கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் 8,691 தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடல் - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு...


 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் 8,691 தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடல் - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு...


பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துதல், மாணவர்களின் இடைநிற்றல் குறித்த விவரங்கள், அதற்கான காரணங்கள், பொதுத் தேர்வில் அதிகப்படியான விழுக்காடு பெறுதல் போன்றவை குறித்து தலைமையாசிரியர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துரையாட முடிவெடுத்தோம்.

அதன்படி நவம்பர் 16 முதல் நேற்று (13.12.2023) வரையிலும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் 8,691 தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடியுள்ளோம்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வழிநடத்தும் தலைமையாசிரியர்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் பல்வேறு நிலைகளில் உள்ள கல்வி அலுவலர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்!

தொடர்ந்து அனைவரும் இணைந்து அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காகப் பணியாற்றுவோம்!
@tnschoolsedu


சட்டக்கல்வி பயின்று தான் குற்றமற்றவர் என நிரூபித்த இளைஞர்...

 சட்டக்கல்வி பயின்று தான் குற்றமற்றவர் என நிரூபித்த இளைஞர்(The young man who proved his innocence after studying law)...



சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டு விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். கோவா விமான நிலையத்தில் பெண் பொறியாளரிடம் அத்துமீறிய பாதுகாப்புப் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மருத்துவர் இராமதாஸ் அவர்கள்...


 சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டு விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். கோவா விமான நிலையத்தில்  பெண் பொறியாளரிடம் அத்துமீறிய பாதுகாப்புப் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மருத்துவர் இராமதாஸ் அவர்கள் (Tamil Nadu Airports including Chennai should employ only Central Professional Security Forces who know Tamil for security work. Action should be taken against security guard who violated woman engineer at Goa airport - Dr Ramadoss)...


இந்தி தேசிய மொழி - கண்டிப்பாக கற்க வேண்டும் என விமான பயணிகளை கட்டாயப்படுத்துவதா? அத்துமீறும் படையினர் மீது நடவடிக்கை வேண்டும்!


சென்னைக்கு பயணிப்பதற்காக கோவா விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்  பொறியாளரிடம் இந்தி தெரியுமா? என்று கேட்டு அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர். ‘ நான் தமிழ்நாட்டுப் பெண். எனக்கு இந்தி தெரியாது” என்று பெண் பொறியாளர் கூறியதை மதிக்காத மத்தியப் படை வீரர்,’’ தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. இந்தி தேசிய மொழி. வேண்டுமானால் கூகுள் செய்து பாருங்கள். இந்தியாவில் உள்ள அனைவரும்  இந்தி கற்க வேண்டும்” என்று உரத்தக் குரலில் கூறி தமிழ் பொறியாளரை அவமதித்திருக்கிறார்.  மத்திய பாதுகாப்புப் படை வீரரின் செயல் கண்டிக்கத்தக்கது.


விமான நிலையங்களில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரில் பலர், தங்களின் பணி என்ன? என்பதை மறந்து விட்டு,  இந்தி தேசிய மொழி, அதைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று பயணிகளை அறிவுறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் அரசியல் கட்சியினர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட அவர்கள் பலமுறை அத்துமீறியிருக்கின்றனர்.  இந்தி மொழி இந்தியாவின் அலுவல் மொழி மட்டுமே, தேசிய மொழி அல்ல என்ற அடிப்படைக் கூட தெரியாத அவர்களுக்கு மக்கள் பிரதிநிதிகளிடமும்,  பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்களிடமும் இதுகுறித்து அறிவுரை கூற என்ன தகுதி இருக்கிறது?


இந்தி தான் இந்தியாவின்  தேசிய மொழி என்ற பொய்யை காலம் காலமாக சில மத்திய அமைச்சர்களும், மத்திய அரசு அதிகாரிகளும் மீண்டும், மீண்டும் கூறி வருவதன் காரணமாகவே உண்மை தெரியாத  மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர்.  அவர்களின் பணி வரம்பு என்ன? என்பதையும்,  இந்தி நாட்டின் அலுவல் மொழி மட்டும் தான் என்பதையும் அவர்களுக்கு அவர்களின் உயரதிகாரிகள்  புரிய வைக்க வேண்டும்.


கோவா விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் அத்துமீறிய பாதுகாப்புப் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டு விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.



முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பதிவு:

கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் @CISFHqrs வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.

இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது?

பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்.
#StopHindiImposition



அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பதிவு:

கோவா விமான நிலையத்தில் @CISFHQrs வீரர்கள் இந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், “இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா” என கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி - மிரட்டிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

விமான நிலையங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை இனியும் ஏற்க முடியாது. பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர - இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல.

பல மொழிகள் பேசப்படும் இந்திய ஒன்றியத்தில் பிறமொழிப் பேசும் மக்கள் மீது இந்தியை தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இத்தகைய போக்கினை ஒன்றிய அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழியுரிமையும் மனித உரிமையே என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும். #StopHindiImposition



“எனக்கு ஏற்பட்ட பாதிப்பு பிறருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே மிரட்டல் குறித்து புகார் அளித்தேன்”


-கோவா விமான நிலையத்தில் மிரட்டப்பட்ட பெண், சர்மிளா ராஜசேகர் பரபரப்பு பேட்டி!



SMC தீர்மானங்களின் அடிப்படையில் பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை கண்டறிதல் - பள்ளிக் கல்வித் துறை அரசாணை (G.O.Ms.No.239, Dated: 14-12-2023) வெளியீடு...


SMC தீர்மானங்களின் அடிப்படையில் பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை கண்டறிதல் - பள்ளிக் கல்வித் துறை அரசாணை (G.O.Ms.No.239, Dated: 14-12-2023) வெளியீடு (Identification of required infrastructure facilities for schools based on School Management Committee Resolutions - School Education Department Ordinance (G.O.Ms.No.239, Dated: 14-12-2023) issued)...



>>> Click Here to Download G.O.Ms.No.239, Dated: 14-12-2023...



அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கப்படும் அறைக்கு கிரில் கேட் வசதி ஏற்படுத்தி தரக் கோருதல் - தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் கடிதம், நாள்: 13-12-2023...



 அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் (Hi-tech Lab) அமைக்கப்படும் அறைக்கு கிரில் கேட் வசதி ஏற்படுத்தி தரக் கோருதல் - தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் கடிதம், நாள்: 13-12-2023 (Request for provision of grill gate facility for the room where high tech computer lab will be set up in government middle schools - Proceedings letter from Tamilnadu Director of Elementary Education, dated: 13-12-2023)...



>>>  தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் ந.க.எண்: 029481/ கே2/ 2023, நாள்: 13-12-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இன்றைய ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்...

 

ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற 28.12.2023 தேதியில் சென்னை கோட்டை முற்றுகைப் போராட்டம் - இன்றைய ஜேக்டோ-ஜியோ (JACTTO GEO) மாநில ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு...



>>> இன்றைய ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட  முடிவுகள்...


கனவு ஆசிரியர் - டிசம்பர் 2023 - மாத இதழ்...



கனவு ஆசிரியர் - டிசம்பர் 2023 - ஆசிரியர்களுக்கான மாத இதழ் -  பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Kanavu Aasiriyar - December 2023 Monthly Magazine for Teachers - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> கனவு ஆசிரியர் - டிசம்பர் 2023 இதழை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Did the Tamil Nadu decorative vehicle be rejected in the Republic Day parade procession? - Tamil Nadu Govt Information Checker explanation

குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் Did the Tamil Nadu ...