கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.11.2022 - School Morning Prayer Activities...


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.11.2022 - School Morning Prayer Activities...

 

திருக்குறள் 


பால்: அறத்துப்பால்



அதிகாரம்:அறன் வலியுறுத்தல்


குறள் 39:


அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல.


விளக்கம்: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.


நீதிக் கதை


ஆசை


விக்னேஷின் மாமா மதுரையிலிருந்து அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். விக்னேஷ் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது இல்லை. இவன் வகுப்பில் படிக்கும் எம். எல். ஏ. மகனிடம் கூட இப்படிப்பட்ட பேனா இல்லை. பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபளப்பாக இருந்தது. பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டி மகிழ்ந்தான். வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய விக்னேஷை உற்சாகப்படுத்த விரும்பிய அவன் மாமா. நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய் என்று கேட்டார். நான் படித்து கலெக்டராக வருவேன் என்றான் விக்னேஷ். இதைக் கேட்ட அவன் அப்பா விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும் என்றார். 


ஒரு ஏழையின் மகன் கலெக்டராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று நினைத்தான். வகுப்பில் கவலையாக இருந்தான். வகுப்பு ஆசிரியர் அவனைப் பார்த்து விசாரித்தபோது, அவன் கவலையை சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய் என்றார். அன்று மாலை பள்ளியின் ஆண்டு விழா. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது, கூட்டத்தில் உட்கார்ந்திருந்த விக்னேஷிடம் வந்த ஆசிரியர், உன் சந்தேகத்தை அவரிடமே கேள் என்றார். தைரியமாக எழுந்து கலெக்டரிடம் ஒரு ஏழை விவசாயின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று கேட்டான். 


நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக்கூட வாங்க ஆசைப்படலாம். உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது என்று பேசி முடித்தார் கலெக்டர். இருபது ஆண்டுகள் கழிந்தன. அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் விக்னேஷ் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார். நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலெக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது என்று சொன்னபோது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 


நீதி :

விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.


பழமொழி :


"A light heart lives long. 

மகிழ்ச்சியான மனமே நீண்ட காலம் வாழ்கிறது."


இரண்டொழுக்க பண்பாடு 


.1. எ‌ந்த காரியம் எ‌ன்றாலு‌ம் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன். 2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன்.


பொன்மொழி 

"உங்கள் 24 மணிநேரத்தை மாற்றினால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றுவீர்கள். --எரிக் தாமஸ்


பொது அறிவு 


1. எந்த உலோகத்தின் உப்புகள் சூரிய ஒளியால் பாதிக்கப்படுகின்றன ?


 வெள்ளி .


 2.விண்வெளிக்கு முதல் முதலில் சென்ற பெண் நாயின் பெயர் என்ன ?


 லைகா.


English words - meanings


Zoo pathology - study of animal diseases. Noun. விலங்குகள் நோய் குறித்த படிப்பு . 


ஆரோக்கிய வாழ்வு


இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் சர்க்கரை நோய் பிரச்சனை  பெரும்பாலானோரிடம் காணப்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, நாவல் பழ விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் பொடியை தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.


NMMS

__________டச்சுக்காரர்களின் தலைநகராக இருந்தது. 


விடை :பழவேற்காடு


செய்திகள் :


* திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை மற்றும் குப்பனத்தம் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தென்பெண்ணையாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


* மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 45,826 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.


* தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* ஒரே நாளில் 108 இடங்களில் கனமழை பெய்தது - புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி 16-ம் தேதி உருவாகிறது.


* மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 6 மாதங்களில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


* 2-வது முறை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் உயிரிழக்கும் ஆபத்து - ‘நேச்சர் மெடிசின்’ இதழில் ஆய்வுத் தகவல்.


* ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரமாக ஒமைக்ரான் எக்ஸ்பிபி வகை கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இது 4-வது அலை என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


* பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 2-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து.


* 2024 -2027 ஆம் ஆண்டுக்கு இடையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியை நடத்தும் நாடுகள் குறித்து ஐசிசி அட்டவணை வெளியிட்டுள்ளது.


* ஆசிய குத்துச்சண்டை: இந்திய வீரர் ஷிவ தபாவுக்கு வெள்ளிப்பதக்கம்.


English News 


* In Tiruvannamalai District water released excessively from both Sattanur dam and kuppanaththam dam. Due to this there is flooding both in Thenpennai and Seyyaru rivers. So government gave warning to the people living in the banks.


* In Mayiladuthurai district 16, 000 were people were made to stay in the relief camps and nearly 45,826 hectare crops were affected by flood water by Minister K. K. S. S. R. Ramachandran . 


* There will be showers of rain for 4 days in TN as per the weather forecast 

In a single day there is a record of heavy rain in 108 places and another depression will form on 16th

 

* The Draft Report for State Education Policy will be submitted to TN government within 6 months 


* According to "Nature Medicine" Magazine if a person gets affected second time by 'Corona' there is a danger of losing lives

In Australia the variant omicron XPP is spreading fast. The health officers warned this as 4th wave. So the Australian government made many restrictions.


* England won T-20 World Cup 2nd time by defeating Pakistan


* ICC released the list of countries which are going to play for the period of 2024 - 2027 for under 19


* Asian boxer Shiva Dabah won the gold medal. 


இன்றைய (14-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 14, 2022



சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதில் செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கல்வி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். விவேகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அஸ்வினி : செல்வாக்கு அதிகரிக்கும். 


பரணி : எண்ணங்கள் கைகூடும். 


கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும். 

---------------------------------------



ரிஷபம்

நவம்பர் 14, 2022



மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். செய்கின்ற முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். கைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு நினைவுத்திறன் மேம்படும். எதையும் சமாளிக்கக்கூடிய மனோபலம் உண்டாகும். அசதிகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




கிருத்திகை : கவலைகள் குறையும். 


ரோகிணி : மேன்மையான நாள்.


மிருகசீரிஷம் : மனோபலம் உண்டாகும்.

---------------------------------------



மிதுனம்

நவம்பர் 14, 2022



தனவரவு சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். பேச்சுத்திறமையின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். நண்பர்களின் மூலம் தனவரவிற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.


திருவாதிரை : ஆர்வம் உண்டாகும். 


புனர்பூசம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

---------------------------------------



கடகம்

நவம்பர் 14, 2022



மனதில் சொந்த ஊர் செல்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எண்ணிய சில பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களில் உள்ள உண்மையை அறிந்து முடிவு எடுக்கவும். புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் ஏற்படும். விருத்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.


பூசம் : அனுபவம் உண்டாகும். 


ஆயில்யம் : ஆர்வம் ஏற்படும்.

---------------------------------------



சிம்மம்

நவம்பர் 14, 2022



நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




மகம் : நெருக்கம் அதிகரிக்கும். 


பூரம் : ஆதரவு கிடைக்கும். 


உத்திரம் : சாதகமான நாள்.

---------------------------------------



கன்னி

நவம்பர் 14, 2022



துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மனதில் எண்ணிய இலக்கை அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : தெளிவு பிறக்கும்.


அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும்.


சித்திரை : வாய்ப்புகள் அமையும்.

---------------------------------------



துலாம்

நவம்பர் 14, 2022



சமூக பணிகளில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். வேளாண்மை சார்ந்த பணிகளில் ஆலோசனைகளின் மூலம் தெளிவு உண்டாகும். திட்டமிட்ட செயல்பாடுகளில் எண்ணிய முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். ஆசைகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




சித்திரை : பொறுப்புகள் மேம்படும்.


சுவாதி : முடிவு கிடைக்கும்.


விசாகம் : மதிப்பு அதிகரிக்கும்.

---------------------------------------



விருச்சிகம்

நவம்பர் 14, 2022



முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வதற்கான சூழல் அமையும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




விசாகம் : அங்கீகாரம் கிடைக்கும். 


அனுஷம் : மாற்றம் உண்டாகும்.


கேட்டை : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------



தனுசு

நவம்பர் 14, 2022



எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். செய்கின்ற செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். தடைபட்ட சில வரவு கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி தோன்றி மறையும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மூலம் : பொறுமையுடன் செயல்படவும்.


பூராடம் : சோர்வு உண்டாகும். 


உத்திராடம் : விவாதங்களை தவிர்க்கவும். 

---------------------------------------



மகரம்

நவம்பர் 14, 2022



பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மறைமுகமான எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். செய்கின்ற முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். உறுதி வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




உத்திராடம் : திருப்திகரமான நாள்.


திருவோணம் : எதிர்ப்புகள் குறையும். 


அவிட்டம் : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------



கும்பம்

நவம்பர் 14, 2022



மனதில் நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். மற்றவர்களின் மீதான கருத்துக்களில் கவனம் வேண்டும். பணிகளில் உடல் உழைப்பு அதிகரிக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உழைப்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




அவிட்டம் : சிந்தனைகள் உண்டாகும். 


சதயம் : கவனம் வேண்டும்.


பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

---------------------------------------



மீனம்

நவம்பர் 14, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். கலைகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். சிற்றின்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




பூரட்டாதி : அனுபவம் வெளிப்படும்.


உத்திரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும். 


ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------


மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஏதுவான சூழலை உருவாக்குதல் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுதல் நோக்கில் தேதி வாரியாக மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் (உறுதிமொழி, Slogans, ஓரிகாமி (காகித பறவை செய்தல்), சிறார் திரைப்படம், சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து, விளையாட்டுப் போட்டிகள்) குறித்த தகவல்கள் (Information on date-wise activities (Pledge, Slogans, Origami (Paper Bird Making), Juvenile Film, Tamil Thai Vaazhthu in Sign Language, Sports Competitions) to create an enabling environment for differently abled children and help them progress)...


>>> மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஏதுவான சூழலை உருவாக்குதல் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுதல் நோக்கில் தேதி வாரியாக மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் (உறுதிமொழி, Slogans, ஓரிகாமி (காகித பறவை செய்தல்), சிறார் திரைப்படம், சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து, விளையாட்டுப் போட்டிகள்) குறித்த தகவல்கள் (Information on date-wise activities (Pledge, Slogans, Origami (Paper Bird Making), Juvenile Film, Tamil Thai Vaazhthu in Sign Language, Sports Competitions) to create an enabling environment for differently abled children and help them progress)...



💥💥💥 முக்கியச் செய்தி

தலைமை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்......


👉 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஏதுவான சூழலை உருவாக்குதல் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுதல் நோக்கில் கீழ்கண்ட செயல்பாடுகளை அந்தந்த தேதிகளில், கீழ்க்கண்ட செயல்பாடுகளை செய்தல் வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது....


👉 *14/11/22-*   உறுதிமொழி எடுத்தல்

🔥🔥🔥

*IE முக்கிய செய்தி*


*நாளைய நிகழ்வு*


👉 *14/11/22 - உறுதிமொழி எடுத்தல்.*


💂‍♀️ *உறுதிமொழி*💂‍♂️


தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களாகிய நாங்கள் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் ஓர் உறுதி ஏற்கிறோம்.



சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் நலனுக்காகவும் எப்போதும் உடன் நிற்போம் என்றும், அவர்களுக்கு இருக்கக்கூடிய சமூக, பொருளாதார, பண்பாட்டுச் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க எங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்றும் உறுதி கூறுகிறோம்.


முழுமையாகவும், சமத்துவத்துடனும் வெற்றிகரமாகவும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இங்கு எந்தப் பாகுபாடும் இன்றி, அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அவர்களுக்கு அளிப்பது இன்றியமையாதது என நாங்கள் உணர்ந்திருக்கிறோம். 


அவர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே முக்கியத்துவம் அளித்து நட்புணர்வை வளர்ப்போம் என்றும் உறுதிமொழி ஏற்கிறோம்....



👉 மேற்கண்ட உறுதிமொழியினை அனைத்து மாணவர்களும் எடுக்கும் வகையில்  பள்ளியில் ஏற்பாடு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது...


👉 *17/11/22-* அன்று.. இணைவோம் மகிழ்வோம் நிகழ்வு


👉 *22/11/22-* அன்று   காகித பறவை செய்தல்-  நிகழ்வு


👉 *02/12/22-* அன்று  சிறார் திரைப்படம் திரையிடுதல்- நிகழ்வு


👉 *03/12/22-* சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து- நிகழ்வு.


👉 ஒவ்வொரு நாள் நிகழ்வும் எவ்வாறு செய்தல் என்பதினை முதல் நாள் தகவல் தெரிவிக்கப்படும்.


குறிப்பு: மாற்றுத்திறனாளி மாணவர் தங்கள் பள்ளியில் இல்லையெனினும் மேற்காண் செயல்பாடுகள் பள்ளியில் நடத்தப்பட வேண்டும்.




>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




"பள்ளிப் பார்வை" செயலியில் அலுவலர்கள் வகுப்பறையை உற்றுநோக்கி பதிவிடும் தகவல்கள் (Palli Paarvai - TNSED Administrators App - New User Manual)...

 



>>> "பள்ளிப் பார்வை" செயலியில் அலுவலர்கள் வகுப்பறையை உற்றுநோக்கி பதிவிடும் தகவல்கள் (Palli Paarvai - TNSED Administrators App - New User Manual)...



>>>  CEO, DEO பள்ளிப்பார்வையின் பொழுது மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கான OMR விடைத்தாள் மாதிரி...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



What does the app do? 
Palli Paarvai is a mobile observation tool to assist the officials strengthen existing classroom practices, based on the real-time and accurate data from classrooms. The app captures and analyses data across four critical parameters 
● Standardized classroom observations 
● Teacher professional development 
● Student learning levels 
● Data corroboration

Sections in the app: 
● School Selection 
● Classroom Selection 
● Teaching Learning Process - Observation questions 
● Student Attendance 
● Student Assessment 
● Notebook Verification 
● School Inspection 
● EMIS Data Validation 
● Post Observation Questions 
● Observation Report 
● Observe another class 
● Submit Observation


Flow of the app:

How to download the app?
● Open Google Play Store app in the mobile phone 
● In the search box, type “TNSED Administrators” ● Install “TNSED Administrators App” 
● Login with your EMIS User name and password credentials 
● Click “பள்ளிப் பார்வை”


Steps for school observation: 

1. Welcome Screen components
Step 1: The observer can select the school to visit either from the “Choose School” dropdown or by entering the UDISE code of the school.
Step 2: Click “School Info” to get the school details and then click “Start” proceed with the observation.
The progression bar at the top displays the completed school observations against targeted school observations.

The school selection through UDISE CODE option is applicable only for DEOs, CEOs & State Officials


2. Classroom Selection 
Step 3: The class to be observed will be given in the app. Select “Yes” or “No” according to the availability of the teacher. 
Step 4: Choose medium of instruction and subject the teacher is handling and the teacher to be observed 
Step 5:Click on start to begin the classroom observation
Step 6: If the classroom cannot be observed, select the reason for not observing. Another classroom to be visited will be shown in the app.

3. Teaching Learning process 
Step 7: Observe and enter the information on various Teaching Observation questions. 
IMPORTANT NOTE: The observer should not interact with the teacher till the end of the period. The observer should observe the teaching and answer the questionnaire. This section has an additional TOGGLE feature- where the observer can toggle between any section in the teacher observation question section. 

Listed below are the teacher observation sections 
A. Lesson Execution - Pedagogy questions, Teaching Learning Materials (TLMs) usage, Student Engagement, Attention to children with special needs
B. Classroom Management - Student Engagement, Student Appreciation 
C. Word Wall - Word wall questions will appear only for classes 1, 2 and 3.

4. Student Attendance 

Step 8: Mark the attendance. The present button (“P”) is pre-selected. If a student is absent, then the absent button (“A”) is marked accordingly.

5. Student Assessment 
Step 9: Student Assessment is conducted to assess the students on a particular learning outcome. For classes 1, 2, 9, 10, 11, 12 - 
Sample 5 student assessments are conducted. 
For classes 3, 4, 5, 6, 7, 8 - OMR assessment will be conducted.
If no assessment questions are retrieved from API, it throws a message “No Questions available” and by clicking OK, it moves to the next section automatically.

If Questions are retrieved from the API: 
5.1 Student Assessment - Sample 5 students 

Step 9.1: Student Assessment for sample 5 students
A. Click “NEXT” 
B. 5 sample students gets populated and mark whether they can be assessed or not
C. Questions for each student will appear in each screen 
D. Input the answers of each student.

Sample 5 student assessment:
5.2 Student Assessment - OMR Assessment for all students 

Step 9.2: Print OMR Sheet
A. Print the OMR sheet (A4) and distribute to the students 
B. The OMR sheet can be downloaded from the option “Download OMR Sheet” provided in the sub menu.

Step 9.3: In app, select required fields to display the assessment questions 
A. Based on the subject and class selected in the Classroom selection page, the assessment questions are displayed in the app.
B. Ask the teacher to write those questions with options on the board

Step 9.4: Instructions for Filling the OMR Sheet Ask the Students to fill the OMR Sheet by following the given instructions
A. Use only dark HB black pencil for shading 
B. Fill the students name, class, section, school and subject 
C. Fill the students 10-digit EMIS ID 
D. Shade the correct answer option 
E. Don't fold or tear the OMR sheet

Step 9.5: Instructions for Scanning the OMR Sheet Once the students have completed marking the answers in the OMR sheet, start scanning the OMR sheet by following the given instructions 
A. Click on the OMR SCAN SHEETS button
B. Camera opens up 
C. Take a clear picture of the OMR sheet 
D. Please scan in portrait mode (vertically) and on a flat surface 
E. Also, make sure all 4 borders are scanned correctly 
F. Once the correct sheet is scanned, the message “Scanned EMIS ID 1013455421 matches with BALA”
G. Choose SCAN ANOTHER SHEET to scan the next student OMR Sheet (or) Choose VIEW STUDENT LIST to check the OMR scanning status of the students.
H. If the OMR sheet is not scanned correctly, the message “Image Not Clear” will appear. Retake the photo
I. If the entered EMIS ID is incorrect, the message “Scanned EMIS ID 1011123467 does not belong to any student” will appear
J. Click NEXT to move to the STUDENT LIST to view the status of the OMR scan of the each students
K. Enter the reason for not scanning the OMR sheet of students (if any) 
L. Click Next to move to Notebook Verification
Note: The i icon - displays the instructions on how to scan the OMR sheet.
SHARE STUDENT ID button is used to share the student details - name and 10-digit EMIS ID (used in OMR sheet). This is generated as a PDF file.

6. Notebook Verification The students are randomly populated whose notebooks have to be verified.
Different notebooks to be verified for different students. 
NOTE: Notebook Verification is applicable only for classes 1 - 10 

Step 10: If the notebooks are signed, select the last signed date of the notebook from the calendar.

7. School Inspection School Inspections are the set of questions that the observer has to inspect the overall school performance in the academics, administration and infrastructure. There are certain questions regarding the maintenance of the toilet facility in the school for which the observer has to take photos and upload them in the app. This section is to be filled only one time by the observer for that school. This section also has the toggle feature where the observer can select any section within the school inspection to fill the answers. THIS IS SKIPPED FOR HMs

In the Infrastructure, you will be asked to take the picture of the girls toilet (with running water), if available.

8. EMIS Data Validation (might be skipped for HMs) 
Step 11: Enter the Student Enrollment & Teacher position information by asking the HM for the requisite data. Click “VALIDATE” to verify the entered data with the data present in the EMIS DB. If there is any mismatch in the data it will show in red. Discuss with HMs regarding the mismatch and ask them to make necessary corrections. THIS MIGHT BE SKIPPED FOR HMs

SHARE button is used to share & download the EMIS data validation report. The report is shared in the PDF format.

9. Post Observation Questions These are the questions based on Learning outcome awareness, Completion of syllabus, Lesson plan availability, Remediation record availability, Time table usage, Record maintenance

Step 12: Meet the observed teacher in the HM room and fill this section by asking the teacher.

10. Observer Remarks 
Step 13: The observer can leave a comment or remarks in general. It can be related to teaching, learners or school in general. The observer can type upto max of 100 words and SUBMIT.
The remarks section is optional, however the entered remarks will be displayed in the observation report.

11. Observation report 
Step 14: An observation report is generated for that classroom observation. This observation report contains Name of the school, standard observed, observed date and learning outcome assessed, Areas of strength, Areas of improvement.
This report can also be shared/downloaded in PDF format.

12. Observe another class 
Step 15: Do you want to observe another classroom 
A. If YES, click “SAVE AND CONTINUE” to save the 1st observation and proceed to the next classroom selection page to carry out the second observation;
B. If NO, click “SUBMIT OBSERVATION” to end the observation for that school
This step requires Internet Connectivity to sync the data to the server. After submitting the data cannot be edited or changed.
13. Completion Page 
Step 16: Once the data is saved, the congrats page appears showing the data has and observation has been completed successfully.

Click on “GO TO HOMEPAGE” button to redirect to the Welcome page with the school observation count updated.



பார்வையாளர் நினைவில் கொள்ள வேண்டிய தகவல்கள்:
 
1. இச்செயலி Android மொபைல் பயனர்களுக்கு மட்டுமே வேலை செய்யும்.

2. சர்வரில் உள்ளீடு செய்யப்பட்ட தகவலைச் சேமிக்க, கண்காணிப்பை முடிக்கும்போது, உங்கள் மொபைல் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும். 

3. CEOக்கள்/DEOக்கள்/மாநில அதிகாரிகள் பள்ளி கீழ்தோன்றலில் மெனுவில் இருந்து பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது பள்ளியின் UDISE குறியீட்டை உள்ளிடலாம் 

4. பார்வையாளர் வெற்றுத் திரையை எதிர்கொண்டால் (ஆப் கிராஷ்கள்), தயவு செய்து வெளியேறி, பயன்பாட்டை மீண்டும் உள்நுழைந்து தொடக்கத்தில் இருந்து கண்காணிப்பைத் தொடங்கவும் 

5. ஆப்ஸ் கடைசி கண்காணிப்புத் தரவைக் காட்டினால், தற்காலிக சேமிப்பை அழிக்கவும்.  தரவு/தேக்ககத்தை அழிக்க, 
A. செயலியிலிருந்து வெளியேற்றவும், 
B. "செயலித் தகவலை" பெற, ஆப்பை நீண்ட நேரம் அழுத்தவும் 

6. OMR அடிப்படையிலான மதிப்பீடு 

OMR அடிப்படையிலான மதிப்பீடு 3 முதல் 8 வகுப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். கேள்விகள் தானாக உருவாக்கப்படும் & ஆசிரியரால் போர்டில் எழுதப்பட வேண்டும். மாணவர்கள் தங்கள் 10 இலக்க EMIS ஐடி மற்றும் அவர்களின் பதில்களை OMR விடைத்தாளில் நிரப்புகிறார்கள். SHARE STUDENT ID பொத்தான், மாணவர் பெயர் பட்டியல் மற்றும் அவர்களின் 10 இலக்க EMIS ஐடிகளுடன் தரவிறக்கம் செய்யக்கூடிய PDF கோப்பை வழங்கும். 

7. OMR ஸ்கேனில் சிக்கல் - OMR விடைத்தாளை ஸ்கேன் செய்யும் போது பார்வையாளர் சிக்கலை எதிர்கொண்டால், குறிப்பிட்ட மாணவரை "மற்றவை" என்று மதிப்பிடாததற்கான காரணத்தை உள்ளிட்டு அடுத்த பகுதிக்குச் செல்லவும். 

8. படம் எடுப்பதில் சிக்கல் - ‘பள்ளி ஆய்வு’ பிரிவில் பெண்கள் கழிப்பறையின் படத்தைக் கிளிக் செய்யும் போது பார்வையாளர் சிக்கலை எதிர்கொண்டால், தயவுசெய்து “இல்லை” அல்லது “பொருந்தாதது” என்பதைத் தேர்ந்தெடுத்து தொடரவும். 

9. OMR விடைத் தாளைப் பதிவிறக்கவும் - பார்வையாளர் துணை மெனுவிலிருந்து (மேல் இடது மூலையில்) OMR விடைத் தாளைப் பதிவிறக்கம் செய்து PDF ஆகப் பகிரலாம். 

10.குறிப்புகள் பிரிவு - பார்வையாளர் கவனிப்பு பற்றிய கருத்துகள் அல்லது கருத்துகளைச் சேர்க்கலாம். இந்த கருத்துக்கள் கண்காணிப்பு அறிக்கையில் சேர்க்கப்படும் 

11. சமர்ப்பி கண்காணிப்பு - சர்வரில் உள்ளிடப்பட்ட தகவலைச் சேமித்து, கண்காணிப்பை முடிக்க பார்வையாளர் சமர்ப்பி கண்காணிப்பு பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.


Points to remember:

1. The application works only for Android mobile users

2. Ensure that your mobile is connected to the internet while completing an observation to save the inputted information in the server

3. CEOs/DEOs/State officials can either select the schools from the school dropdown or enter the UDISE code of the school

4. If the observer faces the empty screen(app crashes), kindly logout and re-login the app to start the observation from the beginning

5. If the app shows the last observation data, then please clear the cache. To clear the local data/cache, A. Kindly logout the app, B. Long press on the app to get “App Info” C. Click on the “Storage” D. Clear cache & data and Login again

6. OMR based assessment OMR based assessment is applicable only for classes 3 to 8. Questions

are automatically generated & need to be written on board by the teacher. Students fill their 10-digit EMIS ID & their answers in the OMR Answer sheet. The SHARE STUDENT ID button will provide a downloadable PDF file with the student name list and their respective 10-digit EMIS IDs

7. Issue in OMR Scan - If the observer faces an issue while scanning the OMR answer sheet, please enter the reason for not assessing the particular student as “Other” and proceed to the next section.

8. Issue in taking picture - If the observer faces an issue while clicking the picture of the girls toilet during the ‘School Inspection’ section, Please select the option “No” or “Not Applicable” and proceed.

9. Download OMR Answer Sheet - The observer can download the OMR Answer Sheet from the sub-menu (on the top left corner) and can share it as PDF.

10.Remarks Section - The observer can add remarks or comments about the observation. These remarks will be added in the Observation report

11. SUBMIT observation - The observer has to click on the SUBMIT OBSERVATION button to save the inputted information in the server and complete the observation.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



தொடக்கக் கல்வித் துறை (DEE) - வட்டாரக் கல்வி அலுவலரின் (BEO) பள்ளி ஆண்டாய்வு அறிக்கை படிவம் (School Inspection Format - Elementary Education - Block Educational Officer)...



>>> தொடக்கக் கல்வித் துறை (DEE) - வட்டாரக் கல்வி அலுவலரின் (BEO) பள்ளி ஆண்டாய்வு அறிக்கை படிவம் (School Inspection Format - Elementary Education - Block Educational Officer)...



>>> தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கான வட்டாரக் கல்வி அலுவலரின் ஆண்டாய்வு அறிக்கை படிவம் - புதியது (மாதிரி 2)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



2022-23ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்துதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Conduct of Art Festival Competitions in Government Schools during the academic year 2022-23 - Proceedings of the State Project Director) ந.க.எண்: 3195/ ஆ7/ கலை/ ஒபக/ 2022, நாள்: 11-11-2022...



ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளி சாரா செயல்பாடுகள் - 2022-23 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்துதல் சார்ந்து..


போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் விவரங்களையும் EMIS - இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


>>> 2022-23ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்துதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்  (Conduct of Art Festival Competitions in Government Schools during the academic year 2022-23 - Proceedings of the State Project Director) ந.க.எண்: 3195/ ஆ7/ கலை/ ஒபக/ 2022, நாள்: 11-11-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இன்றைய (13-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 13, 2022



உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். முயற்சிகளை செயல் வடிவில் மாற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அஸ்வினி : ஆதரவான நாள்.


பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


கிருத்திகை : ஆர்வம் ஏற்படும். 

---------------------------------------



ரிஷபம்

நவம்பர் 13, 2022



சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொழிலில் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




கிருத்திகை : நெருக்கம் அதிகரிக்கும். 


ரோகிணி : மாற்றம் உண்டாகும். 


மிருகசீரிஷம் : சேமிப்பு குறையும். 

---------------------------------------



மிதுனம்

நவம்பர் 13, 2022



உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவை பெறுவீர்கள். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும். 


திருவாதிரை : தேடல் அதிகரிக்கும். 


புனர்பூசம் : குழப்பம் நீங்கும். 

---------------------------------------



கடகம்

நவம்பர் 13, 2022



கால்நடை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தாய்மாமன் வழியில் மறைமுகமான ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்ப்புகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும். 


பூசம் : அனுபவம் ஏற்படும்.


ஆயில்யம் : கவனம் வேண்டும்.

---------------------------------------



சிம்மம்

நவம்பர் 13, 2022



மனதில் கற்பனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குழப்பமான சிந்தனைகளின் மூலம் இலக்கிலிருந்து விலகி செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


பூரம் : மகிழ்ச்சியான நாள்.


உத்திரம் : வாய்ப்புகள் அமையும். 

---------------------------------------



கன்னி

நவம்பர் 13, 2022



உறவினர்களின் வழியில் சுப விரயங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான சூழல் அமையும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அறிமுகம் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




உத்திரம் : விரயங்கள் உண்டாகும். 


அஸ்தம் : மந்தத்தன்மை நீங்கும். 


சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

---------------------------------------



துலாம்

நவம்பர் 13, 2022



வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வும், ஒருவிதமான மந்தத்தன்மையும் உண்டாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் அமைதி ஏற்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெருமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




சித்திரை : கவனம் வேண்டும்.


சுவாதி : மந்தமான நாள்.


விசாகம் : அமைதி ஏற்படும்.

---------------------------------------



விருச்சிகம்

நவம்பர் 13, 2022



புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பமான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். குழப்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




விசாகம் : விவாதங்களை தவிர்க்கவும்.


அனுஷம் : மாற்றம் ஏற்படும்.


கேட்டை : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------



தனுசு

நவம்பர் 13, 2022



தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். அலுவலக பணிகளில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனை மற்றும் வாகனம் வாங்குவது சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 




மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பூராடம் : ஆதரவான நாள்.


உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------



மகரம்

நவம்பர் 13, 2022



தடைபட்ட பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகம் ரீதியான வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவுக்கு ஏற்ப விரயங்கள் உண்டாகும். எதிர்பாராத உதவி கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 




உத்திராடம் : பிரச்சனைகள் குறையும். 


திருவோணம் : விரயங்கள் உண்டாகும்.


அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------



கும்பம்

நவம்பர் 13, 2022



குழந்தைகளின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவி சிலருக்கு சாதகமாக அமையும். உத்தியோக பணிகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்பட்டு நீங்கும். சோர்வு அகலும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும். 


சதயம் : உதவி கிடைக்கும்.


பூரட்டாதி : ஆர்வமின்மையான நாள்.

---------------------------------------



மீனம்

நவம்பர் 13, 2022



பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். காலதாமதமான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 




பூரட்டாதி : ஏற்ற, இறக்கமான நாள்.


உத்திரட்டாதி : தீர்வு கிடைக்கும். 


ரேவதி : லாபகரமான நாள்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers suffer as online training links are not available - Daily News

 இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காதால் ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி  Teachers suffer as online training links are not available - Dail...