கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment) - 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தேர்வு தேதி அறிவிப்பு - Common Examinations - தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள் (Summative Assessment - Class 1 to Class 5 Exam Date Notification - Common Examinations - Joint Proceedings of Director of Elementary Education and State Council of Educational Research and Training)...

 


>>> தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment) - 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தேர்வு தேதி அறிவிப்பு - Common Examinations - தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள் (Summative Assessment - Class 1 to Class 5 Exam Date Notification - Common Examinations - Joint Proceedings of Director of Elementary Education and State Council of Educational Research and Training)..



தொகுத்தறி மதிப்பீடு தேர்வு எண்ணும் எழுத்தும் வகுப்புகளுக்கு செயலி வழியாக 19.09.2022 முதல் 30.09.2022 வரை நடைபெறும். நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 26.09.2022 முதல் 30.09.2022 வரை வினாத்தாள் மூலம் தேர்வு நடைபெறும்..





உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியல் (HS HM & HSS HM to DEO Promotion Panel) - கூடுதல் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்...



>>> உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியல் (HS HM & HSS HM to DEO Promotion Panel) - கூடுதல் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்...







Today's (13-09-2022) Wordle Answer...

                                                                   

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (13-09-2022) Wordle Answer: ALPHA







 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.09.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.09.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால்: பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: இரவு


குறள் : 1060

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை

தானேயும் சாலும் கரி.


பொருள்:

இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்கு அவனுக்கு ஏற்பட்ட வறுமையே சான்றாகும்.


பழமொழி :

Example is better than perception.



முன்னுதாரணமே கட்டளையை விட மேலானது.


இரண்டொழுக்க பண்புகள் :


1. "உன் திறமையோடு உன் வியர்வையும்(உழைப்பும்) சேரும் போது வெற்றி வேர்விடும். 


2. எனவே உழைத்திடு உறுதியாய். உயர்ந்திடு வானத்திற்கு.


பொன்மொழி :


உன் இலக்கை அடைய வேண்டும் என்றால் முதலில் நீ இரண்டு செயல்களை செய்ய வேண்டும்! முயற்சி, பயிற்சி.


பொது அறிவு :


1.சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம் எது? 


 மெலானின். 


 2. ஜனநாயகம் என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்? 


ஆபிரகாம் லிங்கன்.


English words & meanings :


knav·er·y - Dishonest or crafty dealing. It is very dangerous to be a friend of a knavery. Noun. வஞ்சகர். பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது. தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.


NMMS Q 58:


Cheese : Milk :: Sugar : ? a) Molasses. b) Palm. c) Sugarcane. d) Syrup.


 Answer: Sugarcane


நீதிக்கதை


ஆட்டுக்குட்டி


ஒருவன் சந்தைக்குச் சென்று ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கிக்கொண்டு வந்தான். அது சிறியதாக இருந்த காரணத்தால் இரக்கப்பட்டு தோளில் தூக்கிச் சுமந்துகொண்டே வந்தான். அவனுடைய கிராமம் இன்னும் தூரத்தில் இருந்தது. அந்த ஆள் ஒரு அப்பாவிபோல் இருந்ததால் வழியில் பார்த்த நான்கு குடிகாரர்களுக்கு அந்த ஆட்டுக்குட்டியை ஏமாற்றிப் பறித்து விருந்துண்ண ஆசை ஏற்பட்டது. அவன் போன பாதையிலேயே வேறு வழியில் முன்னால்போய் நால்வரும் தனித்தனியே கொஞ்சதூரம் இடைவெளி விட்டு வழியில் காத்திருந்தனர். 


அவன் பக்கம் வந்தவுடன் முதலாமவன் ஏய் எதுக்காக ஒரு கழுதைக் குட்டியைச் சுமந்து செல்கிறாய்? என்று கேட்டான். இவன் ஏமாறவில்லை. அவன் ஏதோ கேலி செய்கிறான் என்று சொல்லி சட்டை செய்யாமல் போனான். கொஞ்சதூரம் போனவுடன் இரண்டாமவன் எதிரில் வந்து, என்னப்பா எதுக்கு ஒரு பன்றியைச் சுமந்துட்டுப்போறே? என்று சொல்லிச் சிரித்தான். இவனுக்கு என்னமோ போல் ஆகிவிட்டது. 


மேலும் கொஞ்சதூரம் போனவுடன் மூன்றாமவன் எதிரில் வந்து. அட என்னப்பா செத்த பாம்பை இப்படியா கழுத்திலே சுத்திக்கிட்டுப் போவாங்க? என்றான். இவனுக்கு உண்மையாலுமே சந்தேகம் வந்துவிட்டது. என்ன இப்படி ஒவ்வொருத்தனும் ஒரு மாதிரியா சொல்லிட்டுப் போறான், நான் வாங்கினது ஆட்டுக்குட்டிதானா? அல்லது வேறெதாவது கிரகமா? என்று பயந்தவனாய் நடந்தான்.


நான்காமவனும் எதிரில் வந்து ஏப்பா தனியா ஒரு பிணத்தைத் தூக்கிட்டுப்போறே அப்படின்னு கேட்டான். அவ்வளவுதான் இவனுக்கு சந்தேகம் உறுதியாகிவிட்டது. நாம் ஏதோ ஒரு குட்டி சாத்தானை ஆட்டுக்குட்டின்னு நினைத்து ஏமாந்து வாங்கிட்டு வந்துட்டோம்! என்று செல்லி அந்த ஆட்டுக்குட்டியைத் தூக்கிப் புதரில் எறிந்துவிட்டு ஓட்டம் பிடித்தான். சிறிது நேரத்தில் அந்த ஆட்டுக்குட்டி, அந்தக் குடிகாரர் நால்வருக்கும் உணவாயிற்று!


நீதி : நாம் ஏமாளியாக இருந்தால் மற்றவர் நம்மை எமாற்றுவது மிக எளிது.


இன்றைய செய்திகள்


13.09.22


* தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள 8,000 கள உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை விரைந்து முடிக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், டிஎன்பிஎஸ்சிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 12,840 அரசுப் பள்ளி மாணவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.


* நீலகிரி மற்றும் கோவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* ரூ.10 நாணயங்களை வாங்க மறுப்பவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. விழிப்புணர்வை மட்டுமே ஏற்படுத்த முடியும்: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்.


* சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகை அகழாய்வில் கண்டறியப்பட்ட 57 முதுமக்கள் தாழிகளில் இதுவரை 35 தாழிகளை திறந்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.


* கிழக்கு லடாக்கில் இந்தியாவும் சீனாவும் தங்கள் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை திட்டமிட்டபடி நடைபெறுகிறது என்று இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.


* அனல் மின் நிலையம் மீது தாக்குதல்; இருளில் மூழ்கிய கிழக்கு உக்ரைன்: ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம்.


*20 ஓவர் உலகக் கோப்பை: ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு- தமிழக வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.


* முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடக்கம்.


*தெற்காசிய பெண்கள் கால்பந்து: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி.


Today's Headlines


* The Madras High Court has directed the Tamil Nadu government and TNPSC to expedite the selection process for the 8,000 vacant field assistant posts in the Tamil Nadu Power Generation and Distribution Corporation.


* Out of 12,840 government school students who wrote the NEET exam in Tamil Nadu, only 4,447 passed.


* The Chennai Meteorological Department said that a red alert has been issued for the Nilgiris and Coimbatore.


 *Legal action cannot be taken against those who refuse to buy Rs.10 coins.  Can only create awareness: RBI officials explain.


 *Of the 57 old man's tombs discovered in Kontakhai excavations near Tiruppuvanam in Sivagangai district, 35 tombs have been opened and studied so far.


 *Indian Army Chief Manoj Pandey has said that India and China's withdrawal of their forces in eastern Ladakh is going as planned.


 *Attack on thermal power plant;  Eastern Ukraine in Darkness: Zelensky Condemns Russia


 *20-over World Cup: Rohit Sharma-led Indian team announced- Tamil Nadu players included.


*The Chennai Open tennis tournament in which leading players will participate started yesterday.


* South Asian Women's Football: Team India Qualifies for Semi-Finals.





சென்னையில் 16.09.2022 & 17.09.2022 ஆகிய நாட்களில் நடைபெறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் - கூட்டப் பொருள் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Review Meeting for All District Chief Educational Officers held at Chennai on 16.09.2022 & 17.09.2022 - Meeting Agenda - Proceedings of Tamil Nadu Commissioner of School Education) ந.க.எண்: 043443/ பிடி1/ இ2/ 2022, நாள்: 10-09-2022...



>>> சென்னையில் 16.09.2022 & 17.09.2022 ஆகிய நாட்களில் நடைபெறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் - கூட்டப் பொருள் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Review Meeting for All District Chief Educational Officers held at Chennai on 16.09.2022 & 17.09.2022 - Meeting Agenda - Proceedings of Tamil Nadu Commissioner of School Education) ந.க.எண்: 043443/ பிடி1/ இ2/ 2022, நாள்: 10-09-2022...






இன்றைய (13-09-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

செப்டம்பர் 13, 2022



மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வாழ்க்கை துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அஸ்வினி : காரியசித்தி உண்டாகும்.


பரணி : ஆதரவு கிடைக்கும். 


கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 13, 2022



செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு ஏற்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




கிருத்திகை : கவனத்துடன் செயல்படவும்.


ரோகிணி : புரிதல் உண்டாகும்.


மிருகசீரிஷம் : புதுமையான நாள்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 13, 2022



மாணவர்களுக்கு உயர்கல்வியில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மிருகசீரிஷம் : இன்னல்கள் நீங்கும். 


திருவாதிரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 13, 2022



தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தொழில் கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூக நிகழ்வுகளின் மூலம் மனதளவில் புரட்சிகரமான சிந்தனைகள் பிறக்கும். மறைமுகமாக இருக்கக்கூடிய திறமைகளின் மூலம் லாபம் அடைவீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும். 


பூசம் : முன்னேற்றம் ஏற்படும். 


ஆயில்யம் : லாபம் அடைவீர்கள்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 13, 2022



சொத்துக்கள் தொடர்பான பாகப்பிரிவினை முயற்சிகள் கைகூடும். வாகனத்தின் மூலம் தொழில் சார்ந்த ஆதாயம் உண்டாகும். தொலைபேசியின் வாயிலாக எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுருக்கமான பேச்சுக்களின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். சான்றிதழ் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விற்பனை சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் அமையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மகம் : முயற்சிகள் கைகூடும். 


பூரம் : ஆதரவு உண்டாகும்.


உத்திரம் : சாதகமான நாள்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 13, 2022



பேச்சுக்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய உணவு உண்பதை தவிர்க்கவும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். பொன், பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சிக்கல்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




உத்திரம் : நெருக்கடிகள் உண்டாகும்.


அஸ்தம் : இழுபறியான நாள். 


சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 13, 2022



வாழ்க்கை துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




சித்திரை : புரிதல் உண்டாகும்.


சுவாதி : மாற்றம் ஏற்படும். 


விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 13, 2022



உடல் ஆரோக்கியம் மேம்படும். திடீர் தனவரவு உண்டாகும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். போட்டிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்ப்புகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




விசாகம் : தனவரவு உண்டாகும்.


அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும். 


கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 13, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான சூழல் அமையும். கால்நடை தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும். சிந்தனைகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


பூராடம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.


உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 13, 2022



வியாபார பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். சக ஊழியர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்




உத்திராடம் : ஒத்துழைப்பு மேம்படும். 


திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


அவிட்டம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 13, 2022



குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். திறமைக்கு உண்டான மதிப்பு அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். மனதளவில் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அவிட்டம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


சதயம் : தன்னம்பிக்கை மேம்படும்.


பூரட்டாதி : வெற்றிகரமான நாள்.

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 13, 2022



மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவின் மூலம் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நட்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




பூரட்டாதி : சுபிட்சம் உண்டாகும். 


உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும்.


ரேவதி : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------





JEE - முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது (JEE - Main Exam Results Declared)...



 JEE - முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது (JEE - Main Exam Results Declared)...


2022ஆம் ஆண்டு ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தேர்வு முடிவுகள் jeeadv.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



ஜேஇஇ முதல்நிலை மற்றும் ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தோ்வு என இரு கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெற முடியும். மேலும், இந்தத் தோ்வில் முதல் 2.5 லட்சம் இடங்களில் வருபவா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல்-தொழில்நுட்ப படிப்புகளில் சோ்க்கை பெற முடியும்.




மாணவா்களின் வசதிக்காக ஜேஇஇ முதல்நிலைத் தோ்வானது ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு தோ்வுகளில் மாணவா் எதில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ, அதனையே சோ்க்கைக்கான மதிப்பெண்ணாக தெரிவு செய்துகொள்ள முடியும்.




அந்த வகையில் 2022-ஆம் ஆண்டுக்கான முதல்கட்ட முதல்நிலைத் தோ்வு ஜூன் மாதத்திலும், இரண்டாம் கட்ட முதல்நிலைத் தோ்வு ஜூலையிலும் நடத்தப்பட்டது. இரண்டு கட்டத்திலும் 10,26,799 போ் பதிவு செய்து, 9,05,590 போ் எழுதினா். இவா்களில், 4,04,256 மாணவ, மாணவிகள் இரண்டு கட்ட முதல்நிலைத் தோ்விலும் பங்கேற்று எழுதினா்.




ஐஐடியில் சேருவதற்கான ஜேஇஇ முதன்மை தேர்வில் இந்தாண்டு தேர்ச்சி பெற்ற 40,712 பேரில் 6,516 பேர் பெண்கள் ஆவர். கடந்த ஆண்டு ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 30% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்தாண்டு 26.17% ஆக குறைந்துள்ளது.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 Kalai Thiruvizha Banner

 கலைத் திருவிழா 2024-2025 Kalai Thiruvizha Banner HD >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...