>>> நம்ம ஸ்கூல் வலைதளம் - முகவரி (Namma School Website Link)...
https://nammaschool.tnschools.gov.in/
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
Proceedings of the State Project Director,
Samagra Shiksha, Chennai- 600006.
Present: Thiru.R.Sudhan, I.A.S.,
Rc.No.4600/B8/SS/2022,dated 15.12.2022.
Sub: Samagra Shiksha - Pay Increase to special educators and therapists at elementary level and Helper/ Ayah and Care-giver / Attendant in IE centres with effect from 01.11.2022 - Orders issued.
Ref: Circulation agenda dated 15.12.2022
*****
As per the reference cited above, the Pay for the Special Educators & Therapists both under IE head and BRC head at the Elementary Level is enhanced from Rs.18,000/- to Rs.20,000/- with effect from 01.11.2022. The pay for the Helper/ayah and Care-giver / Attendant working in the Day care centre/SRP centre/IE centre is enhanced from Rs.3,250/- to Rs.4,500/- for Helper/Ayah , and Rs.5,750/- to Rs.7,000/- for Care-giver/Attendant respectively with effect from 01.11.2022. The existing pay for Helper/Ayah and Care- giver/ Attendant shall be met out from the OoSC head and the additional expenditure shall be met out from the MMER head.
State Project Director
Copy to:
1. The District Educational Officer/ Administrative Officer.
2. Bill Section.
3. Stock File.
>>> பள்ளி மேலாண்மைக் குழு செயலி - அனைத்து காணொளிகள் இணைப்புகள் - ஒரே பக்கத்தில்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
⚡⚡ *பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்* ⚡⚡
நாள் - *வெள்ளிக்கிழமை*
தேதி - *23/12/2022*
நேரம் - *பிற்பகல் 4.30 மணி முதல் 6:00*
*பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்*
*4:30-4:35 காணொலிகள்* - சிறப்பாக செயல்ப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு காணொலிகளை திரையிடுதல்
*1.Attendance: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-school-management-committee-app_95.html*
*2. Planning Part1: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-1-school-management-committee-app.html*
*3. Planning Part 2: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-2-school-management-committee-app.html*
*4. Planning Part3: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-3-school-management-committee-app.html*
*5. Playlist link: https://kalvianjal.blogspot.com/2022/09/school-management-committee-app-all.html*
*4:35-4:45- பள்ளி வளாகத்தை பார்வையிடுதல் **
**4:45-4:50*வருகைப் பதிவு* -
*தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர் செயலியில் (TNSED Parent App) பதிவு செய்தல்*
*4:50- 4:55- வரவேற்பு*-தலைவர் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தல்
*4:55-5:05 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் பங்கேற்பு*- (மாணவர்களின் எண்ணிக்கை , வருகைப் பதிவு,கற்றல் அடைவு, செயல்திட்டம் குறித்து கலந்தாலோசித்தல்)
**5:05-5:25 திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்*
-இடைநின்ற /பள்ளி செல்லா குழந்தைகள்
- இல்லம் தேடிக் கல்வி
- போக்குவரத்து / பாதுகாவலர் வசதி
- மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி ஆலோசனை
*5:25-5:55*
*கூட்டப் பொருள் மீதான விவாதம்*
-முன்பே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட, கூட்டப்பொருட்களை கலந்தாலோசித்து உரிய தீர்மானங்களை மேற்கொள்ளுதல்
- பொறுப்பாளர்கள், தொடர்புடையத் துறைகளின் ஒத்துழைப்பு கால அளவு ஆகியவற்றை நன்கு திட்டமிட்டு தீர்மானங்கள் நிறைவேற்றுதல்.
-தீர்மானங்களை பதிவேட்டில் பதிவுசெய்தல் (ம) கையொப்பம் பெறுதல்.
*5:55-6:00- கூட்ட நிறைவு*
பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுதல்.
எண்ணும் எழுத்தும் -தொகுத்தறி மதிப்பீடு
ஆசிரியர்கள் விருப்பத்தின் அடிப்படையில் 21, 22,23 ஆகிய தேதிகள் முறையே தமிழ்,ஆங்கிலம், கணிதம் என எழுத்து தேர்வாக வைத்துக் கொள்ளலாம் எனவும் இதற்கான வினாத்தாள் TNSED செயலியில் வெளியிடப்படும் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
TNSED App புதிய Versionல் தொகுத்தறி மதிப்பீடு எழுத்து தேர்வுக்கான வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளது.
வினாத்தாள் பதிவிறக்கம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் எழுத்துத் தேர்வாக வைத்துக் கொள்ளலாம்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.12.2022 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: இனியவை கூறல்
குறள் : 92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
பொருள்:
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால் மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
பழமொழி :
Spend as you get.
வரவுக்கேற்ற செலவு செய்
இரண்டொழுக்க பண்புகள் :
1."யாருக்கும் தீங்கு செய்யாது, எல்லோரின் நலன் குறித்தும் சிந்தித்தலே உண்மையான மனித தன்மையின் வெளிப்பாடு.
2. நான் எப்போதும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முயல்வேன் "
பொன்மொழி :
மழையின் போது அனைத்து பறவைகளும் மறைவிடத்தைத் தேடுகின்றன. ஆனால் கழுகு மேகங்களுக்கு மேலே பறப்பதன் மூலம் மழையைத் தவிர்க்கிறது. சிக்கல்கள் பொதுவானவை தான், ஆனால் அணுகுமுறை வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. --ஏ. பி. ஜே. அப்துல் கலாம்.
பொது அறிவு :
1. ஆப்பிரிக்கா காந்தி என அழைக்கப்படுபவர் யார்?
கென்னத் கௌண்டர்.
2. மைசூர் புலி என்று அழைக்கப்பட்டவர் யார்?
திப்பு சுல்தான்.
English words & meanings :
fair - just, impartial, adjective and adverb, நியாயமான, பெயரடை, வினையுறிச் சொல். fair - money for journey. noun. பயணக் கட்டணம். பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
உடல் எடையை குறைக்க விரும்புவோர் சாப்பிட வேண்டிய சிறந்த பழங்களில் ஒன்று கொய்யா பழம். அதில் கலோரிகளும் மிக குறைவு.
ஒரு மீடியம் சைஸ் கொய்யாப் பழத்தில் வெறும் 37 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன.
NMMS Q
கொடுக்கப்பட்ட நான்கு எண்களில் தொடர்பற்ற எண்:
a) 25. b) 81. c) 196. d)256.
விடை: 81
நீதிக்கதை
மனதில் எழும் குறை
வடுகபட்டி என்ற ஊரில் சந்தோஷம் என்ற இளைஞன் இருந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. பின் நகரத்தில் வேலையும் கிடைத்தது. தன் மனைவியுடன் நகரத்தில் தங்கி வேலை பார்த்தான்.
வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தான். எல்லோரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர். யாரும் என்னுடன் பேசுவது இல்லை! என்று குறை சொன்னாள் மனைவி.
நீ இப்போதுதான் இங்கே வந்திருக்கிறாய். நாளாக நாளாக எல்லாம் சரியாகி விடும் என்றான் அவன். அடுத்த நாள் அவன் வேலை முடித்து விட்டு வந்தான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் நம்மைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். நான் வருவதைப் பார்த்ததும் பேசுவதை நிறுத்தி விட்டனர் என்றாள் அவள்.
இப்படியே அவள் நாள்தோறும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைப் பற்றி குறை சொன்னாள். இனி நம்மால் இங்கே குடி இருக்க முடியாது. வேறு இடம் பாருங்கள், என்றாள். அச்சமையம் அவனுக்கு பெற்றோர்களிடம் இருந்து ஒரு மடல் வந்தது. அதில், ஒரு வாரம் நடக்கும் ஊர்த் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வர வேண்டும் என்று எழுதி இருந்தது.
மனைவியிடம் அந்த மடலைக் காட்டி, எனக்கு அலுவலகத்தில் நிறைய வேலை இருப்பதால் என்னால் வர முடியாது. நீ மட்டும் சென்று திருவிழா முடியும் வரை இருந்துவிட்டு வா! என்றான். அவளும் அவன் சொன்னதைக் கேட்டு ஊருக்குச் சென்றாள். அங்கே ஒருவாரம் தங்கிவிட்டு வந்தாள்.
பயணம் எப்படி இருந்தது? என் வீட்டில் உள்ளவர்கள் உன்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார்களா? என்று கேட்டான் அவன். அங்கே மாடு மேய்க்கும் வேலனே என்னை எதிரியைப் போலப் பார்த்தான். மற்றவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? இனி என்னை அங்கே போகச் சொல்லாதீர்கள்! என்றாள் அவள்.
யாரைப் பார்த்தாலும் அவர்கள் தன்னை பார்ப்பதாகவும், தன்னைப் பற்றிதான் பேசுவதாகவும் நினைத்துக்கொண்டு, அடுத்தவர்களை குறை கூறும் இயல்பு இவளுக்கு அதிகம் இருக்கிறது. இவளின் குணத்தை மாற்றியே ஆக வேண்டும் என்று நினைத்தான் சந்தோஷம்.
நீதி :
எப்போதும் நல்லதையே நினைத்தல் வேண்டும்.
இன்றைய செய்திகள்
20.12.22
* கடலூர் மாவட்டத்தில் 1.28 லட்சம் மக்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர் திட்டம்: அரசாணை வெளியீடு.
* சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
* வானிலை முன்னறிவிப்பு: டிச.23-ல் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
* ரயில்களில் அனுப்பும் பார்சல்களை தபால்காரர் மூலம் விநியோகிக்கும் புதிய திட்டம்: மதுரை, கோவை கோட்டத்தில் விரைவில் அமல்.
* டெல்லியில் மீண்டும் தொடங்கியது விவசாயிகள் போராட்டம்: ஒரு லட்சம் பேர் பங்கேற்பு.
* 7,000 கி.மீ. பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை சீனாவுக்கான எச்சரிக்கை.
* கடந்த 5 ஆண்டுகளில் மத்திய ஆயுதப்படைகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் சேர்ப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்.
* கரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பு: தகவல்களை மூடி மறைக்கிறது சீனா.
* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறியது இந்திய அணி.
* நேசன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்திய பெண்கள் அணி 'சாம்பியன்'.
* உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பேவுக்கு தங்க ஷூ, மெஸ்சிக்கு தங்க பந்து.
Today's Headlines
* Ordinance issued: Joint drinking water scheme to benefit 1.28 lakh people in Cuddalore district.
* The Tamil Nadu Chief Minister launched the 'Namma School Foundation project on behalf of the School Education Department in Chennai.
* Weather forecast: Heavy rain likely in 6 districts of Tamil Nadu on Dec 23.
* New scheme for delivery of parcels sent by trains by postmen: Soon to be implemented in Madurai, Coimbatore.
* Farmers strike resumes in Delhi: One lakh people participated
* The Agni-5 cruise missile which attacked 7,000 km was tested and is a warning to China.
* Over 1 Lakh Soldiers Inducted into Central Armed Forces in Last 5 Years: Union Home Ministry Information
* Corona death toll rises: China hides information
* The Indian team has advanced to the 2nd position in the World Test Championship rankings.
* Nations Cup Hockey: Indian Women's Team won the Championship.
* World Cup Football: Golden Boot for Mbappe, Golden Ball for Messi.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
மேஷம்
டிசம்பர் 20, 2022
மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். கல்வி சம்பந்தமான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். அறிமுகம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அஸ்வினி : புரிதல் உண்டாகும்.
பரணி : ஆர்வம் அதிகரிக்கும்.
கிருத்திகை : திறமை வெளிப்படும்.
---------------------------------------
ரிஷபம்
டிசம்பர் 20, 2022
உத்தியோக பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் கடன் உதவி கிடைக்கும். காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். எதிர்ப்புகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : நிதானத்துடன் செயல்படவும்.
ரோகிணி : லாபம் மேம்படும்.
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
மிதுனம்
டிசம்பர் 20, 2022
வேலை நிமிர்த்தமான புதிய முயற்சிகளில் அனுபவம் கிடைக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் அமையும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் சுப விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தெளிவு பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
மிருகசீரிஷம் : அனுபவம் கிடைக்கும்.
திருவாதிரை : விரயங்கள் ஏற்படும்.
புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.
---------------------------------------
கடகம்
டிசம்பர் 20, 2022
உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் ஏற்பட்ட மன வருத்தங்கள் குறையும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் அமையும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.
பூசம் : ஏற்ற, இறக்கமான நாள்.
ஆயில்யம் : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்
டிசம்பர் 20, 2022
பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஒருவிதமான சோர்வு நீங்கும். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். விவாதங்களில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க முடியும். பூர்வீக சொத்துக்களால் சுப விரயங்கள் ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : சோர்வு நீங்கும்.
பூரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : விரயங்கள் ஏற்படும்.
---------------------------------------
கன்னி
டிசம்பர் 20, 2022
ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விவசாய பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். புதிய முதலீடுகள் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாகன பழுதுகளை சீர் செய்வதற்கான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். லாபம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.
அஸ்தம் : ஆதாயம் உண்டாகும்.
சித்திரை : புரிதல் ஏற்படும்.
---------------------------------------
துலாம்
டிசம்பர் 20, 2022
விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். இடமாற்றத்தின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மாணவர்களுக்கு ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணைவரின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : ஆர்வம் மேம்படும்.
சுவாதி : அனுபவம் ஏற்படும்.
விசாகம் : தேடல் அதிகரிக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
டிசம்பர் 20, 2022
எண்ணங்களில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு சார்ந்த எண்ணங்களால் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : தெளிவு பிறக்கும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : நெருக்கடிகள் குறையும்.
---------------------------------------
தனுசு
டிசம்பர் 20, 2022
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கால்நடை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தேவைகள் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மூலம் : உதவி கிடைக்கும்.
பூராடம் : முன்னேற்றம் ஏற்படும்.
உத்திராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
மகரம்
டிசம்பர் 20, 2022
புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் பொறுப்புகளின் மூலம் செல்வாக்கு மேம்படும். எதிர்பாராத இடமாற்றத்தின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பிறருக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி கொள்வீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவோணம் : அனுபவம் உண்டாகும்.
அவிட்டம் : வெற்றிகரமான நாள்.
---------------------------------------
கும்பம்
டிசம்பர் 20, 2022
ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். எதிர்பாராத தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான புரிதல் ஏற்படும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த சகோதரரின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
அவிட்டம் : முன்னேற்றம் ஏற்படும்.
சதயம் : சேமிப்பு அதிகரிக்கும்.
பூரட்டாதி : ஆதரவான நாள்.
---------------------------------------
மீனம்
டிசம்பர் 20, 2022
நண்பர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகளின் மூலம் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உயர்கல்வி தொடர்பான குழப்பம் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். புதிய முயற்சிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.
ரேவதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
---------------------------------------
.
TNSED Manarkeni App Download & Update Link - Version 0.0.39 - Updated on 11 December 2024 What's New New CLAT Content is Added. Bu...