கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் "மெல்ல மலரும் மலர்களுக்கான" கற்றல் திறன் மேம்பாட்டு செயல் திட்டம் - தமிழ், ஆங்கிலம், கணிதம் கையேடுகள் (Tamil, English, Maths - Learning Skill Development Action Plan Modules for "Slow Blooming Flowe" for Class IV to Class VIII)...

 


>>> நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் "மெல்ல மலரும் மலர்களுக்கான" கற்றல் திறன் மேம்பாட்டு செயல் திட்டம் - தமிழ் (Tamil - Learning Skill Development Action Plan for "Slow Blooming Flowe" for Class IV to Class VIII)...



>>> நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் "மெல்ல மலரும் மலர்களுக்கான" கற்றல் திறன் மேம்பாட்டு செயல் திட்டம் - ஆங்கிலம் (English - Learning Skill Development Action Plan for "Slow Blooming Flowe" for Class IV to Class VIII)...



>>> நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் "மெல்ல மலரும் மலர்களுக்கான" கற்றல் திறன் மேம்பாட்டு செயல் திட்டம் - கணிதம் (Maths - Learning Skill Development Action Plan for "Slow Blooming Flowe" for Class IV to Class VIII)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இன்றைய (23-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 

 

இன்றைய (23-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 23, 2023



எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். சகோதரர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். மனதில் இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். அனுபவம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




அஸ்வினி : சேமிப்பு குறையும். 


பரணி : மகிழ்ச்சியான நாள். 


கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------



ரிஷபம்

பிப்ரவரி 23, 2023



மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சகோதரிகளின் வழியில் அனுகூலம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் லாபம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




கிருத்திகை : புத்துணர்ச்சியான நாள்.


ரோகிணி : ஒத்துழைப்பு மேம்படும். 


மிருகசீரிஷம் : லாபம் உண்டாகும்.

---------------------------------------



மிதுனம்

பிப்ரவரி 23, 2023



வியாபார பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். நீண்ட நாள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : அனுபவம் உண்டாகும். 


திருவாதிரை : சிந்தனைகள் மேம்படும். 


புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------



கடகம்

பிப்ரவரி 23, 2023



உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடம் விவாதங்கள் தோன்றி மறையும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில ஆதரவுகள் கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




புனர்பூசம் : கவனம் வேண்டும்.


பூசம் : பிரச்சனைகள் குறையும்.


ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------



சிம்மம்

பிப்ரவரி 23, 2023



எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்வது நல்லது. புதிய நபர்களிடம் குடும்ப விவகாரங்கள் பகிர்வதை குறைத்து கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சலனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




மகம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


பூரம் : விவாதங்களை தவிர்க்கவும்.


உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------



கன்னி

பிப்ரவரி 23, 2023



உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான கடன் உதவிகள் கிடைக்கும். கடினமான காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். வாகன பயணங்களால் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




உத்திரம் : புரிதல் உண்டாகும். 


அஸ்தம் : எண்ணங்கள் ஈடேறும்.


சித்திரை : அனுபவம் ஏற்படும்.

---------------------------------------



துலாம்

பிப்ரவரி 23, 2023



மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




சித்திரை : உதவிகள் கிடைக்கும். 


சுவாதி : ஆதாயம் உண்டாகும். 


விசாகம் : பொறுப்புகள் குறையும்.

---------------------------------------



விருச்சிகம்

பிப்ரவரி 23, 2023



வியாபார பணிகளில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். ஆர்வம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




விசாகம் : சிந்தித்து செயல்படவும். 


அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.


கேட்டை : நெருக்கடிகள் குறையும்.

---------------------------------------



தனுசு

பிப்ரவரி 23, 2023



உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய பங்குதாரர்களின் அறிமுகம் கிடைக்கும். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். விவசாய பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். இனிமையான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மூலம் : கவனம் வேண்டும்.


பூராடம் : நட்பு கிடைக்கும். 


உத்திராடம் : சாதகமான நாள்.

---------------------------------------



மகரம்

பிப்ரவரி 23, 2023



எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பாராத திடீர் மாற்றங்களின் மூலம் மேன்மை ஏற்படும். கடினமான காரியத்தையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அரசு பணிகளில் அனுசரித்து செல்வதன் மூலம் ஆதாயம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




உத்திராடம் : அனுபவம் வெளிப்படும்.


திருவோணம் : மேன்மை ஏற்படும். 


அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------



கும்பம்

பிப்ரவரி 23, 2023



பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். சக ஊழியர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகளின் மூலம் நெருக்கடிகள் குறையும். குழந்தைகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உதவிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


சதயம் : தடைகள் குறையும். 


பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------



மீனம்

பிப்ரவரி 23, 2023



பழைய நினைவுகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த உதவிகள் கிடைக்கும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். தடைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




பூரட்டாதி : குழப்பம் நீங்கும்.


உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும். 


ரேவதி : மாற்றமான நாள்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.02.2023 - School Morning Prayer Activities...

 

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.02.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: ஒழுக்கம் உடைமை


குறள் : 131

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.


பொருள்:

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.


பழமொழி :

The only jewel which will not decay is knowledge


அறிவு மட்டுமே அழியா அணிகலம்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. பொய் உரக்க குரல் கொடுத்தாலும் உண்மை பேசுவேன். 


2. ஏனென்றால் உண்மை ஒரு போதும் உறங்காது ஊமையாகவும் இருக்காது


பொன்மொழி :


காலம் உனது உயிராகும். அதை வீணாக்குவது உன்னை நீயே இழப்பதற்குச் செய்வதற்கு ஒப்பாகும்.ஜேம்ஸ் ஆலன் 


பொது அறிவு :


1. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் எது? 


 அரேபியா .


 2. மிகப்பெரிய தேசியக்கொடி உள்ள நாடு எது?


 டென்மார்க்.


English words & meanings :


abduct - kidnap, take some one by force. verb. கடத்துதல். வினைச் சொல். The child was kidnapped for money. 

ஆரோக்ய வாழ்வு :


யூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த சுடுநீரை நிரப்பி, அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், வறட்டு இருமலைத் தடுக்கலாம்.

NMMS Q


செயற்கை வகைப்பாட்டு முறை எப்பன்பினை அடிப்படையாகக் கொண்டு தாவரங்கள் வகைப்படுத்தப்பட்டது.


விடை :இனப்பெருக்கம், புறத்தோற்ற பண்பு , தாவரங்களின் வாழ்வு காலம்


பிப்ரவரி 23


சீகன் பால்க் அவர்களின் நினைவுநாள்






சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பெப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது

நீதிக்கதை


கிடைத்ததில் சம பங்கு


ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களும் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால், தெனாலிராமன் இருந்தால் நிகழ்ச்சி நடைபெறாமல் போய்விடுமோ, என எண்ணி தெனாலிராமனை மட்டும் உள்ளே விட வேண்டாமென்று வாயிற்காவலளியிடம் கண்டிப்புடன் சொல்லிவிட்டார். 


ஆனால் தெனாலிராமன் எப்படியாவது உள்ளே சென்று விடவேண்டும். என தீர்மானித்துக் கொண்டான். உள்ளே செல்ல முற்பட்ட தெனாலிராமனை, வாயிற்காவலளி தடுத்து நிறுத்தி விட்டான். இந்நிலையில் தெனாலிராமன் ஐயா, என்னை உள்ளே செல்ல அனுமதித்தால் என் திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன் என்றான். இதைக் காவலாளி முதலில் சம்மதிக்காவிட்டாலும், பிறகு சம்மதித்துவிட்டான். இதைப் போல் இன்னொரு வாயிற் காப்போனும் சம்மதித்துவிட்டான். 


பிறகு தெனாலிராமன் ஒருவருக்கும் தெரியாமல் உள்ளே சென்று ஓர் மூலையில் அமர்ந்து கொண்டான். அப்போது கிருஷ்ணன் வெண்ணை திருடி கோபிகைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. 


உடனே தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் அணிந்தவனை கொம்பால் அடித்தான். இதைப்பார்த்த மன்னர் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை ஏன் இவ்வாறு செய்தாய் என்றார். 


அதற்குத் தெனாலிராமன் கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான் என்றான். இதைக் கேட்ட மன்னர், தெனாலிராமன் மீது கடும்கோபம் கொண்டு 30 கசையடி தருமாறு உத்தரவிட்டார். 


இதைக் கேட்ட தெனாலிராமன் அரசே இப்பரிசை எனக்கு தர வேண்டாம். எனக்குக் தர வேண்டியப் பரிசை ஆளுக்குப் பாதியாக, தருகிறேன், என்று நம் இரண்டு வயிற்காப்போன்களிடம் வாக்கு கொடுத்துவிட்டேன் என்றான். 


அதனால் இந்த பரிசை, அவர்கள் இருவருக்கும் சமமாக பங்கிட்டுத் தாருங்கள் என்றான். உடனே மன்னர் அவ்விருவரையும் அழைத்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டாதால் அவர்கள் இருவருக்கும் தலா 15 கசையடி தருமாறு உத்தரவிட்டார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தை பாராட்டி அவருக்கு பரிசு வழங்கினார்.

இன்றைய செய்திகள்


23.02.2023


* சென்னையில் நில அதிர்வு நிகழ்ந்ததாக நில அதிர்வு ஆய்வு மையத்தில் பதிவாகவில்லை என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன.


* நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 2 நாட்களில் ஆயுஷ் அமைச்சகத்திற்கு விளக்கம் அளிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


* வாகன எண்களை துல்லியமாக படம் பிடித்து அபராதம் விதிக்கும் வகையில் சென்னையில் மேலும் 200 அதிநவீன தானியங்கி ஏஎன்பிஆர் கேமராக்கள் நிறுவப்பட உள்ளன.


* இந்தியாவில் 1.2 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்.


* இந்தியாவுக்கு ரூ.2.07 லட்சம் கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஆர்வம்.


* மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் வட கொரிய மக்கள் தவித்துவரும் சூழலில், அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் "மக்கள் உணவுக்காக வெளிநாட்டு உதவியைப் பெற்றால், அது விஷம் தோய்ந்த மிட்டாயை உண்பதற்கு சமம்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


* உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் தங்கம் வென்றுள்ளார்.


* சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு.


* ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இடத்திற்கு முன்னேற்றம்.


Today's Headlines


* The National Seismological Center and the India Meteorological Department said that no earthquake in Chennai was reported to the Seismological Center.


 * Minister M. Subramanian has said that an explanation will be given to the Ministry of AYUSH in 2 days regarding the exemption from NEET examination.


 * 200 more state-of-the-art automated ANPR cameras are to be installed in Chennai to accurately capture vehicle number plates and issue fines.


* 1.2 Lakh One-Teacher Schools in India - Shocking Information in Survey


 * Asian Development Bank keen to lend Rs 2.07 lakh crore to India


 * With the North Korean people suffering from severe food shortages, a message issued by the country's state media warned that "if people receive foreign aid for food, it is equivalent to eating poisoned candy."


* Shooting World Cup: India's Rudrangsh Patil wins gold


 * Indian tennis player Sania Mirza retires from international tennis.


 * ICC Test Rankings: England's James Anderson advances to No.1


நோக்கம்‌ (Nokkam) என்று பெயரிடப்பட்டுள்ள செயலியின்‌ மூலம்‌ தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌ (TNPSC), தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌(TNUSRB), மத்திய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம் (SSC), வங்கிப்‌ பணியாளர்‌ தேர்வு நிறுவனம்‌ (IBPS), UPSC போன்ற அனைத்து நிறுவனங்கள்‌ நடத்தும்‌ தேர்வுகளுக்கும்‌ பயிற்சி மற்றும் தேர்வுகள்‌ நடத்தப்பட்டு விடைத்தாள்கள்‌ திருத்திக்கொடுக்கப்படும்‌ - அண்ணா நிர்வாகப்‌ பணியாளர்‌ கல்லூரி இயக்குநர்‌ செய்தி வெளியீடு எண்: 358, நாள்: 22-02-2023 (With the app named as Aim, coaching and exams will be conducted and answer sheets will be corrected for all the examinations conducted by the Tamil Nadu Public Service Commission (TNPSC), Tamil Nadu Uniformed Staff Selection Board (TNUSRB), Staff Service Commission (SSC), Institute of Bank Personnel Examination (IBPS), UPSC - Anna Administrative Staff College Director Press Release No: 358, Dated: 22-02-2023)...

 

நோக்கம்‌ (Nokkam) என்று பெயரிடப்பட்டுள்ள செயலியின்‌ மூலம்‌ தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌ (TNPSC), தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌(TNUSRB), மத்திய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம் (SSC), வங்கிப்‌ பணியாளர்‌ தேர்வு நிறுவனம்‌ (IBPS), UPSC போன்ற அனைத்து நிறுவனங்கள்‌ நடத்தும்‌ தேர்வுகளுக்கும்‌ பயிற்சி மற்றும் தேர்வுகள்‌ நடத்தப்பட்டு விடைத்தாள்கள்‌ திருத்திக்கொடுக்கப்படும்‌ - அண்ணா நிர்வாகப்‌ பணியாளர்‌ கல்லூரி இயக்குநர்‌ செய்தி வெளியீடு எண்: 358, நாள்: 22-02-2023 (With the app named as Aim, coaching and exams will be conducted and answer sheets will be corrected for all the examinations conducted by the Tamil Nadu Public Service Commission (TNPSC), Tamil Nadu Uniformed Staff Selection Board (TNUSRB), Staff Service Commission (SSC), Institute of Bank Personnel Examination (IBPS), UPSC - Anna Administrative Staff College Director Press Release No: 358, Dated: 22-02-2023)...


செய்தி வெளியீடு எண்‌ : 358, நாள்: 22.02.2023


தமிழ்நாடு அரசின்‌ முதன்மைப்‌ பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப்‌ பணியாளர்‌ கல்லூரி அரசுத்‌ துறைகளிலும்‌, பொதுத்‌ துறை நிறுவனங்களிலும்‌ பணிபுரிபவர்களுக்குப்‌ பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின்‌ தன்மையை விரிவுபடுத்தவும்‌, தமிழகத்தின்‌ மூலை முடுக்குகளுக்கெல்லாம்‌ அது சென்றடைய வேண்டும்‌ என்ற எண்ணத்திலும்‌ இக்கல்லூரி AIM TN என்றழைக்கப்படும்‌ காசொலிப்பாதை (Youtube Channel) ஒன்றை, ஆரம்பித்து அதில்‌ பயிற்சிக்‌ காணொலிகளைப்‌ பதிவேற்றம்‌ செய்து வருகிறது.


இந்த காணொலிப்பாதையின் நீட்சியாக இக்கல்லூரி போட்டித்‌ தேர்வுகளுக்கென்றே 'செயலி' ஒன்றை உருவாக்கியுள்ளது.


"நோக்கம்‌ என்று பெயரிடப்பட்டுள்ள இச்செயலியின்‌ மூலம்‌ தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌ (TNPSC), தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌(TNUSRB), மத்திய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம் (SSC), வங்கிப்‌ பணியாளர்‌ தேர்வு நிறுவனம்‌ (IBPS), UPSC போன்ற அனைத்து நிறுவனங்கள்‌ நடத்தும்‌ தேர்வுகளுக்கும்‌ பயிற்சி அளிக்கத்‌ திட்டமிடப்பட்டுள்ளது. அன்றாடம்‌ பதிவேற்றப்படும்‌ பயிற்சிக்‌ காணொலிகளைக்‌ காண்பதோடு அதற்கான பாடக்‌ குறிப்புகளையும்‌ (notes) இச்செயலி மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. இதன் சிறப்பம்சமே மாதிரித்‌ தேர்வுகள்தாம்‌.

ஒவ்வொரு பாடத்திலும்‌ பலவிதமான தேர்வுகள்‌ நடத்தப்பட்டு விடைத்தாள்கள்‌ திருத்திக்கொடுக்கப்படும்‌. இது மாணவர்கள்‌ தங்கள்‌ தயாரிப்பின்‌ நிலையை அவ்வப்போது சுயமதிப்பீடு செய்து கொள்ள உதவும்‌.


'நோக்கம்‌' செயலியை ப்ளேஸ்டோரிலிருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.


தலைமைச்‌ செயலாளர்‌/ இயக்குநர்‌

'அண்ணா நிர்வாகப்‌ பணியாளர்‌ கல்லூரி மற்றும்‌

பயிற்சித்‌ துறைத்‌ தலைவர்‌


வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...







இல்லம் தேடி கல்வி (ITK) மையங்களை உற்றுநோக்கவும், தன்னார்வலர்களுடன் கலந்துரையாடவும் 5 மாவட்டங்களில் J-PAL நிறுவனத்துக்கு அனுமதி - சிறப்புப் பணி அலுவலரின் கடிதம் (Permission given to J-PAL in 5 districts to observe ITK centers and Interact with ITK volunteers - Letter from Special Duty Officer)...


>>> இல்லம் தேடி கல்வி மையங்களை உற்றுநோக்கவும், தன்னார்வலர்களுடன் கலந்துரையாடவும் 5 மாவட்டங்களில் J-PAL நிறுவனத்துக்கு அனுமதி - சிறப்புப் பணி அலுவலரின் கடிதம் (Permission given to J-PAL in 5 districts to observe ITK centers and Interact with ITK volunteers - Letter from Special Duty Officer)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



1, 2 & 3 ஆம் வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கான குறுவளமையக் கூட்டம் - கருத்தாளர்களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெறுதல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள் (Cluster Resource Center meeting for teachers handling classes 1, 2 & 3 - Conduct of state and district level meeting for Resource Persons - Proceedings of SCERT Director)...



>>> 1, 2 & 3 ஆம் வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கான குறுவளமையக் கூட்டம் - கருத்தாளர்களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெறுதல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள் (Cluster Resource Center meeting for teachers handling classes 1, 2 & 3 - Conduct of state and district level meeting for Resource Persons - Proceedings of SCERT Director)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம், NHIS 2021-ன் கீழ் சிகிச்சை பெற அடையாள அட்டை பெறப்படாத நிலையில் அதற்குப் பதிலாக அரசுத் துறைகளில் ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களால் வழங்கப்படும் சான்றிதழ் ( ANNEXURE-III Certificate to be issued in lieu of Identity Card to get treatment under the New Health Insurance Scheme, 2021 by Drawing and Disbursing Officer in Government Departments / Pay Drawing Officers in Organisations covered under NHIS 2021)...




>>> புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம், NHIS 2021-ன் கீழ் சிகிச்சை பெற அடையாள அட்டை பெறப்படாத நிலையில் அதற்குப் பதிலாக அரசுத் துறைகளில் ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களால் வழங்கப்படும் சான்றிதழ் ( ANNEXURE-3 Certificate to be issued in lieu of Identity Card to get treatment under the New Health Insurance Scheme, 2021 by Drawing and Disbursing Officer in  Government Departments / Pay Drawing Officers in Organisations covered under NHIS 2021)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




ANNEXURE-III

CERTIFICATE TO BE ISSUED IN LIEU OF IDENTITY CARD UNDER THE  NEW HEALTH INSURANCE SCHEME, 2021.

CERTIFICATE

(New Health Insurance Scheme, 2021 ordered in  G.O.Ms.No.160, Finance (Salaries) Department Dated: 29-06-2021)

NHIS 2016 ID Card No: 

Date of Birth :

Date of Joining : 

Date of Retirement:

GPF/TPF/CPS No : 

Mobile No :


Certified that Thiru/Tmt./Selvi _____________________ is employed as ____________________ in __________________________________________________________________________________________________ and his/her eligible Family Members as detailed below are eligible for treatments / surgeries covered under the New Health Insurance Scheme, 2021 . The Identity Card under the  New Health Insurance Scheme, 2021 is yet to be supplied by the United India Insurance Company Limited, Chennai / Third Party Administrator. This certificate is issued to enable the Employee and their eligible Family Members under the above scheme for availing approved treatments / surgeries in the empanelled hospitals approved by the Insurance Company / Third Party Administrator. The approved hospitals concerned shall provide CASHLESS  health care coverage as envisaged under this Scheme:


Details of the Employee and their eligible Family Members under New Health Insurance Scheme, 2021:

Sl.No

Name

Date  of Birth

Relationship  to the Employee

Marital Status

Employment Status

Whether  Physically Challenged/ Intellectually Disabled. **

(Yes/No)

Passport  size Photo

1.      Self

2.

3.

4.

5.

** Details of Physically Challenged and Intellectually Disabled Children as ordered in para 3 (4) (4) of Annexure-A of the GO to be furnished.


Signature of Drawing and Disbursing Officer in  Government Departments / Signature of Pay Drawing  Officers in Organisations  covered under this Scheme.

Name :

Designation :

Date & Seal :


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...