கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (23-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 23, 2022



தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். நண்பர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகளை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அஸ்வினி : மாற்றம் ஏற்படும்.


பரணி : காலதாமதம் உண்டாகும்.


கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 23, 2022



உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதில் புதிய அனுபவம் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது. ரகசிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்களின் மீதான கருத்துக்களில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்களின் மூலம் சேமிப்பு குறையும். அனுபவம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : அனுபவம் உண்டாகும்.


ரோகிணி : சிந்தித்து செயல்படவும்.


மிருகசீரிஷம் : சேமிப்பு குறையும். 

---------------------------------------





மிதுனம்

ஜூன் 23, 2022



நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எண்ணிய காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். சோர்வுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


திருவாதிரை : விருப்பம் நிறைவேறும்.


புனர்பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

---------------------------------------





கடகம்

ஜூன் 23, 2022



பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள்.  உத்தியோக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




புனர்பூசம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.


பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


ஆயில்யம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------






சிம்மம்

ஜூன் 23, 2022



ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். முன்யோசனையுடன் செயல்பட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கனவுகளால் சில குழப்பம் உண்டாகும். சட்ட ரீதியான பிரச்சனைகளில் உள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மகம் : திறமைகள் வெளிப்படும்.


பூரம் : சாதகமான நாள்.


உத்திரம் : குழப்பம் உண்டாகும்.

---------------------------------------





கன்னி

ஜூன் 23, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். விரும்பிய சில பொருட்களின் மூலம் அலைச்சல்களும், வருத்தங்களும் உண்டாகும். குளிர்ச்சி சார்ந்த உணவு பொருட்களை குறைத்து கொள்வது நல்லது. எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். பயனற்ற வாதங்களைத் தவிர்ப்பது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். ஒத்துழைப்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 




உத்திரம் : அனுசரித்து செல்லவும்.


அஸ்தம் : நெருக்கடியான நாள்.


சித்திரை : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------





துலாம்

ஜூன் 23, 2022



குடும்ப உறுப்பினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




சித்திரை : ஒற்றுமை ஏற்படும்.


சுவாதி : அறிமுகம் கிடைக்கும்.


விசாகம் : வாய்ப்புகள் அமையும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூன் 23, 2022



உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். நேரம் தவறிய உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. சமூகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தொழிலாளர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். போட்டியில் இருந்துவந்த தடைகள் விலகும். திறமை வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் 




விசாகம் : விழிப்புணர்வு வேண்டும்.


அனுஷம் : முன்னேற்றமான நாள்.


கேட்டை : தடைகள் விலகும்.

---------------------------------------





தனுசு

ஜூன் 23, 2022



மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். இயந்திரம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வியில் சாதகமான வாய்ப்புகள் அமையும். இன்ப சுற்றுலா தொடர்பான முயற்சிகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள். 




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் 




மூலம் : ஆசைகள் உண்டாகும்.


பூராடம் : சாதகமான நாள்.


உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------





மகரம்

ஜூன் 23, 2022



தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கும். நுட்பமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவ ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கீர்த்தி நிறைந்த நாள். 




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




உத்திராடம் : கருத்துக்களை தவிர்க்கவும்.


திருவோணம் : சோர்வு நீங்கும்.


அவிட்டம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------





கும்பம்

ஜூன் 23, 2022



எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். எதிர்பாராத சில புதிய அறிமுகம் கிடைக்கும். வாகன பயணங்கள் வெற்றிகரமாக அமையும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கணிதம் சார்ந்த தொழிலில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அஞ்ஞான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள். 




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 




அவிட்டம் : தன்னம்பிக்கை மேம்படும்.


சதயம் : வெற்றிகரமான நாள்.


பூரட்டாதி : குழப்பம் நீங்கும்.

---------------------------------------





மீனம்

ஜூன் 23, 2022



கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். பயணங்களின் மூலம் அலைச்சல்களும், விரயங்களும் ஏற்படும்.  மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். ஒற்றுமை மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.


உத்திரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.


ரேவதி : கவனம் வேண்டும்.

---------------------------------------




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.06.2022 - School Morning Prayer Activities...


 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.06.2022 - School Morning Prayer Activities...

 திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: குடிமை


குறள் : 960


நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்

வேண்டுக யார்க்கும் பணிவு.


பொருள்:

தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்


பழமொழி :

A rolling stone gathers no moss.


அலைபாயும் மனத்தால் எதையும் செய்ய முடியாது.


இரண்டொழுக்க பண்புகள் :


1. பெற்றோர் ஆசிரியர்கள் நான் நலம் பெறவே ஆலோசனை கூறுவர். கண்டிப்பாக அந்த அறிவுரைகள் படி நடக்க முயற்சி செய்வேன். 


2. நல்ல பண்புகள் கடை பிடித்து நல்ல செயல்கள் நாள் தோறும் செய்வேன்


பொன்மொழி :


நம் வாழ்வில் கிடைக்க முடியாத பெரும் செல்வம் நாம் வீணாக கழிக்கும் ஒவ்வாரு விநாடியும் தான் - கார்ல் மார்க்ஸ்


பொது அறிவு :


1.சிகப்பு இரத்த அணுக்கள் குறைவதால் உண்டாகும் நோய் எது? 


அனிமியா.


 2. மனித ரத்தம் சிவப்பு நிறத்தில் இருக்க எது காரணம்? 


ஹீமோகுளோபின்.


English words & meanings :


Harpoon-a long sharp-pointed weapon used to catch large sea animals. Noun. கடலில் வாழும் பெரிய உயிரினங்களை பிடிக்க உதவும் நீண்ட கூர்மையான கருவி. பெயர்ச்சொல் 


ஆரோக்ய வாழ்வு :


வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் கண் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் வாழைப்பூவில் வைட்டமின் எ நிறைந்துள்ளது. இது விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் ஆரோக்கியத்தை மேப்படுத்தி, கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது.


கணினி யுகம் :


ABC என்பது 262524 எனவும், XYZ என்பது 321 எனவும் குறியிடப்பட்டால் PQR என்பது _________ 


 விடை: 11109


ஜூன் 23


கிஜூபாய் பதேக்கா அவர்களின் நினைவுநாள்

கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை[1] அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை [2] நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.


நீதிக்கதை


எறும்பின் தன்னம்பிக்கை


மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார். 


அதாவது ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது என்று கூறினார். பின் அவர்களிடம், அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும் என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.


இன்றைய செய்திகள்


23.06.22


★பொறியியல் ,கலை அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி சிபிஎஸ்இ முடிவுகள் வெளியான பிறகு, அடுத்த 5 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


★கல்வித் துறையின் கட்டடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, கட்டடங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்து இடித்துவிட்டு கட்ட வேண்டும் என்று பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ஏ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.


★மாணவர் சேர்க்கை விகிதம் மற்றும் கல்வியில் இந்திய அளவில் தமிழகம் 15 ஆண்டுகளுக்கு முன்னோக்கி பயணித்து வருவதால் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.


★மருத்துவத் துறையில் காலியாக உள்ள 1,021 மருத்துவர்கள் உள்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் வரும் செப்டம்பருக்குள் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


★காஷ்மீர்: கனமழை நிலச்சரிவால் போக்குவரத்து முடக்கம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு.


★ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரித்துள்ளது.


★உக்ரைன் அகதி குழந்தைகளுக்கு உதவ நோபல் பரிசை ஏலம் விட்டு ரூ.808 கோடி வழங்கிய ரஷ்ய பத்திரிகையாளர்.


★புரோ ஆக்கி லீக்: முதலாவது ஆட்டத்தில் அமெரிக்காவை வென்றது இந்தியா.


★ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி - இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.


Today's Headlines


★ The date for applying for Engineering, Arts, Science, and Polytechnic courses will be extended for the next 5 days after the release of CBSE results, Higher Education Minister Ponmudi said.


 ★ Minister E V Velu has7 instructed the Public Works Department officials to inspect all the buildings of the Department of Education and demolish them according to the stability of the buildings.


 ★ The Government of Tamil Nadu has filed a reply in the High Court saying that there is no need to implement the National Education Policy as Tamil Nadu has been moving forward 15 years in India in terms of enrollment and education.


 ★ Minister Mr. M. Subramaniam said that more than 4,000 vacancies, including 1,021 vacancies in the medical field, will be filled by next September.


 ★ Kashmir: Traffic freeze due to heavy rains landslides, and floods in rivers.


 ★ The death toll from a powerful earthquake in Afghanistan has risen to 1,000 so far.


 ★ Russian journalist donates Rs 808 crore to Nobel Prize auction to help Ukrainian refugee children


 ★ Pro Hockey League: India beat the US in the first match.


 ★ 4th ODI against Australia - Sri Lanka defeated Australia and won the series.

 


>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த பொறியியல் கல்லூரிகளின் கல்வி செயல்திறன் பட்டியல் - ஏப்ரல் / மே 2020 தேர்வுகள் (Academic Performance of Anna University Affiliated Engineering Colleges - April / May 2020 Examinations)...



>>> அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த பொறியியல் கல்லூரிகளின் கல்வி செயல்திறன் பட்டியல் - ஏப்ரல் / மே 2020 தேர்வுகள் (Academic Performance of Anna University Affiliated Engineering Colleges - April / May 2020 Examinations)...




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...





7.5% இட ஒதுக்கீட்டிற்கு தகுதியான 12ஆம் வகுப்பு மாணவர்கள் விவரம் வெளியீடு - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு (Eligible 12th Standard Students List Released for 7.5% Reservation - Press Release of Commissioner of School Education)...



>>> 7.5% இட ஒதுக்கீட்டிற்கு தகுதியான 12ஆம் வகுப்பு மாணவர்கள் விவரம் வெளியீடு - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு (Eligible 12th Standard Students List Released for 7.5% Reservation - Press Release of Commissioner of School Education)...




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...




10 மற்றும் 12ஆம் வகுப்பு - ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2022க்கான துணைத் தேர்வுகள் தேதி மற்றும் விண்ணப்ப விவரம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு (10th and 12th Standard - Supplementary Examinations Date and Application Details for July and August 2022 - Government Examinations Directorate Announcement)...


>>> 10 மற்றும் 12ஆம் வகுப்பு - ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2022க்கான துணைத் தேர்வுகள் தேதி மற்றும் விண்ணப்ப விவரம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு (10th and 12th Standard - Supplementary Examinations Date and Application Details for July and August 2022 - Government Examinations Directorate Announcement)...




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



EMIS Websiteல் மாணவர்களை அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாற்றுவதற்கான (Students Promotion Procedure) வழிமுறைகள்...



STUDENTS PROMOTION பணியை அந்தந்த பள்ளிகளே மேற்கொள்ள வேண்டும்...


STUDENTS PROMOTION சார்ந்து EMIS TEAM வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்... 👇👇👇



>>> EMIS Websiteல் மாணவர்களை அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாற்றுவதற்கான (Students Promotion Procedure) வழிமுறைகள்...



>>> EMIS Websiteல் மாணவர்களை அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாற்றுவது (Students Promotion Procedure) தொடர்பான குரல்பதிவு (Audio)...



>>> EMIS Websiteல் மாணவர்களை அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாற்றுவது (Students Promotion Procedure) தொடர்பான திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 286/ EMIS/ 2022, நாள்: 22-06-2022...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



வருமான வரி - மாத ஊதியம் பெறுவோர்க்கான பயன்கள், அவற்றிற்கான விவரங்கள் மற்றும் பிரிவுகள் பட்டியல் (Income Tax - List of benefits available to Salaried Persons, Particulars and Sections)...



>>> வருமான வரி - மாத ஊதியம் பெறுவோர்க்கான பயன்கள், அவற்றிற்கான விவரங்கள் மற்றும் பிரிவுகள் பட்டியல் (Income Tax - List of benefits available to Salaried Persons, Particulars and Sections)...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...