கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்க, நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை (22 - 24.07.2022ல்) பதிவேற்றம் செய்தல் - கலந்தாய்வு 26.07.2022 அன்று நடைபெறுதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 756/ டி1/ 2022, நாள்: 19-07-2022 (Uploading of District-to-District collective Transfer Applications (on 22 - 24.07.2022) for Secondary Grade and Graduate Teachers working in Elementary, Middle School - Counselling to be held on 26.07.2022 - Proceedings of Director of Elementary Education No: 756/ D1/ 2022, Date: 19 -07-2022)...



>>> தொடக்க, நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை (22 - 24.07.2022ல்) பதிவேற்றம் செய்தல் - கலந்தாய்வு 26.07.2022 அன்று  நடைபெறுதல்  சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 756/ டி1/ 2022, நாள்: 19-07-2022 (Uploading of District-to-District collective Transfer Applications (on 22 - 24.07.2022) for Secondary Grade and Graduate Teachers working in Elementary, Middle School - Counselling to be held on 26.07.2022 - Proceedings of Director of Elementary Education No: 756/ D1/ 2022, Date: 19 -07-2022)...




பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியல் (BT - Seniority - 19.07.2022)...

 


>>> பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியல் (BT - Seniority - 19.07.2022)...



>>> பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியல் - 09.07.2022 (BT - Seniority)...




ஆசிரியரின் இரண்டாவது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்த தமிழ்நாடு அரசின் உத்தரவு சரியே - சென்னை உயர்நீதிமன்றம் (Tamil Nadu Government's order denying pension to Teacher's second wife is correct - Madras High Court)...

 ஆசிரியரின் இரண்டாவது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்த தமிழ்நாடு அரசின் உத்தரவு சரியே - சென்னை உயர்நீதிமன்றம் (Tamil Nadu Government's order denying pension to Teacher's second wife is correct - Madras High Court)...




Today's (20-07-2022) Wordle Answer...

              

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (20-07-2022) Wordle Answer: TRITE









பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.07.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.07.2022 - School Morning Prayer Activities...

   

திருக்குறள் :


குறள் 987


பால் – பொருட்பால்

இயல் – குடியியல்

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால். விளக்கம்:


துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்



பழமொழி :

A man is known by the company he keeps.


 நம் நண்பர்களை வைத்தே நம்மை எடை போடுவார்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. அறிய முடியாததை செய்ய முயல்வதை விட அறிந்ததை மிகச் சிறப்பாக செய்


 2. நாளை செய்ய வேண்டிய காரியம் கூட இன்றே செய்வது வெற்றியின் ஆரம்பம்


பொன்மொழி :


எல்லோருமே வெற்றியை விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர்


-சிசரோ



பொது அறிவு :


1.நமது நாக்கில் சுவை நரம்புகள் எத்தனை? 


3000 . 


2.பறவைகளில் மிக நீண்ட ஆயுளை உடையது எது? 


ஆந்தை.


ஆரோக்ய வாழ்வு :


சோயா சங்க் என்னும் மீல் மேக்கரில் காணப்படும் ஐசோ ஃப்ளேவோன்ஸ் மற்றும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் ஆகியவை ஹாட் ஃப்ளாஷ், மனநிலை மாற்றங்கள் (மூட் ஸ்விங்) போன்ற மாதவிடாய் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.


மனதை அமைதியாகவும் புத்துணர்வாகவும் வைத்திருக்கச் செய்கிறது.


NMMS Q 28:


தேங்காயின் தாவரவியல் பெயர் : 


விடை: காக்கஸ் நியூசிபெரா


ஜூலை 20


அனைத்துலக சதுரங்க நாள் 


அனைத்துலக சதுரங்க நாள் (International chess day) பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் வழிகாட்டலில் ஒவ்வோர் ஆண்டும் சூலை 20 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது.


1924 ஆம் ஆண்டு சூலை மாதம் 20 ஆம் தேதியன்று உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. இந்த நாளை அனைத்துலக சதுரங்க தினமாக கொண்டாடும் யோசனையை யுனெசுகோ முன்மொழிந்தது. இதன்படி சூலை 20 ஆம் நாள் அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையும் இந்நாளை அங்கீகரித்தது.



கிரிகோர் யோவான் மெண்டல்  அவர்களின் பிறந்த நாள்


கிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann Mendel, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள்.



மார்க்கோனி அவர்களின் நினைவுநாள்


மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi; ஏப்ரல் 25, 1874 – ஜூலை 20, 1937) வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். ' கம்பியற்ற தகவல்தொடர்பு முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் 'மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்', 'வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.


நீதிக்கதை


நரியின் தந்திரம்


ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒரு கூட்டம் சேர்த்தது. எல்லா மிருகமும் வந்தது. முதலில் ஒரு குரங்கைக் கூப்பிட்டு, என் உடம்பை முகர்ந்து பார் எப்படி இருக்கு? ன்னு சொல் என்றது சிங்கம். குரங்கு வந்து முகர்ந்து பார்த்துவிட்டு வாசனை நல்லா இல்லீங்க கொஞ்சம் மோசமாத்தான் இருக்குன்னு சொல்லியது. 


சிங்கம் கோபமடைந்து என் உடம்பையா அப்படிச் சொல்றேன்னு ஓங்கி ஒரு அறை விட்டுது. குரங்கு கீழே விழுந்துவிட்டது. அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டு. நீ வா வந்து பார்த்து சொல்லு என்றது. கரடி அந்தக் குரங்கைப் பார்த்துக்கிட்டே வந்தது. 


சிங்கத்தை முகர்ந்து பார்த்தது ஆகா! ரோஜாப்பூ வாசனை! ன்னு சொல்லுச்சு. பொய்யா சொல்றே? ன்னு ஓங்கி ஒரு அறை விட்டது. அதுவும் கீழே விழுந்தது. அடுத்தப்படியா ஒரு நரியைக் கூப்பிட்டு. நீதான் சரியாச் சொல்லுவ! நீ வந்து சொல்லு என்றது. 


நரி குரங்கையும் கரடியையும் பார்த்துக்கிட்டே வந்தது. சிங்கத்தை முகர்ந்து பார்த்து மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்! என்று சொல்லி நரித் தந்திரமாக தப்பிக்கொண்டது. 


நீதி :

நரியின் தந்திரம் எல்லா மனிதர்களுக்கும் இருத்தல் வேண்டும்.


இன்றைய செய்திகள்


20.07.22


 💫அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 3.89 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்.


 💫அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி; சான்றிதழ் சரிபார்ப்பில் வெளி மாநிலத்தவர் பங்கேற்பு: தமிழக பட்டதாரிகள் அதிர்ச்சி.


 💫நீட் விலக்கு குறித்த மத்திய சுகாதாரத் துறையின் கருத்துகள், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு பதில் அளித்துள்ளது.


 💫குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 99.18 சதவீத வாக்குகள் பதிவாகின. பிரதமர்  மற்றும் மாநில முதல்வர்கள், எம்.பி., எம்எல்ஏ.க்கள் இத்தேர்தலில் வாக்களித்துள்ளனர்.


 💫 வரலாறு காணாத வெப்ப அலை: போர்ச்சுக்கல், ஸ்பெயினில் 1000-ஐ தாண்டிய உயிரிழப்பு.


 💫அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில், தமிழக என்சிசி மாணவர்கள் பதக்கப் பட்டியலில் 2-ம் இடம் பிடித்தனர்.


 💫உலக தடகள 100 மீட்டர் ஓட்டம்: ஜமைக்கா வீராங்கனை பிரேசர் 5-வது முறையாக 'சாம்பியன்'.


 💫உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் மைராஜ் கான் தங்கம் வென்று சாதனை.



Today's Headlines


 💫3.89 lakh students applied for admission in government arts and science colleges.


  💫Govt Polytechnic Lecturer Job;  Out-of-state participation in certificate verification: Tamil Nadu graduates shocked.


 💫 The Central Government has replied that the comments of the Central Health Department regarding NEET exemption have been sent to the Tamil Nadu Government.


  💫The presidential election was held yesterday.  In this, 99.18 percent of votes were recorded.  Prime Minister and State Chief Ministers, MPs, and MLAs have voted in this election.


 💫 Record heatwave: Death toll exceeds 1,000 in Portugal, Spain


 💫 Tamil Nadu NCC students stood 2nd in the medal list in the All India Shooting Competition.


 💫 World Athletics 100m: Jamaican Fraser wins 5th 'Champion'


  💫 Shooting World Cup: India's Mairaj Khan sets a record by winning gold

 



இன்றைய (20-07-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 20, 2022



உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.


பரணி : அனுபவம் ஏற்படும்.


கிருத்திகை : நிதானத்துடன் செயல்படவும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூலை 20, 2022



இணையம் சார்ந்த துறைகளில் புதிய அறிமுகம் கிடைக்கும். மனதில் புதிய லட்சியம் பிறக்கும். மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். எதிர்பார்த்த தனவரவின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். முயற்சிகள் ஈடேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும். 


ரோகிணி : லட்சியம் பிறக்கும்.


மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------





மிதுனம்

ஜூலை 20, 2022



சமூகம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் சார்ந்த துறையில் உயர்வு ஏற்படும். மருத்துவம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் கைகூடும். அரசு தொடர்பான உதவி சாதகமாக அமையும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும். 


திருவாதிரை : முன்னேற்றம் ஏற்படும்.


புனர்பூசம் : சாதகமான நாள்.

---------------------------------------






கடகம்

ஜூலை 20, 2022



உயர்கல்வியில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். அறிவியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் நுணுக்கங்களை அறிவீர்கள். உலக அனுபவங்களின் மூலம் புரிதல் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் அனுபவம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




புனர்பூசம் : தாமதங்கள் குறையும். 


பூசம் : நுணுக்கங்களை அறிவீர்கள். 


ஆயில்யம் : புரிதல் உண்டாகும். 

---------------------------------------





சிம்மம்

ஜூலை 20, 2022



எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்து கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வாக்குறுதிகள் கொடுப்பதை குறைத்து கொள்வது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மகம் : சேமிப்பு குறையும். 


பூரம் : கவனம் வேண்டும்.


உத்திரம் : வாக்குறுதிகளை தவிர்க்கவும். 

---------------------------------------






கன்னி

ஜூலை 20, 2022



வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பமும், புரிதல் இன்மையும் உண்டாகும். சமூக பணிகளில் புதிய அறிமுகம் கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




உத்திரம் : ஒத்துழைப்பு உண்டாகும்.


அஸ்தம் : அறிமுகம் கிடைக்கும்.


சித்திரை : திறமை வெளிப்படும்.

---------------------------------------





துலாம்

ஜூலை 20, 2022



உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான கடன் சார்ந்த உதவி சாதகமாக அமையும். போட்டி தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். திறமை வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




சித்திரை : அனுசரித்து செல்லவும். 


சுவாதி : உதவி கிடைக்கும்.


விசாகம் : ஆர்வம் மேம்படும்.

---------------------------------------






விருச்சிகம்

ஜூலை 20, 2022



குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றத்தை செய்வீர்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியும் அடைவீர்கள். புதிய பயணங்களின் மூலம் மனதில் ஏற்பட்ட குழப்பம் அகலும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


அனுஷம் : தெளிவு ஏற்படும். 


கேட்டை : குழப்பம் அகலும்.

---------------------------------------





தனுசு

ஜூலை 20, 2022



நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன பயணங்களில் விவேகத்துடன் செயல்படவும். மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மூலம் : பயணங்கள் கைகூடும்.


பூராடம் : விவேகத்துடன் செயல்படவும்.


உத்திராடம் : மந்தமான நாள்.

---------------------------------------





மகரம்

ஜூலை 20, 2022



உத்தியோக பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் உண்டாகும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அறிமுகம் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.


திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.


அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------





கும்பம்

ஜூலை 20, 2022



பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோக மாற்றம் சார்ந்த  சிந்தனைகள் அதிகரிக்கும். மறதி தொடர்பான விஷயங்களால் அவப்பெயர் ஏற்பட்டு நீங்கும்.  உழைப்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


சதயம் : கவனம் வேண்டும்.


பூரட்டாதி : மாற்றமான நாள்.

---------------------------------------





மீனம்

ஜூலை 20, 2022



புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், ஒத்துழைப்பும் மேம்படும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




பூரட்டாதி : எண்ணங்கள் அதிகரிக்கும். 


உத்திரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.


ரேவதி : ஒத்துழைப்பு மேம்படும். 

---------------------------------------


ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையரகம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) பதில் கடிதம் ஓ.மு.எண்: 19568/ சி5/ இ4/ 2022, நாள்: 20.04.2022 (Earned Leave to be Reduced only for extraordinary Leave without Pay - Commissioner of School Education RTI Reply - Dated: 20.04.2022)...



>>> ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையரகம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) பதில் கடிதம் ஓ.மு.எண்: 19568/ சி5/ இ4/ 2022, நாள்: 20.04.2022 (Earned Leave to be Reduced only for extraordinary Leave without Pay - Commissioner of School Education RTI Reply - Dated: 20.04.2022)...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...