கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்காளர் சேர்க்கை முகாம் நவம்பர் 18, 19ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிக்கு மாற்றம் (ECI has approved the proposal of changing Special Campaign dates from 18.11.2023 (Saturday) & 19.11.2023 (Sunday) to 25.11.2023 (Saturday) & 26.11.2023 (Sunday) in all the districts)...

 

வாக்காளர் சேர்க்கை முகாம் நவம்பர் 18, 19ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிக்கு மாற்றம்  (ECI has approved the proposal of changing Special Campaign dates from 18.11.2023 (Saturday) & 19.11.2023 (Sunday) to 25.11.2023 (Saturday) & 26.11.2023 (Sunday) in all the districts)...



>>> தலைமை தேர்தல் ஆணையரின் கடிதம், நாள்: 13-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கனமழை காரணமாக 14-11-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 14-11-2023 due to heavy rain) விவரம்...

  

 

கனமழை காரணமாக 14-11-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 14-11-2023 due to heavy rain) விவரம்...


பள்ளிகள் மட்டும்

திருவண்ணாமலை


பள்ளி மற்றும் கல்லூரிகள்

தஞ்சாவூர்

திருவாரூர்

நாகப்பட்டினம்

அரியலூர்

கடலூர்

மயிலாடுதுறை

விழுப்புரம்

புதுச்சேரி

காரைக்கால்


புதுக்கோட்டை 2 தாலுகா விடுமுறை

கந்தர்வகோட்டை

கறம்பக்குடி


கனமழை காரணமாக கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை


மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவிப்பு


விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :


திருவள்ளூர்

காஞ்சிபுரம்

திருவள்ளூர்

ராணிப்பேட்டை



வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 16 ஆம் தேதி மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதனையொட்டி டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 டெல்டா மாவட்டங்களில் இன்று மிகக் கன மழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு நிற அலர்ட் கொடுத்திருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, தூத்துக்குடி, உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (14.11.2023) விழுப்புரம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் போன்ற மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (14.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (14.11.2023) ஒரு நாள் மட்டும் கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 


மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு பெறப்பட்டது என்ற புகாரின் அடிப்படையில் வரும் 14-11-2023 மற்றும் 15-11-2023 தேதிகளில் 75 ஆசிரியர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது - தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வரின் செயல்முறைகள் ந.க.எண்: 447/ அ1/ 2023, நாள்: 08-11-2023 (75 teachers have been summoned for direct inquiry on 14-11-2023 and 15-11-2023 on the basis of a complaint that received bribe for granting selection grade to graduate teachers in the Dharmapuri District Education Office - Proceedings of the Principal, Dharmapuri District Institute of Teacher Education and Training)...


தர்மபுரி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு பெறப்பட்டது என்ற புகாரின் அடிப்படையில் வரும் 14-11-2023 மற்றும் 15-11-2023 தேதிகளில் 75 ஆசிரியர்களிடம் நேரடியாக  விசாரணை நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது - தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வரின் செயல்முறைகள் ந.க.எண்: 447/ அ1/ 2023, நாள்: 08-11-2023 (75 teachers have been summoned for direct enquiry on 14-11-2023 and 15-11-2023 on the basis of a complaint that received bribe for granting selection grade to graduate teachers in the Dharmapuri District Education Office - Proceedings of the Principal, Dharmapuri District Institute of Teacher Education and Training)...



>>> தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வரின் செயல்முறைகள் ந.க.எண்: 447/ அ1/ 2023, நாள்: 08-11-2023 & 75 ஆசிரியர்களின் பட்டியல்...


தொடர்வண்டி பயணத்தில் நீங்கள் முன்பதிவு செய்த இருக்கையை பிறர் ஆக்கிரமிப்பு செய்தால் புகார் செய்ய வலைதள முகவரி (RailMadad - Website address to complain if other people occupy your reserved seat in train journey)...


தொடர்வண்டி பயணத்தில் நீங்கள் முன்பதிவு செய்த இருக்கையை பிறர் ஆக்கிரமிப்பு செய்தால் புகார் செய்ய வலைதள முகவரி (RailMadad - Website address to complain if other people occupy your reserved seat in train journey)...


பயணி ஒருவரது அனுபவப் பகிர்வு 

நாங்கள் குடும்பத்தோட டெல்லியிலிருந்து பஞ்சாப் அமிர்தசஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் கோச்சில் ஏறினோம்..(காரணம் ;- AC COACH FULL BOOKING ) அந்த ரயில் பல ஊர்களை கடந்து தான் டெல்லி வருகிறது.. வட மாநிலங்களில் புக் செய்திருந்தாலும் அவர்கள் படுத்து கொண்டு வரும் போது நம்மால் எழுப்பி நம் சீட் என கூறவே முடியாது.. நமக்கு மொழி பிரச்சனை வேற.. ஹிந்தி எனக்கு சுத்தமா தெரியாது.. அவர்களுக்கு ஹிந்தி தவிர வேற எதுவும் தெரியாது.. இரவு 9 மணி குழந்தைகளோடு நானும் எவ்வளவோ போராடினேன்.. ஏற்கனவே மதுரையிலிருந்து 42 மணி நேரம் டிராவல் செய்து புதுடெல்லி வந்த அலுப்பு வேறு.. மதுரை டூ டெல்லி இரவு 7 மணிக்கு இறங்கி அடுத்து இந்த ரயிலில் ஏறி நிம்மதியாய் தூங்கலாம் என்றால் வடமாநிலத்தவர்கள் மனிதாபிமானமின்றி சிறிதும் இடம் தராமல் ஹிந்தியிலேயே எதேதோ பேசிட்டே இருந்தார்கள்... கொடுமை என்னன்னா டிடிஆர் அங்கே வரவே இல்லை... எனவே என்ன செய்வதென யோசித்த போது ரயில்வே புகார் வெப்சைட் ஞாபகத்திற்கு வர உடனே தாமதிக்காமல் நான் போனை எடுத்து வெப்சைட் உள்ளே போய் PNR நம்பரை பதிவிட்டு என்னோட இடத்தை தராமல் அராஜகம் செய்வதை பதிவிட்டேன்.. அடுத்த மூன்று நிமிடத்தில் IRCTC யிலிருந்து போன் வந்தது.. இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசனும்.. நாம் பேச நினைக்குற சொல்லும் விஷயத்தை உடனே பதிவிட்ட அடுத்த சில நிமிடத்தில் RPF POLICE உடனே நம் பெட்டியில் வந்து நம் குறையை கேட்டதுமே, அவர்கள் உடனே செயலில் இறங்கியதும் அங்கே பெட்டியில் இருந்தவர்கள் எல்லாம் எங்கிட்டு போகிறார்கள் என்று தெரியல..  நமக்கு அடுத்து எந்த தொந்தரவு இல்லாம நம்ம பயணம் மிக சுமூகமாக அமையும்.. தொலை தூர பயணம் செய்வோர் நிச்சயமாக இதை தெரிந்து கொள்ளவே இப்பதிவு.. நன்றி.


புகார் பதிவு மிக எளிது

Google Chromeல் RAILMADAD என பதிவிட்டதும் வரும் அல்லது  https://railmadad.indianrailways.gov.in/madad/final/home.jsp 

வலைதளத்தில் உங்கள் அலைபேசி எண்ணை உள்ளிடவும். அலைபேசி எண்ணுக்கு OTP வரும். அதை பதிவு செய்ததும் நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் TRAIN PNR NUMBER பதிவு செய்யவும். அதிலேயே நீங்கள் பயணிக்கும் தொடர்வண்டி எண், பெட்டி எண், எத்தனை பேர் பயணிக்கிறீர்கள் என அனைத்து தகவலும் வரும்.. அதன் கீழே உங்க புகாரை பதிவிட COMMENT BOX இருக்கும்.. அதில் சுருக்கமாக நீங்கள் உங்கள் குறையை பதிவிட்டால் போதும்.



உதாரணமாக *MY SEATS OCCUPIED BY OTHERS" என பதிவிட்டால் போதும்.. உடனே அடுத்த ஐந்து நிமிடத்திற்குள்ளேயே உங்கள் பிரச்சனை தீரும்.. நிம்மதியாக குடும்பத்தோடு பயணம் செய்யலாம்.. உங்களில் பலருக்கு எப்போதாவது இது தேவைப்படும் . பதிவு செய்து வைத்துக் கொள்ளவும்...


2023-2024ஆம் கல்வி ஆண்டு - அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் செய்வது சார்ந்த வழிகாட்டுதல்கள் - பணி நிரவல் கலந்தாய்வு 20-12-2023 அன்று நடைபெறுதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 48834/ டி1/ இ4/ 2023, நாள்: 09-11-2023 (Academic Year 2023-2024 - Guidelines for Counselling of Surplus Teachers in Government Aided Schools - Surplus Counseling to be held on 20-12-2023 - Director of School Education Proceedings Rc.No: 48834/ D1/ E4/ 2023, Dated: 09-11-2023)...

 

2023-2024ஆம் கல்வி ஆண்டு - அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் செய்வது சார்ந்த வழிகாட்டுதல்கள் - பணி நிரவல் கலந்தாய்வு 20-12-2023 அன்று நடைபெறுதல் -  பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 48834/ டி1/ இ4/ 2023, நாள்: 09-11-2023 (Academic Year 2023-2024 - Guidelines for Counselling of Surplus Teachers in Government Aided Schools - Surplus Counseling to be held on 20-12-2023 - Director of School Education Proceedings Rc.No: 48834/ D1/ E4/ 2023, Dated: 09-11-2023)...



>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 48834/ டி1/ இ4/ 2023, நாள்: 09-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாநில அளவிலான அறிவியல் நாடக விழாப் போட்டிகள் நடத்துதல் - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 45461/ எம்/ இ2/ 2023, நாள்: 10-11-2023 (Conduct of State Level Science Drama Festival Competitions - Director of School Education Proceedings Rc.No: 45461/ M/ E2/ 2023, Dated: 10-11-2023)...



மாநில அளவிலான அறிவியல் நாடக விழாப் போட்டிகள் நடத்துதல் - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 45461/ எம்/ இ2/ 2023, நாள்: 10-11-2023 (Conduct of State Level Science Drama Festival Competitions - Director of School Education Proceedings Rc.No: 45461/ M/ E2/ 2023, Dated: 10-11-2023)...



>>> பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 45461/ எம்/ இ2/ 2023, நாள்: 10-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு - கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம் (Attention Ayyappa Devotees Visiting Sabarimala – Opening and Closing Times of Major Temples in Kerala)...



சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்  கவனத்திற்கு - கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம் (Attention Ayyappa Devotees Visiting Sabarimala – Opening and Closing Times of Major Temples in Kerala)...


 சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்  கவனத்திற்கு....


கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்...


 காடாம்புழா  பகவதி கோயில்

 காலை : 5am ➖ 11am

 மாலை : 3:30Pm ➖ 7pm


 குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில்

 காலை : 3 மணி ➖ 1 மணி

 மாலை 3 மணி ➖ இரவு 9 மணி


 திருப்ராயர் ஸ்ரீராமசுவாமிகோயில்


 காலை : 4.30AM ➖ 12pm

 மாலை : 4.30Pm ➖ 8:30pm


 கொடுங்களூர் பகவதி கோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை : 4.30Pm ➖ 8pm


 சோட்டானிக்கரை பகவதி கோயில்

 காலை : 3:30AM ➖ 12pm

 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி


 கீழ்க்காவு குருதி

 இரவு: 8.30 மணி


 வைக்கம் மகாதேவர் கோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி


 கட்டுருத்தி மகாதேவர் கோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி


 மல்லியூர் கணபதிகோயில்

 காலை : 4.30AM ➖ 12:30pm

 மாலை : 4.30Pm ➖ 8pm


 ஏட்டுமானூர் மகாதேவர்கோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி


 கிடங்கூர் சுப்ரமணியகோயில்

 காலை : 5AM ➖ 11:30am

 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி


 கடப்பட்டூர் மகாதேவகோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி


 எருமேலி வாவர்பள்ளி சாஸ்தாகோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி


 நிலக்கல் மகாதேவர் கோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி


 பம்பா கணபதிகோயில்

 காலை : 3 மணி ➖ 1 மணி

 மாலை 4 மணி ➖ 11 மணி


 சபரிமலை சன்னிதானம்

 நெய்யபிஷேகம் : 3.20Am ➖ 11.30am

 ஹரிவராசனம் : இரவு 10.50


 நிலக்கல்🔁 பம்பை🔁 நிலக்கல் KSRTC கட்டணம்

 சாதாரண பேருந்து  ரூ40

 ஏசி பேருந்து  ரூ90

 பேட்டரி பேருந்து  ரூ100


 வெர்ச்சுவல் க்யு வெரிஃபிகேஷன் பம்பை  ஹனுமான் கோயிலுக்கு முன்னால் செயல்படுகிறது.


ப்ளாஸ்டிக் பாட்டில்கள் அனுமதி இல்லை..  


 பிளாஸ்டிக் அதிகபட்சம் தவிர்த்து தூய்மையை காக்கவும்


 மருத்துவ மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்..


 உரக்குழி தீர்த்தத்திற்கு மாலை 4 மணி வரை மட்டும் அனுமதிக்ககப்படும்


 எல்லாக் கோயில்களிலும் பம்பையிலும் இலவச அன்னதானங்கள் நடைபெறும் சந்நிதானத்தில் மாளிகப்புரம் கோயிலுக்குப் பின்னால் பெரிய (TDB)அன்னதான மண்டபம் உள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ ந...