கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆதிதிராவிடர் நலத்துறை - 2022 -ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் - செய்தி வெளியீடு எண்: 2037, நாள்: 15-11-2022 (Adi Dravidar Welfare Department - Aspirants for Dr. Ambedkar Award 2022 can apply with full details about themselves - Press Release No: 2037, Date: 15-11-2022)...

 ஆதிதிராவிடர் நலத்துறை - 2022 -ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் - செய்தி வெளியீடு எண்: 2037, நாள்: 15-11-2022 (Adi Dravidar Welfare Department - Aspirants for Dr. Ambedkar Award 2022 can apply with full details about themselves - Press Release No: 2037, Date: 15-11-2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




திருப்பத்தூர் முதன்மை கல்வி அலுவலர் மீது புகார் மனு பெறப்பட்டமை - துறை ரீதியான ஆரம்பகட்ட விசாரணை மேற்கொள்ளுதல் - விசாரணை அலுவலர் நியமனம் செய்யப்பட்டது - விசாரணை அலுவலர் முன்னிலையில் புகாரில் சம்பந்தப்பட்ட அலுவலர்களை விசாரணைக்கு ஆஜராக தெரிவித்தல் தொடர்பாக - தனியார் பள்ளிகள் இணை இயக்குனரின் கடிதம் (Receipt of complaint against Chief Educational Officer, Tirupattur - Conducting departmental preliminary enquiry - Appointment of Inquiry Officer - Presence of the officers involved in the complaint in the presence of the Enquiry Officer Regarding - Letter from the Joint Director of Private Schools) ந.க.எண்: 4224 / அ1/ 2022, நாள்: 14-11-2022...

 


>>> திருப்பத்தூர் முதன்மை கல்வி அலுவலர் மீது புகார் மனு பெறப்பட்டமை - துறை ரீதியான ஆரம்பகட்ட விசாரணை மேற்கொள்ளுதல் - விசாரணை அலுவலர் நியமனம் செய்யப்பட்டது - விசாரணை அலுவலர் முன்னிலையில் புகாரில் சம்பந்தப்பட்ட அலுவலர்களை விசாரணைக்கு ஆஜராக தெரிவித்தல் தொடர்பாக - தனியார் பள்ளிகள் இணை இயக்குனரின் கடிதம் (Receipt of complaint against Chief Educational Officer, Tirupattur - Conducting departmental preliminary enquiry - Appointment of Inquiry Officer - Presence of the officers involved in the complaint in the presence of the Enquiry Officer Regarding - Letter from the Joint Director of Private Schools) ந.க.எண்: 4224 / அ1/ 2022, நாள்: 14-11-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



மாவட்ட அளவிலான குழு பள்ளியை பார்வையிடும் பொது தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தயார் நிலையில் வைக்க வேண்டிய பதிவேடுகள் குறித்து கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Records to be kept ready by the HeadMaster and Teachers while the District Level Group School Visit - Proceedings of Krishnagiri Chief Educational Officer) ந.க.எண்: 93/ Quality/ ஒபக/ 2022, நாள்: 10-11-2022...

>>> மாவட்ட அளவிலான குழு பள்ளியை பார்வையிடும் பொது தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தயார் நிலையில் வைக்க வேண்டிய பதிவேடுகள் குறித்து கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்  (Records to be kept ready by the HeadMaster and Teachers while the District Level Group School Visit - Proceedings of Krishnagiri Chief Educational Officer) ந.க.எண்: 93/ Quality/ ஒபக/ 2022, நாள்: 10-11-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.11.2022 - School Morning Prayer Activities...


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.11.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால்: அறத்துப்பால்


அதிகாரம்:அறன் வலியுறுத்தல்


குறள் 40:


செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.


விளக்கம்:

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே


பழமொழி :

Anybody can make history.


எந்த மனிதனும் வரலாறு படைக்கலாம்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. எ‌ந்த காரியம் எ‌ன்றாலு‌ம் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன்.


 2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன். 


பொன்மொழி :


நமக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். --ஜே. ஆர். ஆர். டோல்கீன்


பொது அறிவு :


1. இந்தியாவின் முதல் பெண் உலக அழகி பட்டம் பெற்றவர் ? 


ரீட்டா பிரியா . 


 2. இதயத்துடிப்பை செய்யும் வேதிப்பொருள் எது ? 


 அசிட்டில் சோலைன்.



English words & meanings :


Ho-mo-ny-ms - same words sound or spell alike but with different meanings. Noun. ஓரினச் சொற்கள்

ஆரோக்ய வாழ்வு :


நாவல் பழ விதைகளில் நார்ச்சத்து, கொழுப்பு, புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது

NMMS Q


சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த ஆட்சியாளர் யார்? 


விடை: தேவராயர்


நவம்பர் 15


கிஜூபாய் பதேக்கா அவர்களின் பிறந்தநாள்


கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை[1] அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை [2] நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.


சானியா மிர்சா அவர்களின் பிறந்தநாள்

சானியா மிர்சா (Sania Mirza ˈˈsaːnɪja ˈmɪrza; பிறப்பு 15 நவம்பர் 1986) ஓர் முன்னாள் இந்திய தொழில்முறை டென்னிசு வீராங்கனை ஆவார். இரட்டையர் பிரிவில் உலக அளவில் முதல் இடம் பிடித்திருந்தார். ஆறுமுறை பெருவெற்றித் தொடர் பட்டம் பெற்றுள்ளார். மூன்று முறை பெண் இரட்டையர் பிரிவிலும் மூன்று முறை கலப்பு இரட்டையர் பிரிவிலும் பட்டம் பெற்றுள்ளார்.[3][4] மகளிர் டென்னிசு சங்க தகவலின்படி 2003 ஆம் ஆண்டிலிருந்து ஓய்வு பெரும் வரை இந்திய ஒற்றையர் பிரிவு தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்


நீதிக்கதை


முரட்டு ஆடு


ஒரு மலையடிவாரம் பகுதியில் சின்னஞ்சிறு வீடுகள் இருந்தன. அங்கு வாழும் மக்கள் தங்களது பிழைப்புக்காக ஆடு, மாடு இன்னும் பிற கால்நடைகளை வளர்த்து வந்தனர். அதன் அருகே அழகிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதனால், அங்கே மலையடிவாரத்தில் பச்சைப்பசேல் என்று புல் வளர்ந்திருந்தது. 


அவர்கள் வளர்க்கும் ஆடுகள் மலையடிவாரத்தில் வளர்ந்துள்ள புல்லைத் தின்ன அங்கே மேய வரும். மாடுகளால் சரிவில் நிற்க முடியாததால் அவைகள் அங்கு வருவதில்லை. அங்கே ஒரு முரட்டு ஆடு இருந்தது. கொம்புகள் இரண்டும் வளர்ந்து முறுக்கிக் கொண்டு நின்றன. அது மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே வேறு ஆடுகள் வந்து விட்டால் அவைகளை முட்டி தூர விரட்டி விடும். 


ஒரு நாள் ஆற்றின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று ஆற்றினோரம் வந்த முதலையைப் பார்த்து பயந்து தப்பி ஓடி முரட்டு ஆடு மேய்ந்து கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து விட்டது. முரட்டு ஆடு ஓடி வந்த ஆட்டைப் பார்த்து, நான் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நீ எப்படி வரலாம் என்று கோபமாகக் கேட்டது. அதற்கு அந்த ஆடு, அங்கே முதலையைப் பார்த்தேன். அதனால் வேகமாக ஓடி வந்து விட்டேன் என்று அமைதியாக சொன்னது. 


முரட்டு ஆடோ, அது சொன்னதைக் கேட்கவில்லை. ஓடி வந்த அந்த ஆட்டுடன் சண்டைப்போட ஆரம்பித்தது. அந்த ஆடோ சமாதானமாகவே பேசியும், முரட்டு ஆடு கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த ஆடு முரட்டு ஆட்டுடன் எதிர்த்து நின்று சண்டையிட்டது. 


மலைச்சரிவான பகுதியில் இரண்டு ஆடுகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது முரட்டு ஆடு கால் சறுக்கி ஆற்றில் விழுந்தது. ஆற்றின் கரையோரம் வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்த முதலை அந்த முரட்டு ஆட்டை கவ்விக்கொண்டு ஆற்றுக்குள் சென்றுவிட்டது. 


நீதி :

தான்தான் பெரியவன் தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற ஆணவம், திமிரு இருந்தால் நஷ்டம் நமக்கே.


இன்றைய செய்திகள்


15.11.22


* அழகன்குளம் 7 கட்ட அகழாய்வு: அறிக்கை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.


* தமிழக கனமழை பாதிப்பு: முகாம்களில் 52,751 பேர் தங்க வைப்பு; 24 மாவட்டங்களில் 45,826 ஹெக்டேர் நெற்பயிர் சேதம்.


* தமிழில் மருத்துவப் படிப்புக்கு இதுவரை 7 பாடப் புத்தகங்கள் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.


* கூகுள் டூடுல் இந்தியா 2022 விருதை வென்ற கொல்கத்தா சிறுவன்: குவியும் பாராட்டு.


* மணிப்பூரில் 300 ஏக்கர் தரிசு நிலம் 20 ஆண்டுகளில் வனப்பகுதியாக மாற்றம்: சென்னையில் படித்தவர் சாதனை.


* தேசிய விளையாட்டு விருதுகள்: டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிப்பு.


* ஸ்காட்லாந்தில் நடைபெற்ற பில்லி ஜீன் கோப்பை டென்னிஸ் தொடரில் சுவிட்சர்லாந்து மகளிர் அணி வெற்றி வாகை சூடியது.


Today's Headlines


*  In Azhakankulam 7 tier excavations:high Court demands the detailed report.


* Due to heavy rains in TN 52,751 people are made to stay in camps. In 24 districts 45,826 Hectare paddy crops are damaged


* To study medicine in Tamil 7 medical books are prepared in tamil information by Minister Ma. Subramaniam


* In Google doodle a Calcutta boy won the India 2022 award. Applause and praise piled up. 


* 300 acres of barren land in Manipur converted into forest in 20 years: Chennai-educated feat.


* National Sports Awards: Major Dayan Chand Khel Ratna Award Announcement for Table Tennis Player Sarath Kamal.


* The Swiss women's team won the Billie Jean Cup tennis series held in Scotland.


இன்றைய (15-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 15, 2022



தொழிலில் சிறு சிறு மாற்றத்தை செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடையலாம். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழல் அமையும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். மனை சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




அஸ்வினி : லாபகரமான நாள்.


பரணி : வாய்ப்புகள் உண்டாகும்.


கிருத்திகை : ஆதாயம் மேம்படும். 

---------------------------------------



ரிஷபம்

நவம்பர் 15, 2022



எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். பத்திரிக்கை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.


ரோகிணி : சிந்தனைகள் உண்டாகும்.


மிருகசீரிஷம் : ஆர்வமான நாள்.

---------------------------------------



மிதுனம்

நவம்பர் 15, 2022



பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவுபெறும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் கவனத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




மிருகசீரிஷம் : அனுபவம் வெளிப்படும்.


திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும். 


புனர்பூசம் : புரிதல் ஏற்படும்.

---------------------------------------



கடகம்

நவம்பர் 15, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மனதளவில் சில சஞ்சலங்கள் ஏற்படும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களில் கவனம் வேண்டும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். தனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




புனர்பூசம் : சிந்தனைகள் உண்டாகும்.


பூசம் : சஞ்சலமான நாள்.


ஆயில்யம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------



சிம்மம்

நவம்பர் 15, 2022



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் தீர்வு காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ள சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். திடீர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். உடனிருப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மகம் : நெருக்கம் உண்டாகும். 


பூரம் : தீர்வு காண்பீர்கள்.


உத்திரம் : புதுமையான நாள்.

---------------------------------------



கன்னி

நவம்பர் 15, 2022



மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.  மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




உத்திரம் : புத்துணர்ச்சி உண்டாகும்.


அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.


சித்திரை : பொறாமைகள் குறையும்.

---------------------------------------



துலாம்

நவம்பர் 15, 2022



உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் போட்டி தேர்வுகளை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்கும். பலதரப்பட்ட சிந்தனைகள் மனதில் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முதலீடுகள் மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




சித்திரை : அனுசரித்து செல்லவும்.


சுவாதி : நம்பிக்கை உண்டாகும்.


விசாகம் : முதலீடுகள் மேம்படும். 

---------------------------------------



விருச்சிகம்

நவம்பர் 15, 2022



நீண்ட நாட்களாக தடைபட்ட தனவரவு கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய எண்ணங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாகன பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய முயற்சிகள் ஈடேறும். போட்டி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




விசாகம் : தனவரவு கிடைக்கும்.


அனுஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


கேட்டை : முயற்சிகள் ஈடேறும். 

---------------------------------------



தனுசு

நவம்பர் 15, 2022



அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் சில எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். பொன், பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பொறுப்புகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




மூலம் : பொறுமையுடன் செயல்படவும்.


பூராடம் : மாற்றமான நாள்.


உத்திராடம் : விட்டுக்கொடுத்து செல்லவும். 

---------------------------------------



மகரம்

நவம்பர் 15, 2022



குடும்பத்தில் தனவரவு தொடர்பான பிரச்சனைகள் குறையும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவேறும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த  செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் நிறைவேறும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். செலவுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




உத்திராடம் : பிரச்சனைகள் குறையும். 


திருவோணம் : சாதகமான நாள்.


அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------



கும்பம்

நவம்பர் 15, 2022



பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தனவரவு எதிர்பார்த்த அளவில் இருந்தாலும் அதற்கு ஏற்ப செலவுகள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நிறைவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




அவிட்டம் : அனுகூலமான நாள்.


சதயம் : செலவுகள் ஏற்படும்.


பூரட்டாதி : கவனம் வேண்டும்.

---------------------------------------



மீனம்

நவம்பர் 15, 2022



சகோதரர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். பிறமொழி பேசும் மக்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப லாபம் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




பூரட்டாதி : ஒற்றுமை ஏற்படும்.


உத்திரட்டாதி : ஆதரவான நாள்.


ரேவதி : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------


பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நம் அரசுப் பள்ளி மாணவர்கள் துபாயில் குழந்தைகள் தின நாள் உறுதிமொழி எடுத்த நிகழ்வு - காணொளி (Under the leadership of the Minister of School Education, our government school students took the pledge on Children's Day in Dubai - Video)...



>>> பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நம் அரசுப் பள்ளி மாணவர்கள் துபாயில் குழந்தைகள் தின நாள் உறுதிமொழி எடுத்த நிகழ்வு - காணொளி (Under the leadership of the Minister of School Education, our government school students took the pledge on Children's Day in Dubai - Video)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



துபாயில் அரசுப் பள்ளி மாணவர்கள் - பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட காணொளி (Government School Students in Dubai - Video released by School Education Department)...



>>> துபாயில் அரசுப் பள்ளி மாணவர்கள் - பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட காணொளி (Government School Students in Dubai - Video released by School Education Department)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings

  2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ...