ஆரோக்ய வாழ்வு :


திரிபலா சூரணம் ஒரு இயற்கையான மலமிளக்கி ஆகும். இது நாள்பட்ட மலச்சிக்கலை போக்க உதவுகிறது. மற்ற மலமிளக்கியை போல் அல்லாமல் திரிபலா ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.  உங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.பொதுவாக, இது அனைவராலும் பயன்படுத்தப்படும் பொருளாக இருக்கிறது. சாதாரண வாய்ப்புண்ணிலிருந்து, வயிற்றுப்புண், குடல்புண் போன்ற பல பிரச்னைகளுக்கும் இது பயனுள்ளதாக இருக்கிறது. மேலும், இந்தக் காலத்தில் இதை சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி ஆகியவை வராமல் தடுக்க ஆரோக்கியமானவர்களும் இதைத் தினமும் எடுத்துக்கொள்ளலாம். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இந்த மூன்றிலும் உடம்புக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து இருப்பதால் அனைவரும் பயன்படுத்தலாம்.


NMMS  SCIENCE - Q 3


விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி: 


21,28,33, ? , 37. 


விடை: 36




ஜூன் 15


உலகக் காற்று நாள் (World Wind Day) 


உலகக் காற்று நாள் (World Wind Day) ஆண்டுதோறும் சூன் 15 ஆம் நாள் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது.[1] இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.




நீதிக்கதை


துளையிட்ட காசு


அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். 


ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன் என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான். 


அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. எல்லாம் காசு கிடைத்த நேரம் என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசைத் தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். 


சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போல் உள்ளது என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!


அந்தக் காசில் துளையே இல்லை. என்ன ஆயிற்று? என்று குழப்பத்துடன் பார்த்தான். 


அவன் மனைவி சொன்னாள், என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன் என்றாள். 


இது எப்போது நடந்தது? என்று கேட்டான். 


அந்தக் காசு கிடைத்த மறுநாளே என்றாள். 


அவன் அமைதியாக சிந்தித்தான். உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான் என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்... !



இன்றைய செய்திகள்


15.06.22


★"பள்ளிகளில் செல்போனுக்கு எந்தக் காலத்திலும் அனுமதி கிடையாது. ஒருவேளை அதைமீறி யாராவது செல்போன் கொண்டுவந்தால், பறிமுதல் செய்யப்படும். அந்த செல்போன் திருப்பித்தரப்பட மாட்டாது" என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.


★வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு.


★டாடா நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: தொழில்நுட்ப மையங்களாக மாறும் தொழிற்பயிற்சி நிலையங்கள்.


★ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி: அறிமுகமாகிறது ஷார்ட் சர்வீஸ் ரூட்; விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு.


★குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துங்கள் - மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் மாண்டவியா அறிவுறுத்தல்.


★இலங்கையில் மீண்டும் நெருக்கடி: இனி ரேஷன் முறையில் பெட்ரோல்- டீசல்: அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை.


★சூடானில் இரண்டு இனக்குழுக்களிடையே நடந்த மோதலில் 100-க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


★சர்வதேச பாரா நீளம் தாண்டுதல் போட்டியில் உலக சாதனை படைத்த ஜெர்மனி வீரர்.


★உலக இளையோர் பளுதூக்குதல்: இந்திய வீரர் குருநாயுடு சனாபதி தங்கம் வென்று சாதனை.


★ஏ.டி.பி டென்னிஸ் தரவரிசை : நோவக் ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளி மெத்வதேவ் முதலிடம்.



Today's Headlines


★ "Cell phones will never be allowed in schools. If anyone brings a cell phone, it will be confiscated. The cell phone will not be returned," said School Education Minister Anil Magesh.


 ★ Weather forecast: Heavy rain is likely to fall in 16 districts of Tamil Nadu today.


 ★ Government of Tamil Nadu made a treaty with Tata: Vocational Training Centers are to become Technology Centers.


 ★ 4 years of service in the Army: Introducing the Short Service Route;  Official announcement soon.


 ★ Vaccinate children - Union Minister Mandavia's advices states.


 ★ Crisis again in Sri Lanka:  petrol-diesel on ration basis only: 3 days leave for government employees.


 ★ The United Nations says more than 100 people have been killed in clashes between two ethnic groups in Sudan.


 ★ German world record holder in the international para long jump.


 ★ World Youth Weightlifting: Indian athlete Gurunayadu Sanapathy wins gold.


 ★ ATP Tennis Rankings: Medvedev tops by pushing down Novak Djokovic




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

இன்றைய (15-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 15, 2022



வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். நிர்வாகம் தொடர்பான உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சில நுட்பமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அஸ்வினி : ஒத்துழைப்பு மேம்படும்.


பரணி : அறிமுகம் கிடைக்கும்.


கிருத்திகை : தேடல் அதிகரிக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 15, 2022



பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் உண்டாகும். உறவினர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மறதி தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : நெருக்கடியான நாள்.


ரோகிணி : சிந்தித்து செயல்படவும்.


மிருகசீரிஷம் : பிரச்சனைகள் நீங்கும்.

---------------------------------------





மிதுனம்

ஜூன் 15, 2022



மனதில் எண்ணிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திறமைக்கு உண்டான புதிய வாய்ப்புகள் ஏற்படும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.


புனர்பூசம் : மேன்மையான நாள்.

---------------------------------------





கடகம்

ஜூன் 15, 2022



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த கடனுதவிகள் சாதகமாக அமையும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


பூசம் : சிந்தனைகள் மேம்படும்.


ஆயில்யம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------





சிம்மம்

ஜூன் 15, 2022



பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மை ஏற்படும். உறவினர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். வர்த்தக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். மறைமுகமான ஆதரவு நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்




மகம் : மேன்மையான நாள்.


பூரம் : மாற்றம் ஏற்படும்.


உத்திரம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





கன்னி

ஜூன் 15, 2022



உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றம் ஏற்படும். பயணங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மனை சார்ந்த விஷயங்களில் லாபம் அதிகரிக்கும். பாசம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திரம் : உதவி கிடைக்கும்.


அஸ்தம் : தன்னம்பிக்கை ஏற்படும்.


சித்திரை : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------





துலாம்

ஜூன் 15, 2022



எந்தவொரு பணியையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். வாகன பயணங்களில் பொறுமை வேண்டும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் எண்ணங்கள் ஈடேறும். முயற்சிகள் கைகூடும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




சித்திரை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்


சுவாதி : அனுசரித்து செல்லவும்.


விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------






விருச்சிகம்

ஜூன் 15, 2022



குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். விருத்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




விசாகம் : பயணங்கள் சாதகமாகும்.


அனுஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.


கேட்டை : மாற்றமான நாள்.

---------------------------------------





தனுசு

ஜூன் 15, 2022



இணையம் சார்ந்த துறைகளில் வரவு மேம்படும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடன்பிறந்தவர்களின் வழியில் தொழில் சார்ந்த ஆதாயம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பணிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




மூலம் : வரவு மேம்படும்.


பூராடம் : ஆதாயம் கிடைக்கும்.


உத்திராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------





மகரம்

ஜூன் 15, 2022



வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் மேம்படும். தந்தைவழி உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். காப்பீடு தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைவருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் இருக்கும் ரகசியங்களில் கவனம் வேண்டும். களிப்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




உத்திராடம் : முதலீடுகள் மேம்படும்.


திருவோணம் : முன்னேற்றமான நாள்.


அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

---------------------------------------





கும்பம்

ஜூன் 15, 2022



உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் முன்னேற்றத்தினை ஏற்படுத்தும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை உண்டாக்கும். பொருளாதாரம் தொடர்பான இன்னல்கள் குறையும். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




அவிட்டம் : ஒத்துழைப்பு மேம்படும்.


சதயம் : சாதகமான நாள்.


பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.

---------------------------------------





மீனம்

ஜூன் 15, 2022



கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட செயல்பாடுகளின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிந்தனைகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




பூரட்டாதி : கவனம் வேண்டும்.


உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.


ரேவதி : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------


ஆங்கில பேச்சு பயிற்சி - 16.06.2022 மற்றும் 17.06.2022 ஆகிய தேதிகளில் கருத்தாளர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி - 23.06.2022 & 24.06.2022 அன்று 6-9வகுப்பு ஆசிரியர்கள் மாவட்ட அளவிலான பயிற்சி - கருத்தாளர்கள் பட்டியல் - மாவட்ட அளவிலான மற்றும் வட்டார அளவிலான பயிற்சி கால அட்டவணை - SCERT இயக்குநரின் செயல்முறைகள் (Spoken English Programme - District level training for Block Resource Persons on 16.06.2022 and 17.06.2022 Block Level Training of RPs on 23.06.2022 and 24.06.2022 - List of RPs - Schedule for District Level & Block Level Training - Proceedings of SCERT Director)...



>>> ஆங்கில பேச்சு பயிற்சி - 16.06.2022 மற்றும் 17.06.2022 ஆகிய தேதிகளில் கருத்தாளர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி - 23.06.2022 & 24.06.2022 அன்று 6-9வகுப்பு ஆசிரியர்கள் மாவட்ட அளவிலான பயிற்சி - கருத்தாளர்கள் பட்டியல் - மாவட்ட அளவிலான மற்றும் வட்டார அளவிலான பயிற்சி கால அட்டவணை - SCERT இயக்குநரின் செயல்முறைகள் (Spoken English Programme - District level training for Block Resource Persons on 16.06.2022 and 17.06.2022 Block Level Training of RPs on 23.06.2022 and 24.06.2022 - List of RPs - Schedule for District Level & Block Level Training - Proceedings of SCERT Director)...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

ஒரே நாளில்‌ பணிநியமனம்‌, பணிவரன்‌ முறை செய்யப்பட்டவர்கள்‌ - மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாடு களைதல்‌ - முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில் மற்றும் அடிப்படை விதி (Senior - Junior Pay Rectification - CM Cell Reply & Rules 22- B - Appointments & Regularisation made on the same day - Senior Junior Pay Anamolies Rectification - Chief Minister's Special Cell Reply and Fundamental Rule)...



>>> ஒரே நாளில்‌ பணிநியமனம்‌, பணிவரன்‌ முறை செய்யப்பட்டவர்கள்‌ - மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாடு களைதல்‌ - முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில் மற்றும் அடிப்படை விதி (Senior - Junior Pay Rectification - CM Cell Reply & Rules 22- B - Appointments & Regularisation made on the same day - Senior Junior Pay Anamolies Rectification - Chief Minister's Special Cell Reply and Fundamental Rule)...


 கோரிக்கை

ஒத்த கல்வி தகுதியுடைய இருவரில்‌, மூதுரிமை பட்டியல்படி மூத்தவர்‌ முதலில்‌ பதவி உயர்வில்‌ செல்கிறார்‌. மூதுரிமை பட்டியல்படி இளையவர்‌ சில காலம்‌ கழித்து அதே பதவிக்கு பதவி உயர்வில்‌ செல்கிறார்‌. இருவரும்‌ கீழ்நிலைப்பதவியில்‌ ஒத்த ஊதிய விகிதம்‌ உடைய ஒத்த பதவியில்‌ பணியாற்றி வந்தனர்‌. இருவரும்‌ ஒத்த பதவி உயர்விற்கு சென்ற பின்பு இளையவர்‌ அதிக ஊதியம்‌ பெறுகிறார்‌. ஊதிய முரண்பாடு எழுகிறது. இருவரும்‌ ஒரே நாளில்‌ பணிநியமனம்‌ பணிவரன்‌ முறை செய்யப்பட்டவர்கள்‌ என்பதால்‌ மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாடு களைதல்‌ அடிப்படையில்‌ ஊதிய முரண்பாடு களைய இயலாது என தணிக்கை தடையில்‌ கூறப்பட்டுள்ளது.


1. தணிக்கைதடையில் கூறப்பட்டுள்ளபடி இருவரும்‌ ஒரே நாளில்‌ பணிநியமனம்‌, பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள்‌ என்பதால்‌ மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாடு களைதல்‌ அடிப்படையில்‌, ஊதிய முரண்பாடு களைய இயலாது என்பதற்கான அரசாணைகள்‌ செயல்முறைகள்‌, அரசு விதிமுறைகள்‌ இருப்பின்‌ அனுப்ப வேண்டுகிறேன்‌.


2 அரசாணைகள்‌. செயல்முறைகள், ‌அரசு விதிமுறைகளுக்கு முரணாக தவறான தணிக்கை தடை ஏற்படுத்தப்பட்டால்‌ எத்தனை நாட்களுக்குள்‌ தணிக்கை தடைநிவர்த்தி செய்ய வேண்டும்‌ என்ற விவரம்‌ தர வேண்டுகிறேன்‌. இதற்கான அரசாணைகள்‌, செயல்முறைகள்‌, அரசு விதிமுறைகள்‌ இருப்பின்‌ நகல்‌ தர வேண்டுகிறேன்‌




பதில்: 

வரிசை எண்‌-1 குறித்து பணியில்‌ மூத்தவர்‌ மற்றும்‌ இளையவருக்கிடையே ஊதிய முரண்பாடு களைவது குறித்து அடிப்படை விதி 22-Bன்‌ கீழுள்ள விதித்துளி 2ன்படி களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்‌ என்பதை தங்களுக்குத்‌ தெரிவித்துக்‌ கொள்வதோடு, மேற்சொன்ன விதியினை https://www.tn.gov.in/rules/dept/22 என்ற தமிழ்நாடு அரசின்‌ இணையதள முகவரியிலிருந்து இலவசமாக பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம் ‌என்பதையும்‌ தங்களுக்கு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.


வரிசை எண்‌: 2  குறித்து-- தணிக்கை தடை ஏற்படுத்தப்பட்டது குறித்து நிதித்‌ துறைக்கு. தனியாக விண்ணப்பித்து தங்களுக்கான பதிலை பெற்றுக்‌ கொள்ளும்படி கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.


கோ. எண்‌. 37097/ அ.வி.IV/ 2021, ம.வ.மே.(அ.வி. IV) துறை, நாள்‌ : 30-11-2021...


>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 2021-2022ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டுத்தாள் வலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம் (CPS Account Slips for the year 2021-22 has been hosted in the CPS portal except for the local body employees)...



பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 2021-2022ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டுத்தாள் வலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம் (CPS Account Slips for the year 2021-22 has been hosted in the CPS portal except for the local body employees)...


வலைதள முகவரி:

http://cps.tn.gov.in/public/index.php



>>> 2021-2022ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தரவிறக்கம் செய்யும் வழிமுறை...


இன்றைய (14-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஜூன் 14, 2022



எதிர்பார்த்த சில பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகாளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




அஸ்வினி : காலதாமதம் உண்டாகும்.


பரணி : சிந்தித்துச் செயல்படவும்.


கிருத்திகை : கவனம் வேண்டும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 14, 2022



சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். நுணுக்கமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




கிருத்திகை : புரிதல் உண்டாகும்.


ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


மிருகசீரிஷம் : விருப்பம் ஈடேறும்.

---------------------------------------





மிதுனம்

ஜூன் 14, 2022



பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படுவீர்கள். நெருக்கமானவர்களிடம் உங்களின் மீதான கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். கவலைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




மிருகசீரிஷம் : ஆசைகள் நிறைவேறும்.


திருவாதிரை : கவனத்துடன் செயல்படவும்.


புனர்பூசம் : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------





கடகம்

ஜூன் 14, 2022



வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும். மகிழ்ச்சியான செய்திகளின் மூலம் சேமிப்பு குறையும். இனம்புரியாத சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் இருக்கக்கூடிய மறைமுக போட்டிகளை அறிந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




புனர்பூசம் : பயணங்கள் கைகூடும்.


பூசம் : சேமிப்பு குறையும்.


ஆயில்யம் : போட்டிகளை அறிவீர்கள்.

---------------------------------------






சிம்மம்

ஜூன் 14, 2022



குடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மகம் : அனுகூலம் உண்டாகும்.


பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.


உத்திரம் : ஏற்ற, இறக்கமான நாள்.

---------------------------------------





கன்னி

ஜூன் 14, 2022



எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். வியாபாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




உத்திரம் : மனப்பக்குவம் உண்டாகும்.


அஸ்தம் : நிதானம் வேண்டும்.


சித்திரை : உதவி கிடைக்கும்.

---------------------------------------






துலாம்

ஜூன் 14, 2022



புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத உதவியின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சமூக பணிகளில் புதிய வாய்ப்பும், அனுபவமும் உண்டாகும். விருத்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.


சுவாதி : நெருக்கடிகள் குறையும்.


விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூன் 14, 2022



தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




விசாகம் : மாற்றம் ஏற்படும்.


அனுஷம் : முயற்சிகள் கைகூடும்.


கேட்டை : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------





தனுசு

ஜூன் 14, 2022



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆதாயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மூலம் : நெருக்கம் அதிகரிக்கும்.


பூராடம் : அனுபவம் உண்டாகும்.


உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------





மகரம்

ஜூன் 14, 2022



போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தடைகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




உத்திராடம் : வெற்றி பெறுவீர்கள்.


திருவோணம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------





கும்பம்

ஜூன் 14, 2022



எதிர்பார்த்த சில பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வியாபார பணிகளில் தந்திரமான செயல்பாடுகளால் மேன்மை உண்டாகும். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது சாதகமான வாய்ப்புகளை உண்டாக்கும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




அவிட்டம் : காலதாமதம் உண்டாகும்.


சதயம் : அனுபவம் கிடைக்கும்.


பூரட்டாதி : சாதகமான நாள்.

---------------------------------------





மீனம்

ஜூன் 14, 2022



மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குழந்தைகளின் உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபார பணிகளில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். யோகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.


ரேவதி : பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

---------------------------------------


தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராம கோயில் திருவிழாவில் தேர் சரிந்து விபத்து - படுகாயமடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு (Chariot crashes at Madhealli Village Festival near Papparapatti in Dharmapuri District - Two deceased)...

 


தருமபுரி: தேர் சாய்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.


தருமபுரி மாவட்டம் மாதேஅள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவில் தேர் சரிந்த விபத்து - படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.


படுகாயமடைந்த மனோகரன்(57), சரவணன்(50) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.


>>> தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராம கோயில் திருவிழாவில் தேர் சரிந்து விபத்து - படுகாயமடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LO / CBT – 3rd Standard - November 2024 – Answer Key

    3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...