கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (07-09-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

செப்டம்பர் 07, 2022



பொதுமக்கள் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் உள்ள சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உணர்ச்சிவேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அமைதியும், ஒற்றுமையும் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




அஸ்வினி : சாதகமான நாள். 


பரணி : பொறுமை வேண்டும்.


கிருத்திகை : ஒற்றுமை மேம்படும்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 07, 2022



உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகளின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் நிறைவேறும். பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மைக்கான சூழ்நிலையும் ஏற்படும். வாகன பராமரிப்பு தொடர்பான விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும். 


ரோகிணி : அனுபவம் உண்டாகும். 


மிருகசீரிஷம் : விரயங்கள் ஏற்படும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 07, 2022



செய்யும் செயல்பாடுகளில் சற்று பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பத்திரம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். ஒப்பந்தம் தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும். 


திருவாதிரை : விழிப்புணர்வுடன் செயல்படவும்.


புனர்பூசம் : காலதாமதமான நாள்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 07, 2022



நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கி  மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




புனர்பூசம் : ஒத்துழைப்பு மேம்படும்.


பூசம் : ஆவணங்கள் கிடைக்கும். 


ஆயில்யம் : நெருக்கம் அதிகரிக்கும். 

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 07, 2022



புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திருப்திகரமான சூழல் அமையும். எந்தவொரு செயலையும் தன்னம்பிக்கையோடு செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மகம் : உற்சாகமான நாள்.


பூரம் : தன்னம்பிக்கை மேம்படும்.


உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 07, 2022



சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் உள்ள சில சூட்சுமங்களை கற்று கொள்வீர்கள். கற்பனை தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திரம் : அனுகூலமான நாள்.


அஸ்தம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.


சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 07, 2022



இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் புதுவிதமான சூழ்நிலைகள் அமையும். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். தாயாருடன் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். அரசு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




சித்திரை : புதுமையான நாள்.


சுவாதி : விவாதங்கள் நீங்கும்.


விசாகம் : சிந்தனைகள் உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 07, 2022



வியாபாரத்தில் வேலையாட்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். மனதில் தன்னம்பிக்கையுடன் எந்தவொரு செயலையும் மேற்கொள்வீர்கள். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். 


அனுஷம் : சிந்தித்து செயல்படவும்.


கேட்டை : வெற்றிகரமான நாள்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 07, 2022



புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகம் ரீதியான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் செலவுகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆசைகள் அதிகரிக்கும். குழப்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மூலம் : அறிமுகம் கிடைக்கும்.


பூராடம் : சாதகமான நாள்.


உத்திராடம் : ஆசைகள் அதிகரிக்கும்.  

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 07, 2022



வியாபாரத்தில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும் நீங்கும்.  மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த உதவி சாதகமாக அமையும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




உத்திராடம் : மேன்மையான நாள். 


திருவோணம் : உதவி கிடைக்கும்.


அவிட்டம் : ஏற்ற, இறக்கமான நாள்.

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 07, 2022



எதிர்பாராத சில செய்திகளால் அலைச்சல்கள் உண்டாகும். மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் கட்டுப்பாடுகள் குறையும். செய்தொழிலில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




அவிட்டம் : அலைச்சல் உண்டாகும். 


சதயம் : அனுகூலமான நாள். 


பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 07, 2022



உத்தியோகம் ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் அமையும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.


உத்திரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.


ரேவதி : மாற்றமான நாள்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2022 - School Morning Prayer Activities...

 திருக்குறள் :


பால்: பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: இரவு


குறள் : 1052

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை

துன்பம் உறாஅ வரின்.


பொருள்:

வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்


பழமொழி :

The resolved mind has no cares.


துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. தேனீ எறும்பு போல சுறுசுறுப்பாக உழைக்க முயற்சிப்பேன். 


2. என்னுடைய உழைப்பு பெயருக்காக அல்ல பேர் வாங்கும் அளவுக்கு உழைப்பேன்


பொன்மொழி :


கொல்லாமை என்னும் நெறி பலவகையான சுகங்களை அளிக்கவல்லது.


பொது அறிவு :


1.சதுரங்க அட்டையில் மொத்தம் எத்தனை சதுரங்கம் உள்ளன ?


 64 .


 2.பைசா கோபுரத்தில் மொத்தம் எத்தனை படிக்கட்டுகள்?


 294.



English words & meanings :


graf·fi·ti - Drawings or inscriptions made on a wall without permission. Noun. There was bold graffiti on the wall. அனுமதி இல்லாமல் வரையப்படும் சுவர் அடி ஓவியம். பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கார்பன் அணுக்களின் சங்கிலியால் ஆனது. அதனால் தேங்காய் பாலை சேர்த்துக் கொள்வது நல்லது. இது உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும்.


NMMS Q 55:


280 நபர்கள் ஒரு விமானத்தில் இரண்டு முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் 1400 நபர்கள்__________ முறை பயணம் செய்யலாம்? 


விடை: 10


நீதிக்கதை


ஏன் புற்களை சாப்பிடுகிறீர்கள்?


ஒரு பணக்கார மேனேஜர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தபொழுது சாலையில் இருவர் புற்களை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கிறார். இதைப் பார்த்ததும் அவர் வியப்புற்று டிரைவரிடம் காரை நிறுத்தக் கூறுகிறார்.


பின் அந்த இருவரின் அருகில் சென்று, நீங்கள் ஏன் இப்படி புற்களை உண்கிறீர்கள் எனக் கேட்கிறார். உடனே அவர்களில் ஒருவன், எங்களிடம் உணவு சாப்பிடுவதற்கான பணம் இல்லை, எனவே நாங்கள் புற்களை தான் உண்ண வேண்டும் என்கிறார். உடனே அந்த மேனேஜர், சரி நீங்கள் என் வீட்டிற்கு வாருங்கள், நான் உங்களுக்கு உண்ண கொடுக்கிறேன் என்கிறார்.


உடனே அந்த ஏழை, ஐயா.. எனக்கு ஒரு மனைவியும் ஐந்து குழந்தைகளும் இருக்கிறார்கள். அதோ அந்த மரத்தடியில் இருக்கிறார்கள் என்கிறார். உடனே மேனேஜர்,அவர்களையும் அழைத்து வா எனக் கூறி விட்டு, பக்கத்தில் நின்றிருந்த மற்றொரு ஏழையிடம்... நீயும் இவர்களுடன் வரலாம் என்கிறார். உடனே அந்த மற்றொரு ஏழை, ஐயா... எனக்கு ஒரு மனைவியும் ஏழு குழந்தைகளும் இருக்கிறார்கள் என்கிறார்.


உடனே அந்த மேனேஜர், சரி அவர்களையும் அழைத்து வாருங்கள் என்கிறார். இவர்கள் அனைவரையும் அந்த பெரிய காரில் அமர்த்தி, அந்த மேனேஜர் அவர் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அப்பொழுது அந்த ஏழைகளில் ஒருவர், ஐயா.. உங்களுக்கு மிகவும் இளகிய மனது, எங்கள் எல்லோரையும் உங்களுடன் இப்படி அழைத்துக் கொண்டு செல்கிறீர்களே என்கிறான்.


மேனேஜர் உடனே, இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கின்றது, உங்களுக்கு என் வீடு அமைந்துள்ள இடம் மிகவும் பிடிக்கும். ஏறத்தாழ அங்கே உள்ள புற்கள் ஒரு மீட்டர் அளவிற்கு வளர்ந்து இருக்கின்றது என்றார்.


நீதி:யாரையும் எளிதில் நம்பிவிடாதே...


இன்றைய செய்திகள்


07.09.22


* முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை அரசாணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு.


*ஒகேனக்கல் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: 1.36 லட்சம் கன அடியாக நீர்வரத்து உயர்வு.


*திண்டிவனம் அருகே பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு.


* இளைய சமுதாயத்துக்கு தரமான கல்வி வழங்கவே புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது என அதன் வரைவுக் குழு தலைவரும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான கே.கஸ்தூரி ரங்கன் தெரிவித்துள்ளார்.


* பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் அடுத்த வாரத்தில் விசாரணை நடைபெறும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.


* நாடு முழுவதும் 14,500  பள்ளிகள் பிஎம் ஸ்ரீ   (PM-SHRI) திட்டத்தின் கீழ் மாடல் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.


* சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 7 பேர் உயிரிழந்தனர்.


* பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வாகி உள்ளார்.


* கைப்பந்து போட்டி: புரசைவாக்கம் பெண்கள் அரசு பள்ளி 'சாம்பியன்'


* இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய முதன்மை ஸ்பான்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


* ராஞ்சியில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு  சேலம்- ஜலகண்டாபுரம் வீரர்  

மணிவண்ணன்    தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Today's Headlines


*High Court refuses to stay the Ordinance for admission to postgraduate medical students.


 *Okanagan Cauvery floods again: Water flow rises to 1.36 lakh cubic feet.


 * Pallavar era Kotravai sculpture found near Tindivanam.


 * K. Kasthuri Rangan, Chairman of the Drafting Committee and former ISRO Chairman, said that the new National Education Policy was created to provide quality education to the younger generation.


* The case filed against the 10 percent reservation system for the economically backward upper classes will be heard next week in a 5-judge constitution bench comprising the Chief Justice of the Supreme Court, the Chief Justice said.


 * 14,500 across the country Prime Minister Modi has said that the schools will be upgraded to model schools under the PM-SHRI scheme.


*  A powerful earthquake struck China's Sichuan province yesterday.  In this, 7 people died.


 * Liz Truss has been elected as the new Prime Minister of Britain.


 * Volleyball Tournament: Purasaivakkam Girls Government School 'Champion'


*The Board of Cricket in India has announced that it has chosen a new primary sponsor for the Indian cricket team.


 * Salem- Jalagandapuram player Manivannan has been selected for the Indian  Paralympic cricket tournament to be held in Ranchi.



EMIS Website புதிய தோற்றத்துடன் Update செய்யப்பட்டுள்ளது. புதிதாக கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள்...



 EMIS Website புதிய தோற்றத்துடன் Update செய்யப்பட்டுள்ளது. புதிதாக கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள்...








  • Enrollment
  • Students Admission
  • Students Raise Request
  • Students Pending Request
  • Promotion
  • Students TC Details
  • Student List
  • Student List
  • Students Summary
  • Student Physical Safety
  • Student Details
  • Tagging
  • Health & Wellbeing
  • Welfare & Schemes Scholarships
  • Special Cash Incentive



School




















தலைமையாசிரியர் இடமாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்விற்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாணை நகல் (Judgment Copy of Madras High Court dismissing case against Headmaster Transfer / Promotion Counselling) (IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED: 29.08.2022 - CORAM: THE HON'BLE MR. JUSTICE D.KRISHNAKUMAR - W.P.Nos.17632, 18158, 17500, 17608, 17213, 17698, 17768, 17205, 17622 and13728 of 2022 and WMP.No.16903, 16873, 16502, 16985, 17060, 16493, 16899 and 13017 of 2022)...



>>> தலைமையாசிரியர் இடமாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்விற்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின்  தீர்ப்பாணை நகல் (Judgment Copy of Madras High Court dismissing case against Headmaster Transfer / Promotion Counselling) (IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED: 29.08.2022 - CORAM: THE HON'BLE MR. JUSTICE D.KRISHNAKUMAR - W.P.Nos.17632, 18158, 17500, 17608, 17213, 17698, 17768, 17205, 17622 and13728 of 2022 and WMP.No.16903, 16873, 16502, 16985, 17060, 16493, 16899 and 13017 of 2022)...





டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் உரை (Minister of School Education Mr. Anbil Mahesh Poiyamozhi's Speech In the Dr. Radhakrishnan award ceremony)...



>>> டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் உரை (Minister of School Education Mr. Anbil Mahesh Poiyamozhi's Speech In the Dr. Radhakrishnan award ceremony)...






டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் புள்ளிவிவரப் பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவித்து, கற்பித்தல் பணிக்கு அதிக நேரம் ஒதுக்க தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திரு.திண்டுக்கல் லியோனி அவர்களின் கோரிக்கை உரை (Mr. Dindigul Leoni, President of Tamil Nadu Textbook Corporation Speech in Dr. Radhakrishnan award presentation to release teachers from EMIS work and devote more time to teaching work)...



>>> டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் புள்ளிவிவரப் பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவித்து, கற்பித்தல் பணிக்கு அதிக நேரம் ஒதுக்க தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திரு.திண்டுக்கல் லியோனி அவர்களின் கோரிக்கை உரை (Mr. Dindigul Leoni, President of Tamil Nadu Textbook Corporation Speech in Dr. Radhakrishnan award presentation to release teachers from EMIS work and devote more time to teaching work)...





Today's (06-09-2022) Wordle Answer...

                                                            

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (06-09-2022) Wordle Answer: TAUNT










 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings

+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...