கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான தொடர்பு எண் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு...

தென் மாவட்டங்களில் அதி கன மழை – பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான தொடர்பு எண் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு...


📌பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களான


🔹ரொட்டி பாக்கெட்டுகள் 

🔹தண்ணீர் பாட்டில்கள் 

🔹பிஸ்கெட் பாக்கெட்டுகள்

🔹பால் பவுடர்

🔹உலர் பழங்கள்

🔹மளிகை பொருட்கள்

🔹பாய்கள்

🔹போர்வைகள் 

🔹துண்டுகள்

🔹மெழுகுவர்த்திகள்

🔹தீப்பெட்டிகள்

🔹லுங்கிகள்

🔹நைட்டிகள்

🔹நேப்கின் பேடுகள் 


உள்ளிட்டவற்றை வழங்க விரும்பும் தன்னார்வலர்கள் மற்றும் நிறுவனங்கள் 7397766651 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




மின்கட்டணம் செலுத்த அவகாசம் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...



🚨 மின்கட்டணம் செலுத்த அவகாசம்


 💡மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜன.2ம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம்


💡 மின்கட்டணத்துடன் 18-ம் தேதி அபராதத் தொகை செலுத்தியிருந்தால் அடுத்த மாத மின் கட்டணத்துடன் சரி செய்யப்படும் 


💡 இச்சலுகை வீடு, வணிக நிறுவனம், தொழிற்சாலைகள், சிறு, குறு தொழில் நுறுவனங்களுக்கும் பொருந்தும்


அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...


அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவு அறிமுகம்...



 அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவு அறிமுகம்...


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விரைவில் மாணவர்களுக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அறிமுகப்படுத்த உள்ளது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இம்முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு சில அரசு பள்ளிகளில் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது..



கல்வி நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை பதிவில் முறைகேடுகளை தடுக்கவும் நிர்வாக வசதிக்காகவும் பயோமெட்ரிக் வருகை பதிவு பின் பற்றப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய கடைகளிலும் இம்முறை பயன்பாட்டில் உள்ளது ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில் வருகை விவரம் பதிவு செய்யப்படுகிறது இந்த பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்ய தமிழக அரசு அறிமுகம் செய்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு சோதனை முறையில் அறிமுகம் ஆகிறது.



செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் மறைமலை அடிகளார் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது.



ஆறாவது முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 300 மாணவர்களுக்கு  பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும்.



இத்திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப மற்ற பள்ளிகளுக்கும் பயம் மெட்ரிக் வருகை பதிவு விரிவுபடுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.



இத்திட்டம் அமலானாதால் அரசின் நலத்திட்டங்களை தவறாக கணக்கிடுவது, மாணவர்கள் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து ஆசிரியர்கள் நியமனத்தை தக்க வைப்பது போன்ற பிரச்சினைகளுக்கு முற்று புள்ளி வைக்கப்படும்.



பயோமெட்ரிக் கருவி பொருத்துவதன் மூலம் பள்ளிகளின் வருகைப்பதிவு அழிக்க முடியாத ஆவணமாகிவிடும் என கல்வித் துறை வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.



மழை வெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்...

 மழை வெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்...



கனமழை காரணமாக 19-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்...

 

கனமழை காரணமாக 19-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 19-12-2023 due to heavy rain) விவரம்...


கனமழை காரணமாக நாளை (19.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*

*தூத்துக்குடி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
*திருநெல்வேலி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)


Hi-Tech Lab - Headset Instalation Guide...

 உயர் தொழில்நுட்ப ஆய்வகம் - Hi-Tech Lab - Headset Instalation Guide...



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், தேவையான உதவிகளை பெற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு...

 நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், தேவையான உதவிகளை பெற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு...


📱வாட்ஸ்அப் எண்: 81485 39914


✖️ட்விட்டர் (X): @tn_rescuerelief மற்றும் @tnsdma


💻பேஸ்புக்: @tnsdma








இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings

  2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ...