கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரேசன் கார்டு தொடர்பான சேவைகளை செய்து தர, தமிழ்நாடு முழுவதும் இன்று (11-03-2023) குறைதீர் முகாம் அந்தந்த பகுதி வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறுகிறது (Today (11-03-2023) Grievance camp is being held in respective area and Block Distribution Offices across Tamilnadu to provide ration card related services)...



 ரேசன் கார்டு தொடர்பான சேவைகளை செய்து தர, தமிழ்நாடு முழுவதும் இன்று (11-03-2023) குறைதீர் முகாம் அந்தந்த பகுதி வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறுகிறது (Today (11-03-2023) Grievance camp is being held in respective area and Block Distribution Offices across Tamilnadu to provide ration card related services)...


பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீர் முகாம் குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் இன்று சனிக்கிழமையில் நடக்கிறது இந்த முகாம் காலை 10 மணி முதல் 1-மணி வரை நடைபெறும்.


இந்த முகாமில் குடும்ப அட்டைகளின் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் அட்டை கோருதல், செல்போன் எண் பதிவு, தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்து புகார் மற்றும் இதர குறைபாடுகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் நேரடியாக முகாம் அலுவரிடம் வழங்கி தீர்வு பெறலாம்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இன்றைய (11-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 

இன்றைய (11-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

மார்ச் 11, 2023



வாழ்க்கைத் துணைவருடன் அதிக நேரம் பொழுதை கழிப்பீர்கள். புதுவிதமான ஆடைகளை அணிந்து மனம் மகிழ்வீர்கள். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றமும், பழக்கவழக்கங்களில் புதுமையும் உண்டாகும். கூட்டாளிகளை பற்றிய புரிதல் ஏற்படும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : புதுமை உண்டாகும். 


கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------



ரிஷபம்

மார்ச் 11, 2023



பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். கடன் நிமிர்த்தமான சில இன்னல்கள் குறையும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் புதிய அனுபவம் ஏற்படும். வழக்கு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.


ரோகிணி : இன்னல்கள் குறையும். 


மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும்.

---------------------------------------



மிதுனம்

மார்ச் 11, 2023



குழந்தைகளுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உத்தியோக பணிகளில் சிலருக்கு இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் புத்துணர்ச்சி உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்




மிருகசீரிஷம் : ஆர்வமின்மை குறையும்.


திருவாதிரை : இலக்குகள் பிறக்கும்.


புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------



கடகம்

மார்ச் 11, 2023



புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிறைவான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




புனர்பூசம் : எண்ணங்கள் மேம்படும்.


பூசம் : மேன்மை உண்டாகும்.


ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------



சிம்மம்

மார்ச் 11, 2023



விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மகம் : ஆர்வம் அதிகரிக்கும். 


பூரம் : கவனம் வேண்டும்.


உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

---------------------------------------



கன்னி

மார்ச் 11, 2023



வியாபார ரீதியான பணிகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். புதிய உணவுகளில் கவனம் வேண்டும். மனதை உறுத்திய சில கவலைகள் நீங்கும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : ஆதரவு மேம்படும். 


அஸ்தம் : கவலைகள் நீங்கும்.


சித்திரை : புரிதல் மேம்படும்.

---------------------------------------



துலாம்

மார்ச் 11, 2023



புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். எதிலும் தற்பெருமையின்றி செயல்படவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். வாகன பயணங்களில் விவேகம் அவசியம். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




சித்திரை : அறிமுகம் கிடைக்கும். 


சுவாதி : நம்பிக்கை ஏற்படும்.


விசாகம் : விவேகம் வேண்டும்.

---------------------------------------



விருச்சிகம்

மார்ச் 11, 2023



சக ஊழியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். செல்வாக்கான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




விசாகம் : அனுசரித்து செல்லவும்.


அனுஷம் : தன்னம்பிக்கையான நாள்.


கேட்டை : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------



தனுசு

மார்ச் 11, 2023



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சமூக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மதிப்புகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




மூலம் : நெருக்கம் அதிகரிக்கும். 


பூராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


உத்திராடம் : தெளிவு பிறக்கும். 

---------------------------------------



மகரம்

மார்ச் 11, 2023



வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். சுயதொழிலில் லாபம் மேம்படும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு 




உத்திராடம் : முன்னேற்றமான நாள்.


திருவோணம் : லாபம் மேம்படும். 


அவிட்டம் : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------



கும்பம்

மார்ச் 11, 2023



சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். மருத்துவம் தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். தனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும்.


சதயம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------



மீனம்

மார்ச் 11, 2023



எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். நண்பர்களின் மூலம் அலைச்சல்களும், புதிய அனுபவங்களும் உண்டாகும். தடைகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் 




பூரட்டாதி : நெருக்கடியான நாள்.


உத்திரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.


ரேவதி : அனுபவம் பிறக்கும்.

---------------------------------------


இன்றைய (10-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 



இன்றைய (10-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

மார்ச் 10, 2023



தடைபட்ட வரவுகள் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். தற்பெருமை சிந்தனைகளை குறைத்து கொள்ளவும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் எதிர்காலம் நிமிர்த்தமான வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பெருமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அஸ்வினி : வரவுகள் கிடைக்கும். 


பரணி : வாய்ப்புகள் உண்டாகும். 


கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும். 

---------------------------------------



ரிஷபம்

மார்ச் 10, 2023



நண்பர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். ஆடம்பரமான சிந்தனைகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். விரயங்கள் உண்டாகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




கிருத்திகை : விட்டுக்கொடுத்து செல்லவும். 


ரோகிணி : அனுபவம் உண்டாகும். 


மிருகசீரிஷம் : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------



மிதுனம்

மார்ச் 10, 2023



பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தாய்வழி உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். கூட்டு வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு திருப்தியை உருவாக்கும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுபிட்சம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும். 


திருவாதிரை : அனுசரித்து செல்லவும். 


புனர்பூசம் : திருப்தியான நாள்.

---------------------------------------



கடகம்

மார்ச் 10, 2023



குழந்தைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் துரிதத்துடன் செயல்படுவீர்கள். மாற்றமான அணுகுமுறைகளின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




புனர்பூசம் : உற்சாகமான நாள்.


பூசம் : சிந்தனைகள் உண்டாகும்.


ஆயில்யம் : லாபம் மேம்படும்.

---------------------------------------



சிம்மம்

மார்ச் 10, 2023



உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூக பணிகளில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : மதிப்புகள் அதிகரிக்கும். 


உத்திரம் : ஆதாயகரமான நாள்.

---------------------------------------



கன்னி

மார்ச் 10, 2023



அக்கம்-பக்கம் இருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். செய்யும் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். வேலையாட்களை தட்டிக்கொடுத்து செயல்படுவது நல்லது. உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். புதிய முயற்சிகளில் அலைச்சல்களும், ஆதாயமும் உண்டாகும். தனவரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திரம் : புரிதல் அதிகரிக்கும். 


அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.


சித்திரை : பொறுப்புகள் மேம்படும். 

---------------------------------------



துலாம்

மார்ச் 10, 2023



விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். வியாபார பணிகளில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அலைச்சல்கள் ஏற்படும். எளிதில் கிடைக்க வேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




சித்திரை : கவனம் வேண்டும்.


சுவாதி : அசதிகள் உண்டாகும்.


விசாகம் : அலைச்சல்கள் ஏற்படும். 

---------------------------------------



விருச்சிகம்

மார்ச் 10, 2023



நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பணி நிமிர்த்தமான பிரச்சனைகளை மாறுபட்ட முறையில் கையாளுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


அனுஷம் :  ஆதரவு மேம்படும்.


கேட்டை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

---------------------------------------



தனுசு

மார்ச் 10, 2023



வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மூலம் : கவனம் வேண்டும்.


பூராடம் : உதவிகள் சாதகமாகும். 


உத்திராடம் : புரிதல் மேம்படும்.

---------------------------------------



மகரம்

மார்ச் 10, 2023



கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். விவசாய பணிகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் உள்ள சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திராடம் : முடிவு எடுப்பீர்கள்.


திருவோணம் : உதவிகள் கிடைக்கும். 


அவிட்டம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.

---------------------------------------



கும்பம்

மார்ச் 10, 2023



மனதில் ஒருவிதமான படபடப்பும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




அவிட்டம் : படபடப்பான நாள்.


சதயம் : விவேகம் வேண்டும். 


பூரட்டாதி : வாதங்கள் நீங்கும்.

---------------------------------------



மீனம்

மார்ச் 10, 2023



வாழ்க்கை துணைவர் வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய நண்பர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சகோதரர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத சில வரவுகளால் நன்மை உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும். 


உத்திரட்டாதி : லாபம் அதிகரிக்கும்.


ரேவதி : நன்மையான நாள்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.03.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.03.2023 - School Morning Prayer Activities...

 

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பொறை உடைமை


குறள் : 152

பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை

மறத்த லதனினும் நன்று.


பொருள்:

தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.


பழமொழி :

Cheerful yesterdays and confident tomorrows.


கடந்தகால மகிழ்ச்சி எதிர்கால நம்பிக்கை.


இரண்டொழுக்க பண்புகள் :


1. என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். 


2. எனவே என் சன்னலை பாதுகாப்பேன்.


பொன்மொழி :


உங்கள் கௌரவம் உங்கள் நாக்கின் நுனியில்தான் இருக்கிறது.நிதானமாக பேசவும் கவனமாக கேட்கவும் வேண்டும்.


பொது அறிவு :


1. மிருகங்களில் குறைந்த நேரம் தூங்குவது எது? 


கழுதை . 


2.நமது உடலின் ஒரு நாள் தாமிரத்தின் தேவை எவ்வளவு? 


25 மில்லி கிராம்.


English words & meanings :


fatuous - silly and pointless. it is a fatuous comment. adjective. மடத்தனமான, அறிவற்ற


ஆரோக்ய வாழ்வு :


துளசி ஒரு குத்துச்செடி. இதில் வெள்ளை துளசி (Tulsi) மற்றும் கருந்துளசி என்ற இரு வகைகள் உண்டு. துளசியில் இருமலை குணப்படுத்தும் யூஜினல் மற்றும் சில வேதி பொருட்கள் உள்ளன. துளசி செடியை நன்கு நறுக்கி சிறிது மிளகுடன் கலந்து கசாயம் போட்டு காலை, இரவு குடித்து வந்தால் குளிர்காய்ச்சல் (Fever), கோழை, இருமல், தொண்டை வறட்சி நீங்குகிறது. வீட்டில் ஒரு துளசி செடி வளர்த்து தினசரி அதன் இலையை உண்டு வந்தால் சளித்தொல்லையே வராது.


மார்ச் 10


சாவித்திரிபாய் புலே அவர்களின் நினைவுநாள்


சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.


சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது.


ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.



நீதிக்கதை


ரகசிய பூஜை


ஒரு சமயம், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயருடைய அவைக்கு, நீண்ட ஜடாமுடி தரித்த, வாட்டசாட்டமான ஒரு சந்நியாசி வந்தார். வரும்போதே அவர், அரசே! விஜயநகருக்குப் பெரிய ஆபத்து ஒன்று காத்திருக்கிறது. அதைக் கூறி எச்சரிப்பதற்காக, இமயத்திலிருந்து வருகிறேன் என்றார். அதைக் கேட்டதும், அரசர் சற்றுப் பதற்றம் அடைந்துவிட்டார். ஒரு தனியறையில், அரசருடன் ஆலோசனை நடத்தினார் சந்நியாசி.


அரசே! தலைநகருக்கு வெகு தூரத்தில், காட்டில் ஒரு பழமையான பங்களா உள்ளது. அங்கு கெட்ட கிரகங்களைக் களைவதற்காக, ஏழு நாட்களுக்கு ஒரு பூஜை செய்யப்போகிறேன். ஏழாவது நாள் பூஜைக்கு நீங்கள் தனியாக அங்கு வாருங்கள். எல்லாம் நல்லபடியாக முடியும்... என்றார் சந்நியாசி. மறுநாள் முதலே, சந்நியாசியின் பூஜை தொடங்கி விட்டது. ஏழாம் நாள் அரசர் குதிரை மீதேறி அமர்ந்து தனியாக அந்தக் காட்டுப் பங்களாவை நோக்கிச் சென்றார். சந்நியாசி அரசரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.


அரசரை வரவேற்ற அவர் அரசே! என்னுடைய காரிய சித்தியின் பெருமையைப் பாருங்கள். நான் உச்சரிக்கும் மந்திரத்தின் ஒலி வெகு தூரம் பரவித் திரும்பக் கேட்கும் என்றார். உண்மை என்ன வென்றால், சந்நியாசி, கூறிய ஏதோ ஒரு ரகசிய ஒலி, உரக்கத் திரும்பக் கூறப்பட்டுப் பரவியது. அரசர் திடுக்கிட்டார்... அதே சமயம், முண்டாசு அணிந்த உயரமான ஒரு மனிதன் உள்ளே வந்து, அரசருக்கு அருகில் அமர்ந்துக் கொண்டான். அறையில் ஒலித்த சத்தத்தைக் கேட்டு, உரத்த குரலில், அடேய்... இதெல்லாம் ரகசியம், பாதாள ரகசியம்... என்றார். அவர் குரல் நின்றதுமே, மந்திரம் ஒலிப்பதும் நின்று விட்டது. சிலர் விரைந்து ஓடும் ஓசை கேட்டது. 


அரசருக்கு அதிர்ச்சி! சந்நியாசிக்கு வியர்த்து விட்டது. ஆனால், முண்டாசு மனிதர் மட்டும், அமைதியாக இருந்தார். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, விஜய நகர வீரர்கள் மூன்று பேரைச் சிறைப்பிடித்து அழைத்து வந்தனர். அவர்கள் சந்நியாசி வேடத்தில் இருந்த எதிரிகளின் ஒற்றர்கள்! வீரர்களைப் பார்த்ததும், சந்நியாசி ஓடினார். ஆனால், அவரும் துரத்திப் பிடிக்கப்பட்டார்.


அப்போது முண்டாசு மனிதர் தனது முண்டாசைக் களைந்தார். அவரைக் கண்டு அரசர் திடுக்கிட்டார்... அருகில் தெனாலிராமன்! செல்லுங்கள் அரசே! விரைவில் இங்கிருந்து போய்விடுவோம். கீழே சுரங்கத்தில் வெடி வைக்கப்பட்டுள்ளது. அதை வெடிக்கச் செய்து இந்தப் பங்களாவைச் சிதறடிக்க வேண்டும் என்பது சந்நியாசியின் திட்டம். மறைந்து கொண்டு மந்திரத்தைச் திரும்பச் சொன்னவன், அவன்தான். எனக்கு ஆரம்பம் முதலே, சந்தேகம் தான். இப்போது பிடிபட்டு விட்டனர்... என்று தெனாலிராமன் சொன்னதும் தான், அரசருக்குத் தனது தவறு புரிந்தது. உண்மைதான் தெனாலிராமா! நீ சரியான நேரத்தில் வந்தாய்... இல்லாவிட்டால், என்ன நடந்திருக்குமோ? நினைக்கவே நடுங்குகிறது... என்று அரசர் தெனாலிராமனை வாரி அணைத்துக் கொண்டார்.


இன்றைய செய்திகள்


10.03. 2023


* உரிய உரிமம் இல்லாமல் அரசு நிலத்தை தொடர்ந்து பயன்படுத்த உரிமையில்லை: சென்னை ஐகோர்ட் .


* கோவை மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வருவோரில் 10% பேருக்கு ஃப்ளு காய்ச்சல் பாதிப்பு.


* தமிழகத்தில் 6, 7,8-ம் வகுப்பு பயிலும் 4 லட்சம் மாணவர்களுக்கு பல் பரிசோதனை - ‘புன்னகை’ திட்டம் தொடக்கம்.


* தமிழ்நாட்டில் 4 மிதக்கும் கப்பல் தளத்துக்கு அனுமதி: மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை தகவல்.


* ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை அடுத்து போருக்கு தயாராகும் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல்.


* உக்ரைனின் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்யா தீவிர தாக்குதல்.


* பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதற்கு  இந்தியாதான் காரணம் - இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி புகழாரம்.


* ஐசிசி தரவரிசை - முதலிடத்தில் நீடிக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.


* சென்னையில் இந்தியா- ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி- டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பு வெளியீடு.


Today's Headlines


* No right to continue using government land without a proper license: Chennai High Court


*  10% of outpatients in Coimbatore hospitals have flu.


* Dental check-up for 4 lakh students of 6th, 7th, and 8th standard in Tamil Nadu - 'Punnagai' project started.


* 4 floating docks approved in Tamil Nadu: Central Shipping Department Information


 * INS Vikrant is a battle-ready ship after INS Vikramaditya.


* Russia has launched serious attacks on major cities, including Kyiv, and Ukraine.


 * India's recovery from the economic crisis is the reason - praises Sri Lankan Foreign Minister Ali Sabri.


* ICC Rankings - Ravichandran Ashwin remains at the top.


* India-Australia ODI in Chennai- Ticket sales announcement.

 


திருமணமான பெண்களுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற உரிமை உண்டு - உயர்நீதிமன்றம் (Married women also entitled to government jobs on compassionate grounds - High Court)...



>>> திருமணமான பெண்களுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற உரிமை உண்டு - உயர்நீதிமன்றம் தீர்ப்பு (Married women also entitled to government jobs on compassionate grounds - High Court Judgement)...


விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சத்துணவுத் திட்டத்தில் உதவி சமையலராகப் பணியாற்றி இருக்கிறார். 2014-ல் உடல்நலக் குறைவால் இவர் மரணமடைந்திருக்கிறார். தன்னுடைய தாயின் பணியை தனக்கு வழங்கக் கோரி, அவரின் மகள் சரஸ்வதி, அவர் இறந்த ஆண்டே விண்ணப்பித்து இருக்கிறார்.


ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.


அதனால், 2017 ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் அந்தப் பணிக்கு விண்ணப்பித்து இருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவர் விண்ணப்பித்ததாகக் கூறி, இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.


அதனைத் தொடர்ந்து கருணை அடிப்படையில் தனக்குப் பணி வழங்குமாறு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள்  சுப்பிரமணியன் மற்றும் திலகவதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.


வழக்கை விசாரித்த நீதிபதிகள், `சத்துணவுத் திட்டம் தொடர்பான அரசு உத்தரவுகளில் கருணை அடிப்படையில் பணியமர்த்தக் கோரி விண்ணப்பிக்க, எந்தக் கால வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.


திருமணமான பெண்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்க உரிமையில்லை என்ற கர்நாடக அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனவே மனுதாரரின் கல்வித் தகுதிக்கேற்ப, அவருக்கான பணியை அரசு வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளனர்.


திருமணமான பெண்களும் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரலாம் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு, மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.







கருணை அடிப்படையில் மணமான பெண்ணிற்கு வேலை...


திருமணமான மகள்களுக்கும் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு G.O. Ms. No - 78, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை என்ற எண்ணின் கீழ் 21.4.2017 ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.


 பெற்றோர்களை பராமரிப்பதாக திருமணமான பெண்கள் உறுதி அளித்தால், அவர்களுக்கு அரசுப் பணியை கருணை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாம் என்ற ஒரு நிபந்தனையை சேர்க்க வேண்டும். அந்த நிபந்தனையோடு திருமணமான பெண்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



பணி நியமனம் பெற்ற பிறகு திருமணமான பெண்கள் தங்களுடைய பெற்றோர்களை பராமரிக்கவில்லை என்று ஏதேனும் புகார் அளிக்கப்பட்டால், அந்த பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்படும் என்கிற நிபந்தனையோடு திருமணமான பெண்களுக்கு அரசுப் பணி கருணை அடிப்படையில் வழங்கலாம் என்பதை நீதிமன்றம் வலியுறுத்துகிறது.


எனவே கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் திருமணமான பெண்கள் தங்கள் பெற்றோர்களை பராமரிக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்த பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அதிகளவு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு - இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் (Student dies after consuming too many nutritional pills - Two teachers Suspended)...

 



 அதிகளவு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு - இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் (Student dies after consuming too many nutritional pills - Two teachers Suspended)...


சத்து மாத்திரைகளை அதிகம் உட்கொண்ட மாணவி கல்லீரல் பாதிப்புக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டனர்.


நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நகராட்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பள்ளியில் கடந்த, 6ஆம் தேதி சுகாதாரத்துறை சார்பில் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. அதில் 8ஆம் வகுப்பு படிக்கும், நான்கு மாணவிகள் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டனர். இதையடுத்து நான்கு மாணவிகளும் மயக்கமடைந்தனர். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அன்றைய தினமே கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


அங்கு மாணவியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 40 மாத்திரைகளை உட்கொண்ட ஒரு மாணவியின் உடல்நிலை மோசமானது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கல்லீரல் பாதிப்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து இன்று மாணவி, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


இந்நிலையில், சேலம் அருகே சென்று கொண்டிருந்த போது, மாணவிக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து மாணவியின் கால்களில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.


இரு ஆசிரியர்கள் சஸ்பெண்ட்


போட்டி போட்டு மாணவிகள் மாத்திரை சாப்பிட்ட விவகாரம் தொடர்பாக நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் முகமது அமீன், மாத்திரை வினியோகிக்கும் கண்காணிப்பு அதிகாரியாகவும், ஆசிரியையாகவும் பணியாற்றி வந்த கலைவாணி ஆகிய 2 பேரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.


இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கை தொடர்பான முதற்கூட்டம் 10.03.2023 அன்று நடைபெறுகிறது - முதற்கட்டமாக இரு சங்கங்களுக்கு அழைப்பு குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 35372/ இ1/ 2022, நாள்: 03-03-2023 (Preliminary meeting on demand for equal pay for equal work for Secondary Grade Teachers to be held on 10.03.2023 - Proceedings of the Director of Elementary Education regarding the invitation to two associations in the preliminary stage No: 35372/ E1/ 2022, Date: 03-03-2023)...



>>> இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம்  கோரிக்கை தொடர்பான முதற்கூட்டம்  10.03.2023 அன்று நடைபெறுகிறது - முதற்கட்டமாக இரு சங்கங்களுக்கு அழைப்பு குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 35372/ இ1/ 2022, நாள்: 03-03-2023 (Preliminary meeting on demand for equal pay for equal work for Secondary Grade Teachers to be held on 10.03.2023 - Proceedings of the Director of Elementary Education regarding the invitation to two associations in the preliminary stage No: 35372/ E1/ 2022, Date: 03-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Reduction of 10% Reservation to Secondary Grade Teachers in Appointment of Post Graduate Teachers to 8% - DSE Proceedings, Dated: 21-01-2025 - Attachment: G.O. (Ms) No: 261, Dated : 09-12-2024

  முதுகலை ஆசிரியர் நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10% இட ஒதுக்கீடு 8% ஆகக் குறைப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்...