கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வெவ்வேறு ஒன்றியங்களில் பணி நியமனம் பெற்றோரின் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு சமன்செய்தல் - திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 635/ அ4/ 2022, நாள்: 24-03-2023 (Appointment in different Unions - Equalization of Pay Discrepancies of Juniors Seniors - Proceedings of Tirupur District Educational Officer R.C.No: 635/ A4/ 2022, Dated: 24-03-2023)...


>>> வெவ்வேறு ஒன்றியங்களில் பணி நியமனம் பெற்றோரின்  இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு சமன்செய்தல் - திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 635/ அ4/ 2022, நாள்: 24-03-2023 (Appointment in different Unions - Equalization of Pay Discrepancies of Juniors Seniors - Proceedings of Tirupur District Educational Officer R.C.No: 635/ A4/ 2022, Dated: 24-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஒன்றியத்தில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் திருமதி பிரேமா என்பவரது மூத்தோர் -  இளையோர் ஊதிய முரண்பாட்டை களைந்திடக்  கோரிய விண்ணப்பத்தை மதிப்புமிகு மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் மறுத்த நிலையில்,  மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டும், அதனை நடைமுறைப்படுத்தாமல், அரசு சார்பில் செய்யப்பட்ட   மேல்முறையீட்டினை  மாண்பமை சென்னை உயர்  நீதிமன்றம் ரத்து செய்தது.


அதன் பிறகும் ஊதிய முரண்பாடு களையப்படாத நிலையில், மனுதாரர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 


 இதையடுத்து,  24.03.2023 அன்று மதிப்புமிகு திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்கள், மேற்படி திருமதி பிரேமா அவர்களது மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாட்டைக்  களைந்து உத்தரவிட்டுள்ளார்.


உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள் (India wins 2 gold medals at World Women's Boxing Championships)...

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள் (India wins 2 gold medals at World Women's Boxing Championships)...



 உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 2வது தங்கம் - 81 கிலோ எடைப்பிரிவில் சீனாவின் வாங் லினாவை வீழ்த்தி அசத்தினார் ஸ்வீட்டி போரா (India's 2nd gold at World Women's Boxing Championship - Sweety Bora stunned China's Wang Lina in 81kg category)...


13-வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில், 81 கிலோ பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.


இதில், இந்தியாவின் ஸ்வீட்டி போரா சீனாவின் வாங் லீனாவை எதிர்கொண்டார். பரபரப்பான நடந்த இந்த ஆட்டத்தில் சீன வீராங்கனை லீனானை 4-3 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் ஸ்வீட்டி போரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.




81 கிலோ எடைப்பிரிவில் சீன வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் ஸ்வீட்டி போராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


முன்னதாக ஏற்கனவே நடந்த 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிது கங்காஸ் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





உலக மகளிர் குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவின் நிது கங்காஸ் தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். 48 கிலோ எடைப்பிரிவில் மங்கோலியாவின் லுட்சாய்கானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார் நிது கங்காஸ். 


அவருக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு துறையினர், பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 22 வயதாகும் நிது கங்காஸ் இறுதிப் போட்டியில் மங்கோலிய வீராங்கனையை முதல் செட்டில் 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது. இரண்டாவது செட்டில் ஓரளவு தாக்குப் பிடித்த மங்கோலிய வீராங்கனை 3-2 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை இழந்தார்.


மகளிருக்கான குத்துச் சண்டை உலக சாம்பியன் தொடர் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் நிது கங்காஸ் மற்றும் மங்கோலியாவின் லுட்சாய் கான் ஆகியோர் தகுதி பெற்றனர். இறுதிப் போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனை ஆதிக்கம் செலுத்தி வந்தார். நுணுக்கமான நகர்வுகளால் லுட்சாய்கானை திணறடித்த நிது கங்காஸ், அதிரடியான பஞ்ச்சுகளால் பாயின்ட்டுகளை எடுத்தார். முதல் சுற்றில் அவர் 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றபோதே அவரது வெற்றி உறுதிசெய்யப்பட்டிருந்தது.


நிது கங்காசுடன் சேர்த்து இந்திய வீராங்கனைகள் மொத்தம் 11 முறை மகளிர் குத்துச் சண்டை பிவில் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்கள். 2002, 2005, 2008, 2010, 2018 ஆகிய ஆண்டுகளில் 5 முறை மேரி கோமும், 2006-இல் சரிதா தேவி, 2006 மற்றொரு உலக சாம்பியன் தொடரில் ஜென்னி ஆர்.எல்., லேகா கே.சி, 2022 இல் நிகாத் ஸரீன் ஆகியோர் குத்துச் சண்டையில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.



தனது ஆசிரியையிடம் கேட்டு அடி வாங்கி சந்தோஷப்படும் பழைய மாணவர்களின் நெகிழ்ச்சி (The resilience of old students enjoying the beating of the teacher)...



>>> தனது ஆசிரியையிடம் கேட்டு அடி வாங்கி சந்தோஷப்படும் பழைய மாணவர்களின் நெகிழ்ச்சி (The resilience of old students enjoying the beating of the teacher)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

புதிய வருமான வரிமுறையில் உச்சவரம்பு உயர்வு - நிதி மசோதா திருத்தத்தில் அறிவிப்பு (Increase in ceiling of Income Tax New Regime - Notification in Finance Bill Amendment)...

 புதிய வருமான வரிமுறையில் உச்சவரம்பு உயர்வு - நிதி மசோதா திருத்தத்தில் அறிவிப்பு (Increase in ceiling of Income Tax New Regime - Notification in Finance Bill Amendment)...


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி மசோதாவுடன் 64 திருத்தங்களையும் தாக்கல் செய்தார். அவற்றில் ஒரு திருத்தம் , வருமானவரி திட்டத்தின் புதிய வரிவிதிப்பு முறையை தேர்வு செய்பவர்களுக்கு சலுகை அளிக்கிறது. 



புதிய வரிவிதிப்பு முறையில் , ரூ .7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது. ஆனால் , கூடுதலாக ரூ .100 வருமானம் இருந்தால் , அதாவது ரூ .7 லட்சத்து 100 வருமானம் வந்தால் , ரூ .25 ஆயிரத்து 10 வருமான வரி செலுத்த வேண்டும். 


எனவே , கூடுதலாக ரூ .100 வருமானத்துக்கு ரூ .25 ஆயிரத்து 10 வரி செலுத்த வேண்டி உள்ளது. இந்த திருத்தத்தில் , ரூ .7 லட்சத்துக்கு சற்று கூடுதலாக வருமானம் உள்ளவர்களுக்கு வரிச்சலுகை அளிக்கும்வகையில் , ரூ .7 லட்சத்து 27 ஆயிரத்து 700 வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று (25-03-2023) காலை நடந்த விபத்தின் அதிபயங்கர சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது (Terrifying CCTV footage of the accident that took place this morning (25-03-2023) in Hosur, Krishnagiri district)...



>>>  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று (25-03-2023) காலை நடந்த விபத்தின் அதிபயங்கர சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது (Terrifying CCTV footage of the accident that took place this morning (25-03-2023) in Hosur, Krishnagiri district)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வாழ்க்கை & ஆலமரம் - பாதுகாப்பு கட்டுப்பாடுகள் வளர்ச்சிக்கானவையே - இன்றைய சிறுகதை (Banyan tree & life - Safety restrictions are for growth - Today's short story)...


வாழ்க்கை & ஆலமரம் - பாதுகாப்பு கட்டுப்பாடுகள் வளர்ச்சிக்கானவையே - இன்றைய சிறுகதை (Banyan tree & life - Safety restrictions are for growth - Today's short story)...


🍄 விவசாயி ஒருவர் புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார். பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார். நேரத்துக்கு நேரம் தண்ணீரும் உரமும் போடப்பட்டது.


🍄 இதைப் பார்த்த எதிரே இருந்த காட்டுச்செடி ஒன்று, " இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..? எங்களை பார் நாங்கள் எவ்வளவு #சுதந்திரமாக இருக்கிறோம். ஆனால் நீயோ, குச்சியால் கட்டப்பட்டு கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய்"

என ஏளனம் செய்தது.


🍄 ஆலமரச்செடி யோசிக்க ஆரம்பித்தது. நானும் பிற செடிகளை போல சுதந்திரமாக வாழ்ந்தால் என்ன ? எப்படியாவது இந்த வாழ்க்கையில் இருந்து வெளி வர வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே,


🍄 மறுநாள் அந்த காட்டுச்செடி இருந்த இடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அந்த #காட்டுச்செடியும் வெட்டி தூக்கியெறியப்பட்டது.


🍄 அந்த வழியாக வந்த விவசாயியின் மகன் , " இது என்ன செடி அப்பா..? ஏன் வலையெல்லாம் போட்டு அடைச்சி வச்சிருக்கீங்க " என்று கேட்க,


🍄 இதுவா.. இது ஆலமரச்செடி, இது மற்ற செடி மாதிரி சீக்கிரமா வளர்ந்து சீக்கிரமா அழிஞ்சு போறது இல்ல. பல நூறு வருஷம் வாழ்ந்து பயன்படக்கூடியது. அதான் இதுக்கு இவ்வளவு பாதுகாப்பு என்றார் விவசாயி.


🍄 தன்னை கட்டி வைத்திருக்கும் குச்சியும், சுற்றியிருக்கும் வேலியும், நான் இன்னும் நன்றாக #வளர்வதற்கு தானே தவிர, சுதந்திரத்தை பறிப்பதற்கு அல்ல என்பதை புரிந்து கொண்டது.


🍄 நீங்கள் ஆலமரமாய் வளர வேண்டுமென்றால் சில கட்டுப்பாடுகள் இருக்க தான் செய்யும்..


🌳🌿🌳🌿🌳🌿🌳🌿🌳🌿🌳🌿🌳🌿🌳






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


EMIS வலைதளத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் விவரங்கள் விற்பனை - தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியீடு (Sale of details of school students in EMIS website - Private TV news release)...



>>> EMIS வலைதளத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் விவரங்கள் விற்பனை - தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியீடு (Sale of details of school students in EMIS website - Private TV news release)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 Kalai Thiruvizha Banner

 கலைத் திருவிழா 2024-2025 Kalai Thiruvizha Banner HD >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...