கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.07.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.07.2022 - School Morning Prayer Activities...


   திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்:சான்றாண்மை


குறள் : 981. 

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. 


பொருள்: கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.


பழமொழி :

A good wage gives a good servant.


மாவுக்கு ஏற்ற பணியாரம்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. தோல்வி என்பது வெற்றியின் முதல் படி எனவே தோல்வி கண்டு துவள மாட்டேன்.


 2. கோபம் என் அறிவை மயக்கும் எனவே கோபம் பட மாட்டேன்.


பொன்மொழி :


ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது. 


- புத்தர்


பொது அறிவு :


1.விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு எது? 


ஜெர்மனி. 


2. ஆரோக்கியமான உடலுக்கு எத்தனை வைட்டமின்கள் தேவை ? 


13 .


English words & meanings :


sultry - hot and uncomfortable. Adjective. புழுக்கமான. பெயரளபடை


ஆரோக்ய வாழ்வு :


மஞ்சளில் இருக்கும் குர்குமினின் பண்புகள் குறித்து தொடர்ந்து ஆராயப்பட்டு, படித்து வரப்படுகின்றன; இந்த குர்குமின் எனும் வேதிப்பொருளால் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து நிறுத்த மற்றும் புற்றுநோய் செல்கள் பரவுவதை தடுக்க முடியும் என்று ஆய்வக ஆராய்ச்சி படிப்பினைகள் தகவல்களை தெரிவித்துள்ளன. இந்த வேதிப்பொருள், கீமோதெரபி சிகிச்சையை அதிக பயனுள்ளதாக மாற்றவும், இயக்கத்தில் இருக்கும் செல்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.





NMMS Q 20: 


மிதிவண்டியில் வடதிசையில் சென்று கொண்டிருக்கும் ஒரு சிறுவன் இடது பக்கம் திரும்பி 1கி.மீ. சென்று பின்னர் மறுபடியும் இடது பக்கம் திரும்பி 2கி.மீ. செல்கிறான். அந்த சிறுவன் தற்போது தொடங்கும் இடத்திலிருந்து மேற்கில் 1 கி.மீ. தூரத்தில் இருப்பதாக அறிகிறான் எனில், வடதிசையில் சிறுவன் பயணித்த தூரம்:


 விடை: 2 கி.மீ.


நீதிக்கதை


பஞ்சவர்ண கிளி


நீண்ட காலத்திற்கு முன்னர் உலகத்தில் பறவைகள் இருந்தன. ஆனால், அவை எல்லாம் ஒரேமாதிரி சாம்பல் நிற வண்ணத்தில் இருந்தன. ஒரு வசந்த காலத்தில், பறவைகளின் அரசன் பறவைகளுக்கு அழைப்பு விடுத்ததை அறிந்து எல்லாப் பறவைகளும் அரசன் முன்னால் கூடின. கூட்டமாக கூடி வந்த பறவைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பி மகிழ்ந்தன. சில பறவைகள் சில மீட்டர் வரை பறந்தன. சில தத்தி தத்தி நடந்தன. சில நொண்டிச் செல்வது போல் நகர்ந்தன. அவைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன. 


அரசப்பறவை, ஓர் இறக்கையை வானத்தை நோக்கி திருப்பியது. வானத்தில் ஒரு பெரிய வானவில் தோன்றின. உடனே எல்லா பறவைகளும் வானத்திலுள்ள வண்ணங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டன. ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், காவி, சிவப்பு என்று அவைகள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தன. ஓர் அழகான பெரிய வானவில்லை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு நிறத்தைக் கொடுக்கப்போகிறேன். உங்களுக்கு எந்த நிறம் பிடிக்குமோ அதை நீங்கள் வானவில்லில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியது பறவைகளின் அரசன். அடுத்த வினாடி ஒவ்வொரு பறவையும் தனக்கு பிடித்தமான நிறத்தைப் பறிக்க முயன்றன. 


ஒரு கிளி முன்னால் வந்தது. எனக்கு பச்சை வர்ணமே பிடிக்கும் என்று சொல்லி, அது பச்சை நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை பச்சைக்கிளி என்று அழைத்தனர். ஒரு குருவி ஓடி வந்தது. அது மஞ்சள் நிறத்தை அணிந்து கொண்டது. அதை எல்லோரும் மஞ்சள் குருவி என்று அழைத்தனர். எல்லோரையும் தள்ளி விட்டப்படி ஒரு குருவி முன்னால் வந்து சிவப்பு நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை எல்லோரும் செங்குருவி என்று கூப்பிட்டனர். இப்படி எல்லா பறவைகளும் தாங்கள் விரும்பிய நிறத்தைப் பெற்றுக்கொண்டன. ஆனால், ஒரே ஒரு சின்னஞ்சிறிய குருவி மட்டும் தனக்கு நிறம் கிட்டாமல் நின்று கொண்டிருந்தது. 


அரசப்பறவை அந்தக் குருவியைப் பார்த்தது. நீ ஏன் மற்றவர்களைப் போல் வர்ணம் கேட்கவில்லை? என்று கேட்டது. வரிசையில் எனது முறை வரும் என்று நான் காத்திருந்தேன் என்று சொன்னது அந்த சின்னஞ்சிறு பறவை. எல்லா நிறங்களும் முடிந்து விட்டதே! என்ன செய்வது? என்றது. அரசப்பறவை. அதைக் கேட்டதும், அந்த சின்னஞ்சிறு பறவை அழுதுகொண்டே, நான் எப்போதும் இந்த சாம்பல் நிறத்தில் தான் இருக்க வேண்டுமா? என்றது. அரசப்பறவை சொன்னது, நீ மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்கிறாய்! இப்படிப்பட்ட நீ சாம்பல் வர்ணத்தில் இருத்தல் கூடாது, என்று சொல்லி எல்லாப் பறவைகளையும் திருப்பி அழைத்தது. ஒவ்வொரு பறவையிடம் இருந்தும், அது கொஞ்சம் வர்ணத்தை எடுத்து, அந்த சிறிய பறவைக்கு கொடுத்தது. அதனால் அந்த சின்னஞ்சிறிய பறவை, இப்போது மிகவும் அழகாய் காணப்பட்டது. அதைப் பார்த்து மகிழ்ந்த பறவையின் அரசன், அதற்கு பஞ்சவர்ண கிளி என பெயர் வைத்தான். 


நீதி :

பொறுமையாக இருந்தால் நமக்கு கிடைப்பது கிடைக்கும்.


இன்றைய செய்திகள்


08.07.22


 ✅சென்னையில் உள்ள 21 ரயில் நிலையங்களை பசுமையாக்கும் பணிகளை மேற்கொள்ள பல்வேறு அமைப்புகளுக்கு தெற்கு ரயில்வே அழைப்பு விடுத்துள்ளது.


✅ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. அதனை 1800 425 6750 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.


✅வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவையில் மிக கனமழை, சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு.


✅உள்நாட்டிலேயே தயாரித்த விக்ராந்த் கப்பல் கடற்படையில் அடுத்த மாதம் சேர்ப்பு.


✅இந்தியாவில் BA 2.75 என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவிவருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


✅கடும் வறட்சியால் பஞ்சத்தில் மடியும் மக்கள்: துருக்கியிடம் உதவி கேட்கும் சோமாலியா.


✅விம்பிள்டன் டென்னிஸ்: நடால், கிர்கியோஸ் அரையிறுதிக்கு தகுதி.


✅இலங்கை அணியை வீழ்த்தி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அபார வெற்றி.


Today's Headlines


✅Southern Railway has invited various organizations to undertake go green of 21 railway stations in Chennai.


 ✅Tamil Nadu Pollution Control Board has set up a control room to facilitate the activities related to the effective implementation of the single-use plastic ban.  It has been announced that it can be contacted on the toll-free number 1800 425 6750.


 ✅ Weather forecast: Weighty rain in Nilgiris, Coimbatore, moderate rain likely in Chennai.


 ✅ The indigenously built Vikrant ship would join the fleet next month.


✅ According to the World Health Organization, a new type of coronavirus, BA 2.75, is spreading in India.


✅ People dying of famine due to severe drought: Somalia asks Turkey for help.


✅ Wimbledon Tennis: Nadal, Kyrgios qualify for semi-finals


 ✅ Indian women's cricket team beat the Sri Lankan team to a great victory.




இன்றைய (08-07-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

ஜூலை 08, 2022



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வரவுக்கு ஏற்ப சுபச்செலவுகள் உண்டாகும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உள்ள உண்மையை அறிந்து முடிவு எடுக்கவும். வாடிக்கையாளர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வதால் லாபம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அஸ்வினி : ஒற்றுமை அதிகரிக்கும். 


பரணி : முடிவு எடுப்பீர்கள். 


கிருத்திகை : லாபம் உண்டாகும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூலை 08, 2022



வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




கிருத்திகை : தீர்ப்பு கிடைக்கும்.


ரோகிணி : கருத்து வேறுபாடுகள் குறையும். 


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





மிதுனம்

ஜூலை 08, 2022



பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் நீங்கி சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான பயணங்களின் மூலம் அனுபவம் உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகளை செயல் வடிவில் மாற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். கனிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : இழுபறிகள் அகலும்.


திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும். 


புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும்.

---------------------------------------





கடகம்

ஜூலை 08, 2022



தொழில் சார்ந்த கடன் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். வாகனம் தொடர்பான பழுதுகளை சீர் செய்வீர்கள். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் உறவினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தேவைகள் நிறைவேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்




புனர்பூசம் : உதவி கிடைக்கும்.


பூசம் : ஆதரவு ஏற்படும். 


ஆயில்யம் : ஒத்துழைப்பான நாள்.

---------------------------------------





சிம்மம்

ஜூலை 08, 2022



வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். நிர்வாக பணிகளில் சிறு சிறு மாற்றங்களால் மேன்மை உண்டாகும். வித்தியாசமான முயற்சிகள் மற்றும் எண்ணங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




மகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.


பூரம் : சாதகமான நாள்.


உத்திரம் : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------





கன்னி

ஜூலை 08, 2022



வாழ்க்கை துணைவருடன் விட்டுக்கொடுத்து செல்லவும். தேவையற்ற பழைய நினைவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : விட்டுக்கொடுத்து செல்லவும். 


அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.


சித்திரை : கற்பனை மேம்படும்.

---------------------------------------





துலாம்

ஜூலை 08, 2022



புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகமும், வாய்ப்பும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




சித்திரை : இலக்குகள் பிறக்கும்.


சுவாதி : தெளிவு ஏற்படும்.


விசாகம் : ஆசைகள் உண்டாகும். 

---------------------------------------





விருச்சிகம்

ஜூலை 08, 2022



இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்படவும். பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




விசாகம் : கவனத்துடன் செயல்படவும்.


அனுஷம் : இழுபறிகள் குறையும். 


கேட்டை : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------





தனுசு

ஜூலை 08, 2022



பிள்ளைகளின் வழியில் சுபகாரியம் செய்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பாராட்டுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மூலம் : சாதகமான நாள்.


பூராடம் : ஆர்வம் உண்டாகும்.


உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------





மகரம்

ஜூலை 08, 2022



மனை சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகளும் மற்றும் அதற்கான உதவிகளும் கிடைக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும். 


திருவோணம் : புதுமையான நாள். 


அவிட்டம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

ஜூலை 08, 2022



உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளால் பணிகளில் மாற்றம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத உதவி கிடைக்கப் பெறுவீர்கள். செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். நிறைவான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.


சதயம் : தேவைகள் நிறைவேறும்.


பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





மீனம்

ஜூலை 08, 2022



புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




பூரட்டாதி : மாற்றம் ஏற்படும். 


உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


ரேவதி : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------



Today's (07-07-2022) Wordle Answer...

 


Today's (07-07-2022) Wordle Answer: AGAPE






மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் விருப்ப மாறுதல் ஆணை பெறும் இடைநிலை ஆசிரியர்கள் பணி விடுவிப்பு நாள் - இயக்குநர் அவர்கள் அறிவிப்பு (Relieving date for Secondary Grade Teachers who will receive Transfer order in District to District Transfer Counselling - Announcement of Elementary Education Director)...



 மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் விருப்ப மாறுதல் ஆணை பெறும் இடைநிலை ஆசிரியர்கள் நடப்பு மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) நிறைவு பெறும் நாளுக்கு அடுத்த வேலை நாளில் ஒரே தேதியில் பணியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

- தொடக்கக்கல்வி இயக்குனர்...




6, 7, 8ஆம் வகுப்புகள் - கற்றல் விளைவுகள் (எண்களுடன்) - அனைத்துப் பாடங்கள் (Learning Outcomes (with numbers) - Classes 6, 7, 8 - All Subjects)...

 


>>> 6, 7, 8ஆம் வகுப்புகள் - கற்றல் விளைவுகள் (எண்களுடன்) - பாடவாரியாக -  அனைத்துப் பாடங்கள் (Learning Outcomes (with numbers) - Classes 6, 7, 8 - All Subjects - Subject Wise)...



>>> 6, 7, 8ஆம் வகுப்புகள் - கற்றல் விளைவுகள் (எண்களுடன்) - வகுப்பு வாரியாக -  அனைத்துப் பாடங்கள் (Learning Outcomes (with numbers) - Classes 6, 7, 8 - All Subjects - Class Wise)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடவேளை பங்கீடு (Time Table Allotment for Middle, High, Higher Secondary Schools from Class VI to Class X)...



 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடவேளை பங்கீடு (Time Table Allotment for Middle, High, Higher Secondary Schools from Class VI to Class X)...



*தமிழ்   6

*ஆங்கிலம்  6

*கணிதம்  7

*அறிவியல்  7

*சமூகஅறிவியல் 6

*கல்விசார் செயல்பாடு 2

*கல்விசாரா செயல்பாடு 2

*உடற்கல்வி 2

*நீதிபோதனை 1

*நூலகம் 1


1. நீதிபோதனை அனுபவப்பகிர்வு வகுப்பாசிரியர்க்கு வழங்கப்படவேண்டும்.

அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் கல்வி இணை செயல்பாடுகள், கல்விசாரா இணை செயல்பாடுகள் வழங்கப்பட வேண்டும்.


2. ஓவியம் ஓரிகாமி கைவினை செயல்பாடுகள் ஓவிய கைவினை ஆசிரியர் இல்லாத நிலையில் வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.


3. திரைப்பட மன்றம். இரண்டாவது வாரத்தில்.

திரைப்படம் மன்ற ஆசிரியர் மாணவர்களிடம் திரைப்படம் குறித்து உரையாட வேண்டும் ஐந்து மாணவர்கள் 2 முதல் 3 நிமிடங்கள் திரைப்படம் குறித்து பேச செய்ய வேண்டும் எழுத சொல்ல வேண்டும்.


4. ஐந்தாவது பாட வேளை சுழற்சி முறையில் வழங்கப்பட வேண்டும் ஏனெனில் முந்திய நூல் வாசிப்பு மானிட்டரிங் சேர்த்து பார்ப்பதால்.


5. இலக்கிய மன்றம் முதல் வாரம் தமிழ் ஆங்கில ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.


6. வினாடி-வினா இரண்டாவது வாரம் கணிதம் அறிவியல் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.


7. சுற்றுச்சூழல் மன்றம் தேசிய பசுமைப்படை மூன்றாவது வாரம் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.


8. நான்காவது வாரம்/ஐந்தாவது வாரம் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம், பேரிடர் மேலாண்மை மன்றம் , கணினி நிரல் மன்றம், எந்திரவியல் மன்றம், Scout, JRC,  குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மன்றம், தகவல் தொழில்நுட்ப மன்றம், நுண்கலை மன்றம், திரைப்படம் மன்றம்.


>>> 2022-23ஆம் கல்வி ஆண்டில் பின்பற்ற வேண்டிய கல்வி இணை / கல்வி சாரா செயல்பாடுகள் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 19528/ எம்/ இ1/ 2022, நாள்: 11.06.2022., மாத வாரியான நாட்காட்டி, ஒவ்வொரு வகுப்புக்கும் வார வாரியான மாதிரி கால அட்டவணை...




தாள் 1 ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) - ஆகஸ்ட் 25 முதல் 31 வரை கணினி வழித் தேர்வாக நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) பத்திரிகை செய்தி (Paper 1 Teacher Eligibility Test – 25th to 31st August will be Computer Based Examination – Teachers Recruitment Board (TRB) Press Release)...



>>> தாள் 1 ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) - ஆகஸ்ட் 25 முதல் 31 வரை கணினி வழித் தேர்வாக நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) பத்திரிகை செய்தி (Paper 1 Teacher Eligibility Test – 25th to 31st August will be Computer Based Examination – Teachers Recruitment Board (TRB) Press Release)...


ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1-க்கான தேதி மட்டும் அறிவிப்பு:


வரும் ஆகஸ்ட் 25 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும்.


TET தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் அனுமதிச் சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் 2-வது வாரத்தில் வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.







இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LO / CBT – 3rd Standard - November 2024 – Answer Key

    3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...