கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்கல்வி - சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க குழு அமைத்தல்- அரசாணை (நிலை) எண்: 25, நாள்: 30-01-2023 வெளியீடு (School Education - Formation of a committee to examine and make recommendations on the demands of Secondary Grade Teachers for equal pay for equal work- G.O. (Ms) No: 25, Dated: 30-01-2023 Issued)...

 

>>> பள்ளிக்கல்வி - சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க குழு அமைத்தல்- அரசாணை (நிலை) எண்: 25, நாள்: 30-01-2023 வெளியீடு (School Education - Formation of a committee to examine and make recommendations on the demands of Secondary Grade Teachers for equal pay for equal work- G.O. (Ms) No: 25, Dated: 30-01-2023 Issued)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இன்றைய (14-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


இன்றைய (14-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 14, 2023



குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எண்ணிய செயல்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். தாமதம் நிறைந்த நாள். 




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




அஸ்வினி : விவாதங்களை தவிர்க்கவும். 


பரணி : கவனம் வேண்டும்.


கிருத்திகை : நெருக்கடிகள் அதிகரிக்கும்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 14, 2023



புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதிற்குப் பிடித்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். கீர்த்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.


ரோகிணி : எண்ணங்கள் ஈடேறும்.


மிருகசீரிஷம் : அன்பு அதிகரிக்கும். 

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 14, 2023



உத்தியோகம் சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். உலக நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்களும், பழக்கவழக்கங்களில் புதுமையும் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் இழுபறிகள் நீங்கும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் குறையும். சலனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.


திருவாதிரை : புதுமை உண்டாகும்.


புனர்பூசம் : குழப்பம் குறையும். 

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 14, 2023



மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பயணங்களால் புதிய அறிமுகம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பினால் வெற்றி கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




புனர்பூசம் : ஏற்ற, இறக்கமான நாள்.


பூசம் : அறிமுகம் உண்டாகும். 


ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 14, 2023



புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான எண்ணங்களின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கால்நடைகளின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மகம் : எண்ணங்கள் மேம்படும்.


பூரம் : இழுபறிகள் நீங்கும்.


உத்திரம் : ஈர்ப்பு அதிகரிக்கும். 

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 14, 2023



புதுவிதமான ஆபரணங்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றம் கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த தடைகளை அறிந்துகொள்வீர்கள். பாராட்டுக்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




உத்திரம் : அனுகூலமான நாள். 


அஸ்தம் : ஈடுபாடு உண்டாகும். 


சித்திரை : உதவி கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 14, 2023



வியாபாரத்தில் உறவினர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். குழந்தைகளுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பேச்சு திறமை மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம்




சித்திரை : மேன்மை உண்டாகும்.  


சுவாதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.


விசாகம் :  ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 14, 2023



வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். அரசு தொடர்பான காரியங்களில் நிதானம் வேண்டும். முத்திரை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




விசாகம் : கவனம் வேண்டும்.


அனுஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


கேட்டை : மேன்மை ஏற்படும். 

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 14, 2023



உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : மாற்றம் உண்டாகும். 


பூராடம் : விவாதங்களை தவிர்க்கவும். 


உத்திராடம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 14, 2023



மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் உயர்வு ஏற்படும். தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் நீங்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். நுட்பமான செயல்பாடுகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருக்கக்கூடிய கவலைகள் குறையும். வியாபார ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும். வரவுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும். 


அவிட்டம் : நிதானம் வேண்டும். 

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 14, 2023



வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மாணவர்களின் முயற்சிகளுக்கு ஏற்ப சாதகமான பலன் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


சதயம் : விருப்பம் நிறைவேறும்.


பூரட்டாதி : குழப்பம் நீங்கும். 

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 14, 2023



உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். செயல்பாடுகளில் சுதந்திர போக்கு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். தொழிலில் கூட்டாளிகளிடையே ஒற்றுமையான சூழல் ஏற்படும். கனிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.  


ரேவதி : பயணங்கள் கைகூடும். 

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.02.2023 - School Morning Prayer Activities...

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.02.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :



பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: அடக்கம் உடைமை


குறள் : 124


நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.


பொருள்:

உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.


பழமொழி :

Many hands make light work. 


பல கரங்கள் பணியை இலகுவாக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.


 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 


பொன்மொழி :


வார்த்தையில் மட்டும் பணிவு இருந்தால் போதாது நடத்தையிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் உயர முடியும்.


பொது அறிவு :


1. யாருடைய பிறந்த தினம் வன்முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது ?


 ராஜீவ் காந்தியின் பிறந்த தினம் . 


 2. அகச் சிவப்புக் கதிர்வீச்சிலிருந்து நம்மை பாதுகாக்கும் படலம் எது? 


 ஓசோன் படலம்.


English words & meanings :


ant that lives in a flat - occup-ant, occupant


ஆரோக்ய வாழ்வு :


பாதவெடிப்பு அசௌகரியம் தருவதுடன், வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. பாதவெடிப்பு ஏற்பட பல காரணங்கள் உண்டு. அவற்றை கீழ்வருமாறு காணலாம்:


ஈரப்பதம் குறைவு

வைட்டமின், மினரல் சத்துக்கள் குறைபாடு

நீண்ட நேரம் நிற்பது

வயது கூடுதல்

சொறிநோய், தைராய்டு, நீரிழிவு

சரியான காலணி அணியாதது

மரபியல்

உடற்பருமன்


NMMS Q


கனிகள் உருவாகாத தாவர வகை


விடை: ஜிம்னோஸ்பெர்ம்கள்





நீதிக்கதை



அற்புதமான சிற்பி


ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா? அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா? என்று கேட்டார். தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.


பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார். அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டானர். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர். முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.


அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு சிற்பி, வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார். கடைக்காரர் வியந்தார். ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது! என்றார். தேவையற்ற சிந்தனைகளை நீக்கினால், பிறர் போற்றும்படியான வாழ்வை பெற முடியும்.


இன்றைய செய்திகள்


14.02.2023


* நெசவாளர்களுக்கான முத்ரா கடன் திட்டம்: தேசிய அளவில் 6 ஆண்டுகளாக தமிழகம் முதலிடம்.


* பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு மாரத்தான்: ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


* சானமாவு பகுதியில் தனித்தனி குழுக்களாக சுற்றி வந்த 80 யானைகளில் 70 யானைகளை ஒருங்கிணைத்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வனத்துறையினர் இடம் பெயரச் செய்தனர். மேலும், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


* சிக்கிமில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.


* இந்திய நீதித் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோஹ்லி தெரிவித்துள்ளார்.


* துருக்கி - சிரிய பூகம்பத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 50,000-ஐ நெருங்கலாம் என அஞ்சப்படுவதாக ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


* அமெரிக்க வான்வெளியில் மீண்டும் ஒரு மர்மப் பொருள் அந்நாட்டு ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் இது 4வது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.


* பெண்கள் பிரீமியர் லீக் தொடருக்கான லோகோவை பிசிசிஐ வெளியிட்டது.


* கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு: வாள்வீச்சு போட்டியில் தமிழக அணிக்கு 4 பதக்கம்.


* பெண்கள் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.


Today's Headlines


* MUDRA Loan Scheme for Weavers: Tamil Nadu tops  nationally for 6 years.


* Awareness marathon across Tamil Nadu urging to strengthen public transport: Thousands of students participated.


 * Out of the 80 elephants that were roaming in separate groups in the Sanamavu area, the forest department united 70 elephants and moved them to the Dhenkanikottai forest area.  Also, they are engaged in continuous monitoring.


 * Earthquake in Sikkim - registered as 4.3 on the Richter scale.


* Supreme Court Justice Hima Kohli has said that the use of Artificial Intelligence (AI) technology in the Indian judiciary will be a turning point.


* The death toll from the Turkey-Syria earthquake is feared to be close to 50,000, said by the United Nations World Health Organization .


* Another mysterious object has been shot down by the US military.  It is noteworthy that this is the 4th incident in a week.


 * BCCI unveils logo for Women's Premier League


 * Kelo India Youth Games: Tamil Nadu team won 4 medals in fencing competition.


 * Women's T20 World Cup: India beat Pakistan and won the match.


24.02.2023க்கு முன்னதாக சம்பளப் பட்டியல்கள் தயார் செய்துகொள்ளுமாறும், அதன் பின்னர் பிப்ரவரி 2023 மாதத்திற்கான Mark for Recalculation முடக்கப்படும் எனவும் கருவூலம் மற்றும் கணக்குத்துறை சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர் கடிதம் (Letter from Treasury and Accounts Pay and Accounts Officer to prepare salary lists before 24.02.2023 and after that Mark for Recalculation for the month of February 2023 will be disabled)...


>>> 24.02.2023க்கு முன்னதாக சம்பளப் பட்டியல்கள் தயார் செய்துகொள்ளுமாறும், அதன் பின்னர் பிப்ரவரி 2023 மாதத்திற்கான Mark for Recalculation முடக்கப்படும் எனவும் கருவூலம் மற்றும் கணக்குத்துறை சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர் கடிதம் (Letter from Treasury and Accounts Pay and Accounts Officer to prepare salary lists before 24.02.2023 and after that Mark for Recalculation for the month of February 2023 will be disabled)...


அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பொதுத்தேர்வின் போது அதே பள்ளிகளில் பணியாற்ற அனுமதி வேண்டுவது குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் கடிதம் (Tamil Nadu Legislative Assembly Speaker's letter regarding seeking permission for ministerial employees working in government-aided schools to work in the same schools during the public examination)...


>>> அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பொதுத்தேர்வின் போது அதே பள்ளிகளில்  பணியாற்ற அனுமதி வேண்டுவது குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் கடிதம் (Tamil Nadu Legislative Assembly Speaker's letter regarding seeking permission for ministerial employees working in government-aided schools to work in the same schools during the public examination)...


பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் வழித்தட அலுவலர்களுக்கான (Route Officers) உழைப்பூதியம் (Remuneration) ரூ.130/- ஆக நிர்ணயம் செய்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் (Letter from the Director of Government Examinations fixing the honorarium of Route Officers at Rs.130/-)...



>>> பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் வழித்தட அலுவலர்களுக்கான (Route Officers) உழைப்பூதியம் ரூ.130/- ஆக நிர்ணயம் செய்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் (Letter from the Director of Government Examinations fixing the honorarium of Route Officers at Rs.130/-)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளை முன்னறிவிப்பின்றி ஆய்வு மேற்கொள்ளுதல் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Conduct unannounced inspection of all Government / Government Aided Primary / Middle / High / Higher Secondary Schools - Proceedings of Chief Educational Officer)...


>>> அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளை முன்னறிவிப்பின்றி ஆய்வு மேற்கொள்ளுதல் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Conduct unannounced inspection of all Government / Government Aided Primary / Middle / High / Higher Secondary Schools - Proceedings of Chief Educational Officer)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...