கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IFHRMS - பணியாளர் ஓய்வூதிய முன்மொழிவுகளை ஆன்லைனில் தயாரிக்கும் முறை - கையேடு...



 IFHRMS - Employee Online Pension Proposal Process Manual - User Manual For Integrated Financial and Human Resource Management System...


IFHRMS - பணியாளர் ஓய்வூதிய முன்மொழிவுகளை ஆன்லைனில் தயாரிக்கும் முறை - கையேடு...



>>>தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


நெல்லை, தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ₹6000 வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு ...

 நெல்லை, தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ₹6000 வழங்கப்படும்...


தென்காசி, கன்னியாகுமரியில் பாதிப்புகளின் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்.


பாதிக்கப்பட்ட விவசாய நிலம் ஹெக்டேருக்கு ₹17,000 வழங்கப்படும்.


பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ₹10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.


- நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...




17, 18ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று 17ம் தேதிதான் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.


வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட பல மடங்கு அதிகமாக மழை பெய்திருக்கிறது; இது வரலாற்றில் இதுவரை இல்லாதது.


ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததை மக்கள் அறிவார்கள்.


காயல்பட்டினத்தில் 94 செ.மீ. மழை பெய்து அந்த பகுதியே வெள்ளக் காடாக மாறியது.


150 ஆண்டுகளில் இல்லாத மழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை மிக மோசமாக உள்ளன- தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.


கனமழை பாதிப்பு காரணமாக 22-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்...

 

கனமழை பாதிப்பு காரணமாக 22-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 22-12-2023 due to heavy rain) விவரம்...


தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு


வெள்ளநீர் முழுமையாக வடியாத நிலையில் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பு...



#நெல்லை  பள்ளிகளுக்கு விடுமுறை


நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை...


வெள்ள பாதிப்பு காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.


பாதிப்பு அதிகம் உள்ள 8 பள்ளிகளில் மட்டும் முழுமையாக விடுமுறை குறித்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியரே முடிவெடுக்கலாம்.

 - ஆட்சியர்.




மிக்ஜாம் புயல் நிவாரணம் - முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர் & ஆசிரியர்கள், பணியாளர்கள் ஒருநாள் / அதற்கு மேற்பட்ட நாட்கள் ஊதியம் வழங்குதல் - எழுத்து பூர்வமாக ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு (DDO) விருப்பக் கடிதம் கொடுத்தால் பிடித்தம் செய்யலாம் - அரசாணை (3டி) எண்: 17, நாள்: 16-12-2023...


மிக்ஜாம் புயல் நிவாரணம் - முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர் & ஆசிரியர்கள், பணியாளர்கள் ஒருநாள் / அதற்கு மேற்பட்ட நாட்கள் ஊதியம் வழங்குதல் - எழுத்து பூர்வமாக ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு (DDO) விருப்பக் கடிதம் கொடுத்தால் பிடித்தம் செய்யலாம் - அரசாணை (3டி) எண்: 17, நாள்: 16-12-2023 (Michaung Cyclone Relief - Payment of one day / more days Salary of Government Servants & Teachers, Employees to Chief Minister's General Relief Fund - Deduction can be made on written letter of employees to the Drawing and Disbursing Officer (DDO) - Ordinance G.O.(3D) No: 17, Date: 16-12 -2023)...



>>> அரசாணை (3D) எண்: 17, நாள்: 16-12-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




அரசாணை (3D) எண்.17 Dt: 16-12-2023

 மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளம் - அரசு மேற்கொண்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்காக அரசு அலுவலர்கள் , பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க பணியாளர் சங்கங்களால் விருப்பம் தெரிவிக்கப்பட்டது - ஏற்றுக்கொள்ளப்பட்டது -ஆணைகள் வெளியிடப்படுகிறது....


சுய விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்கள் ஊதியத்தினையும் சொந்த விருப்பத்தின் பேரில் அளிக்கலாம்.

6, 7, 8ஆம் வகுப்புகள் - உடற்கல்வி - அரையாண்டுத் தேர்வு 2023 - விடைகள்...

 

 

 6, 7, 8ஆம் வகுப்புகள் - உடற்கல்வி - அரையாண்டுத் தேர்வு 2023 - விடைகள் (6, 7 & 8th Standard - Physical Education - Half Yearly Examination 2023 - Answers)...



>>> Click Here to Download...


8ஆம் வகுப்பு - உடற்கல்வி - அரையாண்டுத் தேர்வு 2023 - விடைகள்...

 

 8ஆம் வகுப்பு - உடற்கல்வி - அரையாண்டுத் தேர்வு 2023 - விடைகள் (8th Standard - Physical Education - Half Yearly Examination 2023 - Answers)...



>>> Click Here to Download...


2023ஆம் ஆண்டு க்கான தயான் சந்த் கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா, வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதுகள் அறிவிப்பு...



 விளையாட்டு துறையில் சாதனை: முகமது ஷமி, வைஷாலிக்கு “அர்ஜூனா விருது” அறிவிப்பு.


கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது.


கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலிக்கு அர்ஜூனா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் பெண் வீராங்கனை வைஷாலி.


கடந்த ஆண்டு பிரக்ஞானந்தா அர்ஜூனா விருது வென்ற நிலையில், இந்தாண்டு அவரது சகோதரிக்கு விருது.


விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜூனா விருதுகளை அறிவித்தது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்.


2023-ம் ஆண்டுக்கான அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா விருதுகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிரிக்கெட் வீரர் மொகமது ஷமி, தமிழக செஸ் ப்ளேயர் வைஷாலி உள்ளிட்டோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷுக்கு துரோணாச்சாரியா விருதும், தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வரும் வீரர் மற்றும் வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா, மேஜர் தயான்சந்த், மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலை தற்போது மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் நடந்து முடிந்த உலகக் கோப்பை

கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.


தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் ப்ளேயரான வைஷாலிக்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷுக்கு துரோணாச்சாரியா விருதும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 2023ஆம் ஆண்டு க்கான தயான் சந்த் கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா, வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதுகள் அறிவிப்பு...


தயான் சந்த் கேல் ரத்னா விருது - பேட்மிண்டன் வீர்ர்கள் சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜூனா விருது - வில்வித்தை வீராங்கனை அதிதி கோபிசந்த் சுவாமி, கிரிக்கெட் வீர்ர் முகமது ஷமி, தடகள வீரர் சங்கர், செஸ் வீராங்கனை வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது - லலித் குமார் (மல்யுத்தம்), ஆர்.பி. ரமேஷ் (செஸ்), மகாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்), ஷிவேந்திர சிங் (ஹாக்கி), ஸ்ரீ கணேஷ் பிரபாகர் தேவ்ரூக்கர் (மல்லாகம்ப்) ஆகிய 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது: மஞ்சுஷா கன்வார் (பேட்மிண்டன்), வினீத் குமார் சர்மா (ஹாக்கி), கவிதா செல்வராஜ் (கபடி).

விருது வழங்கும் விழா ஜனவரி 9-ம் தேதி காலை 11.00 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Monthly Internet Amount Released for Elementary and Middle Schools - CEO Proceedings

தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளுக்கான மாதாந்திர இணைய சேவைக்‌ கட்டணம்‌ விடுவிப்பு - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்  Monthly Intern...