கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 6 - தமிழ் & ஆங்கில வழி (Term 1 - Unit 6 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil & English Medium)...

 

>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 6 - தமிழ் வழி (Term 1 - Unit 6 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil Medium)... 



>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 6 - ஆங்கில வழி (Term 1 - Unit 6 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - English Medium)...



>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 6 - தமிழ் & ஆங்கில வழி - மாதிரி 2 (Term 1 - Unit 6 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil & English Medium - Model 2)... 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - 1, 2 மற்றும் 3ஆம் வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வது தொடர்பான SCERT வழிகாட்டுதல் (Ennum Ezhuthum - SCERT Guidance on conducting FA (b) - Formative Assessment (b) for 1, 2 and 3rd Standard)...

 

எண்ணும் எழுத்தும் - 1, 2 மற்றும் 3ஆம் வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வது தொடர்பான SCERT வழிகாட்டுதல் (Ennum Ezhuthum - SCERT Guidance on conducting FA (b) - Formative Assessment (b) for 1, 2 and 3rd Standard)...


 ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கம்🙏. 


ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க,

   1 முதல் 3 ஆம் வகுப்பு கட்டகம் -4 க்கான வளரறி  மதிப்பீடு ஆ மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வியாழன் (27-07-2023) வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


அதேசமயம் கட்டகம் - 5 க்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே  வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி நாளை (21-07-2023) முதல் செயலியில் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படும். இனி வரும் வாரங்களில் மீதமுள்ள அனைத்து கட்டகங்களுக்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையின் படி செயல்பாட்டிற்கு வந்து இரண்டு வார காலத்திற்கு நமது செயலியில் செயல்பாட்டில் இருக்கும்.


கட்டகம்  - 6 க்கு வளரறி மதிப்பீடு ஆ இல்லை.


ஜூலை மாதம் 31 ஆம் தேதி முதல் கட்டகம் - 3, கட்டகம் - 4 ,கட்டகம் - 5,கட்டகம் - 6 ஆகிய நான்கு கட்டங்களுக்கும் சேர்த்து மாதாந்திர தேர்வு - எழுத்துத் தேர்வாக வைக்க வேண்டும். இதற்கான வினாத்தாள் நம்முடைய செயலியில் ஜூலை மாதம் 30-ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் pdf வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.


அதை நகல் எடுத்துக்கொண்டு  ஜூலை 31ஆம் தேதி முதல் மாதாந்திர எழுத்துதேர்வாக வைத்துக் கொள்ளலாம்.

                        நன்றி.

                                              SCERT


TNSED Schools App New Version: 0.0.74 - Updated on 20-07-2023 - Schemes tracking & View video changes. Bug fixing & Performance improvements....

            



🛑🛑🛑🛑🛑🛑


TNSED schools App


What's is new..?


*🎯 Schemes tracking & View video changes...

🎯  Bug fixing & performance improvements...


*_UPDATED ON  20 JULY 2023


*_Version: Now 0.0.74


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


PROSPECTUS FOR DIPLOMA IN NURSING COURSE FOR WOMEN 2023-2024 SESSION (As per G.O. (D) No. 742, Health and Family Welfare (PME-1) Department, Dated : 28-06-2023 and as amended from time to time) LAST DATE FOR SUBMISSION OF APPLICATION 26-07-2023 UPTO 5.00 P.M...



>>> PROSPECTUS FOR DIPLOMA IN NURSING COURSE FOR WOMEN 2023-2024 SESSION...


(As per G.O. (D) No. 742, Health and Family Welfare (PME-1) Department, Dated : 28-06-2023 and as amended from time to time) 


LAST DATE FOR SUBMISSION OF APPLICATION 26-07-2023 UPTO 5.00 P.M...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பணியிலிருந்து முறையான கண்காணிப்பாளர் பதவி உயர்வு - 15-03-2023 அன்று உள்ளவாறு உத்தேச பெயர்ப்பட்டியல் வெளியீடு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 10032/ அ3/ இ1/ 2023, நாள் 18/07/2023 (Promotion to Regular superintendent from the post of promoted superintendent - release of proposed panel as on 15-03-2023 - Director of School Education Proceedings Rc.No: 10032/ A3/ E1/ 2023, Dated 18/07/2023)...

 

>>> பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பணியிலிருந்து முறையான கண்காணிப்பாளர் பதவி உயர்வு - 15-03-2023 அன்று உள்ளவாறு உத்தேச பெயர்ப்பட்டியல் வெளியீடு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 10032/ அ3/ இ1/ 2023, நாள் 18/07/2023 (Promotion to Regular superintendent from the post of promoted superintendent - release of proposed panel as on 15-03-2023 - Director of School Education Proceedings Rc.No: 10032/ A3/ E1/ 2023, Dated 18/07/2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.07.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.07.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: ஒப்புரவறிதல்


குறள் :220


ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து.


விளக்கம்:


இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.


பழமொழி :

Add fuel to fire


எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல



இரண்டொழுக்க பண்புகள் :


1. எல்லாம் தெரியும் என்று சொல்பவனின் தேடலும் அறிவும் விரைவில் முடிவுக்கு வரும்.


2. இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்பவர்கள் தேடுதலும் அறிவும் தொடரும்


பொன்மொழி :


புத்திசாலித்தனமாகவும் மெதுவாகவும் செல்லுங்கள். வேகமாகச் செல்பவர்கள் தடுமாறி விழுந்துவிடுவார்கள். --வில்லியம் ஷேக்ஸ்பியர்


பொது அறிவு :


1. முதல் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) எது?


விடை: ஐஐடி காரக்பூர்


2. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (LIC) தலைமையகம் எங்குள்ளது?

விடை: மும்பை


English words & meanings :


 maid - female servent பணிப்பெண்; 

newscast - a news report செய்தி அறிக்கை


ஆரோக்ய வாழ்வு :


கருணை கிழங்கு,ஒவ்வொரு மனிதனுக்கும் சாப்பிட்ட மூன்று மணி நேரத்திற்குள் மீண்டும் பசியுணர்வு ஏற்படுவது உடல் ஆரோக்கியத்திற்கான நல்ல அறிகுறியாகும். ஒரு சிலருக்கு சில காரணங்களால் பசியின்மை ஏற்பட்டு, சரியாக சாப்பிட முடியாத நிலை உண்டாகிறது. கருணை கிழங்கு பசியின்மை பிரச்சனையை சுலபத்தில் தீர்க்கும்


ஜூலை 20



அனைத்துலக சதுரங்க நாள் 



அனைத்துலக சதுரங்க நாள் (International chess day) பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் வழிகாட்டலில் ஒவ்வோர் ஆண்டும் சூலை 20 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது.


1924 ஆம் ஆண்டு சூலை மாதம் 20 ஆம் தேதியன்று உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. இந்த நாளை அனைத்துலக சதுரங்க தினமாக கொண்டாடும் யோசனையை யுனெசுகோ முன்மொழிந்தது. இதன்படி சூலை 20 ஆம் நாள் அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையும் இந்நாளை அங்கீகரித்தது.



கிரிகோர் யோவான் மெண்டல்  அவர்களின் பிறந்த நாள்


கிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann Mendel, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள்.



மார்க்கோனி அவர்களின் நினைவுநாள்


மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi; ஏப்ரல் 25, 1874 – ஜூலை 20, 1937) வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். ' கம்பியற்ற தகவல்தொடர்பு முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் 'மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்', 'வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.


நீதிக்கதை


ஒரு காட்டில் ஒரு சிங்கம் கம்பீரமாக அதனுடைய எல்லையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. அப்போது அதே காட்டிற்குள் வாழ்ந்துகொண்டிருந்த சில விலங்குகள் அந்த சிங்கத்தின் மீது கொஞ்சம் பொறாமை கொண்டு ஒரு கூட்டம் கூடி பேச ஆரம்பிக்கிறது. அது என்ன எப்போது இந்த சிங்கம் மட்டும் தான் இந்த காட்டுக்கு ராஜாவாக இருக்கணுமா? இது என்ன திருத்தப்படக்கூடாத சட்டமா? இந்த சட்டத்தை நாம் மாற்ற வேண்டும் என்று விலங்குகள் எல்லாம் பேசிக்கொண்டிருந்ததாம்.


அப்போது அங்கு இருந்த ஒரு நரி சொல்லுது. சிங்கம் அதிக பலம் வாய்ந்த ஒரு மிருகம். அதனால தான் சிங்கம் எப்போதும் காட்டிற்கு ராஜாவாக இருக்கிறது என்று கூறியது.


அதனை கேட்ட புலி என்ன சிங்கம் பலம் வாய்ந்ததா? ஹ.. சிங்கத்தை விட எடையும், உயரமும், சண்டையிடும் திறனும் என்னிடம் இரண்டு மடங்கு உள்ளது. ஆகவே நான் சிங்கத்தை விட பலம் வாய்ந்தவன் என்று கூறியது.புலி கூறியதை கேட்டுக்கொண்டிருந்த மற்ற விலங்குகளும் தங்களின் பலத்தை கூறியது. இதையெல்லாம் கேட்ட குரங்கு சொன்னது எத்தனை பேர் சிங்கத்தை விட பலமானவர்களாக இருந்தாலும். இந்த காட்டிற்கு ராஜாவாக சிங்கம் இருப்பதற்கு  முக்கிய காரணம். அது எந்த விலங்குகளை கண்டும் பயந்ததே கிடையாது.  அதனால் சிங்கம் காட்டுக்கு ராஜாவாக இருக்கிறது என்று குரங்கு கூறியது.


இருப்பினும் விலங்குகள் அனைத்தும் தனது பலத்தை பயன்படுத்த திட்டமிட்டபடி நரி சிங்கத்திடம் சென்று சிங்க ராஜா காட்டில் உள்ள மிருகங்கள் எல்லாம் உங்களை பார்க்க சேர்ந்து வந்துள்ளன ஏன் என்று தெரியவில்லை வாங்க என்று அழைத்தது.இதனை அறிந்த சிங்கம் நரியை நம்பி விலங்குகளை பார்க்க வருகிறது. அப்பொழுது அங்கு நின்றுகொண்டிருந்த ஒட்டகச்சிவிங்கி சிங்கத்தை எட்டி உதைத்தது, என்ன நடக்கிறது என்று சிந்திப்பதற்குள்ளாகவே சிங்கம் சுருண்டு தூரமாக போய் விழுகிறது. அங்கிருந்த காண்டாமிருகம் தனது கொம்பினால் சிங்கத்தை குத்தி தூரமாக வீசுகிறது.  இவ்வாறு ஒவ்வொரு மிருகங்களும் தனது பலத்தை பயன்படுத்தி சிங்கத்தை தாக்கியது.பின் எழுந்து சிங்கம்  ஒவ்வொரு மிருகங்களையும் தாக்க ஆரம்பித்தது. அனைத்து விலங்குகளையும் வென்றபிறகு ச தனது குகைக்குள் சென்றது.



மறுநாள் காலை விடிந்தது. சிங்கத்துடன் சண்டை போட்ட அனைத்து மிருங்கங்களும் பேசிக்கொண்டிருந்தன . சண்டை போட்டதில் சிங்கத்திற்கு அதிக இரத்த காயம் ஏற்பட்டதால் சிங்கம் குகையிலேயே இருந்திருக்கும்  என்று விலங்குகள்  நினைத்தது.அப்பொழுது அந்த சிங்கம்  அதே கம்பீர நடையுடன் எந்த ஒரு பயமும் இல்லாமல் அந்த  குகையில் இருந்து வெளியே வந்து   அனைத்து விலங்குகளையும் பார்த்து சிங்கம் கர்ஜித்தது. சிங்கம் கர்ஜித்ததை கண்ட அனைத்து மிருகங்களும் பயந்து ஓட்டம் பிடித்தது. இந்த சிங்கம் காட்டிற்கு ராஜாவாக இருப்பதற்கு முக்கிய காரணம் எதுவென்றால் எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ளமுடியும் என்ற ஒரு நம்பிக்கை மற்றும்  பயம் அப்படிங்கிற ஒரு விஷயம் அதனிடம் இல்லை என்பதால் சிங்கம் காட்டிற்கே ராஜாவாக இருக்கிறது என்று அனைத்து விலங்குகளும் புரிந்து கொள்கின்றன.


இன்றைய செய்திகள்


20.07. 2023


*இரயில்வே பாதுகாப்பு படையின் புதிய தலைமை இயக்குனராக மனோஜ் யாதவா நியமனம்.


*டெல்லி யமுனை நதியின் நீர்மட்டம் அபாய கட்டத்திற்கு கீழே குறைந்தது.


*இலங்கை அதிபர் இன்று இந்தியா வருகை.


*சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முதல் கலைஞர் மகளிர் உதவித் தொகைக்கான டோக்கன் மற்றும் விண்ணப்பம் வீடு வீடாக சென்று விநியோகம்- மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன். 


*சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி தற்போது 500 வது போட்டியில் விளையாட இருக்கிறார்.


*ஐசிசி தரவரிசை பட்டியல்...முதல் 10 இடத்தில் 7 இந்திய வீரர்கள்... மூன்று பிரிவிலும் இந்தியா ஆதிக்கம்.


Today's Headlines


*Manoj Yadava appointed as the new Director General of Railway Protection Force.


 *Delhi Yamuna river water level drops below danger level.


 *  President of Sri Lanka visits India today


 * Today onwards door to door distribution of token and application for kalaingar women's grant in areas under Chennai Corporation - report by Corporation Commissioner Radhakrishnan.


 *Virat Kohli is now about to play his 500th match in international cricket.


 *ICC ranking list...7 Indian players in top 10...India dominates in all three divisions.

 

தொழிற்கல்வி ஆசிரியர்களின் பகுதிநேர பணிக்காலத்தில் 50% ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் - அரசாணையை பின்பற்றி செயல்பட பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 53837/ வி1/ இ1/ 2016, நாள்: 18-07-2023 - இணைப்பு : அரசாணை (நிலை) எண்:127, நாள்: 12-07-2023 (Taking into account 50% of part-time working of Vocational Teachers for pension for - Proceedings of Director of School Education to follow Government Order - Rc.No: 53837/ V1/ E1/ 2016, Dated: 18-07-2023 - Attachment : G.O. (Ms) No:127, Dated: 12-07-2023)...


>>> தொழிற்கல்வி ஆசிரியர்களின் பகுதிநேர பணிக்காலத்தில் 50% ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் - அரசாணையை பின்பற்றி செயல்பட பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 53837/ வி1/ இ1/ 2016, நாள்: 18-07-2023 - இணைப்பு : அரசாணை (நிலை) எண்:127, நாள்: 12-07-2023 (Taking into account 50% of part-time working of Vocational Teachers for pension for - Proceedings of Director of School Education to follow Government Order - Rc.No: 53837/ V1/ E1/ 2016, Dated: 18-07-2023 - Attachment : G.O. (Ms) No:127, Dated: 12-07-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Income Tax Deduction - DEE Information

   வருமான வரி பிடித்தம் - தொடக்கக் கல்வி இயக்கக தகவல் Income Tax Deduction - DEE Information தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ...