>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு 29.09.2022, 30.09.2022 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெறுகிறது (The Promotion Counselling from the post of Middle School Headmaster to Block Education Officer will be held in Chennai on 29.09.2022, 30.09.2022) தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 14884/ ஐ1/ 2022, நாள்: 27-09-2022...
01.07.2022 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - அமைச்சரவை ஒப்புதல் (4% increase in Dearness Allowance for Central Government Employees and Pensioners from 01.07.2022 - Cabinet approves)...
01.07.2022 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - அமைச்சரவை ஒப்புதல் (4% increase in Dearness Allowance for Central Government Employees and Pensioners from 01.07.2022 - Cabinet approves)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் / பள்ளியில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மாறுதல் - கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Transfer to Ministerial staff working in the same office / school for more than 3 years - Additional instructions and Proceedings of Joint Director of School Education) ந.க.எண்: ந.க.எண்: 52556/ அ4/ இ3/ 2022, நாள்: 28-09-2022...
Today's (29-09-2022) Wordle Answer...
Today's (29-09-2022) Wordle Answer: SCALD
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.09.2022 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.09.2022 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் : அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் : 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
பொருள்:
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
பழமொழி :
Do not count your chickens before they are hatched.
மனக்கோட்டை கட்டாதே.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நான் வலது கையால் செய்யும் உதவி என் இடது கைக்கு கூட தெரிய கூடாது.
2. பிறருக்கு தெரியும் படி செய்தால் அது உதவி அல்ல விளம்பரம். கடவுளுக்கு பிரியம் இருக்காது .
பொன்மொழி :
ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதே போல் உங்கள் லட்சியத்தை ஒரே ஒருமுறை நினைப்பதன் மூலம் அடைய முடியாது அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்.
பொது அறிவு :
1.ராணுவ தினம் எப்போது ?
ஜனவரி 15 .
2. உலக எய்ட்ஸ் தினம் எந்த நாள் ?
டிசம்பர் 1
English words & meanings :
yawl - A ship's small boat, crewed by rowers. Noun. கப்பலில் உள்ள சிறிய படகு. பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அந்த வகையில் கொண்டைக்கடலையின் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு.
கொண்டைக்கடலையின் கிளைசெமிக் குறியீடு 28 மட்டுமே. அதனால் வறுத்த கொண்டைக்கடலை நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த ஸநாக்ஸாக இருக்கும்.
NMMS Q 70:
செப்டம்பர் 2018 சுனாமியால் மிகவும் பாதிப்படைந்த நாடு எது?
விடை: இந்தோனேஷியா
செப்டம்பர் 29
செப்டம்பர் 29: உலக இதய தினம்
உடலின் சில உறுப்புகள் இல்லாமல் நாம் வாழ்ந்துவிடமுடியும். ஆனால், இதயம் இல்லாமல் வாழ முடியாது. மனிதன் உயிர் வாழ இதயமே இன்றியமையாதது. மனித உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் இதயம்தான் பாதுகாக்கிறது. நம்முடைய ஆரோக்கியமான வாழ்வுக்கு இதயத்தின் ஆரோக்கியமே அடிப்படை. இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நீதிக்கதை
மனதை ஒருமுகப்படுத்தினால் வெற்றி
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஓர் ஊரில் தங்கியிருந்தார். அங்கு ஒரு நீரோடையும், பாலமும் இருந்தன. ஒரு நாள் சுவாமி விவேகானந்தர், நீரோடைக் கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு இளைஞர்கள் சிலர், முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள், முட்டையோடுகளை ஒரு நூலில் கட்டி, நீரோடையில் மிதக்க விட்டிருந்தார்கள். அந்த நூல், நீரோடைக் கரையிலிருந்த சிறிய ஒரு கல்லில் கட்டப்பட்டிருந்தது. நீரோடை நீரின் அசைவுக்கு ஏற்ப, நூலில் கட்டப்பட்டிருந்த முட்டையோடுகள் இலேசாக அசைந்து கொண்டிருந்தன.
இளைஞர்கள் பாலத்தில் நின்று, ஓடை நீரில் அசைந்து கொண்டிருக்கும் முட்டையோடுகளைச் சுடுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் துப்பாக்கியால் முட்டையோடுகளைச் சுட்டார்கள். ஆனால் அவர்கள் வைத்த குறி தவறித்தவறிப் போயிற்று. ஒரு முட்டையோட்டைக்கூட அவர்களால் சுட முடியவில்லை. இளைஞர்களின் இந்தச் செயலை விவேகானந்தர் பார்த்தார். இவர்களால் இந்த முட்டையோடுகளைச் சுட முடியவில்லையே! என்று நினைத்தார். அதனால் அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இதை அங்கிருந்த இளைஞர்களில் ஒருவன் கவனித்தான்.
அவன் விவேகானந்தரிடம், பார்ப்பதற்கு இந்த முட்டையோடுகளைச் சுடுவது சுலபமான செயல் போன்று தெரியும். ஆனால் நீங்கள் நினைப்பது போல், இந்த முட்டையோடுகளைச் சுடுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. நீங்களே முயற்சி செய்து பாருங்கள் அப்போது உங்களுக்கே தெரியும்! என்று கூறினான்.
சுவாமி விவேகானந்தர் துப்பாக்கியைக் கையில் எடுத்தார். அங்கிருந்த முட்டையோடுகளைக் குறி வைத்து சுட ஆரம்பித்தார். அப்போது அங்கு சுமார் பன்னிரெண்டு முட்டையோடுகள் நீரோடையில் மிதந்து கொண்டிருந்தன. விவேகானந்தர் வைத்த குறி ஒன்றுகூட தவறவில்லை. வரிசையாக அவர் ஒவ்வொரு முட்டையோடாகச் சுட்டார். அங்கிருந்த அத்தனை முட்டையோடுகளும் வெடித்துச் சிதறின. இதைப் பார்த்து அங்கிருந்த இளைஞர்கள் பெரிதும் வியப்படைந்தார்கள்.
அவர்கள் விவேகானந்தரிடம், நீங்கள் துப்பாக்கிச் சுடுவதில் ஏற்கெனவே நல்ல பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதனால் தான் நீங்கள் அத்தனை முட்டையோடுகளையும் ஒரு குறிகூடத் தவறாமல் சுட்டீர்கள், இல்லையா? என்று வினவினார்கள். அதற்கு விவேகானந்தர், என் வாழ்நாளில் இன்றுதான் நான் முதன் முறையாகத் துப்பாக்கியைத் தொடுகிறேன் என்றார். அவர் கூறியதை இளைஞர்களால் நம்ப முடியவில்லை.
அவர்கள், அப்படியானால் ஒரு குறி கூடத் தவறாமல் உங்களால் எப்படி முட்டையோடுகளைச் சுட முடிந்தது? என்று கேட்டார்கள். அதற்கு விவேகானந்தர், எல்லாம் மனதை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் எந்தச் செயலும் வெற்றியைத் தரும் என்று பதிலளித்தார்.
மேலும் சுவாமி விவேகானந்தர் மன ஒருமைப்பாடு பற்றி இவ்விதம் கூறியிருக்கிறார் வெற்றியின் ரகசியம் மனதை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. உயர்ந்த மனிதனையும், தாழ்ந்த மனிதனையும் ஒப்பிட்டுப் பார். இருவருக்கும் உள்ள வேறுபாடு, தங்கள் மனதை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கும்.மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளரவளர, அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால் இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி.
இன்றைய செய்திகள்
29.09.22
* தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
* மருத்துவ பட்ட மேற்படிப்பு, பட்டய படிப்பு மற்றும் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் தேசிய வாரிய பட்ட படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
* மோசடி பத்திர பதிவை ரத்து செய்யும் நடைமுறை - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
* பிஎச்டி மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை ஆய்விதழ்களில் பிரசுரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று புதிய விதிமுறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்துள்ளது.
* விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு போன்ற ‘விஞ்ஞான் ரத்னா’ என்ற புதிய விருதை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
* சிறைப்பிடிக்கும் வீரர்களை ரஷியா சித்திரவதை செய்வதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
* ரஷியாவில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி.
* தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை அக்டோபர் 1-ந் தேதி வரை நீட்டித்து இருப்பதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
* சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை - இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் முன்னேற்றம்.
Today's Headlines
* Minister M. Subramanian has said that dengue is under control in Tamil Nadu.
* Minister M. Subramanian released the rank list for Postgraduate Medical Degree, Postgraduate Diploma and Postgraduate Dentistry and National Board Degree Course.
* The process of cancellation of fraudulent deed registration was initiated by Prime Minister M.K.Stalin.
* The University Grants Committee has decided to implement a new regulation that says PhD students are not required to publish their research papers in journals.
* The central government is planning to give a new award called 'Vignan Ratna', similar to the Nobel Prize, to scientists.
* Ukraine accuses Russia of torturing captive soldiers.
* It has been reported that the corona infection has suddenly increased in Russia.
* India 'A' team won the one day cricket match against New Zealand.
* The Union Sports Ministry has announced that the application deadline for the National Sports Award has been extended till October 1.
* International Badminton Rankings - Indian Player HS Pranai's Progress.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
இன்றைய (29-09-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
செப்டம்பர் 29, 2022
எதிர்பாராத சில புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். சமூக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளியூர் பயணங்களில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : அறிமுகம் கிடைக்கும்.
பரணி : ஈடுபாடு உண்டாகும்.
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
ரிஷபம்
செப்டம்பர் 29, 2022
சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்காலம் தொடர்பான சேமிப்பு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். தாய்மாமன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். பணிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
கிருத்திகை : சேமிப்பு அதிகரிக்கும்.
ரோகிணி : பொறுப்புகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : தீர்ப்பு கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
செப்டம்பர் 29, 2022
மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வியாபார பணிகளில் இருப்பவர்கள் சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயத்தை மேம்படுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் விரிவடையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மிருகசீரிஷம் : இலக்குகள் பிறக்கும்.
திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : ஒற்றுமை மேம்படும்.
---------------------------------------
கடகம்
செப்டம்பர் 29, 2022
எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவமும், சோர்வும் உண்டாகும். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். மனதில் பெற்றோர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : சோர்வு உண்டாகும்.
பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : மாற்றமான நாள்.
---------------------------------------
சிம்மம்
செப்டம்பர் 29, 2022
தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எழுத்து சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது. எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் கவனத்துடன் செயல்படவும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களுக்கு மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : முன்னேற்றமான நாள்.
பூரம் : கவனத்துடன் செயல்படவும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
கன்னி
செப்டம்பர் 29, 2022
சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : நம்பிக்கை ஏற்படும்.
அஸ்தம் : அறிமுகம் கிடைக்கும்.
சித்திரை : சாதகமான நாள்.
---------------------------------------
துலாம்
செப்டம்பர் 29, 2022
மாணவர்களுக்கு ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். வேலை மாற்றம் நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
சித்திரை : பிரச்சனைகள் நீங்கும்.
சுவாதி : காலதாமதம் உண்டாகும்.
விசாகம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
செப்டம்பர் 29, 2022
குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
விசாகம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
அனுஷம் : சோர்வு உண்டாகும்.
கேட்டை : நெருக்கடியான நாள்.
---------------------------------------
தனுசு
செப்டம்பர் 29, 2022
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். மனதில் ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். கல்வி பணிகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தடைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மூலம் : புத்துணர்ச்சியான நாள்.
பூராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : சுறுசுறுப்பான நாள்.
---------------------------------------
மகரம்
செப்டம்பர் 29, 2022
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். வெளிவட்டாரங்களில் மதிப்பு மேம்படும். வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : நெருக்கம் அதிகரிக்கும்.
திருவோணம் : மதிப்பு மேம்படும்.
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
கும்பம்
செப்டம்பர் 29, 2022
எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான வர்த்தக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : உதவி கிடைக்கும்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
---------------------------------------
மீனம்
செப்டம்பர் 29, 2022
அரசு தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். புதிய முயற்சிகளில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
உத்திரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.
ரேவதி : புரிதல் ஏற்படும்.
---------------------------------------
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணிநியமன ஆணை வழங்கினார் - செய்தி வெளியீடு எண்: 1692, நாள்: 28-09-2022 (Chief Minister of Tamil Nadu has issued recruitment order to 1024 candidates selected for the post of Government Polytechnic College Lecturer - Press Release No: 1692, Date: 28-09-2022)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Term 3 - Ennum Ezhuthum Training - SCERT Director's Proceedings
மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2411...