கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆறுபடை முருகனை வழிபட்டால் ஏற்படும் பலன்களின் சிறப்பு தொகுப்பு (A special compilation of the benefits of worshiping Arupadai Murugan)...



 அறுபடை முருகனை வழிபட்டால் ஏற்படும் பலன்களின் சிறப்பு தொகுப்பு...


1. திருப்பரங்குன்றம் :


இங்கு முருகப்பெருமானை வழிபட்டால் திருமணம் நடைபெறும்.


2. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்):


இங்கு முருகப்பெருமானை கடலில் நீராடி பின் வழிபடுதல் நல்லது. வியாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும்.


3. திரு ஆவினன்குடி (பழனி):


இங்கு ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பெருமானை (பழனி ஆண்டவரை) வழிபட்டால் தெளிந்த ஞானம் கிடைக்கும்.


4. சுவாமிமலை (திருஏரகம்):


இங்கு தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை இங்கு வழிபட்டால் ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.


5. திருத்தணிகை (குன்று தோராடல்):


இங்கு குன்றிலே குடியிருக்கின்ற திருத்தணிகை (செருத்தணி முருகன்) முருகனை வழிபட்டால் மனதிலிருக்கும் கோபம் (சினம்) முழுமையாக நீங்கும்.


6. பழமுதிர்ச்சோலை :


இங்குள்ள முருகனை வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும். அங்குள்ள சுனை (சிறு அருவி)யில் நீராடுதல் மிகவும் சிறப்பு...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.11.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.11.2023 - School Morning Prayer Activities...

   


அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்...



திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வாய்மை


குறள் :296


பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை

எல்லா அறமுந் தரும்.


விளக்கம்:


பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.


பழமொழி :

Fact is stronger than fiction.


கற்பனையை விட உண்மை விசித்திரமானது.


இரண்டொழுக்க பண்புகள் :


1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.


2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.



பொன்மொழி :


துணிந்து செயல்படுகிறவர்கள்தான் அடிக்கடி வெற்றியின் சிகரத்தை எட்டுகிறார்கள். - ஜவஹர்லால் நேரு 



பொது அறிவு :


1. காகித பணத்தை பயன்படுத்திய முதல் நாடு எது?


விடை: சீனா


2. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

விடை: ஞான பீட விருது



English words & meanings :


 valor- great courage in the face of danger, especially in battle. வீரம். 

vagary- unexpected change in a situation or in someone's behaviour ; எதிர்பாராத நடத்தை மாற்றம்


ஆரோக்ய வாழ்வு : 


தாமரைப் பூ :இருதயத்தை பாதுகாக்கும். இதய தசைகளை வலுப்படுத்தும். இருதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களை போக்க, தாமரை பூ கஷாயம் ஏற்றது. ...


நவம்பர் 14


ஜவகர்லால் நேரு (நவம்பர் 14, 1889 – மே 27, 1964), இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக, 15 ஆகஸ்ட் பதவி ஏற்று அவர் தொடக்க உரையாக "விதியுடன் ஒரு போராட்டம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்தியாவின் திட்டக் குழுவை உருவாக்கி முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை 1951 இல் வரைந்தார். இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில்தான் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம் இருக்கிறது என்று நம்பி அதன் அவசியத்தை உணர்ந்து நேரு அதில் மிகவும் அக்கறை காட்டினார்.



நீதிக்கதை


 மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின. அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் 'இவ்வளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடுக்கி விழுந்தால் அவ்வளவு தான்' என்றார். உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது. சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் ‘மேலே செல்லும் போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றன ' என்றார். உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது. ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது. பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது' என்று கேட்டார். அதற்கு அந்தத் தவளை 'எனக்குக் காது கேட்காது " என்றது. நாமும் வாழ்வில் இந்த தவளையை போல இருந்தால் தான் சில நேரங்களில் முன்னேற முடியும்.



இன்றைய செய்திகள்


14.11.2023


*வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணிக்கு ஆட்கள் தேவை.

பல்கலைக்கழகம் அறிவிப்பு.


*உடுமலை அமராவதி சைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு.


 *மாநில அளவிலான கலை திருவிழா: திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 436 பேர் தேர்வு.


 *அவினாசி வட்டாரத்தில் தொடர் மழையால் நிரம்பி வழியும் குளம், குட்டைகள். வனப்பகுதி தடுப்பணைகளும் நிரம்பின.


*ஆஸ்திரேலியாவில் மூன்றாவது டிவிஷன்  கிரிக்கெட் போட்டியில்  நியூசிலாந்து வீரர் நீல்வாக்னர், ஒரு ஓவரில் ஆறு பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.


Today's Headlines


* Manpower required for research work in Agricultural University. Announcement from the University.


*Admission Notification of Udumalai Amaravati Sainik School.


 *State level Kalaithiruvila: 436 candidates selected from Tirupur district.


 * Ponds and puddles overflowing due to continuous rains in Avinasi area. Forest barrages are also full.


*New Zealand cricketer Neil Wagner holds the record for taking six wickets in an over in a third division match in Australia.

 

நவம்பர் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கனமழை மற்றும் அதிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் - வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாக ஆணையரின் கடிதம், நாள்: 13-11-2023 (13th to 17th November Heavy and Very Heavy Rainfall Districts - Letter from Commissioner of Revenue and Disaster Management, Dated: 13-11-2023)...

  

 நவம்பர் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கனமழை மற்றும் அதிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் - வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாக ஆணையரின் கடிதம், நாள்: 13-11-2023 (13th to 17th November Heavy and Very Heavy Rainfall Districts - Letter from Commissioner of Revenue and Disaster Management, Dated: 13-11-2023)...



>>> வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாக ஆணையரின் கடிதம், நாள்: 13-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வாக்காளர் சேர்க்கை முகாம் நவம்பர் 18, 19ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிக்கு மாற்றம் (ECI has approved the proposal of changing Special Campaign dates from 18.11.2023 (Saturday) & 19.11.2023 (Sunday) to 25.11.2023 (Saturday) & 26.11.2023 (Sunday) in all the districts)...

 

வாக்காளர் சேர்க்கை முகாம் நவம்பர் 18, 19ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிக்கு மாற்றம்  (ECI has approved the proposal of changing Special Campaign dates from 18.11.2023 (Saturday) & 19.11.2023 (Sunday) to 25.11.2023 (Saturday) & 26.11.2023 (Sunday) in all the districts)...



>>> தலைமை தேர்தல் ஆணையரின் கடிதம், நாள்: 13-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கனமழை காரணமாக 14-11-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 14-11-2023 due to heavy rain) விவரம்...

  

 

கனமழை காரணமாக 14-11-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 14-11-2023 due to heavy rain) விவரம்...


பள்ளிகள் மட்டும்

திருவண்ணாமலை


பள்ளி மற்றும் கல்லூரிகள்

தஞ்சாவூர்

திருவாரூர்

நாகப்பட்டினம்

அரியலூர்

கடலூர்

மயிலாடுதுறை

விழுப்புரம்

புதுச்சேரி

காரைக்கால்


புதுக்கோட்டை 2 தாலுகா விடுமுறை

கந்தர்வகோட்டை

கறம்பக்குடி


கனமழை காரணமாக கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை


மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவிப்பு


விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :


திருவள்ளூர்

காஞ்சிபுரம்

திருவள்ளூர்

ராணிப்பேட்டை



வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 16 ஆம் தேதி மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதனையொட்டி டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 டெல்டா மாவட்டங்களில் இன்று மிகக் கன மழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு நிற அலர்ட் கொடுத்திருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, தூத்துக்குடி, உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (14.11.2023) விழுப்புரம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் போன்ற மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (14.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (14.11.2023) ஒரு நாள் மட்டும் கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 


மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு பெறப்பட்டது என்ற புகாரின் அடிப்படையில் வரும் 14-11-2023 மற்றும் 15-11-2023 தேதிகளில் 75 ஆசிரியர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது - தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வரின் செயல்முறைகள் ந.க.எண்: 447/ அ1/ 2023, நாள்: 08-11-2023 (75 teachers have been summoned for direct inquiry on 14-11-2023 and 15-11-2023 on the basis of a complaint that received bribe for granting selection grade to graduate teachers in the Dharmapuri District Education Office - Proceedings of the Principal, Dharmapuri District Institute of Teacher Education and Training)...


தர்மபுரி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு பெறப்பட்டது என்ற புகாரின் அடிப்படையில் வரும் 14-11-2023 மற்றும் 15-11-2023 தேதிகளில் 75 ஆசிரியர்களிடம் நேரடியாக  விசாரணை நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது - தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வரின் செயல்முறைகள் ந.க.எண்: 447/ அ1/ 2023, நாள்: 08-11-2023 (75 teachers have been summoned for direct enquiry on 14-11-2023 and 15-11-2023 on the basis of a complaint that received bribe for granting selection grade to graduate teachers in the Dharmapuri District Education Office - Proceedings of the Principal, Dharmapuri District Institute of Teacher Education and Training)...



>>> தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வரின் செயல்முறைகள் ந.க.எண்: 447/ அ1/ 2023, நாள்: 08-11-2023 & 75 ஆசிரியர்களின் பட்டியல்...


தொடர்வண்டி பயணத்தில் நீங்கள் முன்பதிவு செய்த இருக்கையை பிறர் ஆக்கிரமிப்பு செய்தால் புகார் செய்ய வலைதள முகவரி (RailMadad - Website address to complain if other people occupy your reserved seat in train journey)...


தொடர்வண்டி பயணத்தில் நீங்கள் முன்பதிவு செய்த இருக்கையை பிறர் ஆக்கிரமிப்பு செய்தால் புகார் செய்ய வலைதள முகவரி (RailMadad - Website address to complain if other people occupy your reserved seat in train journey)...


பயணி ஒருவரது அனுபவப் பகிர்வு 

நாங்கள் குடும்பத்தோட டெல்லியிலிருந்து பஞ்சாப் அமிர்தசஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் கோச்சில் ஏறினோம்..(காரணம் ;- AC COACH FULL BOOKING ) அந்த ரயில் பல ஊர்களை கடந்து தான் டெல்லி வருகிறது.. வட மாநிலங்களில் புக் செய்திருந்தாலும் அவர்கள் படுத்து கொண்டு வரும் போது நம்மால் எழுப்பி நம் சீட் என கூறவே முடியாது.. நமக்கு மொழி பிரச்சனை வேற.. ஹிந்தி எனக்கு சுத்தமா தெரியாது.. அவர்களுக்கு ஹிந்தி தவிர வேற எதுவும் தெரியாது.. இரவு 9 மணி குழந்தைகளோடு நானும் எவ்வளவோ போராடினேன்.. ஏற்கனவே மதுரையிலிருந்து 42 மணி நேரம் டிராவல் செய்து புதுடெல்லி வந்த அலுப்பு வேறு.. மதுரை டூ டெல்லி இரவு 7 மணிக்கு இறங்கி அடுத்து இந்த ரயிலில் ஏறி நிம்மதியாய் தூங்கலாம் என்றால் வடமாநிலத்தவர்கள் மனிதாபிமானமின்றி சிறிதும் இடம் தராமல் ஹிந்தியிலேயே எதேதோ பேசிட்டே இருந்தார்கள்... கொடுமை என்னன்னா டிடிஆர் அங்கே வரவே இல்லை... எனவே என்ன செய்வதென யோசித்த போது ரயில்வே புகார் வெப்சைட் ஞாபகத்திற்கு வர உடனே தாமதிக்காமல் நான் போனை எடுத்து வெப்சைட் உள்ளே போய் PNR நம்பரை பதிவிட்டு என்னோட இடத்தை தராமல் அராஜகம் செய்வதை பதிவிட்டேன்.. அடுத்த மூன்று நிமிடத்தில் IRCTC யிலிருந்து போன் வந்தது.. இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசனும்.. நாம் பேச நினைக்குற சொல்லும் விஷயத்தை உடனே பதிவிட்ட அடுத்த சில நிமிடத்தில் RPF POLICE உடனே நம் பெட்டியில் வந்து நம் குறையை கேட்டதுமே, அவர்கள் உடனே செயலில் இறங்கியதும் அங்கே பெட்டியில் இருந்தவர்கள் எல்லாம் எங்கிட்டு போகிறார்கள் என்று தெரியல..  நமக்கு அடுத்து எந்த தொந்தரவு இல்லாம நம்ம பயணம் மிக சுமூகமாக அமையும்.. தொலை தூர பயணம் செய்வோர் நிச்சயமாக இதை தெரிந்து கொள்ளவே இப்பதிவு.. நன்றி.


புகார் பதிவு மிக எளிது

Google Chromeல் RAILMADAD என பதிவிட்டதும் வரும் அல்லது  https://railmadad.indianrailways.gov.in/madad/final/home.jsp 

வலைதளத்தில் உங்கள் அலைபேசி எண்ணை உள்ளிடவும். அலைபேசி எண்ணுக்கு OTP வரும். அதை பதிவு செய்ததும் நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் TRAIN PNR NUMBER பதிவு செய்யவும். அதிலேயே நீங்கள் பயணிக்கும் தொடர்வண்டி எண், பெட்டி எண், எத்தனை பேர் பயணிக்கிறீர்கள் என அனைத்து தகவலும் வரும்.. அதன் கீழே உங்க புகாரை பதிவிட COMMENT BOX இருக்கும்.. அதில் சுருக்கமாக நீங்கள் உங்கள் குறையை பதிவிட்டால் போதும்.



உதாரணமாக *MY SEATS OCCUPIED BY OTHERS" என பதிவிட்டால் போதும்.. உடனே அடுத்த ஐந்து நிமிடத்திற்குள்ளேயே உங்கள் பிரச்சனை தீரும்.. நிம்மதியாக குடும்பத்தோடு பயணம் செய்யலாம்.. உங்களில் பலருக்கு எப்போதாவது இது தேவைப்படும் . பதிவு செய்து வைத்துக் கொள்ளவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...