கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளிப் பதிவேடுகளில் மாணவர்கள் / ஆசிரியர்களின் பெயருக்கு முன்பு இடப்படும் முன்னொட்டை (Initial) தமிழில் இட பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 031588/ எம்/ இ3/ 2021, நாள்: 12-08-2022 - இணைப்பு: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசாணை (நிலை) எண்: 140, நாள்: 02-11-2021 (Prefix (Initial) placed before the name of students / teachers in school records should be in Tamil - School Education Commissioner Proceedings No: 031588/ M/ E3/ 2021, Date: 12-08-2022 - Attachment: Tamil Development and Information Department G.O.(Ms) No: 140, Dated: 02-11-2021)...
CRC Facilitators பார்க்க வேண்டிய Content & Videos (Course for CRC/BRC Facilitators)...
Course for CRC/BRC Facilitators
Dept. of School Education
State Council of Educational Research and Training and Samagra Shiksha...
Roles and Responsibilities of Facilitator
CRC Attendance Register Through TNSED App
Exemplar Content for Previous Month
Introduction to TNTP Mediawiki
Exemplar Content on Next Month and App Flow till Conclusion
Psychometric Game: Know Thyself
CRC Facilitators பார்க்க வேண்டிய Content & Videos...
https://linktr.ee/theeducationalliance
கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என்ற செய்தி போலியானது - நேரடி நியமனம் குறித்து அறிவிப்பு மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தால் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை - கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் செய்தி வெளியீடு எண்: 1443, நாள்: 22-08-2022 (News of direct recruitment in co-operative bank is fake - Notification about direct recruitment not officially released by State Recruitment Board - Press Release of Registrar of co-operative societies)...
கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என்ற செய்தி போலியானது.
நேரடி நியமனம் குறித்து மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அறிக்கை.
Today's (22-08-2022) Wordle Answer...
Today's (22-08-2022) Wordle Answer: MERIT
இன்றைய (22-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
style="text-align: justify;">ஆகஸ்ட் 22, 2022
மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவுபெறும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பரணி : திறமைகள் வெளிப்படும்.
கிருத்திகை : அனுகூலமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
ஆகஸ்ட் 22, 2022
குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். முயற்சிகள் ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : விட்டுக்கொடுத்து செல்லவும்.
ரோகிணி : அறிமுகம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
மிதுனம்
ஆகஸ்ட் 22, 2022
எதிர்பாராத தனவரவு உண்டாகும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : முன்னேற்றம் ஏற்படும்.
புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.
---------------------------------------
கடகம்
ஆகஸ்ட் 22, 2022
அரசு தொடர்பான பணிகளில் அனுபவம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் ஆர்வமின்மையான சூழல் அமையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : அனுபவம் அதிகரிக்கும்.
பூசம் : ஆர்வமின்மையான நாள்.
ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும்.
---------------------------------------
சிம்மம்
ஆகஸ்ட் 22, 2022
தயக்க உணர்வுகள் குறைந்து எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தந்தையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். எதிர்காலம் தொடர்பான சேமிப்பு அதிகரிக்கும். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகம் : புத்துணர்ச்சியான நாள்.
பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.
உத்திரம் : சேமிப்பு அதிகரிக்கும்.
---------------------------------------
கன்னி
ஆகஸ்ட் 22, 2022
உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் அமையும். புதிய முயற்சிகளில் வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். இனம்புரியாத சில கனவுகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். காப்பீடு தொடர்பான பணிகளில் ஆதாயம் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : மாற்றமான நாள்.
அஸ்தம் : மகிழ்ச்சி ஏற்படும்.
சித்திரை : குழப்பம் நீங்கும்.
---------------------------------------
துலாம்
ஆகஸ்ட் 22, 2022
கூட்டு வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பின் மூலம் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். உறவினர்களிடம் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். மதிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : ஆதாயம் ஏற்படும்.
விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
ஆகஸ்ட் 22, 2022
உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். எண்ணிய உதவி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பயணங்களின் போது தேவையான ஆவணங்களை எடுத்து செல்வது நல்லது. வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.
அனுஷம் : உதவி கிடைக்கும்.
கேட்டை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
---------------------------------------
தனுசு
ஆகஸ்ட் 22, 2022
புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குலதெய்வம் தொடர்பான பிரார்த்தனைகள் நிறைவேறும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : ஆதாயம் உண்டாகும்.
உத்திராடம் : புரிதல் ஏற்படும்.
---------------------------------------
மகரம்
ஆகஸ்ட் 22, 2022
மனை மீதான கடன் சார்ந்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆதாயம் மேம்படும். கலை நுட்பமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் அதிகரிக்கும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : உதவி கிடைக்கும்.
திருவோணம் : ஆர்வம் உண்டாகும்.
அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
---------------------------------------
கும்பம்
ஆகஸ்ட் 22, 2022
எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். சிறு மற்றும் குறுந்தொழிலில் முன்னேற்றமான சூழல் அமையும். உடன்பிறந்தவர்களின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
அவிட்டம் : காலதாமதம் உண்டாகும்.
சதயம் : திறமைகள் வெளிப்படும்.
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
மீனம்
ஆகஸ்ட் 22, 2022
வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். ஆபரணங்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
உத்திரட்டாதி : நெருக்கடியான நாள்.
ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 22.08.2022 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 22.08.2022 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: உழவு
குறள் : 1033
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
பொருள்:
பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.
பழமொழி :
Strength grows stronger by being tied.
ஒரு சேரக் கட்டினால் ஒன்பது யானை பலம்
இரண்டொழுக்க பண்புகள் :
1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.
2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்
பொன்மொழி :
எப்போதும் நீங்கள் நேற்றை
பற்றியே சிந்திப்பீர்கள் என்றால்
உங்களுக்கு நாளை சிறப்பாக
இருக்காது..!
பொது அறிவு :
1.தேசிய கீதம் பாட ஒதுக்கப்பட்ட நேரம் எவ்வளவு?
52 செகண்டுகள்.
2.தேசிய விளையாட்டு தினம் எப்போது?
ஆகஸ்ட் 29.
English words & meanings :
Vali-da-tion - checking or proving the validity or accuracy of something. Noun. ஒரு காரியத்தின் உண்மை தன்மை சரிபார்த்தல். பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
தயிரிலிருந்து தயாரிக்கப்படும் குறைந்த கொழுப்புள்ள தயிரில் (Yogurt) அயோடின் சத்து நிறைந்துள்ளது. எனவே தினசரி உணவில் யோகர்ட் சேர்த்துக்கொள்ளலாம்
NMMS Q 45:
Water : Pipe :: Blood : _________. Ans : Artery
ஆகஸ்ட் 22
சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது.
கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.
நீதிக்கதை
எல்லாம் விதியின்படிதான் நடக்கும்
ஒரு நாள் எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான். மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள். ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை!! எமதர்மன் சொன்னான். நல்லது, இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது. மனிதன் சரி, நீங்கள் இருக்கையில் உட்காருங்கள். நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு காபி சாப்பிட்டு விட்டு போகலாம்.
அதற்கு எமதர்மன் சரி, அப்படியே செய்யலாம் என்றார். அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த காபி கொடுத்தான். குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான். மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு, கடைசியில் கொண்டு எழுதி வைத்தான்.
எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான். நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய், அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன். என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல், பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான்.
நீதி :
நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட, எல்லாம் விதியின்படிதான் நடக்கும்.
இன்றைய செய்திகள்
22.08.22
* சென்னையில் 2-ம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், உயர்மட்ட பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள், பணிமனைகளில் சூரிய மின்சக்தி சாதனங்களை நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
* தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி தொடங்க மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
* விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளம் அகழாய்வில் வீட்டின் திண்ணை பகுதி கண்டுபிடிப்பு.
* மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலுத்திய மாநிலங்கள் - நிலுவை ரூ.1,037 கோடியாக குறைந்தது.
* இமாச்சலப் பிரதேச வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு.
* ரஷ்ய படைகளை எதிர்கொள்வதற்காக, உக்ரைனுக்கு மேலும் 77.5 கோடி டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாட உதவிகளை அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
* 14-வது ஆசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சீன தைபேயை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு கிவிடோவா முன்னேற்றம்.
Today's Headlines
* The Metro Rail Corporation plans to install solar power systems on the elevated track, metro stations and workshops to generate electricity in the Phase 2 Metro Rail Project in Chennai.
*The Minister of Health has said that he is going to meet the Union Minister and urge him to start new medical colleges in six districts of Tamil Nadu.
* Excavation of house paddy field in Vijayakarisalkulam, Virudhunagar district.
* States that have paid Rs 4,000 crore to power generation companies - balance reduced to Rs 1,037 crore.
* 22 killed in Himachal Pradesh floods, landslides
* The United States has announced an additional $775 million in military logistics aid to Ukraine to counter Russian forces.
* India beat Chinese Taipei to enter the semi-finals of the 14th Asian Junior Football Championship.
* Cincinnati Open Tennis: Kvitova advances to final.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.
புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30) வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த ...