கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வனப் பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு - தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் - செய்தி வெளியீடு (Assistant Conservator of Forests in Tamil Nadu Forest Service (Group–IA Service) for which the Preliminary examination - TNPSC Press Release)...


>>> வனப் பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு - தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் - செய்தி வெளியீடு (Assistant Conservator of Forests in Tamil Nadu Forest Service (Group–IA Service) for which the Preliminary examination - TNPSC Press Release)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

செய்தி வெளியீடு எண் : 35/2023 நாள்: 24.04.2023

செய்திக்குறிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் : 36/2022, நாள் 13.12.2022-ன் வாயிலாக அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு வனப்பணி (தொகுதி -IA பணிகளில்) உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு (கணினி வழித் தேர்வு) 03.05.2023 முற்பகல் மட்டும் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR Dashboard) மூலமாக மட்டும் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு கூட நுழைவுச்சீட்டினை(Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும். 

 


TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

Press Release No: 35/2023 Dated: 24.04.2023

PRESS RELEASE

 Commission’s Notification No.36/2022 dated: 13.12.2022 was issued for direct recruitment to the post of Assistant Conservator of Forests in Tamil Nadu Forest Service (Group–IA Service) for which the Preliminary examination in CBT mode is scheduled to be held on 03.05.2023 F.N.

The memorandum of admission (Hall Ticket) for the admitted candidates has already been hosted in the Commission’s website www.tnpsc.gov.in and www.tnpscexams.in. The memorandum of admission (Hall Ticket) can be downloaded through one time Registration (OTR Dashboard) of the candidate by entering the Application Number and Date of Birth.



பொது வருங்கால வைப்பு நிதி (GPF) மீதான வட்டி விகிதம் 01.04.2023 முதல் 30.06.2023 வரையிலான காலத்திற்கு 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை (G.O.Ms.No.115, Dated: 25-04-2023) வெளியீடு - Provident Fund - General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2023- 2024 with effect from 01.04.2023 to 30.06.2023 - G.O.Ms.No.115, Dated: April 25, 2023 – Issued...


>>> பொது சேமநலநிதி (GPF) மீதான வட்டி வீதம் 01.04.2023 முதல் 30.06.2023 வரையிலான காலத்திற்கு 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை (G.O.Ms.No.115, Dated: 25-04-2023) வெளியீடு - Provident Fund - General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2023- 2024 with effect from 01.04.2023 to 30.06.2023 - G.O.Ms.No.115, Dated: April 25, 2023 – Issued...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - முழு ஆண்டுத் தேர்ச்சி அறிக்கை ஒப்புதல் படிவங்கள் - மாதிரி (Government High / Higher Secondary Schools - Annual Examinations Results Forms - Model)...

 

>>> அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - முழு ஆண்டுத் தேர்ச்சி அறிக்கை ஒப்புதல் படிவங்கள் - மாதிரி (Government High / Higher Secondary Schools - Annual Examinations Results Forms - Model)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாற்றுத்திறனாளிகளும், துணையாளர்களும் Ultra Deluxe, Classic, NSS போன்ற பேருந்துகளிலும் 75% சலுகைக் கட்டணத்தில் பயணிக்கலாம் - மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை கடிதம் (Differently Abled Persons (PWDs) and companions can travel in buses like Ultra Deluxe, Classic, NSS etc. at 75% concessional fare - Managing Director Circular letter)...


>>> மாற்றுத்திறனாளிகளும், துணையாளர்களும் Ultra Deluxe, Classic, NSS போன்ற பேருந்துகளிலும் 75% சலுகைக் கட்டணத்தில் பயணிக்கலாம் - மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை கடிதம் (Differently Abled Persons (PWDs) and companions can travel in buses like Ultra Deluxe, Classic, NSS etc. at 75% concessional fare - Managing Director Circular letter)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25-04-2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25-04-2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: புறங்கூறாமை


குறள் எண்: 185


அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

புன்மையாற் காணப் படும்.


பொருள்:


அறம் பேசும் மனித மனத்தின் தன்மையை புறம் பேசும் தன்மையால் கண்டு கொள்ளலாம்.


பழமொழி :

Yesterday never comes


கடந்து போன காலம் கரணம் போட்டாலும் வராது



இரண்டொழுக்க பண்புகள் :


1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 


2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்


பொன்மொழி :


மனிதராகப்  பிறந்த எல்லோரும் தவறு செய்கிறார்கள். மூடர்கள், அதை தொடர்ந்து செய்கிறார்கள்.


பொது அறிவு :


1. எல்லா வகையான தவளைகளும் எந்த குடும்பத்தில் அடங்கும்? 


ரானாடே. 


2. பறவைகளின் தாடைகள் என்னவாக மாறுகின்றன? 


அலகுகளாக .


English words & meanings :


 Oriental - belong to East or far East countries, தூர கிழக்கு நாடுகள் சார்ந்த, 


Otters - a brownish river animal that eats fish, நீர் நாய்


ஆரோக்ய வாழ்வு :


அன்னாசி பழத்தில் பிரோமெலான் என்னும் நொதி (enzyme) உள்ளது. தொண்டை வலி, கீல் வாதத்தினால் உண்டாகும் வீக்கம் மற்றும் கட்டிகளை குறைக்க இந்த நொதி உதவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதனால் அன்னாசி பழம் கீல்வாத நோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.


கணினி யுகம்


Windows key. : Open or close Start Menu.

Windows key + A: Open Action Center.


ஏப்ரல் 25


உலக மலேரியா நாள்


உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர். மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல் ஏப்ரல் 25 ம் நாளை மலேரியா நாளாக அறிவித்தது.


2012 ஆம் ஆண்டில் அதிகளவாக 6,27,000 பேர் மலேரியா நோயால் இறந்துள்ளனர், இவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழும் குழந்தைகள் ஆவர்.



புதுமைப்பித்தன்  அவர்களின் பிறந்தநாள்


புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.[2] கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.




மார்க்கோனி அவர்களின் பிறந்தநாள்


மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi; ஏப்ரல் 25, 1874 – ஜூலை 20, 1937) வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். ' கம்பியற்ற தகவல்தொடர்பு முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் 'மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்', 'வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.


நீதிக்கதை


நீங்கள் தான் கடவுள்


ஒரு ஊரில் கணவனை இழந்த சீதா என்று ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு ஒரு குழந்தை. அவள் தினமும் வேலைக்குச் சென்றால் தான் அவளால் குடும்பம் நடத்த முடியும் என்ற சூழ்நிலை. எனவே குழந்தையை பார்த்துக்கொள்ள ஒரு வேலைக்காரியை ஏற்பாடு செய்துவிட்டு, இவள் தினமும் வேலைக்குச் செல்வாள்.




இப்படி இருக்க ஒருநாள் மாலை நேரம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது வீட்டு வேலைக்காரி தொலைப்பேசியில் அழைத்து குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறினாள். அலுவலகத்தில் இருந்து கிளம்பி மருந்து வாங்க மருந்துக் கடைக்கு சென்றாள். மருந்து வாங்கிவிட்டு தனது மகிழுந்திடம் வந்தாள். மகிழுந்தின் சாவியை உள்ளேயே வைத்து பூட்டியதை உணர்ந்தாள்.




என்ன செய்வது எனத் தெரியவில்லை. வீட்டில் இருந்து வேலைக்காரி மீண்டும் தொலைப்பேசியில் அழைத்து குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமாகிறது என்று கூறினாள். சீதாவிற்குக் கண்கள் கலங்கின. இறைவா... எனக்கு உதவி செய் எனக் கடவுளிடம் கண்ணீர் வர வேண்டினாள். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் ஒருவர் நீண்ட முடியும் தாடியும் வைத்துக்கொண்டு பல நாள் குளிக்காத ஒரு முரடன் போல வந்து சேர்ந்தார்.



சீதா கடவுளே... இது தான் நீ செய்த உதவியா...? என்று மனதில் நினைத்துக்கொண்டு வந்தவரிடம் வண்டியின் சாவி உள்ளே மாட்டிக்கொண்டது எனக் கூறினாள். வந்தவர் சீதாவிடம் தான் உதவி செய்வேன் என்று கூறி ஒரு நிமிடத்தில் மகிழுந்தின் கதவை திறந்து கொடுத்தார். சீதா நன்றி கூறி நீங்கள் தான் கடவுள் என்று கூறினாள். அதற்கு அவர் இல்லை.... நான் நேற்று தான் சிறையில் இருந்து வெளியே வந்த ஒரு மகிழுந்து திருடன்... ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்து நேற்று தான் வெளியே வந்தேன் என்று கூறினார்.



சீதா மகிழ்ச்சியுடன் நான் கடவுளிடம் உதவிக் கேட்டேன். அதற்கு அவர் ஒரு வல்லுநரை அனுப்பி வைத்துள்ளார் என்று கூறி நன்றியுடன் விடை பெற்றார். அவர் செய்த சிறிய உதவியின் அளவை உணர்ந்தார்



இன்றைய செய்திகள்


25.04. 2023


* அரசு மருத்துவர் பணி: 1,021 இடங்களை நிரப்ப இன்று எழுத்துத் தேர்வு.


* தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (டேன்ஜெட்கோ) முதல்கட்டமாக 200 தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


* தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.


* காஷ்மீர், வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகளின் போர் முனைகளில் பெண் அதிகாரிகள் நியமனம்.


* எதிரி நாட்டு ஏவுகணைகளை வானில் இடைமறித்து தாக்கும் இந்திய ஏவுகணை சோதனை வெற்றி.


* சூடானில் இருந்து இந்தியர்களை மீட்கும் 'ஆபரேஷன் காவேரி' திட்டம் செயல்படத் தொடங்கி உள்ளது.


* சர்வதேச டென்னிஸ்: ஸ்வியாடெக் மற்றும் அல்காரஸ் 'சாம்பியன்'.


Today's Headlines


* Govt Doctor Jobs: Written test will be held today to fill 1,021 posts.


*  Tamil Nadu Government has given the approval to fill up 200 Technical Assistant vacancies in Tamil Nadu Electricity and Distribution Corporation (TANJETCO) through TNPSC in the first phase.


* Chance of rain for 4 days in Tamil Nadu.


 * Appointment of Women Officers in the Front Lines of Kashmir and North East Frontier Regions.


 * Indian missile test successfully intercepts enemy missiles in mid-air.


* 'Operation Kaveri' to rescue Indians from Sudan has begun.


*  International Tennis: Sviatek and Algaras 'Champion'.

 

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வில் (NMMS) வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்திய நடிகர் சூரி (Actor Suri encouraged Government school students who passed the NMMS Exam)...

 




>>> தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வில் (NMMS) வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்திய நடிகர் சூரி - காணொளி (Actor Suri encouraged Government school students who passed the NMMS Exam - Video)...


தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்களை நடிகர் சூரி பாராட்டி பரிசளித்த சம்பவம் பலரது கவனத்தை பெற்றுள்ளது.


மாணவர்களின் படிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் தேசிய திறனறி தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்கள் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1000 என 4 ஆண்டுகளுக்கு ரூ.48,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.


அந்த வகையில் இந்த ஆண்டு நடந்து முடிந்த தேசிய திறனறி தேர்வில் பல பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்று வெற்றி பெற்றிருந்தனர் . அதில் குறிப்பாக, திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரம் அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 6 மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றிப் பெற்றுள்ள சம்பவம் பலரது கவனத்தை பெற்றுள்ளது.


தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி, ஒரு வீடியோ பதிவு ஒன்றையும் நடிகர் சூரி வெளியிட்டுள்ளார். வென்ற மாணவர்களுக்குப் பணப் பரிசு, பங்கேற்ற மாணவர்களுக்கு பொருட்பரிசு, அத்தனை ஆசிரியர்களுக்கும் வெள்ளிப்பரிசு என பல பரிசுகளை தனது நண்பர்கள் மூலமாக அப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கியுள்ள சூரி, மாணவர்களையும் ஆசிரியர்களையும் நேரில் சந்திக்க விரைவில் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவம் குறித்த செய்தியையும், வீடியோவையும் சூரியின் நண்பரும்,  இயக்குநருமான இரா.சரவணன் தமது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இத்தனை பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் இவ்வளவு மெனக்கெடுறீங்களே அண்ணே என அவர் கேட்டதற்கு “நாலு வார்த்தை பாராட்டிப் பேசுறதுல நமக்கு என்னண்ணே குறைஞ்சிடப் போகுது? நம்ம உழைப்பும் திறமையும் எல்லோராலும் பார்க்கப்படுதுங்கிற எண்ணம், அவங்களை இன்னமும் சிறப்பா ஓட வைக்கும். மற்ற மாணவர்களையும் ஆர்வப்படுத்தும். எல்லாத்தையும் தாண்டி அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கையைப் பெரிதா உயர்த்தும்… அதுதான் முக்கியம்” என சூரி கூறினாராம்.


நடிகர் சூரி செய்திருக்கும் இந்த செயல் பலரது கவனத்தை பெற்றுள்ளதோடு , அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டி குழு (Career Guidance Cell) - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினரின் பங்கு - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு (School Level Higher Education Guidance Cell (Career Guidance Cell) - Role of School Management Committee Member - School Education Department Release)...



>>> பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டி குழு (Career Guidance Cell) - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினரின் பங்கு - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு (School Level Higher Education Guidance Cell (Career Guidance Cell) - Role of School Management Committee Member - School Education Department Release)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...