சார்பதிவாளர்கள் தங்களது அலுவலகங்களில் வேலை நிமித்தமாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களை அனுமதிக்க கூடாது என்று பதிவுத்துறை தலைவர் உத்தரவு...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
நாடாளுமன்ற தேர்தல் 2024 - அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்...
Election Commission of India instructions/ reply to Chief Electoral Officer of TamilNadu regarding General Election to Lok Sabha 2024 - Transfer / Postings of Officers (BDO's,Tahsildars & Sub-Inspectors of Police) connected with election - LokSabha Elections2024...
நாடாளுமன்ற தேர்தல் 2024 - அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்...
நாடாளுமன்ற தேர்தல் வருவதால் இம்மாத இறுதிக்குள் அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம்...
3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்...
7 ஆண்டாக உயர்த்தப்படாத கிரீமிலேயர் வரம்பு - இரு மடங்காக உயர்த்த வேண்டும் - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அறிக்கை...
7 ஆண்டாக உயர்த்தப்படாத கிரீமிலேயர் வரம்பு - இரு மடங்காக உயர்த்த வேண்டும் - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அறிக்கை...
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரிமீலேயர் வருமான வரம்பு ரூ. 8 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டு 7 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இன்று வரை அந்த வரம்பு உயர்த்தப்படவில்லை. கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதை பரிசீலிக்கக் கூட மத்திய அரசு முன்வராதது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பெரும் வருத்தத்திலும், மன உளைச்சலிலும் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் கிரீமிலேயர் என்ற தத்துவம் பின்பற்றப்பட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மண்டல் ஆணைய பரிந்துரைப்படி, மத்திய அரசின் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 1992ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பில் கிரீமிலேயர் என்ற தத்துவத்தை திணித்தது. அதன்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் அனைவருக்கும் 27% இட ஒதுக்கீடு வழங்கப்படாது. மாறாக, அவர்களில் கிரீமிலேயர் என்றழைக்கப்படும் உயர்வருவாய் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படும்; குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கு மட்டுமே ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படும். 1993-ஆம் ஆண்டில் கிரீமிலேயர் முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ. 1 லட்சமாக இருந்தது. அதன்பின் பணவீக்கமும், வருமானமும் குறிப்பிடத்தக்க அளவில் உயராததால் 11 ஆண்டுகளாக கிரீமிலேயர் உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை.
2004-ம் ஆண்டில் ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்ட கிரீமிலேயர் வரம்பு, அதன்பின் 2008-ம் ஆண்டில் ரூ.4.5 லட்சம், 2013-ஆம் ஆண்டில் ரூ. 6 லட்சம் எனப் படிப்படியாக உயர்த்தப்பட்டு, 2017-ஆம் ஆண்டில் ரூ. 8 லட்சம் என்ற அளவை அடைந்தது. அதன்பின் 2020, 2023 ஆகிய ஆண்டுகளில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், அவ்வாறு உயர்த்தப்படாததால் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பெரும்பான்மையினரால் 27% இட ஒதுக்கீட்டை பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.
2020-ம் ஆண்டில் ஏற்பட்ட கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாகவும், கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியம் மற்றும் வேளாண்மை வருவாயையும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற வல்லுனர் குழு பரிந்துரையை செயல்படுத்துவதற்கு எழுந்த எதிர்ப்பு ஆகியவற்றின் காரணமாக அம்முயற்சி தடைபட்டது. அதற்குப் பிறகு 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த ஆண்டில் அதற்கான முயற்சிகளைக் கூட மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது வருத்தமான உண்மை.
கிரீமிலேயர் வரம்பை உயர்த்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அண்மையில் இது தொடர்பான வினா ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் விடையளித்த மத்திய சமூகநீதித்துறை இணை அமைச்சர் வீரேந்திரகுமார், ‘‘பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வரம்பு ஆண்டுக்கு ரூ.8 லட்சமாக உள்ளது. இதுவே போதுமானது என்று மத்திய அரசு கருதுகிறது. இது தொடர்பாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து எந்த பரிந்துரையும் கோரப்படவில்லை’’ என்று கூறினார். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு முற்றிலும் தவறானது; கள நிலைக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 7 ஆண்டுகளில் பணவீக்கம் கடுமையாக உயர்த்திருக்கிறது; அதை சமாளிக்கும் வகையில் பல்வேறு ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானமும் உயர்ந்துள்ளது. அதற்கு இணையாக கிரீமிலேயர் வரம்பு 2020ஆம் ஆண்டில் ரூ.12 லட்சமாகவும், 2023ஆம் ஆண்டில் ரூ.15 லட்சமாகவும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படாததால் கடந்த சில ஆண்டுகளில் வருவாய் அதிகரித்த பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கிரீமிலேயர்களாக கருதப்பட்டு, இட ஒதுக்கீட்டு வரம்பிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர். இதை விட பெரிய சமூக அநீதி இருக்க முடியாது.
கிரீமிலேயர் வரம்பை உயர்த்துவதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வழங்குவது வழக்கம். ஆனால், எட்டாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காலாவதியாகி இரு ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இன்று வரை ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்ட பிறகு தான், ஆணையத்திற்கு புதிய தலைவரும், ஒரே ஓர் உறுப்பினரும் நியமிக்கப்பட்டனர். ஆனாலும், ஆணையம் இன்னும் செயல்படாமல் தான் கிடக்கிறது. ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் குறித்த தேதியில் அமைக்கப்பட்டிருந்தால், அதன் பரிந்துரைப்படி கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்கக் கூடும்.
கல்வியிலும், சமூக நிலையிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். அக்கடமையை நிறைவேற்றும் வகையில், கிரிமீலேயர் வரம்பை இப்போதுள்ள ஆண்டுக்கு ரூ.8 லட்சம் என்ற அளவிலிருந்து, இரு மடங்காக, அதாவது ரூ.16 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு ஆணையிட வேண்டும். அத்துடன் ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து, அதை முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நீட், ஜே.இ.இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு...
நீட், ஜே.இ.இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு - GUIDELINES FOR REGULATION OF COACHING CENTER...
வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய கல்வி அமைச்சகம்
"16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பயிற்சி மையங்களில் அனுமதி இல்லை"
மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் படி பாடம் நடத்தக் கூடாது
குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்ய தடை
விதிமுறைகளை மீறும் பயிற்சி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும்- மத்திய கல்வி அமைச்சகம்
விதிமீறும் பயிற்சி நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்...
>>> GUIDELINES FOR REGULATION OF COACHING CENTER - Click Here to Download...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.01.2024 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.01.2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கல்வி.
குறள் 400:
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
விளக்கம் :
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
பழமொழி :
Do not look a gift horse in the mouth.
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்து பார்க்காதே.
பொன்மொழி:
Experience is a good school. But the fees are high. - Heinrich Heine
அனுபவம் நல்ல பள்ளிக்கூடம். ஆனால் அதன் கட்டணம் அதிகம். - ஹென்ரிக் ஹெயின்
அறிவியல் பொது அறிவு வினா விடைகள் :
உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3
ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்தக அமிலத்தைப் பொருத்ததாகும்.
சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை - 12
காஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு
அமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.
குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0
ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :
Breathe - மூச்சு
Bride - மணமகள்
Bridge - பாலம்
Breeze - தென்றல்
Bridegroom - மணமகன்
Brightness - வெளிச்சம்
ஆரோக்கியம்
உலர் திராட்சை
பாதாமைப் போலவே ஆரோக்கியத்திற்கு கட்டியம் கூறுவது உலர் திராட்சை. சிவப்பு, லேசான மஞ்சள், கருப்பு என மூன்று நிறங்களில் கிடைக்கும் இதற்கு கிடைத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 51.
இன்றைய சிறப்புகள்
ஜனவரி 22
1968 – அப்பல்லோ 5 விண்கலம் முதலாவது நிலாக்கலத்தைத் தாங்கி விண்வெளிக்கு சென்றது.
பிறந்த நாள்
-
நினைவு நாள்
1666 – ஷாஜகான், முகலாயப் பேரரசர் (பி. 1592)
1897 – ஐசக் பிட்மன், சுருக்கெழுத்து முறையைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (பி. 1813)
சிறப்பு நாட்கள்
-
நீதிக்கதை
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்
உருவத்தில் சிறியவனாக இருப்பதால் அவனை ஏளனம் செய்யக்கூடாது. அவன் வேறு விடையங்களில் வல்லவனாக இருப்பான் என்பதை உண்ர்த்தும் நீதிக்கதை
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு கிட்டச் செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.
ஆனால் ‘ஈ” ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது. அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..’உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் பிராண்டுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன் என்றது.
அதற்கு ஈயோ நீ பலசாலியாய் இருக்கலாம்.. உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன். இன்னும் சொல்லப்போனால்.. நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொல்லவும், நகங்களால் பிராண்டிக் கொல்லவும் செய்வேன்” என்றது.
இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் இயலுமாயின் அதைச் செய் என் சவால் விட.. ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது.. அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.
ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல.. ஈ பறக்க… சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே பிராண்டிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.
சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை. அதனால் சிங்கம் தன் இயலாமையை எண்ணி வெட்கப்பட்டது.
அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது.. தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை இம்சைப் படுத்தி விட்டதே என்று. .
உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது
இதைத்தான் வள்ளுவரும்..
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து
என்றார்.
(பொருள்- உருவத்தால் சிறிதாக இருந்தாலும் அதை கேலி செய்து அலட்சியப் படுத்த்க் கூடாது. பெரிய தேர் ஓடக் காரணமாய் இருப்பது சிறிய அதன் அச்சாணியே)
இன்றைய முக்கிய செய்திகள்
22-01-2024
75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்...
சிறப்பு பூஜைகள் அன்னதானம் நடத்திட எங்கும் தடைவிதிக்கவில்லை; அவதூறான பொய்ச்செய்திக்கு மறுப்பு: தமிழ்நாடு அரசு வன்மையான கண்டனம்...
ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது: ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை...
தனியார் பயிற்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது ஒன்றிய கல்வி அமைச்சகம்...
ஐ.நா தலைவர் இந்தியா வருகை: குடியரசு தின விழாவில் பங்கேற்பு...
செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் இருப்பதை உறுதி செய்தது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்...
Today's Headlines:
22-01-2024
Ahead of 75th Republic Day celebrations, 5 layers of security will be implemented at Chennai Airport...
Special pujas do not prohibit alms giving anywhere; Denial of defamatory fake news: Tamil Nadu government strongly condemns...
The plane that crashed in Afghanistan was not an Indian plane: Union Civil Aviation...
The Union Education Ministry has issued new guidelines for regulating private coaching institutes...
UN Chief Visits India: Participates in Republic Day...
European Space Agency confirms water source on Mars...
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் - தொடர் வேலைநிறுத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - மருத்துவர் ச.ராமதாசு அவர்கள்...
பழைய ஒய்வூதியம், ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நாளை முதல் பிப்ரவரி 10-ஆம் நாள் முதல் பல்வேறு கட்ட போராட்ட ஆயத்த பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. அவற்றின் உச்சமாக பிப்ரவரி 15-ஆம் நாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தையும், பிப்ரவரி 26-ஆம் நாள் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையும் நடத்தப்போவதாக ஜாக்டோ -ஜியோ அமைப்பு அறிவித்திருக்கிறது. இந்தப் போராட்டம் தடுக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 20 ஆண்டுகளுக்கு மேலாகவும், பிற கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாண்டுகளுக்கு மேலாகவும் அவர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கடந்த 20 ஆண்டுகளாகவே அதிமுகவும், திமுகவும் மாறி மாறி வாக்குறுதிகளை வழங்கினாலும் அவை எதையும் இரு கட்சிகளின் அரசுகளும் நிறைவேற்றவில்லை. 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கிறது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய பல குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் பெறப்பட்டாலும் கோரிக்கைகள் மட்டும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பல ஆண்டுகளாக பொறுத்துப் பார்த்து, எந்த பயனும் ஏற்படாத நிலையில் தான் ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர் போராட்டங்களை அறிவித்திருக்கிறது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும், வேலை நிறுத்தப் போராட்டத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது. அக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை ஆகும்.
ஆப்கானிஸ்தானில் இந்தியாவிலிருந்து சென்ற விமானம் விபத்து...
ஆப்கானிஸ்தானில் இந்தியாவிலிருந்து மாஸ்கோ சென்ற விமானம் விபத்து...
ஆப்கானிஸ்தான் காவல்துறைக்கு விமான விபத்து குறித்துப் புகார் வந்ததையடுத்து 6 பேர் இருப்பதாகக் கருதப்படும் ரஷ்ய விமானம் ஒன்று காணாமற்போனதாக ரஷ்ய விமானத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நேற்றிரவு (ஜனவரி 20) விபத்து ஏற்பட்டதாகப் புகார் செய்யப்பட்டது.
ஆப்கானிஸ்தான் ஆகாயவெளியில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது அது காணாமற்போனதாக அதிகாரிகள் கூறினர்.
அந்த விமானம் இந்தியாவிலிருந்து மாஸ்கோவுக்குச் சென்றுகொண்டிருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் இருக்கும் பதக்-ஷான் (Badakhshan) எனும் மலைப்பகுதியில் விபத்து நேர்ந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.
அந்தப் பகுதி நகரத்திலிருந்து வெகுதொலைவில் உள்ளது. மீட்புக்குழுவினர் அங்கு சென்றடைய சுமார் 12 மணிநேரம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
விமானத்தின் விவரங்கள், விபத்துக்கான காரணம், பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் ஆகியவை உறுதியாகத் தெரியவில்லை.
விபத்தில் சிக்கிய விமானம் வர்த்தக விமானமோ இந்திய விமானமோ இல்லை என்று இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.
தற்போதைய செய்தி
ஆப்கானிஸ்தானின் வடக்கு படாக்ஷான் மாகாணத்தில் மொராக்கோ விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதாக, மாகாண தகவல் மற்றும் கலாச்சாரத் துறையின் அதிகாரி ஜபிஹுல்லா அமிரியை மேற்கோள் காட்டி உள்ளூர் தொலைக்காட்சியான டோலோநியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் குரான்-வா-முன்ஜான் மாவட்டத்தின் டோப்கானா பகுதிக்கு ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார். முதற்கட்ட தகவல்களுக்கு மாறாக, விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் அல்ல என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்தது.
"ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விமான விபத்து இந்திய திட்டமிடப்பட்ட விமானமோ அல்லது திட்டமிடப்படாத (என்எஸ்ஓபி) / பட்டய விமானமோ அல்ல. இது மொராக்கோவில் பதிவுசெய்யப்பட்ட சிறிய விமானம். மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன" என்று அமைச்சகம் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது. X இல்.
விபத்துக்குள்ளான விமானம் மொராக்கோவில் பதிவு செய்யப்பட்ட DF-10 (Dassault Falcon) சிறிய விமானம் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. இது இந்திய கேரியர்களின் விமானம் அல்ல. விமானம் ஏர் ஆம்புலன்ஸ் மற்றும் தாய்லாந்தில் இருந்து மாஸ்கோவிற்கு பறந்து கொண்டிருந்தது மற்றும் கயா விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பியது என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது. செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, ரஷ்ய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஆறு பேருடன் ரஷ்ய பதிவு செய்யப்பட்ட விமானம் சனிக்கிழமை மாலை ஆப்கானிஸ்தானின் ரேடார் திரைகளில் இருந்து காணாமல் போனதாகக் கூறியது. அந்த விமானம் பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட Dassault Falcon 10 ஜெட் விமானமாகும். இந்த விமானம் இந்தியாவில் இருந்து உஸ்பெகிஸ்தான் வழியாக மாஸ்கோவிற்குச் சென்ற வாடகை விமானமாகும். விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் அல்ல என்பதை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ANI தெரிவித்துள்ளது.
"படக்ஷான் மாகாணத்தின் குரான்-முன்ஜான் மற்றும் ஜிபக் மாவட்டங்களுக்கு அருகில் டோப்கானா மலைகளில் விழுந்து நொறுங்கிய விமானம் மொராக்கோ பதிவு செய்யப்பட்ட DF 10 விமானம்" என்று DGCA மூத்த அதிகாரி ஒருவர் ANI இடம் தெரிவித்தார். வடக்கு ஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதால் உயிரிழப்புகள் அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
A Moroccan plane on Sunday crashed in Afghanistan's northern Badakhshan province, local television channel Tolonews reported, citing Zabihullah Amiri, an official of the provincial Department of Information and Culture. The official informed that a team had been sent to the Topkhana area of the Kuran-wa-Munjan district on the crashed plane, he said. Contrary to initial reports, the Ministry of Civil Aviation confirmed that the crashed plane was not Indian.
"The unfortunate plane crash that has just occurred in Afghanistan is neither an Indian Scheduled Aircraft nor a Non-Scheduled (NSOP)/Charter aircraft. It is a Moroccan-registered small aircraft. More details are awaited," the ministry stated in a post on X.
The Civil Aviation Ministry further stated that the crashed aircraft is a DF-10 (Dassault Falcon) small aircraft registered in Morocco. It is not an aircraft of Indian carriers. The aircraft was an air ambulance and was flying from Thailand to Moscow and did refueling at Gaya Airport, according to news agency ANI.
According to news agency Reuters, Russian Aviation Authorities stated that a Russian-registered plane with six people thought to be on board disappeared from radar screens over Afghanistan on Saturday evening. The plane was a French-made Dassault Falcon 10 jet. The plane was a charter flight traveling from India via Uzbekistan to Moscow.
ANI also quoted a Directorate General of Civil Aviation (DGCA) official confirming that the crashed aircraft was not Indian. "A plane that crashed in the mountains of Topkhana alongside the districts of Kuran-Munjan and Zibak of Badakhshan province, was Moroccan registered DF 10 aircraft," a senior DGCA official told ANI.
Casualties are feared as the passenger plane crashed in northern Afghanistan, news agency Anadolu reported citing local media.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Manarkeni App Download - DEE Proceedings - Key Considerations
மணற்கேணி செயலி பதிறக்கம் செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள் - முக்கியக் கருததுகள் Manarkeni App Download - DEE Proceedings - Important Thi...