மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு ITK தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...
⚡1. வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செய்ய வேண்டிய பணிகள்
⚡2. வருவாய் வட்டாட்சியர் செய்ய வேண்டிய பணிகள்...
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - சிறப்பு முகாம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி
விருப்பம் இல்லாத தன்னார்வலர்களை விண்ணப்ப பதிவுக்கு பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தல்
மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு பணியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
தன்னார்வலர்களுக்கு 2 கி.மீ.க்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்கவும், தன்னார்வலர்கள் விருப்பப்பட்டால் 2.கி.மீ தொலைவுக்கு மேல் பணி வழங்கவும் உத்தரவு...
கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப் பதிவு தன்னார்வலர் பணிக்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் விவரங்களைப் பகிர , முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. சில மாவட்டங்களில் தன்னார்வலர்களின் விபரங்கள் பகிரப்பட்டுள்ளன. இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப் பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் இணைக்கப்பட்ட தொகுப்பு விரைவில் மாநில அலுவலகத்திலிருந்து மாவட்டங்களுக்குப் பகிரப்படும்.
இப்பொழுது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு எவ்வித பணி ஒதுக்கீடுகளும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாநில அலுவலகத்திலிருந்து தகவல்கள் பகிரப்படும் பொழுது கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
>>> இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு பணி - சிறப்புப் பணி அலுவலரின் சுற்றறிக்கை எண்: 01, நாள்: 09-07-2023 (Kalaignar Magalir Urimai Scheme Application Registration Work for Illam Thedi Kalvi Volunteers - Special Duty Officer's Circular No: 01, Dated: 09-07-2023)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
அனைத்து தன்னார்வலர்களுக்கும் வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻
🌸🌸🌸தமிழக அரசின் புதிய திட்டமான 💐💐💐 *கலைஞர் மகளிர் உரிமை திட்டம்* 💐💐💐நடைமுறைக்கு வர உள்ளது. இந்த திட்டத்தில் பயனாளர்களை பதிவு செய்யும் முழு பணியும், நமது இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட உள்ளது. எனவே இந்தப் பணியை மேற்கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் தங்களது விருப்பத்தையும், தங்களது விபரங்களையும் மேற்கண்ட *Google form* ல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
*இந்த திட்டத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்த விபரங்கள்*
📌 குறைந்தபட்சம் *10 நாட்களுக்கு* முகாம்களில் அமர்ந்து பயனாளிகளின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
📌 வேலை நேரம் ஆனது *காலை 9:30 முதல் மாலை 5 மணி* வரை .
📌இந்தப் பணியை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் குறிப்பிட்ட *ஊக்கத்தொகை* வழங்கப்படும்.
📌 ஒவ்வொரு தன்னார்வலரும் அதிகபட்சம் *பத்து நாட்களில் 500 பயனாளர்களை* பதிவுகள் வரை செய்ய வேண்டும்.
📌முகாமானது உங்கள் பகுதியில் உள்ள *அரசு பள்ளி கட்டிடம்* அல்லது *ஊராட்சி மன்ற அலுவலகம்* அல்லது *பொதுவான ஒரு அரசு கட்டிடத்தில்* நடைபெறும்.
📌 இந்த முகாம்களில் உங்களுக்கு போதுமான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும்.
📌 இந்தத் திட்டமானது *உயர்திரு.மாவட்ட ஆட்சியரின்* நேரடி கட்டுப்பாட்டில் நடைபெற உள்ள திட்டம். எனவே தங்களுக்கு தகவல் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் மூலமாக வழங்கப்படும்.
📌 இந்த பதிவை மேற்கொள்வதற்கு தங்களுக்கு வேண்டிய உபகரணங்கள் அரசின் மூலமாக வழங்கப்படும். இதில் தங்களது கைபேசியை இணைத்து பதிவை மேற்கொள்ள வேண்டும். எனவே தங்களது கைபேசியில் பயன்படுத்தப்படும் சார்ஜரின் அமைப்பு *B-TYPE or C-TYPE* என்பதை பதிவு செய்ய வேண்டும்.
*இல்லம் தேடிக் கல்வி*
*மாவட்டக் குழு. திருப்பூர்*