கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்கல்வி - பள்ளி மன்ற செயல்பாடுகள் - ஹருண் அருண் சிறார் திரைப்படம் திரையிடுதல் - செப்டம்பர் 2023 - அரசு நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு திரையிடுதல் - வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34785/எம்/ இ1 /2023, நாள்: 11-09-2023 (School Education - School Forum Activities - Harun Arun Juvenile Movie Screening - September 2023 - Screening for Class 6 to 9 students studying in Government Middle / High and Higher Secondary Schools - Issuance of Guidelines Regarding - Proceedings of Tamil Nadu Director of School Education NO: 34785/M/E1/ 2023, Dated: 11-09-2023)...

 


பள்ளிக்கல்வி - பள்ளி மன்ற செயல்பாடுகள் - ஹருண் அருண் சிறார் திரைப்படம் திரையிடுதல் - செப்டம்பர் 2023 - அரசு நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு திரையிடுதல் -  வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34785/எம்/ இ1 /2023, நாள்: 11-09-2023 (School Education - School Forum Activities - Harun Arun Juvenile Movie Screening - September 2023 - Screening for Class 6 to 9 students studying in Government Middle / High and Higher Secondary Schools - Issuance of Guidelines Regarding - Proceedings of Tamil Nadu Director of School Education NO: 34785/M/E1/ 2023, Dated: 11-09-2023)...



>>> Click Here to Download DSE Proceedings...



>>> கதைச்சுருக்கம்‌ - ஹருண்‌ அருண்‌ திரைப்படம் (Synopsis - Harun Arun movie)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.09.2023 - School Morning Prayer Activities...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.09.2023 - School Morning Prayer Activities...
  


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : புலால் மறுத்தல்

குறள் :257

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.

விளக்கம்:

புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்துஅறிவைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.


பழமொழி :
Charity begins at home

தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்


இரண்டொழுக்க பண்புகள் :

1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.

2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.
பொன்மொழி :

போட்டியும் பொறாமையும்
பொய் சிரிப்பும் நிறைந்த
இந்த உலகத்தில் நமது
பாதையில் நாம் நேராக
நடந்து செல்ல நமக்கு
துணையாக இருக்க கூடியது
கல்வி மட்டுமே. அறிஞர் அண்ணா


பொது அறிவு

1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

விடை: ஞானபீட விருது

2. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?

விடை: ஐரோப்பா


English words & meanings :

manhunt - an organised search for a criminal குற்றவாளியைத் தேடுதல்.
 computation - the action of computing எண்ணி அளவிடுதல்

ஆரோக்ய வாழ்வு :

எள் : எள் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும். எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிகம் கொண்டது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது


செப்டம்பர் 11

மகாகவி பாரதியின் நினைவுநாள்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.[2] தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.[சான்று தேவை] பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.[3] இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.



நீதிக்கதை

நீதிக் கதைகள் – ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு.

ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன. நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன. சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருத்த வேலைகள் ஆரம்பமானது.

அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன.  அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில் வெய்யிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட நெற்களைக் கண்டன. கண்டதும் அனைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து சென்று காயப் போடப்பட்ட நெற்களை தின்று தீர்த்து விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரம் ஒன்றில் அமர்ந்தன.தானியத்தை காய்வதற்காக பரப்பி விட்டு சென்ற வேடன் திரும்பி வந்து பார்த்த பொழுது தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை ஒன்றைத் தயார் செய்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு புறாக்கள் வரும்வரை காத்திருந்தான்.

அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. வலையையும் புறாக்கள் தூக்கி கொண்டு உயரப் பறந்து சென்றன.பறந்து செல்லும் போதே, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின. உடனே வெள்ளை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன. வீ ண் கர்வத்தினால் சண்டையிட்டுக் கொண்டு பறந்ததினால் அவற்றின் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்தது, அதனால் அவை ஒரு மரக்கிளையில் வலையுடன் சிக்கிக் கொண்டது.இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கேற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவற்றின் “ஒற்றுமை நீங்கியதால் அனைவருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை பிடித்து தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.


இன்றைய செய்திகள்

11.09.2023

*வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நிலநடுக்கத்தால் உயிர்பலி- 20 ஆயிரத்தை தாண்டியது.

*காவிரி நதிநீர் ஒழுங்காற்று கமிட்டி இடம் தமிழக அரசு
12 ஆம் தேதி புகார் அளிக்க முடிவு.

*சென்னை அருகே சுரங்கப் பணி: திருப்பதி, பெங்களூர் செல்லும் 14 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து.

*டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ரூபாய் 100 கோடியில் கலைஞர் ஆராய்ச்சி மையம் அமைச்சர்
மா சுப்பிரமணியன் தகவல்.

*அமெரிக்க ஓபன் டென்னிஸ்:
சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்
கோகோ காப்.

*லபுசேன், வார்னர் அதிரடி சதம் இரண்டாவது ஒருநாள் கிரக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி.

Today's Headlines

* The death toll due to the earthquake in the North African country of Morocco has exceeded 20 thousand.

*The Cauvery River Management Committee is held by the Government of Tamil Nadu
Decided to lodge complaint on 12th.

*Mining work near Chennai: 14 express trains to Tirupati, Bangalore cancelled.

*100 Crore Kalaingar Research Center Minister at Dr. MGR Medical University Minister
M. Subramanian informed

*US Open Tennis:
He defeated Sabalenka to win the title
*Cocoa Cop* .

*Labussain, Warner's fantabulous century gives Australia a stunning win in the second ODI cricket match.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாபெரும் வாசிப்பு இயக்கம் என்னும் முன்னோடி திட்டத்தில் பங்கு பெற எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு (The Tamil Nadu Government School Education Department invites writers to participate in the pilot program of the Great Reading Movement)...



  மாபெரும் வாசிப்பு இயக்கம் என்னும் முன்னோடி திட்டத்தில் பங்கு பெற எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு (The Tamil Nadu Government School Education Department invites writers to participate in the pilot program of the Great Reading Movement)...


எழுத்தாளர்களுக்கு ஓர் அழைப்பு

*************************************


வணக்கம்!


தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் முக்கியமான திட்டமான மாபெரும் வாசிப்பு இயக்கத்தில் தங்களின் படைப்புகளைத் தந்து பங்கேற்பினை நல்க அன்புடன் அழைக்கிறோம்.


தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக மாபெரும் வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் தற்போது முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 


இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற வகைகளில் ஒரு கதை, ஒரு புத்தகம், 16 பக்கம் என முதல் கட்டமாக 53 கதைப் புத்தகங்கள்  சிறார் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு ஆளுமைகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டு,  அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.   


அடுத்தகட்டமாக 197 நூல்கள்  உருவாக்கப்பட்டு 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தொடர்ந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


வாசிப்பு இயக்கத்திற்காக கீழ்க்கண்ட கருப்பொருளைக் கொண்டு தங்களது படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.


* குழந்தைகள் எளிதில் வாசிக்கும் வகையில் எளிய மொழி நடை.


* சின்னச் சின்ன வாக்கியங்கள்.


* குழந்தைகள் பரவலாக பயன்படுத்தும் சொற்கள், நகைச்சுவை, வேடிக்கைக் கதைகள் வரவேற்கப்படுகின்றன. 


• மாற்றுத் திறனாளிகள், திருநர், விளிம்பு நிலை மனிதர்களை உள்ளடக்கிய கதைகள் 


* பெண்ணுரிமை,  மனிதநேயம், சகோதரத்துவம், சமத்துவம், அறிவியல் புனைவுகள், எளிய மனிதர்களின் வாழ்வியல், குழந்தைகளின் மனநலம் போன்றவற்றை கருப்பொருளாகக்  கொண்ட கதைகள் வரவேற்கப்படுகின்றன.


 தேர்வு  செய்யப்படும் கதைகள்   வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கேற்ப படைப்புக் குழு செழுமைப்படுத்தும்.


கதைகளைத் தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ அரசால் அமைக்கப்பட்ட சீராய்வுக் குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு. 


மேலும் சீராய்வுக் குழுவின் முடிவே இறுதியானதாகும்.


வழிகாட்டு நெறிமுறைகள் :


1. தயவுசெய்து தங்களது கதைகளை வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கு ஏற்றவாறு எழுதி அனுப்பவும்.


2. படைப்புகளை தமிழிலேயே அனுப்பவும்.


3. தங்களால் எழுதப்பட்ட தங்களது சொந்தப் படைப்புகளை  மட்டும் அனுப்பவும்.


4. தங்களுடைய கதைகள் தெரிவு செய்யப்பட்டால் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.


5. தங்களுடைய படைப்புகளாயினும் ஏற்கனவே வேறு ஏதேனும் புத்தகத்திலோ அல்லது இதழ்களிலோ பதிப்பிக்கப்பட்டிருந்தால் அதனைக் குறிப்பிடவும்.


6. மொழிபெயர்ப்புக் கதைகளாக இருப்பின் அது பற்றிய முழு  விவரத்தைக் குறிப்பிடவும்.


தங்களுடைய கதைகள் வாசிப்பின் நிலைகளான... 


"நுழை" எனில் 200 முதல் 250  வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


"நட" எனில் 250 முதல் 300  வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


"ஓடு" எனில் 300 முதல்  400   வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


"பற" எனில் 400 முதல் 500   வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


தேர்வு செய்யப்பட்ட கதைகளுக்கான ஓவியம், வடிவமைப்பு, செழுமைப்படுத்துதல் பற்றி தங்களிடம் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும்.


தேர்வு செய்யப்படவுள்ள  நூல்கள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிக்  குழந்தைகளுக்கும் வகுப்பறையிலும் நூலகங்களிலும் வழங்க இருப்பதால் கதைகளுக்கு சன்மானம் எதுவும் வழங்கப்பட மாட்டாது. 


தேர்வு செய்யப்பட்ட கதைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.


17/09/2023 அன்று மாலை 5.00 மணிக்குள்ளாக ssatnvit@gmail.com  என்ற அலுவலக மின்னஞ்சலுக்கு தங்களது படைப்புகளை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இது குறித்து மேலும் விவரங்களுக்கு  8248259501 என்கிற எண்ணை தொடர்புகொள்ளவும்.


மிக்க நன்றி!

,

மாநில ஒருங்கிணைப்பாளர்,

வாசிப்பு இயக்கம்,

பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு.


#TNGovtSchools | #School | #Students | #Education | #Teachers | #GovtSchools | #TNSED | #TNEducation | #TNDIPR | #Arasupalli | #vaasippuiyakkam | #வாசிப்புஇயக்கம் | #பள்ளிக்கல்வித்துறை


Anbil Mahesh Poyyamozhi






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இதய நாள அடைப்பு - அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும் (Coronary heart block – symptoms & treatment) - Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா...



இதய நாள அடைப்பு - அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும் (Coronary heart block – symptoms & treatment) - Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா...


 நமது உடலின் பாகங்கள் அனைத்துக்கும் ரத்தத்தை விசையுடன் உந்தித் தள்ளுவது இதயத்தின் பணியாகும். 


அத்தகைய இதயத்தின் தானியங்கும் வலிமை பெற்ற தசைகளுக்கு ஊட்டமளிப்பவை இதயத்துக்குரிய பிரத்யேக தமனிகள்


அந்த தமனிகளின் உட்புற சுவர்களில் 

சிறிது சிறிதாக அடைப்பு  (PLAQUE) ஏற்பட்டு 

ஒரு நாள் ஒரு பொழுது 

அந்த வீக்கமடைந்த உட்புற சுவரில் வெடிப்பு (PLAQUE RUPTURE)  ஏற்பட அந்த வெடிப்பை சரிசெய்யும் பொருட்டு ரத்த தட்டணுக்கள் அனைத்தும் ஒன்று கூடி ரத்தக்கட்டியை உடனடியாக உருவாக்குகின்றன. 


திடீரென உருவான அந்த  ரத்தக் கட்டி ( BLOOD CLOT)  ரத்த நாளத்தின் விட்டத்தை அபாய அளவுக்கு  சுருக்கி விடுகிறது. 


இதயத்திற்கு ஊட்டமளிக்கும் முக்கிய தமனிகளில் இவ்வாறு திடீர் அடைப்பு ( MYOCARDIAL INFARCTION)  ஏற்படும் போது 


விசையுடன் துடிக்கும் இதயத்தின் தசைகளுக்கு திடீரென ரத்த ஓட்டம் தடைபடுகிறது


இதன் விளைவாக அடைப்புக்குள்ளான அந்த தமனி ஊட்டமளித்த இதயத்தின் பகுதிகள் செயல் முடங்கிப் போகின்றன 


இத்தகைய திடீர் செயல்முடக்கத்தின் பாதிப்பால்  இதயம்  தனது துடிப்பை நிறுத்திக் கொள்கிறது 


இதயம் தனது துடிப்பை நிறுத்திய சில நிமிடங்களுக்குள் முறையான சிபிஆர் (CARDIO PULMONARY RESUSCITATION) செய்யப்படுமாயின்

விரைவாக டீஃபிப்ரில்லேட்டர் எனும் இதயத்தின் மின் ஓட்டத்தை சீர் செய்யும் சிகிச்சை அளிக்கப்பட்டால் 

இதயம் துடிக்கத் தொடங்கும். 


உடனடியாக ரத்த நாள அடைப்பை ஒரு மணிநேரத்திற்குள் ரத்தக்கட்டியைக் கரைக்கும் மருந்துகள் வழங்கப்பட்டால் 

மீண்டும் ரத்த ஓட்டம் தடைபட்ட தசைகளுக்கு ரத்த ஓட்டம் மீண்டும் கிடைக்கும். 


பிறகு அடைபட்ட இடத்தில் தேவைப்பட்டால் ஸ்டெண்ட் வைக்கப்படும். இதனால் ரத்த ஓட்டம் தடைபடாமல் மீண்டும் ஏற்படுத்தப்படும். 


இதயத்தின் முக்கிய தமனிகளில் அடைப்பு சதவிகிதம் மிக அதிகமாக இருப்பின் "பை பாஸ்" அறுவை சிகிச்சை செய்யப்படும்


இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்


நமக்கு ஏற்படும்

 

-நெஞ்சுப்பகுதி வலி தவிர


-மருந்துகளுக்கு கேட்காத நெஞ்செரிச்சல்

-தாடைப்பகுதி வலி

-மேல் வயிற்று வலி/ குமட்டல் /வாந்தி 

- இடப்பக்க மார்பு வலி இடப்பக்க தோள் பகுதிக்கு பரவுவது

- நடக்கும் போது நெஞ்சில் அழுத்தும் உணர்வு 

- படுக்கும் போது மூச்சுத் திணறும் உணர்வு ஏற்படுதல் 

- சிறிது தூரம் நடந்தாலும் அதீத மூச்சுத்திணறல் எடுப்பது 


போன்றவை இதயம் சார்ந்த 

சிக்கல்கள் இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள்


மேற்கூறிய அறிகுறிகள் இருப்பின் 

உடனடியாக மருத்துவரை சந்தித்து 

ஈசிஜி எடுத்துப் பார்க்க வேண்டும். 


குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்கு

ஈசிஜி நார்மலாக இருந்தாலும்

இதய ரத்த நாள அடைப்பு ஏற்படக்கூடும்


எனவே இதயத்தின் தசைகள் காயமடையும் போது வெளிப்படுத்தும் நொதிகளான ட்ரோபோனின்  ,  க்ரியாடினின் கைனேஸ் ஆகியவை அளவில் கூடும். அதை வைத்தும் 

ரத்த நாள அடைப்பை அறியலாம். 


நெஞ்சுப்பகுதி வலி முன்னெப்போதும் இல்லாத அளவு குடைந்து அழுத்துவது போல இருந்தால் கூடவே நன்றாக குப்பென வேர்வை வந்து உடல் குளிர்ந்து போனால் வந்திருப்பது பெரும்பான்மை இதய ரத்த நாள அடைப்பு என்றறிக .


மன ரீதியாக பதட்டமடையாமல்

108 ஆம்புலன்ஸ் அல்லது தனியார் ஆம்புலன்ஸ் அழைத்துப் படுத்துக் கொண்டே மருத்துவமனை விரைய வேண்டும் 


இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டவர்கள் நடக்கவோ வேறு பணிகள் புரியாமல் படுத்துக் கொண்டு மருத்துவமனை அடைவது நல்லது

 

கூடவே லோடிங் டோஸ் எனப்படும் 


ஆஸ்பிரின் 75 மிகி 

 நான்கு மாத்திரைகள்

( ரத்த தட்டணுக்கள் ஒன்றிணைந்து ரத்தக் கட்டி பெரிதாவதை தடுக்கும்)  


க்ளோபிடோக்ரெல் 75மிகி 

நான்கு மாத்திரைகள் 

( ரத்த தட்டணுக்கள் ஒன்றிணைந்து ரத்தக் கட்டி பெரிதாவதை தடுக்கும்)  


அடோர்வாஸ்டாடின் 10 மிகி 

எட்டு மாத்திரைகள் 

( ரத்த நாள வீக்கம் மேலும் வெடிக்காமல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தும் ) 


மாத்திரைகளை மொத்தமாக உட்கொள்ள வேண்டும். 


இதய நோய் சிறப்பு சிகிச்சை வசதி உள்ள மருத்துவமனையை விரைவில் அடைய வேண்டும் 


- இதயம் சார்ந்த அறிகுறியை 

புறந்தள்ளாமை

- உடனடியாக லோடிங் டோஸ் உட்கொள்வது

- உடனடியாக ஈசிஜி எடுப்பது  

- இதயம் செயல் நிறுத்தம் செய்தாலும் உடனடியாக சிபிஆர் மற்றும் டீஃபிப்ரில்லேட்டர் சிகிச்சை கிடைக்கச் செய்வது 


பதட்டப்படாமல் இதய நோய் சிறப்பு சிகிச்சை இருக்கும் மருத்துவமனைக்கு படுத்துக் கொண்டு விரைதல்


மேற்கூறியவற்றை செய்தால் 

இதய ரத்த நாள அடைப்பு சார்ந்த மரணங்களைக் குறைக்க முடியும் 

என்று நம்புகிறேன் 


தேவை விழிப்புணர்வும் 

அறிகுறிகளை அலட்சியம் செய்யாமையும் ஆகும்


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2023ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ள Voter Helpline செயலி (App to know if your name is included in 2023 voter list)...



2023ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ள Voter Helpline செயலி (App to know if your name is included in 2023 voter list)... 



       🎯 *வாக்காளர்களின் கனிவான கவனத்திற்கு...


🎯  வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா? என்பதை கீழ்க்கண்ட செயலி மூலம் உடனே கண்டறிய முடியும்...


🎯  இந்த செயலியை பதிவிறக்கம் செய்தவுடன், open செய்து, Search by EPIC  Number (வாக்காளர் அடையாள அட்டை எண்)_ உதாரணமாக WRC1234765

உள்ளீடு செய்து, Search தர வேண்டும்.



🎯  அடுத்த சில நொடிகளில், உங்கள் பெயர், நீங்கள் எந்த வாக்குச்சாவடியில் ஓட்டு செலுத்த வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.


🎯  இந்த தகவல்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🎯 இந்த பட்டியலில் உங்கள் பெயர் அடங்கிய தகவல்கள் இடம் பெற்றிருந்தால் மட்டுமே, வருகிற  2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க இயலும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்...


🎯  உங்கள் பெயர், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா?  என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள்.


செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ATM இயந்திரத்தில் Credit/ Debit Card இல்லாமல் அலைபேசி UPI செயலி மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் (Introducing the facility of withdrawing money through mobile UPI app without Credit/Debit Card in ATM machine)...



ATM இயந்திரத்தில் Credit/ Debit Card இல்லாமல் அலைபேசி UPI செயலி மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் (Introducing the facility of withdrawing money through mobile UPI app without Credit/Debit Card in ATM machine)...



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



 GPay, PhonePe, PayTm பயனர்களுக்கு சிறப்பான தகவல்.  UPI செயலிகளை (அப்ளிகேஷன்களை) பயன்படுத்தி ATM மையங்களில் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இதன் மூலம் டெபிட் கார்டு, க்ரெடிட் கார்டு போன்றவற்றை எடுத்து செல்லும் தேவை ஏற்படாது. சந்தைக்கு வரத் தொடங்கியுள்ள UPI ATM மெஷின் ஒன்றை பயன்படுத்தும் நபரின் வீடியோவைதான் பார்க்கிறீர்கள். எவ்வளவு பணம் எடுக்கப் போகிறோம் என்பதை தேர்வு செய்துவிட்டு QR codeஐ ஸ்கேன் செய்தால் பணம் கைக்கு வந்துவிடுகிறது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

சாலா சித்தி படிவம் - Shaala Siddhi Offline Format 2023-2024...



சாலா சித்தி படிவம் - Shaala Siddhi Offline Format 2023-2024...


>>> Click Here to Download...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

January 2025 - School Calendar

ஜனவரி 2025 - பள்ளி நாட்காட்டி January 2025 - School Calendar 01-01-2025 - புதன் - ஆங்கில புத்தாண்டு 02-01-2025 - வியாழன் - மூன்றாம் பருவம் வ...