கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒரு புத்தகம் என்ன செய்யும்...? (What does a book do...?)



ஒரு புத்தகம் என்ன செய்யும்...? (What does a book do...?)


 

1. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நமக்கு அதுவரை தெரியாத விஷயங்கள் தெரியவரும்.


2. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள், எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் உருவாகும்.


3. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நமது அறிவுப்பரப்பு ஒரு மில்லிமீட்டராவது விசாலமாகும்.


4. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நம்முடைய உணர்வுகள் கூர்மையடையும்.


5. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நாம் அதுவரை நம்பியிருந்த உண்மைகள் பொய்களாக மாறும்.


6. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நம்முடைய வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, இனம், மதம், சாதி, மொழி, இவையாவும் மறைந்து போகும். பிரபஞ்ச மனிதனாக உணரமுடியும்.


7. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது உலகின் எந்த மொழிபேசும் மனிதர்களின் வாழ்வை, அவர்களுடைய பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, அந்த மொழி தெரியாமலேயே புரிந்துகொள்ள முடியும்.


8. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நம்முடைய மூடநம்பிக்கைகள் ஒழிந்து அறிவியல் பார்வை உருவாகும்.


9. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது மரபுக்கும் நவீனத்துக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியும்.


10. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது வரலாற்றுக்கும், புராண இதிகாசங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.


11. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நாம் வாழும் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் ஏற்படும்.


12. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது காக்கை, குருவி, கடல், மலை, என்று இயற்கையை ஆராதிக்கத்தோன்றும்.


13. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது காதலின் ஊற்றுக்கண் பொங்கிப் பிரவகிக்கும்.


14. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது சாதி, மதத்தின் பின்னுள்ள சதிவலையைப் புரிந்து கொள்ள முடியும்.


15. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது இந்த உலகத்தின் மீது விரிந்துள்ள ஏகாதிபத்தியத்தின் சதிவலையைத் தெரிந்து கொள்ள முடியும்.


16. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது பார்க்கிற அத்தனை ஜீவராசிகள் மீதும் அன்புகொள்ளத் தோன்றும்.


17. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது சமத்துவமற்ற, ஏற்றதாழ்வுகளுள்ள இந்த சமூகத்தின்மீது கோபம் பொங்கும்.


18. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பினை மாற்றத்தோன்றும்.


19. புத்தகம் மனிதகுலத்தின் அறிவுச்சொத்து. வாசியுங்கள்!






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நாளை (16.05.2023) நடைபெறவிருந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு (Postponement of Middle School HeadMasters Transfer Counseling scheduled for tomorrow - 16.05.2023)...


>>> நாளை (16.05.2023) நடைபெறவிருந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு - Audio (Postponement of Middle School HeadMasters Transfer Counseling scheduled for tomorrow - 16.05.2023)...




Middle school HM transfer counselling which is scheduled tomorrow(16.5.2023) is rescheduled-inform concerned.. Revised schedule  will be intimated separately.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


CIBIL மதிப்பீடும் கடன் பெறும் வாய்ப்பும் (CIBIL SCORE AND PROSPECTS OF FAVOURABLE CREDIT CHANCES)...



 CIBIL மதிப்பீடும் கடன் பெறும் வாய்ப்பும் (CIBIL SCORE AND PROSPECTS OF FAVOURABLE CREDIT CHANCES)...


கிரெடிட் இன்போர்மஷன் பியூரோ ஆப் இந்தியா (CREDIT INFORMATION BEAURU OF INDIA LIMITED- CIBIL) என்று அழைக்கப்படும் நிறுவனத்தின் சுருக்கமே சிபில். ஒரு நபர் வாங்கும் கடன் விவரங்களை பெற்று அதனுடைய விபரங்கள், தற்போதைய நிலை (STATUS), அதனடிப்படையில் கடன்பெற்றவர்க்கு ஒரு மதிப்பீடு (SCORE) வழங்கும்.  இந்த மதிப்பீட்டை பொறுத்தே நிதிநிறுவனங்கள் கடன்வழங்கும் முடிவை எடுக்கும். 


சிபில் ஒரு கடன்தாரரின் கடன் விபரங்களை நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்று, அதனடிப்படையில் ஓரு கடன் தகவல் அறிக்கை (CREDIT INFORMATION REPORT (CIR) தயார் செய்யும். இந்த கடன் தகவல் அறிக்கை  அவரின் கடன் நிலையை பொறுத்து அவருக்கு மதிப்பீடு வழங்கும்.    மதிப்பீடு ஒரு மூன்று இலக்க எண்ணாக குறைந்தது 300 எனவும் அதிகபட்சமாக 900 எனவும் இருக்கும். வங்கிகள் கடன்வழங்க குறைந்தது  750 என்ற மதிப்பீடு அளவை நிர்ணயம் செய்துள்ளது. இந்த குறைந்த அளவிலிருந்து எவ்வளவு அதிகமுள்ளதோ அந்த அளவிற்கு கடன் பெறும் வாய்ப்புகள் கூடும்.


கடன் தகவல் அறிக்கையில் என்னென்ன தகவல்கள் அடங்கும்? 

ஆறு பகுதிகளாக தகவல் வழங்கப்படும். 

1. கடன்தாரரின் நாணயத்தை  (CREDIT WORTHINESS) குறிக்கும் மதிப்பீடு.  

2. வங்கியிலிருந்து/நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடன்தாரரின் தனித் தகவல்கள்(PERSONAL INFORMATION)

3. வங்கியிலிருந்து/நிதி நிறுவனத்திடமிருந்து தொடர்பு தகவல் (CONTACT INFORMATION).

4. மாதாந்திர, வருடாந்திர வருமான விவரங்கள்

5. கடன் கணக்கு விவரங்கள் - கடன் வழங்கிய நிறுவனத்தின் பெயர், கடன் வாங்கிய நாள், முடிவடையும் நாள், கடன் தொகை, தவணை தொகை, மாதா மாதம் தவணை செலுத்தப்படும்/ செலுத்தப்பட்ட விவரங்கள் (கடந்த மூன்று வருடங்களுக்கு),  

6. விசாரணை மேற்கொள்ளும் நிறுவனம் பற்றிய தகவல்


இந்த அறிக்கையில் வங்கிகள் ஆய்வு செய்யும் விடயங்கள்

சிபில் மதிப்பீடு: கடன் வழங்களில் இதன் பங்கு முதன்மையானது. ஒரு நல்ல மதிப்பீடு மற்றும் அறிக்கை ஒருகடன் விண்ணப்பதாரரின் நம்பகத் தன்மைக்கு வலிமையான சான்று.  

விண்ணப்பதாரரின் வேலை வருமானம் பற்றிய தகவல்கள். இது பெரும்பாலும் தனிநபர் கடன்களுக்கு  மட்டுமே.  

ஏற்கனவே உள்ள கடன் கணக்கு விவரங்கள்:- கடனின் தற்போதைய நிலை, நீதிமன்ற வழக்குக்கு உட்படுத்தப்பட்டுள்ளதா (SUIT FILED OR NOT) தள்ளுபடி (WRITE-OFF) அல்லது வட்டி விலக்கு (WAIVER) வழங்கப்பட்டுள்ளதா என்பன போன்ற விபரங்கள். 

தவணைகள் செலுத்தபடும் முறை: தவணைகள் முறையை செலுத்தப்படுகிறதா?  தவணைகள் தவறுதல் நடைபெறுகிறதா? 

தவணை வருமான விகிதம் (RATIO): ஏற்கனவே உள்ள கடன்களுக்கான தவணை மற்றும் தற்போதைய வருமானம் இரண்டுக்குமான விகிதம் ஒப்பு நோக்கப்படும்.    வருமானம் கடன் தவணை குறைந்தது 50% இருக்க வேண்டும்.

கடன்தாரரின் தனித் தகவல், கடன் கணக்கு விவரங்கள் ஆகிய தகவல்கள் பற்றிய முரண்பாடு இருக்குமாயின் சிபில் மூலம் நிவாரணம் பெறமுடியும்.  நிவாரணம் கோரிய  30 நாட்களுக்குள் சரி செய்யப்படும்.  கணக்கில் செலுத்தப்பட்ட தவணைத் தொகை கணக்கு விவரங்களில் இணைய 45 நாட்கள் வரை ஆகலாம்.


சிபில் பற்றிய கட்டுக் கதைகள்

உயர்மதிப்பீடு பெறுவதில் பொறுப்பான முயற்சிகள் தேவை. சிபில் மதிப்பீட்டை உயர்த்த செய்ய வேண்டுவன, செய்யக் கூடாதது பற்றி தெரிந்துகொள்வது அவசியம். சிபில் பற்றிய தவறான தகவல்களும் உண்மைகளும்:   

1. சிபில் மதிப்பீடு (CIBILSCORE) அடிக்கடி சரிபார்த்தால் (checking) மதிப்பீடு குறையும்:  

சிபில் அறிக்கையை ஒரு நிதிநிறுவனம் கடன் ஆய்வுக்காக பெறுகையில் அது கடின விசாரணை  (HARD ENQUIRY). இது ஒரு குறுகியகால அவகாசத்தில் மீண்டும் மீண்டும் நடைபெறுமானால் கடன்பெறும் ஆசையின் வேகம் அறியப்படுவதால் மதிப்பீடு குறையும். ஆனால் ஒருநபர் தன்னுடைய பெயரிலேயே மதிப்பீடு விசாரணை செய்தால் அது மென்விசாரணை  (SOFT ENQUIRY). www.cibil.com என்கிற சிபில் தளத்தில் உங்களின் நுழைவுக்கான குறியீடுகளை உருவாக்கிக்கொண்டு உங்கள் மதிப்பீட்டினை சரி பார்க்கலாம். இந்த மென்விசாரணை அவருடைய மதிப்பீட்டில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. 


2.வருமானம் அதிகரிக்கையில் மதிப்பீடு உயரும்:  

ஒருவரின் கடன் நடவடிக்கைகள் மட்டும் அவரின் மதிப்பீட்டை தீர்மானிக்கிறது.  கடன் தவணைகளை திருப்பி செலுத்துவது, வருவாய்க்குள் கடன் வாங்குதல், அடிக்கடி கடன் வாங்குதல், இம்மாதிரியான நடவடிக்கைகள் ஒருவரின் மதிப்பீட்டை முடிவு செய்யும். வருமானம் அதிகரிக்கும் போது சிலவேளைகளில் கடன் பெரும்வாய்ப்புகள் அதிகரிக்கலாம். நல்ல மதிப்பீடு இருந்தாலும் வருமானம் குறைவாக இருப்பின் கடன் மறுக்கப்படலாம்.


3. கடன் கணக்கு கடன் அட்டை நிலுவையை முழுவதுமாக செலுத்தி முடித்துகொண்டால் மதிப்பீடு உயரும்:  

நிலுவைகளை ஒருபைசாகூட நிறுத்தாமல் முழுவதுமாக முடிக்க வேண்டும்.  நிதிநிறுவனங்கள் வழங்கும் சலுகைகளை (அசல் தள்ளுபடி (WRITE-OFF)/ வட்டி விலக்கு (WAIVER) பெற்று கடனை தீர்த்துகொள்ளும்போது அது தீர்வை செய்யப்பட்டது (SETTLED) எனகுறிக்கப்படும்.  இது அந்த நபரின் கடன்பெரும் வாய்ப்பில் நிரந்தரமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.


4. இதுவரை கடனே வாங்கியதில்லை. எனவே எனக்கு கடன் கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.:  

இது தவறான கருத்து. ஏற்கனவே கடன்வாங்கி அதை ஒழுக்கமாக கட்டியிருப்பது உங்களின் கடன் நாணயத்தை  (CREDIT WORTHINESS) விளக்கும் ஒருதரவாக அமையும். நிதி நிறுவனங்கள் உங்களை சாதகமான ஒருகடன்தாரராக கருத வாய்ப்புகள் அதிகம். எந்த கடன் சம்பந்தமான தரவுகளும் இல்லையென்றால் நிதிநிறுவனங்கள் தயக்கம் காட்டலாம்.


5.பழைய கடன் அட்டை கணக்குகளை முடித்துக் கொள்வது ஒருவரின் கடன்மதிப்பீட்டை உயர்த்தும்:  

இது தவறு. நீண்ட வரலாறு உள்ள கடன் கணக்குகள் ஒழுங்காகப் பராமரிக்கபட்டிருப்பின் அது ஒருவருக்கு சாதகமான தரவாக அமையும்.  குறுகிய காலக் கடன் வரலாறுகள் இந்த அளவு உதவி செய்வதில்லை.  ஒரே கடன் வகை மட்டுமில்லாமல் வேறுவேறு கடன் கணக்குகள் இருப்பதும் ஒருநபரின் நாணயத்தை பறைசாற்றும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத் தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2023 தேர்வு முடிவுகள் - வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு (10th Standard and Higher Secondary 1st Year (+1) Public Examinations March/April 2023 Exam Results - Release Date & Time - Directorate of State Examinations Announcement)...


>>> பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (+1)  பொதுத் தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2023 தேர்வு முடிவுகள் - வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு (10th Standard and Higher Secondary 1st Year (+1) Public Examinations March/April 2023 Exam Results - Release Date & Time - Directorate of State Examinations Announcement)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


10th, 11th Public Exam 2023 - தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம் தேர்வுத்துறை அறிவிப்பு.


10ஆம் வகுப்பு & மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத் தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2023 தேர்வு முடிவுகள் - செய்திக்குறிப்பு - தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம்


மே 19ல் 10, +1 தேர்வு முடிவு வெளியாகிறது.


தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும்.


11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19 ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு.

திட்டமிடப்பட்ட பராமரிப்புச் செயல்பாடுகள் காரணமாக, EMIS இணைய பயன்பாட்டுச் சேவைகள் மே-15 காலை 11 மணி முதல் மே-22 காலை 11 மணி வரை கிடைக்காது (Due to Scheduled maitenance activity of EMIS web application services will not be available from (MAY-15)- 11am to (MAY-22)- 11am)...

திட்டமிடப்பட்ட பராமரிப்புச் செயல்பாடுகள் காரணமாக, EMIS இணைய பயன்பாட்டுச் சேவைகள் மே-15 காலை 11 மணி முதல் மே-22 காலை 11 மணி வரை கிடைக்காது (Due to Scheduled maitenance activity of EMIS web application services  will not be  available from (MAY-15)-  11am   to (MAY-22)-  11am)...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


+2க்குப் பிறகு பயில வாய்ப்புள்ள படிப்புகளின் தொகுப்பு - CBSE (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) இந்தியா (Compendium of Academic Courses After +2 - CBSE (Central Board of Secondary Education) India)...


>>> +2க்குப் பிறகு பயில வாய்ப்புள்ள படிப்புகளின் தொகுப்பு - CBSE (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) இந்தியா (Compendium of Academic Courses After +2 - CBSE (Central Board of Secondary Education) India)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 678/ அ1/ இ4/ 2023, நாள்: 13-05-2023 (Appointment of Additional Charge Officer as District Chief Educational Officer, Thanjavur - Proceedings of Joint Director of School Education Rc.No: 678/ A1/ E4/ 2023, Dated: 13-05-2023)...

 

>>> தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 678/ அ1/ இ4/ 2023, நாள்: 13-05-2023 (Appointment of Additional Charge Officer as District Chief Educational Officer, Thanjavur - Proceedings of Joint Director of School Education Rc.No: 678/ A1/ E4/ 2023, Dated: 13-05-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings

+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...